தேர்தல் திருவிழா
தேர்தல் திருவிழா
1. முன்பு காலத்தில் எஸ்டேட்டில் திருவிழா நடக்கும். வெளியூரில் வேலைக்கு போனவர்கள் எல்லாம் லீவு எடுத்து கொண்டு எஸ்டேட்டுக்கு திரும்புவார்கள். பொண்ணுங்க எல்லாம் புதிய தாவணிகள் தைக்கக் கொடுத்துவிட்டு; அதை உடுத்த காத்திருப்பார்கள். புதிய சேலைகள், பஞ்சாபி சூட்கள் வாங்கி வைத்திருப்பார்கள்.
2. ஆண்கள் அலகுகள் குத்துவதற்கு பத்தியமாக இருப்பார்கள். எஸ்டேட் முழுக்க மாவிலை தோரணமும், கலர் ரிப்பன்களும் கட்டி எஸ்டேட்டையே அழகு படுத்தி வைத்திருப்பார்கள். திடலில் திரைக்கட்டி படம் போடுவார்கள். எஸ்டேட்டே குதுக்களமாக இருக்கும்.
3. திருவிழாவிற்கு ரெண்டு நாளைக்கு முன் காப்பு கட்டுவார்கள். அதன் பிறகு எஸ்டேட்டில் யாரும் சரியாக தூங்க மாட்டார்கள். எங்கும் கலக்ககலப்பான பேச்சுகளும், உற்சாகமும் எஸ்டேட் முழுவதும் பரவி கிடக்கும்.
4. திருவிழா போன்ற குதுக்களமான ஒரு காலம் முதல் முறையாக இந்த தேர்தலில் பார்க்கிறேன். இப்படி ஒரு தேர்தலை இதற்கு முன் நான் எப்போதும் பார்த்ததில்லை.
5. நாடு முழுவதும் வாக்களிக்கும் அந்த நாளை எதிர்ப்பார்த்து மிகவும் ஆவலோடும் ஒரு வித குதுக்கலத்தோடும் காத்திருந்தார்கள். அந்த நாளும் வந்தது. எல்லோரும் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார்கள்.
5. முதன் முதலாக ஓட்டு போட போகிறவர்கள் ஒரே ஆர்ப்பாட்டமாய் இருக்கிறார்கள். என்ன மாதிரி உடை உடுத்த வேண்டும்? வேட்டி சட்டை உடுத்திக் கொண்டு போகலாமா? வாக்களிப்பு மையத்திலிருந்து செல்பி எடுக்க வேண்டும். இங்க் எப்படி வைக்க வேண்டும்? எப்படி பெருக்கள் குறி போட வேண்டும் என்று அட்ராசிட்டி அலப்பறைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
6. வாட்சாப்பில் வாய்ஸ் நோட்களும், விடியோகளும் பறந்துக் கொண்டிருக்கிறது. எப்போது விடியும் என்று ஊரே காத்திருக்கிறது. பலரும் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
7. இந்த முறை தேர்தலில் வாக்களிக்க ஒருவித குதூக்கலத்தோடும், மனதில் சந்தோசத்தோடும் இருக்கிறார்கள். யாரிடமும் பயமும் சோகமும் இல்லை. தேர்தல், ஓட்டு, முடிவு, ஆட்சி மாற்றம் என எங்கும் ஒருவித உற்சாகத்தோடும் ஆவலோடும் விடியலுக்கு காத்திருகிறார்கள்.
8. இந்த தேர்தல் வழகத்துக்கு மாறாக இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே அலைவரிசையில் இயங்கிக் கொண்டிருகிறது. எப்படி இது சாத்தியம் ஆனது? ஆச்சர்யம். இந்த முறை நிச்சயமாக 85 விழுகாட்டுக்கும் அதிகமான ஓட்டு பதிவு இருக்கும் என உறுதியாக தெரிகிறது.
9. நாட்டின் மிக பெரிய திருவிழா கால குதூக்கலம் தொத்திக் கொண்டுள்ளது.
மதியழகன் முனியாண்டி
09/05/2018
0 Comments