Saturday, 7 January 2017

DLP - ஆக்‌ஷன்,த்ரில்லர்,காமேடி, சஸ்பென்ஸ் ஹாரர் மூவி

# DLP ஆதரவாளர்கள்/ எதிர்ப்பாளர்கள் இரு தரப்புமே DLP பற்றி முழுமையாக தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தவிர்த்து. 99 சதவீதம் குரூப்புகள் சும்மா மொழி யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் பாதிப்பும் தெரியவில்லை. நன்மையும் புரியவில்லை. இந்த இரு தரப்பும் முன் வைக்கும் கருத்துக்கள் DLP-யோடு ஒட்டவே இல்லை. இவர்கள் முன் வைக்கும் காரணங்களை கொஞ்சம் அலசி பார்ப்போம்.

# DLP யுத்தத்தை பார்க்கும் போது எனக்கு சிரிப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இது கொஞ்சம் நீண்ட கட்டுரையாக போகும் போல் இருக்கு. ஆகவே போரடிப்பவர்கள் இதோடு நிறுத்தி கொள்ளலாம். DLP-யின் ஆதரவு எதிர்ப்பு கருத்துகளை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

# பொதுவாக இங்கு மொழி யுத்தம்தான் நடந்துக் கொண்டிருக்கு. ஆங்கில மொழி மேன்மையான மொழியா இல்லையா? தாய் மொழியின் சிறப்பு என்ன? என்கிற தோரணையில் தான் போய் கொண்டிருக்கு. DLP முழுக்க முழுக்க பள்ளி சம்பந்தப்பட்ட விசயம்; மாறாக மொழி சம்பந்தப்பட்டது கிடையாது.

# முதலில் ஒரு விசயத்தை தெளிவாக சொல்லி விடுகிறேன். ஆங்கிலம் படித்தால் புத்திசாலி ஆகிவிடலாமா? அறிவு பெற்று விடலாமா? ஆங்கிலம் என்பது அடிமை மொழி/ ஆதிக்க மொழி என்கிற வாதம் எல்லாம் மிக மிக பின் தங்கிய சிந்தனை. ஆங்கிலம் மிக மிக அவசியம். ஏன்?

# நான் சினிமா துறையில் இருப்பதால் நான் அந்த துறையை சார்ந்து சொல்கிறேன். திரைக்கதை எழுதுவது எப்படி? என்று நாம் கற்று கொள்ள வேண்டும் என்றால்; உலக அளவில் தமிழில் இரண்டே இரண்டு புத்தங்கள் தான் உண்டு. ஒன்று சுஜாதா எழுதியது. இன்னொன்று ராஜேஸ் எழுதியது. வேறு புத்தகங்களே கிடையாது.

# ஆனால் ஆங்கிலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உண்டு. சினிமா ஒரு மிக பெரிய தொழில் துறை. அங்கு பல நிபுணர்கள் உண்டு. இயக்கம், ஒளிப்பதிவு துறை, Sound Recording, எடிடிங், Animation, VFX இப்படி ஏகப்பட்ட துறைகள் உண்டு. ஆனால் எந்த துறைக்கும் தமிழில் சுத்தமாக புத்தகங்களே கிடையாது. எல்லா நோட்ஸும் ஆங்கிலத்தில் இருக்கிறது. மிக தெளிவாக நமக்கு சொல்லக்கூடைய புத்தகங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உண்டு. இத்துனைக்கும் உலகத்தின் மிக பெரிய 5-வது நிலையில் உள்ள பணம் பரிவர்த்தனை நடக்கும் சினிமா தமிழ் சினிமா தொழில் துறை.

# சினிமா என்று இல்லை. இதே போல் பல துறைகள். தொழில் துறை, குறிப்பாக Technical   சமபந்தமான புத்தகங்கள் தமிழில் சுத்தமாக இல்லை. அங்கு ஒன்று இங்கு ஒன்று என்று எங்கேயாவது ஒரு மூலையில் கிடைக்கும். அதை தேடி கண்டு பிடிப்பதற்குள் நமக்கு தாவு தீர்ந்து விடும்.

# தமிழில் புத்தகங்கள்/ நோட்ஸுக்கள் இல்லாத நிலையில்; ஆங்கிலத்தில் இதை படிக்கும் போது நமக்கு இது குறித்த அறிவு பெருகும் தானே. அப்படி இருக்கும் போது ஆங்கில மொழியின் மூலம் நாம் அறிவின் நிலை மாறுபடுகிறது. சிம்பிளாக சொன்னால் ஆங்கிலம் மூலமே நாம் இது போன்ற கல்விகளை பெற முடியும். ஆங்கிலம் படித்தால் அறிவு வளரும் என்பதும்; நமக்கு பெரும் பயன் என்பதும் நிதர்சண உண்மை. சும்மா வெட்டி வாதங்கள் வேண்டுமானால் பொழுது போக்காக பேசிக் கொள்ளலாம்.

# ஜப்பான், பின்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் அனைத்து பாடங்களையும் தாய் மொழியில் தானே கற்கிறார்கள். அவர்கள் முன்னேறவில்லையா? தாய் மொழியில் கற்கும் இவர்கள் புத்திசாலிகள் இல்லையா? என்கிற வாதம் முட்டாளிலும் படு முட்டாள்தனமான ஒரு வாதம். சிந்தக்கும் திறன் பெற்ற, எந்த ஒரு படித்த புத்திசாலியும் இப்படி ஒரு கருத்தை முன் வைக்க மாட்டான்.

# ஜப்பான் – 1900-களிலே தொழில் துறைக்கு நகர்ந்த நாடு. இன்று உலகம் முழுவதும் அவர்களில் கண்டுபிடிப்புகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் Product உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கு. ஜப்பான் நாட்டில் அவர்கள் தாய் மொழியின் பயன்ப்பாடு ஒரு மிக பெரிய அளவில் உலக சந்தையில் உள்ளது. கார், கம்புயூட்டர், அன்றாட தேவைகள், Engines, லொட்டு லொசுக்கு எல்லாவற்றையும் கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். அதை உலகம் முழுவதும் ஏற்றுமதியும் செய்கிறார்கள். அவர்களின் மொழி பயன்பாடு வேறு.

# அதே போல் ஜெர்மனி உலகத்தின் மிக உயர்ந்த கார்களின் தேசம். பணக்காரர்களின் பயணங்களின் தோழன். பின்லாந்து போன் கண்டுபிடிப்புகளின் நாடு. ரஷ்யா ஆயுதங்களின் கணவான்கள். இவர்களின் தாய் மொழி பயன்பாடு வேறு.

#நமது தாய் மொழியின் பயன்பாடு வேறு. உலக அளவில் தமிழ் ஆசிரியர்கள் தொழிலுக்கு உள்ள பயன் பாட்டு நிலையில் தான் உள்ளோம். தமிழர்களை இன்று உலகம் முழுவதும் உற்பத்தி செய்த தமிழ் நாட்டில் கூட தாய் மொழியின் பயன்பாடு எந்த நிலையில் உண்டு. தொழில்துறை, டெக்னிக்கல் துறை இப்படி எந்த துறையிலாவது தமிழ் நாட்டின் தமிழர்கள் கண்டுபிடிப்புகள் உலக நிலையில் பயன்பாட்டில் உள்ளதா? ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா பொன்ற நாடுகளின் கண்டுபிடிப்புகளை கம்போஜக்காரன் பயன்பாட்டில் இருக்கும், கானா நாட்டில் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இப்படி உலகின் எந்த நாட்டிற்கு போனாலும், அந்த நாட்டில் இவர்களின் கண்டுபிடிப்புகள் பயன்பாட்டில் இருக்கும்.

# அவர்கள் தாய் மொழியில் கற்கும் கல்வியானது அவர்கள் எல்லா நிலையிலும் Apply செய்ய கூடியில் நிலையில் உள்ளது. அதற்கான பிளட்பாரத்தை அவர்கள் கடந்த 200 ஆண்டுகளாக ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  தயவு செய்து இது போன்ற நகைச்சுவைக்குறிய கருத்துக்களை முன் வைக்காதீர்கள். எனக்கே அது சிரிப்பு வருகிறது.

# தமிழ் அழிந்து போய் விடும் என்று கூக்குரல். இது போன்று பேசுபவர்களை கண்டாலே எனக்கு எரிச்சல் வரும். தமிழ் மொழியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் அழிந்து விடும் என்று சொல்லி வருகிறார்கள். தமிழ் அழிந்து விடவில்லை. ஆனால தமிழ் மொழியோடு போட்டி போட்ட அனைத்து இந்திய மொழிகளும் நாசமாய் போனது. மணிபிரவாளம், சமஸ்கிருத ஆதிக்கம், பல போர்கள் என தாண்டி பல ஆயிரம் வருடங்கள் தமிழ் மொழி நிலைத்து நிற்கிறது. நீ கூச்சல் போட்டாலும் போடாவிட்டாலும்; நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும்; தமிழை காப்பாற்றுகிறேன் பேர்வழி என ஒரு கோஷ்டி அலைகிறதே; அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் மொழி நிலைத்து நீடித்து வாழும். காரணம் தமிழ் தெய்வ மொழி என எல்லோராலும் போற்றி புகழப்பட்டது. அதற்கு அழிவில்லை.

# ஆகவே DLP-ஐ தயவு செய்து மொழி போராக கொண்டு போகாதீர்கள். மொழி போராக திசை திருப்பாதீர்கள்.

# DLP Policies கிடையாது. விருப்ப தேர்வு. PPSMI Policy. PPSMI விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் குழந்தைகள் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கில மொழியில் பயில்வார்கள். ஆனால் DLP-யில் நீங்கள் விரும்பினால் மட்டுமே உங்கள் குழந்தை ஆங்கிலத்தில் பயிலும். இங்கு தான் இந்த ஊளை நரி அரசாங்கம் தன் திட்டத்தை பரவலாக முயல்கிறது.

# PPSMI எனப்படுவது கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கில மொழியில் போதிப்பது. தேசிய மொழி மலாய் மொழியில் போதிக்கப்படும். மற்ற பாடங்கள் அனைத்தும் தாய் மொழியிலே போதிக்கப்படும். ஒன்றாம் ஆண்டில் ஆரம்பித்து அனைத்து மாணவர்களும் படிவம் ஆறுவரை கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் பயில்வர். மிக தெளிவான Policy.

# ஆனால் DLP திட்டத்தில் குறிப்பிட்ட மாணவர்கள் தான் ஆங்கிலத்தில் பயில்வர். ஏனையோர் தமிழ் மொழியிலே பயில்வர். உதாரணத்திற்கு 2017-இல் நான்கு ஒன்றாம் வகுப்புகள் இருக்கிறதென்றால்; அதில் ஒரு வகுப்பு தான் DLP. மற்ற மூன்று வகுப்புகள் தமிழிலேயே பயில்வர்.

# இது மாணவர்களிடையே மிக பெரிய ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி விடும். தலைமை ஆசிரியர்கள் பிள்ளைகள், ஆசிரியர்களின் பிள்ளைகள், பணக்கார வீட்டு பிள்ளைகள், அரசாங்க உத்தியோகத்தில் உள்ள பிள்ளைகள் இப்படி அறிவார்ந்த சமூதாயத்தின் பில்ளைகள் ஆங்கிலத்திலும்; சாதரண பெற்றோர்களின் பிள்ளைகள் தமிழில் படிப்பார்கள்.

# இது பிரித்தாளும் சூழ்ச்சி.

# DLP எனப்படுவது இரண்டை பாட திட்டம். Trial Version-னாக முதலில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கில மொழியில் பயில்வர். பிறகு படி படியாக ஏழு பாடங்கள் வரை ஆங்கில மொழியில் போதிக்கப்படும். கால போக்கில் ஒரே பள்ளி வளாகத்தில் இரண்டு session பள்ளி நடக்கும். ஒரு session ஆங்கில பள்ளியாகவும்; இன்னொரு session தமிழ்ப்பள்ளியாகவும் நடக்கும்.

# PPSMI போல் DLP-யில் தெளிவான திட்டமிடல் இல்லை. முதலில் Trial-ஆக இரண்டு பாடம் பிறகு நான்கு பாடங்கள் பிறகு ஐந்து பாடங்கள். இறுதியாக ஏழு பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சால் கூறப்படுகிறது.

# 2017-இல் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்கும் மாணவன், பிறகு எந்த ஆண்டில் அடுத்த இரண்டு பாடங்களை ஆங்கிலத்தில் கற்பான் என தெளிபடுத்த வில்லை. அடுத்த ஆண்டு(2018) எத்துனை பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படும். 2017-இல் இது trial version என்றால்; எந்த அடிப்படையில் எந்த ஆண்டில் இது Permanent version-ஆக உறுதி படுத்தப்படும்.

# 2017-இல் இரண்டு பாடங்களை மட்டுமே ஆங்கிலத்தில் பயிலும் மாணவன் எதன் அடிப்படையில் எந்த ஆண்டு மீதம் உள்ள பாடங்களை ஆங்கிலத்தில் பயில்வான்.

# 2017-இல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் அடுத்த ஆண்டு எதன் அடிப்படையில் DLP வகுப்பு தேர்வு செய்யப்படுவான். எத்துனை பாடங்கள் ஆங்கிலத்தில் பயில்வான். அது Trial Verson-ஆ அல்லது Permenant version ஆ? கல்வி அமைச்சிடம் இருந்து எந்த ஒரு தெளிவான விளக்கமும் இல்லை.

# 2017-இல் ஒன்றாம் வகுப்பில் DLP-க்கு அனுப்பும் பெற்றோர்; தன் குழந்தையால் கனிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பதில் சிக்கல் எதிர் நோக்குகிறான். மார்க்-க்கும் மிகவும் மோசமாக உள்ளது என்றால் தமிழ் பிரிவுக்கு மாற்ற முடியுமா? முடியும் என்றால் அந்த மாணவனின் கல்வியின் நிலை பாதிக்கப்படாதா? பேற்றோர்கள் விருப்பட்டாலும் மாணவனின் நிலையை எதன் அடிப்படையில் சோதித்து DLP வகுப்பு தேர்வு செய்யப்படுகிறான்.

# SK பள்ளிகளை பொறுத்த வரையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. காரணம் இந்த பள்ளிகள் முழுக்க முழுக்க அரசாங்கம் நடத்தி வரும் பள்ளிகள். இந்த பள்ளிகளை எந்த காரணம் கொண்டும் அரசாங்க மூடாது. மேலும் அதிகமான கலுகைகளைத்தான் அள்ளி கொடுக்கும்.

#  மலாய்காரர்களின் SK பள்ளிகளில் இரண்டு மொழி கற்பித்தல் தான் நடக்கும். மலாய் மாணவர்கள் தங்கள் தாய் மொழியான மலாய் மொழி மற்றும் உலக தேவைக்காக ஆங்கில மொழி கல்வி திணிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளில் நிபுணத்துவம் பெற வேண்டும். தாய் மொழி, தேசிய மொழியான மலாய் மற்றும் உலக தேவைகாக ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் புலமை பெற வேண்டும். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் extraordinary-யாக திகழ வேண்டும்; சீனர்களை போல. இதற்கு நாம் தயார் நிலையில் உள்ளோமா? நூற்றுக்கு ஒரு குழந்தை extraordinary-யாக இருக்கலாம். நூறு மாணவர்களும் அப்படி இருக்க முடியுமா? இது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் மிக பெரிய சவால்.

# ஒரு தமிழ்ப்பள்ளி மாணவன் ஆங்கிலத்தில் A பெற வேண்டும்; மலாய் மொழியில் A பெற வேண்டும்; தமிழ் மொழியிலும் A பெற வேண்டும். காரணம் இன்றைய பள்ளிகளும் கல்வி திட்டங்களும்; பெற்றோர்களும்; அவர்கள் சார்ந்த சொந்தங்களிலும் A-க்கள் Produce செய்யும் தொழிற்சாலைகளாகத்தானே இருக்கிறார்கள்.  

# ஒரு உதாரணத்துக்கு; SK பள்ளியில் பயிலும் 1000 மாணவர்களில் 950 மாணவர்கள் DLP-இல் பயில்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். மீதம் உள்ள 50 மாணவர்கள் மட்டுமே மலாய் மொழியில் பயில்வார்கள். இதனால் இந்த SK பள்ளிக்கு ஆபத்து வருமா என்று கேட்டால் வராது என்று துணிந்து சொல்லி விடலாம். காரணம் அந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே பயின்றாலும் அது SK பள்ளியாகத்தான் இருக்கும் எந்த பாதிப்பும் வராது.

# ஆனால் இதே சூழலை தமிழ்ப்பள்ளியில் யோசித்து பார்ப்போம். 1000  மாணவர்கள் உள்ள தமிழ்ப்பள்ளியில் 950 மாணவர்கள் DLP வகுப்பிலும் மீதம் உள்ள 50 மாணவர்கள் தமிழ் பிரிவிலும் பயின்றால் என்ன ஆகும்? சற்று யோசித்து பாருங்கள். 50 மாணவர்களுக்காக ஒரு தமிழ்ப்பள்ளியை நடத்த வேண்டுமா? என்று கேள்வி வரும் போது; இன்றைக்கு DLP-க்கு ஆதரவாக பேசியவர்களை எங்கே போய் தேடுவது?

# PPSMI வந்த போது தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.  அதே போல் இந்த DLP வருவதால் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பல தலைமை ஆசிரியர்களும் DLP-அய் ஆதரிப்பவர்களும் வைக்கும் மிக பெரிய பாயிண்ட் என்.எஸ் ராஜேந்திரன் உட்பட. இதைவிட முட்டாள்தனமான பாயிண்ட் இந்த உலகத்திலே இருக்க முடியாது. படிக்காத; ஆய்வு செய்யாத; சொந்த புத்தி இல்லாத; அடுத்தவர்கள் பேச்சுகள் உண்மையென கருதும்; சமூதாய அறிவு இல்லாதவர்கள் தான் இப்படியான பயிண்ட்டை கொண்டு வர முடியும்.

# 1957-இல் நமது நாட்டில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தது. ஆனால் மொத்த தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் சொச்சம். 2000-த்தில் 520 தமிழ்ப்பள்ளிகள் தான் இருந்தது. மொத்த தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல். கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிக்கவில்லை. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயர்ந்தது. PPSMI ஆரம்பித்த போது வெறும் மூவாயிரம் மாணவர்கள் தான் அதிகரித்தனர். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்தாலும்; தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே தான் போகிறது.

# தமிழ்ப்பள்ளி மானவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம் வேறு பல காரணங்கள். மாறாக கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தையோ ஆங்கிலத்தில் போதிப்பதாலையோ; PPSMI வந்ததாலையோ; DLP-னாலையோ கிடையாது. அது தனி ஆய்வுக்கு உள்ள கட்டுரை.  

# அரசாங்கத்தின் DLP அறிக்கையில்;  ஒரு DLP வகுப்புக்கு ஒரு DLP ஆசிரியர்தான் போதிக்க வேண்டும் என்கிற விதி இருக்கு. அந்த DLP ஆசிரியர் எந்த இனம் என குறிப்பிட வில்லை. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளியில் இருக்கும் DLP பிரிவுக்கு மலாய் வாத்தியார்களையும்; மலாய் பள்ளியில் இருக்கும் DLP பிரிவுக்கு தமிழ் ஆசிரியர்களை மாற்றி விட்டால். அப்போது என்ன செய்வீர்கள்? மலாய் வாத்தியார் தமிழ்ப்பள்ளியில் DLP சொல்லி தருகிறார்கள்; சரியா வராது என அப்பவும் இதே காரணத்தை சொல்லி SK பள்ளிகளுக்கு தானே அனுப்ப போகிறீர்கள்?  இது நடக்காதுன்னு யாராலும் உறுதி கடிதம் தர முடியுமா? வாயில் சொல்லாதீர்கள். எழுத்து மூலம் உறுதி படுத்துகள்.

# இந்த DLP திட்டத்தின் மூலம் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவன் பெரும் சவால்களையும்; பாதிப்புக்கு உள்ளாக போவது உறுதியாக தெரிகிறது. முதல் காரணம், தெளிவில்லாத; நன்றாக திட்டமிடாத; ஆய்வு செய்யாத இந்த கல்வி திட்டத்தினால் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் ஒரு பெரிய கேள்வி குறிக்கு உள்ளாகும். இரண்டாவது, தமிழ்ப்பள்ளிகளில் மலாய்காரர்கள் DLP பாடங்களை போதிப்பதாலும் பல பின் விளைவுகள் நமக்கு காத்திருக்கு.

# ஏன் இந்த DLP திட்டம் சீனப்பள்ளிகளில் அமல்படுத்தவில்லை? சீன சமூதாயம் ஒரு அறிவார்ந்த சமூதாயம். தங்கள் சமூகத்தின் கல்வி நிலையை உயர்த்த அவர்கள் மிக சிறந்த கல்வி குழுக்கள் வைத்திருக்கிறார்கள். அந்த கல்வி குழுக்கள் எடுக்கும் முடிவுக்கு அவர்களின் ஒட்டு மொத்த சமூகமும் கட்டுப்படும். காரணம் அந்த குழுக்களின் கட்டமைப்பு முறை அப்படி.

# சில உதாரணங்களை பார்ப்போம். டோங் ஜோங் பற்றி எல்லோருக்கும் தெரியும் சீனப்பள்ளிகளின் ஒருகினைப்பு குழு 1940-களிலேயே இதை அவர்கள் தோற்று வித்து விட்டார்கள். இந்த அமைப்பில் ஆளும் கட்சி எதிர்கட்சி சார்ந்த அனைத்து கல்விமான்களும் இருக்கிறார்கள். DAP, MCA, GERAKKAN, PKR கட்சி ஆளுமைகளுக்கு அப்பால் இருக்கிறார்கள்.

# நம்மிடம் அப்படி ஏது இல்லை. தமிழ் அறவாரியத்தின் பெரும் முயற்சியால் பள்ளி வாரியங்கள் அமைந்தது. இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. இந்த பள்ளி வாரியங்களை இணைத்து அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சி. கடைசியில் இது செல்லாகாசக போனது. காரணம் இந்த வாரிய ஒருகிணைப்பு குழுவில் அங்கம் பெருவது எதிர்கட்சிகளின் ஆளுமைகளில் போனது. அது கிட்டதட்ட எதிர்கட்சிகளின் கூடாரம் போல் இருக்கிறது. MIC PPP IPF போன்ற கட்சிகள் அங்கு இருக்க மாட்டார்கள். இருந்தாலும் தனித்து செயல்படுவார்கள். இவர்களின் ஒட்டு மொத்த அரசியலையும் தமிழ்ப்பள்ளிகளில் மையமிட்டு நிகழ்த்தி கொண்டு இருப்பார்கள்.

# United Chinese School Alumni Association. அனைத்து சீனப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு. மலேசியாவில் இருக்கும் அத்துனை சீன பள்ளிகளின் முன்னாள் மாணவர்களின் சங்கம் இதில் உறுப்பினராக இருப்பார்கள். இவர்களை பார்த்தால் அரசாங்கமே பயப்படும். எல்லா அரசியல் கட்சிகளில் உள்ள ஆட்களும் இருப்பார்கள். ஆனால் அங்கு எந்த அரசியலும் நடக்காது.

# நம்மிடமும் ஒன்று இருக்கு. United Tamil School Alumni. 523 தமிழ்ப்பள்ளிகளில் வெறும் 44 சங்கங்கள்தான் இணைக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் முன்னாள் மாணவர் சங்கமே கிடையாது. எல்லா முன்னாள் மாணவர் சங்கமும் இதில் உறுப்பினர் ஆக முடியாது. ஆளும் கட்சி ஆதரவாளராக இருந்தால் தான் இணைய முடியும். செயல் படாத கட்டமைப்பு அது. தமிழ்ப்பள்ளிகளின் முன்னேற்றத்திற்கோ; தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களின் முன்னேற்றதிற்கோ துளியும் சிந்தனை இல்லாத அமைப்பு. தமிழ்ப்பள்ளிகள்/ தமிழ்க்கல்வி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாத கிழ அமைப்பு.


# நம் உடனடி தேவை. DLP விழிப்புணர்வு இல்லை. சமூதாய விழிப்புணர்வு. இந்த  DLP திட்டத்தை அமல் படுத்துவதை விட்டு விட்டு; எதிர்காலத்தில் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நிலை பாதிக்கபடாமல் இருக்க; நல்ல கல்வி குழுவை உருவாக்க வேண்டும். Dong zong, United Chinese School Alumni Association போன்ற வலுவான அமைப்புகளை உருவாக்க வேண்டும். அங்கு அரசியல் இருக்க கூடாது.

Share this


5 Comments
avatar

நல்ல கட்டுரை. நல்ல கல்வி குழு வேண்டும் என்று முடித்திருப்பது
சிறப்பு.

Reply
avatar

சபாஷ் நண்பா.....

Reply
avatar

சபாஷ் நண்பா.....

Reply
avatar

சரியான விளக்கம்.அனைவரும் தமிழ்மொழியைக்காக்க முனைப்பு காட்டுவது நமது கடமை!

Reply
avatar

நான் பரிந்துரைக்கிறேன் penpaland.com மொழி பரிமாற்றம் சார்ந்த இணைய

Reply

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews