மலேசிய தமிழ் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது எப்படி? Part 1

உலகின் எந்த மூலையிலும் மிக சுலமாக திரைகதை எழுதி, அந்த படத்தை ரிலிஸ் செய்து விடலாம். ஆனால் மலேசியாவில் சில விதிமுறைகள் உண்டு. இன்று வரை அதை எதிர்த்து குரல் கொடுக்கவோ, இல்லை அதை உடைக்கும் தைரியம்கூட இங்கு யாருக்கும் இல்லை. இந்த சீரியல் கட்டுரை மலேசியாவின் தமிழ் சினிமா உலகை பற்றியும், எனக்குள்ள மிக சிறிய சினிமா அனுவபத்தை கொண்டும், எனக்கு தெரிந்த, யான் கற்று கொண்ட இந்த சினிமா அறிவையும் யமக்கு தெரிந்த திரைக்கதை அமைக்கும் முறையும் இங்கு விவரிக்க போகிறேன்.
1# மலேசியா தமிழ் சினிமா உலகை அலசி ஆராய போகிறோம். கடந்த 42 வருடங்களாக ஏன் மலேசிய தமிழ் சினிமா உலகம் கொஞ்சம் கூட முன்னேறவில்லை?
2# மலேசிய தமிழ் படத்தில் எந்த இடத்தில் நாம் தப்பு செய்கிறோம்?
3# ஏன் மலேசிய தமிழர்களால் ஒரு சிறந்த தமிழ் படத்தை இப்போது வரை தர முடியவில்லை?
இந்த மூன்று காரணங்களை மிக விரிவாக அலசி ஆராய போகிறோம். கூடவே சிறந்த திரைக்கதை எழுதும் முறையும் கற்று கொள்ள போகிறோம்.இந்த கட்டுரை தொடரில் நுழையும் முன் சில பொது விசயங்களயும் அதோடு சேர்த்து என்னை பற்றியும் கொஞ்சம் மேலோட்டமாக விளக்கி விடுகிறேன்.
20 வருடங்களுக்கு முன் நான் ஒரு சிறந்த சினிமா இயக்குனர் ஆகும் ஆசையில், மலேசியா தமிழ் சினிமா உலகில் நுழைந்த போது ஊசி குத்தும் அளவுக்கு கூட இங்கு தொழில் கற்றுக் கொள்ளவோ, சினிமா பற்றி தெரிந்து கொள்ளவோ வாய்ப்புகள் இல்லை. அப்படியும் நான் சில மலேசிய இயக்குனர்களிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்திருக்கிறுக்கிறீன். பெயர்களை சொல்ல வேண்டாம் என்று பார்க்கிறேன் . அத்துனையும் டூபாக்கூர்கள். பெயர்த்தான் டைரக்டர். ஒரு மண்ணும் தெரியாது. சில தமிழ் நாட்டு சினிமா தெரிந்தவர்களை கூடவே வைத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான். ஒழுங்காக தமிழ் கூட எழுத தெரியாது. அவர்கள் செய்யும் காரியங்களை வெளியில் சொன்னாள் வெட்க கேடு. ஒரு வழியாக இந்த டூபாக்கூர் இயக்குனர்கள் கும்பல்களிடம் தப்பித்து வெளியே வந்து சுயமாக தொழில் கற்று கொள்ள முடிவெடுத்தேன்.
கிடைத்த வேலைகளை செய்துக் கொண்டும், சில புத்தகங்களை நானே வாங்கி படிக்க தொடங்கினேன். அந்த காலகட்டத்தில் தான் எனக்கு சில சென்னை சினிமா நண்பர்களும், நேப்பாள் சினிமா நண்பர்களும் கிடைத்தார்கள். மெல்ல மெல்ல எனக்கு சினிமா என்றால் என்ன என்று புலப்பட தொடங்கியது.
நான் சினிமா கற்றுக் கொள்ள அலைந்த காலத்தில், ஒரு காமிரா கூட கையில் கிடைக்காது. சினிமா என்பது எட்டாத கனியாக இருந்தது.ஆனால் இன்று அப்படி அல்ல. சினிமா ஆங்கிள் என்றால் என்ன என்று கூகிளில் தேடினால் அவ்ளோ பக்கங்கள் உண்டு. யூடுப்பில் எக்கசக்க வீடியோக்கள் உண்டு.
