ஆப்ரஹாம் லிங்கன்
ஆப்ரஹாம் லிங்கன்.
1. இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டு இருக்கும் அனைவரின் வாழ்க்கையிலும் ஆப்ரஹாம் லிங்கன் என்கிற பெயர் எதாவது ஒரு காலகட்டத்தில் கண்டிப்பாக காதில் விழுந்திருக்கும். நம் வாழ்க்கை பயணத்தில் ஏதாவது ஒரு தருணத்தில் இவரின் பெயரை உச்சரித்திருப்போம்.
2. மாறுப்பட்ட முக அமைப்பைக் கொண்டது இவரது முகம். நம் நினைத்த உடன் சட்டென நம் நினைவுக்குள் வரக்கூடியது. நின்று யோசிக்க கூடிய வாய்ப்பை இவரது முகம் நமக்கு கொடுக்காது.
3. பொதுவாக நன்னெறி கதைகளுக்காகவே அப்ரஹாம் லிங்கனின் கதைகள் நமக்கு சொல்லப்பட்டு வந்திருக்கிறது. செருப்பு தைக்கும் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து 16-வது அமெரிக்க அதிபராக உயர்ந்தார் என்பதையும்; படிப்பதற்காகவே பல மைகள் நடந்து வந்து, தெரு விளக்கின் வெளிச்சத்தில் படித்து வாழ்க்கையில் உயர்ந்தார் என்கிற கதைகளைத்தான் நமக்கு பொதுவாக சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
4. இன்று கிடைக்ககூடிய இணையத்தின் தொடர்ப்பில் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றை இன்னும் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த கட்டுரை அவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசுவது அல்ல. அவர் இந்த உலகுக்கு வழங்கிய தத்துவம்(Philosophic).
5. லிங்கன் ஒரு சாதரண கிளார்க்-காக தன் வாழ்க்கையை தொடங்கினார். கிளார்க் வேலையை விட்டுவிட்டு; கொஞ்சம் கடன் வாங்கி வியாபாரம் செய்தார். வியாபாரம் லாபம் கொடுக்கவில்லை. பிறகு வழக்கறிஞர் தொழிலுக்கு படித்து வழக்கறிஞர் ஆனார். இங்குதான் அவரின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பம் ஏற்ப்பட்டது.
6. ஒரு சாதரண குடிமகனாக தன் வாழ்க்கையை தொடங்கி; மிக எளிமையாகவே தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார். தன் சக்திக்கு உகந்தவாறு வாழ கற்றுக் கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் நின்று; நிதானமாக யோசித்தார். தாம் யார்? என்ன செய்துக் கொண்டிருக்கிறோம்? எதை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்? அடுத்து என்ன செய்ய வேண்டும்?
7. இந்த கேள்விகள்தான் அவர் வாழ்க்கையை மாற்றியது. வியாபாரம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. அதில் அவர் லாபம் பார்க்கவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார். எது அவருக்கு உகந்தது என யோசித்தார். அவருக்கு என்ன தேவை என்பதனையும் தாம் யார் என்பதனையும் உணர்ந்தார். அப்போது அவர் ஒரு தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தார். தன் வாழ்க்கையின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கினார். படித்து வழக்கறிஞர் ஆனார்.
8. இரண்டாம் அத்தியாயத்தில் தொடங்கிய அவரின் வாழ்க்கை, இந்த மனித குலத்துக்கு இரு பெரும் தத்துவங்களை கற்றுக் கொடுத்தது. அவரின் சிந்தனையில் உதித்த தத்துவத்தின் வெளிபாடு இன்று உலக போக்கை மாற்றியுள்ளது. இந்த உலகம் இன்று அடைந்திருக்கும் பெரும் மாற்றத்திற்கு அப்ராஹாம் லிங்கனே காரணம்.
9. அவரின் இரு பெரும் தத்துவங்களில் ஒன்று மாற்று சிந்தனை. இன்னொன்று அடிமை முறையை ஒழித்தல். இது இரண்டுமே படிப்பதற்கும் கேட்பதற்கும் மிக எளிமையாக இருக்கிறது. ஆனால் இதன் தாக்கம் எப்பேற்ப்பட்டது என்பதனை, இந்த உலகம் இயங்குவதிலிருந்து அதன் போக்கு மாறியதில் உணர்ந்துக் கொண்டுள்ளது. இன்னும் பலருக்கும் இந்த தத்துவம் சரியாக புரியவில்லை.
10. மாற்று சிந்தனை என்பது பலராலும் பேசாப்பட்டே வருகிறது. ஆனால் அப்ராஹாம் லிங்கன் சொல்லும் மாற்று சிந்தனை என்பது வேறு. ஒரு சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அந்த சூழல் நம்மையும் நம்மை சார்ந்து இயங்கும் முறையையும் பாதிக்கிறது என்றால் நமக்கு மாற்று சிந்தனை தேவைப்படுகிறது.
11. ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கும் நாம், அந்த சிக்கலில் நின்றவாரே; அந்த சிக்கலில் மேலும் சுழன்று அந்த சிக்கலுக்கு தீர்வு காண முயன்றுக் கொண்டிருக்கிறோம். லிங்கன் போதிக்கும் மாற்று சிந்தனை என்பது இங்கு மாறுப்படுகிறது. சிக்கலிலிருந்து விடுபட வேண்டும். நாம் சிக்கிக் கொண்டிருக்கும் சிக்கலிலிருந்து வெளியே வரவேண்டும். வெளியே நின்று அந்த சிக்கலை பார்க்க வேண்டும்.
