Saturday, 23 April 2022

கொரியன் படங்களில் தமிழ் படங்களின் கதைகள்

1. பல கொரியன் படங்களைப் பார்த்து தமிழ் படங்கள் எடுத்த கதைகளை ஆங்காங்கு நாம் படித்திருப்போம், சிலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், நான் பார்த்த சில கொரியன் படங்கள் தமிழ் படங்களைப் போலவே இருந்ததை கவனித்திருக்கிறேன். அதிசயத்திருக்கிறேன்.

2. அப்படி பார்த்த சில கொரியன் படங்கள் தமிழ் படங்களின் கதைகளோடு ஒத்து இருப்பதை சிறுக்குறிப்பாக இங்கே பதிவிடுகிறேன். நீங்களும் இந்த படங்களைப் பார்த்து இதன் ஒற்றுமைகளை உணரலாம்.

3. இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி – 2006

4. மக்களுக்கு எதிரான ஒரு கோமாளி மன்னர். அதிக வரி விதித்து மக்களைக் கொடுமைப்படுத்துகிறார். மக்கள் மன்னருக்கு எதிராக இருக்கிறார்கள். மன்னருக்கு எதிராக அரண்மனை அதிகாரிகள் சதி செய்கிறார்கள்.

5. உருவ அமைப்பில் ஒரே மாதிரி இருக்கும் ஒருவன் மன்னர் இடத்துக்கு வருகிறான். நிஜ மன்னன் தலைமறைவாக ஒளித்து வைக்கப்படுகிறான். போலி மன்னன் மக்களுக்கு நல்லது செய்கிறான்.

6. மன்னரின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை மக்கள் உணர்கிறார்கள். இறுதியில் நிஜ மன்னன் திரும்பி வருகிறார். கதை சுபம். 

7. இம்சையரசன் 23-ஆம் புலிகேசி ஏறத்தாள சிவாஜி கணேசன் நடித்த பழைய உத்த புத்திரன் படத்தின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பது நமக்கு தெரியும். சிவாஜி கணேசன் நடித்த உத்திர புத்திரன் படம், 1940-ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த தமிழ் படத்தின் ரீ-மேக். 

8. Masquerade – 2012

9. மக்களிடம் கடுமையைக் காட்டும் ஒரு மன்னர். கூடுதல் வரியை விதித்து மக்களின் எதிர்ப்பை எதிர்நோக்குகிறார். அரண்மனை அதிகாரிகளில் சிலர் மன்னருக்கு எதிராக சதி செய்கிறார்கள். சதியை முறியடிக்க தன்னைப் போலவே உருவ அமைப்பில் இருக்கும் ஒருவனை தன் இடத்தில் அமர வைக்கிறார்.
10. மன்னரின் உருதோற்றத்தில் இருப்பவன் ஒரு வெகுளியாக கதாபாத்திரம். மன்னர் போல் வேசம் போட்டிருக்கும் கதையின் நாயகன் அரண்மனையில் பல கோமாளிதனங்கள் செய்கிறான். இதற்கிடையில் தலைமறைவாக இருக்கும் நிஜ மன்னருக்கு விசம் வைத்து சாகடிக்கும் முயற்சியில் மன்னர் கோமா நிலைக்கு போகிறார்.

11. வெகுளியாக அரண்மனையில் இருக்கும் போலி மன்னர் மக்களின் கஷ்டங்களை உணர்ந்து மக்களுக்கு நல்லது செய்கிறார். வரிகளைக் குறைக்கிறார். மன்னரின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை மக்கள் உணர்கிறார். மன்னனுக்கு ஆதரவாக மக்கள் மாறுகிறார். 

12. இறுதியில் நிஜ மன்னர் குணமாகி திரும்புகிறார். போலி மன்னர் நாட்டை விட்டு போகிறார். நிஜ மன்னரின் கொலை முயற்சியில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கிறார். 

13. கொரிய வரலாற்றில் 16-ஆம் நூற்றாண்டில் நடந்த ஒர் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இக்கதை நாவலாகவும் வந்திருக்கிறது.