விரல் நுனியில் பல தகவல்கள் உண்டு. DSLR காமிராவில் படம் எடுக்க கூடிய வசதி வந்துவிட்டது. மிக சுலபமாக Sound Regarding போகலாம். தேவை ஒரு லேப்டாப். சில சாப்டுவேர்கள். Sound proof-வோடு ஒரு ரூம். படம் எடுக்க கற்று தர பல இணைய பக்கங்கள், பயிற்சிகொடுக்க பல யூடுப் வீடியோக்கள்.
இன்றைய சினிமா கனவோடு திரியும் இளைஞர்களுக்கு தேவை கொஞ்சம் பொறுமையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும். பொதுவாக உள்ளூர் சினிமாகாரர்களுக்கு சினிமா ஆர்வம் உண்டே தவிர, எதையும் கற்றுக் கொள்ளும் ஆவல் கிடையாது. இதை ஆர்வ கோளாறு என்றே சொல்லலாம். ஒரு தோட் (கதை கரு) உருவான உடனயே காமிராவை தூக்கிக் கொண்டு சூட்டிங் போய் விடுகிறார்கள்.
பொதுவாக நான் எல்லா மலேசிய தியேட்டர் படங்கள், டெலிமூவி, நாடகம் பார்த்திருப்பேன். என்னை பொருத்த வரை மிக மிக சில படங்கள் தான் தியேட்டர் படங்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி உள்ளவை. நான் எந்த மலேசிய படத்தின் பெயரையும் இந்த தொடரில் சொல்லப் போவதில்லை. இது நமது குற்றம் இல்லை. நமக்கு முன் மலேசிய தமிழ் சினிமாவில் இருந்தவர்களின் தவறு. நமது மலேசிய சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் எந்த முயற்சியும் இவர்கள் செய்ய வில்லை என்பதே உண்மை.
ஆரம்பகாலத்தில் RTM மட்டுமே மலேசிய தமிழ் சினிமாவை வாழ வைக்க கூடிய தளமாக இருந்தது. தொழில்நுட்ப காரணமாக நம்மாள் தியேட்டர் படங்கள் எடுக்க முடியாமல் போனது. தியேட்டர் படங்களுக்கு பெரிய பட்ஜெட், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழில் நுட்ப சாதனங்கள் பலவும் தேவைப்பட்டது. அப்போது அந்த வசதிகள் நம்மிடையே கிடையாது. ஆகவே சின்ன சின்ன டெலிமூவிக்கள் தயாரிக்கப்பட்டு RTM-இல் விற்க பட்டு வந்தது. பிறகு TV3-வும் தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் உள்ளூர் டெலிமுவிக்களை வாங்க தொடங்கினார்கள்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி நமது உள்ளூர் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்காமல் போனது நமது தலை எழுத்து. சில Cari Makan Team-க்கள் RTM மற்றும் TV3-வை தங்கள் கட்டுபாட்டில் வைத்துக் கொண்டு பணம் பார்த்து வந்தார்கள். புதிதாக யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் ‘பார்த்துக்’ கொண்டார்கள். நமது தமிழ் சினிமா வளர முடியாமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
Astro ஆரம்பித்த 97-ம் காலகட்டத்தில் நிலமை இன்னும் மோசமானது. மக்கள் RTM மற்றும் TV3 பார்க்கும் ஆர்வம் குறைந்து, ASTRO மட்டுமே பார்க்கும் மனநிலைக்கு வந்தார்கள். இதனால் TV3 சுத்தமாக உள்ளூர் படைப்புகள் வாங்குவதையும் ஒளிப்பரப்புவதையும் நிறுத்திக் கொண்டார்கள்.
RTM அரசாங்க டிவி என்பதால் வேறு வழி இல்லாமல் தமிழ் உள்ளூர் படைப்புகளை வாங்கி ஒளிப்பரப்பி வருகிறார்கள். இதுவும் இந்த ஆண்டில் நிறுத்தி வைக்க பட்டது. அந்த காரணத்தை நான் இங்கு எழுதினால், என்னை என்ன என்ன கெட்ட வார்த்தைகளில் திட்ட முடியுமோ அத்துனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டுவார்கள். திட்டினாலும் பராவாயில்லை. உதைக்க வருவார்கள்.
தொடரும்…………
2 Comments
👍
Replyஅருமை ஐயா... நன்றி..
Reply