Monday, 11 April 2022

இந்தியர்கள் இந்த நாட்டின் மீது விசுவாசமாக இல்லையா

இந்தியர்கள் இந்த நாட்டின் மீது விசுவாசமாக இல்லையா?

“MCA and MIC, however, was not interested in independence for Malaya because they were more interested in raising money to send back to China to support the Kuomintang and regarded Chiang Kai-shek as their Tokong. MIC, on the other hand, was a socialist party and were only concerned about matters back in India and regarded Subhas Chandra Bose as their Tokong.”

1. சமீபத்தில் ராஜ பெட்ரா தன் ப்ளாக்கில் இப்படி எழுதியிருந்தார். இந்த நாட்டின் சுதந்திரத்தில் நாம் அக்கறை இல்லாமல் இருந்தோம் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்.

2. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒரு பொய் செய்தி. நாம் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் போராடியுள்ளோம். 

3. நம்மில் சில சுயநலவாதிகள் இருந்தார்கள். பிபி நாரயணனன், சம்பந்தன் போன்று. ஆனால் இந்த நாட்டின் மீது பற்றும், விசுவாசமும் நம்மில் 99 விழுக்காட்டு இந்தியர்களுக்கு இருந்தது. மலாய சுதந்திரத்துக்காக நாம் போரடின பல சரித்திர சம்பவங்கள் உண்டு.

4. நாம் சுபாஷ் சந்திர போஸ் பின்னால் போனது உண்மைத்தான். ஆனால் அது வேறு சுயநல அரசியல் போக்கு. நாம் சுபாஷ் சந்திரபோஸோடு இணைந்தது இரண்டாம் உலக போர் சமயத்தில். அப்போது நம் நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தது ஜப்பானியர்கள். ஜப்பானிய அரசாங்கள் நம்மை சுபாஷ் சந்திர போஸின் இந்திய சுதந்திர படையோடு சேர்ந்துக் கொள்ள தூண்டியது. சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட இந்திய சுதந்திர படை ஜப்பானியர்கள் உருவாக்கி கொடுத்தது.

5. சிலர் விருப்பட்டு அந்த படையில் போய் சேர்தார்கள். பலர் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இதுவே உணமையாக சரித்திரம். 

6. நாம் எப்போதும் தமிழ்நாட்டு/இந்திய அரசியல் பின்னணியில் இருந்தோம். ஆனால் நாம் இங்கே பணத்தை சம்பாதித்து இந்திய நாட்டு சுதந்திரத்துகாக கொடுக்கவில்லை. நாம் சம்பாதித்த பணத்தை இங்கேயே முதலீடு செய்தோம்.

7. நாம் இங்கே இந்திய நாட்டு சுதந்திரத்துக்க்காக போரடவில்லை. நாம் மலாயாவின் சுதந்திரத்துக்காகவே போராடினோம்.

8. ராஜா பெட்ரா 1947-க்கு பிறகு நடந்த சம்பவங்களை சுட்டிக் காட்டுகிறார். அந்த காலகட்டத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. சுபாஷ் சந்திர போஸ் கிடையாது. நாம் இங்கே உழைத்த பணத்தை இந்திய நாட்டு சுதந்திரத்துக்கு அனுப்பவில்லை.

9. நம் மீது இருக்கும் காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தும்; இந்தியர்களுக்கு எதிராக மலாய்காரர்களை திருப்பிவிடும் ஒரு கட்டுரையாக ராஜ பெட்ராவின் இந்த கட்டுரை இருக்கிறது.

10. இந்தியர்களும் சீனர்களும் இந்த நாட்டின் சுதந்திரத்துக்கு போரடவில்லை. அவர்களுக்கு இந்த நாட்டின் மீது விசுவாசம் இல்லை. அவர்களுக்கு எப்படி இந்த நாடு சொந்தம் ஆகும். கூலிகளாக வந்தவர்கள் கூலிகள் தானே. கூலிகளுக்கு ஏன் அதிகார பகிர்வு கொடுக்க வேண்டும் என்கிற சிந்தனையை ராஜ பெட்ராவின் கட்டுரை கொண்டுள்ளது.

11. நமக்கு எதிரான சிந்தனையை தூண்டிவிட்டு, மலாய்காரர்களை நமக்கு எதிராக திருப்பி விட்டு, இன பகைமை மூலம் மலாய்காரர்களின் ஓட்டுகளை அம்னோ பெற்றுவிட பார்க்கிறது. தலைமைத்துவம் மாறினாலும், ஆள் மாறினாலும்  அம்னோவின் அடிப்படை சிந்தாந்தம் மட்டும் எப்போதும் மாறப்போவதில்லை. அம்னோ கட்சியின் ஆயுதம், எப்போதும் இன வெறி அரசியல்தான்.

மதியழகன் முனியாண்டி
12 ஏப்ரல் 2018

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews