நாடாளுமன்றம்
1. 14-ஆம் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதா? இல்லை!
2. அரசல் புரசலாக கடந்த சில தினங்களாக இன்று(வெள்ளிக்கிழமை 6/4/2018) கலைக்கப்பட்டு விடும் என்று பேசப்பட்டு வந்தது. வாட்சாப், ஃபேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில்; நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி, வேட்பு மனு தாக்கல் திகதி, தேர்தல் நடைபெறும் திகதி எல்லாம் ஒரு வாரகாலமாக வைரலாக போய்க் கொண்டிருந்தது.
3. பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் டாலான் இந்த வாரம் வெள்ளிகிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படாலாம் என்று முன்னமே ஆருடம் கூறியிருந்தார். http://www.sinarharian.com.my/…/parlimen-bubar-jumaat-ini-1…
4. இதே போல் சுற்றுலா துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அப்தூல் அசிஸ் கூறியிருந்தார். https://m.malaysiakini.com/news/418175
5. இந்த வெள்ளிகிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பது ஓரளவுக்கு எல்லாம் பரவலாக எதிர்ப்பார்த்ததுதான்.
6. 7/4/2018 சனிக்கிழமை அதாவது நாளைக்கு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
7. நம் நாட்டின் அரசியல வரலாற்ரில் இதுதான் முறை; நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன் கூட்டியே பிரதமர் அறிவித்திருப்பது.
8. நாட்டின் பேரரசரை சந்தித்து அனுமதி வாங்கிய பிறகே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் அறிவிப்பார். இதுதான் நடைமுறை. ஆனால் இந்த நடைமுறைக்கு மாறாக; பேரரசரின் அனுமதி பெறாமல் நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கபோவதாக அறிவித்துள்ளார்.
9. நாளைக்குத்தான் பேரரசரை சந்தித்து அனுமதி வாங்க போவதாக அறிவித்துள்ளார். நாளைக்கு பேரரசரின் அனுமதி வாங்கும் வரை டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரபூர்வமான பிரதமராக தொடர்வார்.
10. டத்தோ ஸ்ரீ நஜிப் இன்னும் பிரதமராக தொடர்கிறார். இன்னும் நாடாளுமன்றத்தை கலைக்கவில்லை.
11. நாளை அரசாங்க வேலை நாள் இல்லை என்பதாலும், நேற்று கடைசி நாளாக நாடாளுமன்றம் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டிய வைபமும் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்படுள்ளது. ஆகவே நாளைக்கு பேரரசரை சந்தித்து அனுமதி வாங்கினாலும்; நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என்பது கேள்வியே.
12. நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு இன்னும் 24 நான்கு மணிநேரத்தும் அதிகமாக கால அவகாசம் உள்ளது. அதுவரை நஜிப் அதிகாரப்பூர்வமான பிரதமர்.
1 Comment
sirappu
Reply