12. சிக்கலிலிருந்து விடுபட நமக்கு மாற்று சிந்தனை தேவைப்படுகிறது. உதாரணமாக நாம் பொருளாதர சிக்கலில் உள்ளோம். அந்த பொருளாதர சிக்கலிலிருந்து விடுபட கடன் வாங்கி சமாளிக்கலாம் என யோசிக்கிறோம். கடன் வாங்கியும் சமாளிக்க முடியாமல் போனால்?
13. மாற்று சிந்தனை என்பது நமக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
14. அமெரிக்காவில் அடிமைமுறையை அழிக்க பாடுபடுகிறார். அதற்கான போராட்டத்தில் ஈடுபடுகிறார். போர் செய்கிறார். ஆனால் அவரால் அடிமை முறையை ஒழிக்க முடியவில்லை. நின்று நிதானமாக யோசிக்கிறார்கள். ஏன் இந்த அடிமை முறை தொடர்கிறது? வளர்ந்துவரும் விவசாய துறைக்கும் தொழில்த்துறைக்கும் அடிமைகள் தேவைப்படுகிறார்கள். ஜமின்தார்கள் மொத்தமாக விலைக் கொடுத்து மனிதர்களை வாங்கி வந்து தங்கள் தொழில்துறைக்கு பயன்படுத்துகிறார்கள்.
15. அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்றால். அடிமை சிந்தனையை ஒழிக்க வேண்டும். மனித பலத்தின் பயனை உணர்த்துகிறார். சம்பள முறையை கொண்டு வருகிறார். வேலைகளை பிரித்து கொடுக்கும் முறையை கொண்டு வருகிறார்.
16. இதுவே அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உலகம் முழுவதிலும்; முற்றாக அடிமை முறையை ஒழிப்பதற்கு வழிவகுக்கிறது. இன்று நாம் உடல் ரீதியாக அடிமை வாழ்க்கையிலிருந்து விடுப்பட்டுள்ளோம். யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்கிற முறையின் கீழ் சுதந்திரமாக வாழ்கிறோம்.
17. மாற்று சிந்தனையை அடுத்து லிங்கன் நமக்கு விட்டு சென்ற தத்துவம் அடிமை முறையை அகற்றுதல். உலகம் முழுவதும் மனிதர்களை மனிதர்களே அடிமைகளாக வைத்திருந்தார்கள். பணம் கொடுத்து வாங்கி வந்து அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அடிமை என்பது மனித குலத்துக்கு எதிரானது என்கிற புரட்சியை லிங்கன் முதன் முதலாக அமெரிக்காவில் தொடங்கினார்.
18. அடிமைகள் என்று யாரும் இல்லை என்றார். அடிமை என்பது உடல் பலத்தினால் மட்டும் அல்ல; அறிவு வளர்ச்சியிலும் அடிமையாக இருக்கக்கூடாது என்றார். அடிமைகளை உருவாக்க கூடாது என்றார். நமது சிந்தனை தடை செய்வதும் அடிமைத்தனம் என்றார்.
19. நம்மை யோசிக்கவிடாமல் ஒரு வர்க்கம் நம்மை எப்போதும் ஆள்கிறது. அவர்களை மீறி நாம் யோசித்துவிட்டால் நாம் அவர்களை கடந்து போய் விடுவோம். மாற்றத்தை கொண்டு வந்து விடுவோம்.
20. நம்மை சித்திக்கவிடாமல்; நம் சிந்தனை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். நம்மால் சுயமாக சிந்திக்க முடியாமல்; அதிகார வர்க்கம் காட்டும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
21. நமக்கு எது நல்லது கெட்டது; நமக்கு எது தேவை தேவையில்லை; நாம் எப்படி வாழ வேண்டும் என்பதனை நம்மை ஆள்கிற முதலாளிகள் முடிவு செய்கிறார்கள். நம்மை அடிமையாக வைத்திருக்கிறார்கள். மாற்று சிந்தனையை வேறொரு வர்க்கம் நமக்கு கொடுகிறது. அதையே நாம் மாற்று சிந்தனையாக நம்புகிறோம்.
22. அடிமை முறையை இன்று வேறு வடிவில் நம் மீது திணிக்கிறார்கள். உடல் ரீதியாக நாம் அடிமைகளாக வாழ்ந்த காலம் போய் அறிவு ரீதியாக நாம் அடிமைகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
23. அப்ராஹாம் லிங்கம் நாமக்கு இரண்டு தத்துவங்களை போதிக்கிறார். ஒன்று மாற்று சிந்தனை. இது நாம் அடுத்த கட்ட நகர்வுகானது. இன்னொன்று அடிமை முறையை அகற்றுதல். இது நம் எதிர்கால மாற்றத்திற்கானது.
24. இந்த இரண்டு தத்துவங்களையும் நமக்கு எந்த புத்தகமும் கற்று தருவதில்லை. கற்று தருவதற்கு தயாராகவும் இல்லை. நாமக்கு நாமே கற்று கொடுத்து கொள்ள வேண்டும். அப்ரஹாம் லிங்கன் ஆற்றிய உலக புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு(Gettysburg Address) என்கிற உரை நமக்கு உணர்த்துகிறது. Government of the people, by the people, for the people, shall not perish from the earth – Abraham Lincoln.
0 Comments