தீபாவளியும் பகுத்தறிவும்.
# எனக்கு நன்றாக நினைவு தெரிந்த நாள் முதல் தீபாவளிக்கு ஒரே ஒரு கதை மட்டும் தான் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார்கள்.
# அந்த கதை; நரகாசுரனை போட்டு தள்ளிய கதை. அதையும் ரெண்டு version-னில் சொன்னார்கள்.
# Version 1 - நரகாசுரன் பல வரங்களை வாங்கிக் கொண்டு மக்களை மிகவும் டார்ச்சர் செய்ததாகவும்; அதை பொறுக்க முடியாமல், நரகாசுரனின் அம்மாவே அவனை போட்டு தள்ளியதாக சொன்னார்கள்.
# Version 2 - யாராலும் அழிக்க முடியாத நரகாசுரனை கிருஷ்ணர் அம்பு விட்டு மர்டர் செய்ததாக ஒரு கதை சொன்னார்கள். நரகாசுரனின் டார்ச்சரில் இருந்து விடுப்பட்டதால் அந்த நாளை ஒரு பண்டிகையாக கொண்டாடி வந்ததாக செவி வழி செய்தியாக செவிக்குள் புகுந்தது.
# ஓரளவுக்கு சிந்திக்க தொடங்கிய கால கட்டத்தில் திராவிட கழக வாசிகள், மணிமன்ற தொடர்ப்பினாலும்; சில பகுத்தறிவாதிகளின் கட்டுரைகளினாலும் தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என்று கருத்துக்களால ஈர்க்கப்பட்டு; சில வருடங்கள் தீபாவளி மீது நாட்டமே இல்லாமல் இருந்தேன்.(ஆனாலும் தீபாவாளி கொடுக்கும் குதுக்கலம் தனி ட்ராக்)
# குழந்தைகள் பிறந்து வளர தொடங்கிய காலகட்டத்தில்; ஊருடன் ஒத்து வாழ் என்கிற formula-வில் அகப்பட்டு மெல்ல தீபாவளி என்னுடன் இணைந்தது. இந்த காலகட்டத்தில் அறிவார்ந்த சிந்திக்கும் திறன் பெற்றிருந்ததால்; நானே சில குறிப்புகளை தேடி படிக்க முற்ப்பட்டேன்.
# அந்த குறிப்புகளின் படி, தீபாவளி கொண்டாடப்படுவதற்கு வேறு சில காரணங்களும் சொல்லப்பட்டது.
# காரணம் 1 - சமணர்களின் மத குருவான மகாவீரர் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
# காரணம் 2- இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக வேறொரு காரணமும் கூறப்படுகிறது.
# காரணம் 3- ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார். இந்த நாளை தீபாவளியாக கொண்டாடி வருகிறார்கள்.
# ஆனால் மேற்கூறிய எந்த காரணமும் தீபாவளி கொண்டாடப்படுவதற்க்கான உண்மையாக காரணம் கிடையவே கிடையாது என்பது எனக்கு உள்ளூணர்வில் தோன்றியது.
# அதற்கு காரணம் - 1 - நரகாசுரன் வதை, ராமர் அயோத்தி திரும்பிய கதை, சிவன் அர்த்தநாரியாக உருமாரிய கதை என்பது எல்லாம் சரித்திர குறிப்புக்கள் இல்லாத, புராண/இதிகாச காலங்களில் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை உண்மை என்று நிறுபிக்க ஒரு அடிப்படை ஆதாரம் கூட கிடையாது.
# அடுத்ததாக, சமண பண்டிகையாக சொல்லப்படுகிற மகாவீரர் இறந்த நாள் தீபாவளி என்பதும் அடிப்படை ஆதரம் இல்லாதது. காரணம் தீபாவளி 13-ம் நூற்றாண்டுக்கு பிறகுதான் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சமணர்களின் ஆதிக்கம் 6-ம் நூற்றாண்டில் ஆட்டம்கண்டு, பிறகு மெல்ல மெல்ல சுருங்கி 12-ம் நூற்றாண்டுகளில் நசுக்கப்பட்டது.
# தமிழர் வாழ்வில் எந்த ஒரு பண்டிகையும் தொடர்ந்து பல ஆயிரம் அண்டுகள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவதற்கு எந்த ஒரு ஆதரமும் கிடையாது. வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பண்டிகைகளை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
# கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு போன்ற தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்கள் அனைத்தும் கோவில்கள், சமய அடிப்படையில் அமைந்தது. தமிழர்கள் கொண்டாட்டிய பொது பண்டிகை என எதுவும் தனிப்பட்ட முறையில் இருந்ததில்லை.
# சங்க காலத்தில், சங்க காலத்துக்கு பிந்திய காலத்திலும் அரசர்களின் பிறந்த நாள், அரன்மணை சம்பந்தப்ட்ட விழாக்கள்/பண்டிகைகள் தான் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. 16-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் அரன்மணை சம்பந்தம் இல்லாத பொது விழக்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
# ஆனால் தீபாவளிக்கும் தமிழர்களுக்கும் ஏதோ ஒரு தொடர்ப்பு உண்டு. பலரும் பரப்புவது போல் அது North-இல் இருந்து கிளம்பி south-க்கு வரவில்லை. South-இல் இருந்து தான் கிளம்பி இருக்க வேண்டும்.
# தீப வழி-பாடு என்பது தென் தமிழகத்தின் பழமையான வழிப்பாடு. புலிபாணி, தேரையர் போன்றோர் எழுதிய குறிப்புகளில் தீப வழிபாடு முக்கியமாக கருதப்படுகிறது.
# சங்க கால இலக்கியத்தில் காணப்பெரும் சில தீப வழிபட்டு குறித்த தகவல்கள்.
# 1 - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில், விளக்கு வழிபாட்டைக் குறிப்பிடுகிறார் நக்கீரர். - (நெடுநல்வாடை: 42-43)
2 - கார்த்திகை தீப வழிபாடு, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரமும் முழுமதியும் கூடிய நன்னாளில் நடந்து வருகிறது. சங்கம் மருவிய கால இலக்கியமான கண்ணங்கூத்தனாரின் கார் நாற்பது, கார்த்திகை மாத தீப வழிபாட்டுக்கு ஆதாரமாக உள்ளது.
- நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் நாள் விளக்கு (கார்நாற்பது -26)
3 - கார்த்திகை நாள்… விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்!
(திருஞானசம்பந்தர் பூம்பாவை திருப்பதிகம்- திருமுறை: 2-47)
4 - மழைகால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம!
(அகநானூறு – 141ம் பாடல்)
# கார்த்திகை தீபம் நிகழும் கார்த்திகை மாத பௌர்ணமிக்கும், தீபாவளிப் பண்டிகை வரும் ஐப்பசி மாத அமாவாசைக்கும் இடையே 15 நாட்கள் மட்டுமே வித்தியாசம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.
# தீப வழிபாடும் - கார்த்திகை,ஐப்பசி மாத நெறுக்கம். இந்த ஒரு விசயம் தான் தமிழர்களையும் தீபாவளியையும் இணைத்து பார்க்க எனக்கு தோன்றுகிறது.
0 Comments