14. அதிசய பிறவி – 1990

15. ஒரு மோட்டார் விபத்தில் கதையின் நாயகனாக ரஜினி இறந்துவிடுவார். மேலோகத்துக்கு செல்லும் ரஜினியின் ஆவி ஞாய தீர்ப்புகாக காத்திருக்கும். அப்போதுதான் ஓர் உண்மை தெரிய வரும். ரஜினியின் ஆவியைத் தவறுதலாக பிடித்து கொண்டு வந்திருப்பார்கள்.

16. தங்கள் தவறை சரி செய்ய யமதர்மரும் சித்ரகுப்தனும் சேர்ந்து ரஜினியின் ஆவியை, ரஜினி போலவே இருக்கும் இன்னொரு உடலில் சேர்த்து விடுவார்கள்.

17. வெகுளியாக இருக்கும் ரஜினியின் உடலில் புகுந்த முதல் ரஜினியின் ஆவி வில்லன்களை வீழ்த்தி சாகசம் செய்வார். 

18.Wonderful Nightmare – 2015

19. கதையின் நாயகி ஒரு கார் விபத்தில் இறந்து விடுவார். மேலோகத்துக்கு செல்லும் நாயகியின் ஆவி ஞாய தீர்ப்புக்கு காத்திருக்கும். அப்போதுதான் ஓர் உண்மை தெரிய வரும். நாயகியின் ஆவியை தவறுதலாக பிடித்துக் கொண்டு வந்திருப்பார்கள். 

20. கொரியாவின் யமதர்மனும் சித்ரகுபதனும் தங்கள் தவறை சரி செய்ய, நாயகியின் தோற்றத்தில் இருக்கும் இன்னொரு உருவத்தில் சேர்த்து விடுவார்கள்.

21. வெகுளியாக இருக்கும் நாயகி தான் குடியிருக்கும் பிளட் பிரச்சனையைத் தீர்த்து வைப்பார். குடும்ப உறவுகளைப் புரிந்து கொள்வார். இறுதியில் மனம் திருந்துவார். குடும்பத்தோடு இணைந்து வெளிநாட்டுக்கு போவார். சுபம்.

22. தர்மம் வெல்லும் – 1989

23. பதிமூன்று பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக அம்மா கதாபாத்திரத்தில் நடித்த சுஜாதாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும். இளம் பருவத்திலேயே அம்மா சுஜாதாவும் அப்பா விஜயகாந்தும் பிரிந்து விடுவார்கள்.

24. அம்மாதான் மகன் விஜயகாந்தையும் மகளையும் வளர்ப்பார். ஓடிப்போன அப்பா விஜயகாந்த் ஜெயில் அதிகாரியாக இருப்பார். மகன் விஜயகாந்த் ஒரு வேலை விசயமாக நேப்பாள் நாட்டுக்கு போன சமயத்தில்தான் அம்மா பதிமூன்று கொலை செய்த அந்த வழக்கில் சிக்கி இருப்பார்.

25. மகன் விஜயகாந்த் தன் அம்மா இந்த கொலையை செய்திருக்க மாட்டார் என்று உறுதியாக நம்புவார். அம்மாவுக்காக போராடி உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துவார்.

26. அந்த பதிமூன்று பேரும் விசம் வைத்து சாகடிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் நிரூப்பித்து, தன் அம்மாவை கொலை குற்றசாட்டிலிருந்து மகன் விஜயகாந்த் காப்பாற்றுவார். சுபம்.

27. Innocent – 2020

28. பதினாறு பேரை விசம் கொலை செய்த குற்றத்திற்காக ஓர் அம்மாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும். கொலைகாரியான அம்மாவின் மகள் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடி போய் வக்கில் ஆகியிருப்பார்.

29. தன் அம்மாவின் கொலை வழக்கு குறித்து டிவி செய்தி பார்க்கும் நாயகி அதிர்ச்சியாவாள்.

30. பதினாறு பேர்களை விசம் வைத்து கொலை செய்த உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி, தன் அம்மாவுக்கு விடுதலை வாங்கி தருவார்.

31. கொரிய நாட்டில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. 

32. My Little Bride – 2004

33. தன் மகன் வயிற்று பேரனுக்கும், மகள் வயிற்று பேத்திக்கும் எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பது தாத்தாவின் ஆசை.

34. பேத்திக்கு பதினாறு வயது. சின்ன பிள்ளை என்பதால் மகனும் மகளும் இந்த கல்யாணத்துக்கு ஒப்பு கொள்ள மாட்டார்கள். அதோடு மட்டும் இல்லை. பேரனுக்கும் பேத்திக்கும் செட் ஆகாது.

35. தான் சாவது போல நாடகம் ஆடி, பேரனிடமும் பேத்தியிடமும் கல்யாணத்துக்கு சத்தியம் வாங்கிவிடுவார். 

37. பேத்தி பள்ளியில் படிக்கும் சின்ன பெண். தனக்கு கல்யாணம் ஆனதை பள்ளியில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருப்பாள். அதே பள்ளி தன் கணவன் ஆசிரியராக வருவான்.

38. சில பல காமேடிகளுக்கு மத்தியில் இருவரும் ஒருவரை ஒருவர் புரித்துக் கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி ஒன்று சேர்வார்கள். 

39. தமிழில் இதுபோன்ற பல கதைகளை பல ஆண்டுகளாக நாம் சினிமாவாக பார்த்திருக்கிறோம். சாகும் தருவாயில் இருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி சத்தியம் வாங்கி விடுவார்கள்.

40. சத்தியம் செய்து கொடுத்ததால் வேறு வழியில்லாமல் பிடிக்காமல் சேர்ந்து வாழ்வார்கள். இறுதியில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு சேர்ந்து வாழ்வார்கள். 

41. இதுவரை நான் பார்த்த சினிமா படங்கள், வாசித்த கதைகளை வைத்து பார்க்கும்போது உலகம் முழுவதும் கதைகள் ஒன்றுதான். மனித உணர்வுகளும் ஒன்றுதான். ஒவ்வொரு மண்சார்ந்த மனித குழு பண்பாட்டு சூழலுக்கு ஏற்றவாரு கதையின் போக்கு அமைகிறது.

42. கதை என்பது; ஒரு கதைக்குள் கதை நடக்க வேண்டும். கதைக்குள் டிராமா நடக்க வேண்டும். கதைகளில் உணர்வுகள் இருக்க வேண்டும். மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு சொல்லப்படும் எந்த கதைகளும் யாரையும் ஈர்ப்பதும் இல்லை. கிரேட் படைப்பாகவும் மாறுவது இல்லை.

43. வெறும் வார்த்தை குவியலையும், மொழி அழகியலையும் வைத்துக் கொண்டு கதைகளை நகர்த்த முடியாது. கதை என்றால், கதைக்கு நிச்சயமாக Plot இருக்க வேண்டும். அந்த Plot-க்குள் Conflict இருக்க வேண்டும். 

44. கதைகளை வாசிப்பவர்களும் சரி, கதையைப் படமாக பார்ப்பவர்களும் சரி அவர்கள் எதிர்ப்பாது ஒரு கதை. கதையே இல்லாமல் கதை சொல்வதை வாசகர்களும் சரி ரசிகர்களும் சரி ஏற்று கொள்வது இல்லை என்பதை நாம் காலம்காலமாக பார்த்து வருகிறோம்.

45. இன்று உலகம் முழுவதும் கொரியன் படங்களையும் கதைகளையும் எல்லோரும் விரும்புவதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அவர்கள் கதைகளைக் கதையாக சொல்கிறார்கள். அந்த கதைக்குள் மனித உணர்வுகளை மையப்படுத்துகிறார்கள். உணர்களின் வழி தர்மம் அதர்மத்தை எழுப்புகிறார்கள்.

46. எந்த வகை(Genre) கதைகளாக இருந்தாலும் அதனுள் அவர்கள் எழுப்பும் உணர்வு கலையும் கதையின் நுட்பமும் நமக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. கிரைம் வகை கதைகளில்கூட அவர்கள் மனித உணர்வுகளின் தர்ம, அதர்ம உணர்வுகளை எழுப்புகிறார்கள். உதாரணமாக RV: Resurrected Victims, The Wailing, Taxi Driver, A Day, The Thieves இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

14. Emotional is create the story.

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews