Friday, 22 April 2022

கார்னரில் நஜிப். குழப்பத்தில் மகாதீர்

கார்னரில் நஜிப். குழப்பத்தில் மகாதீர்.

முன் குறிப்பு: தீவிரமான நஜிப், பாரிசான் ஆதரவாளர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். 

1. தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது. பாரிசானின் முதல் கட்ட தேர்தல் வேட்பாளர்களை தெங்கு அட்னான் அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து மஇகாவின் வேட்பாளர்கள் பட்டியலை டாக்டர் சுப்ரா பத்திரிக்கை செய்தியின் வழி வெளியிட்டார்.

2. அதிசயமாகவும், நமது நாட்டின் அரசியல் வரலாற்றுக்கு மாறுப்பட்ட பல சம்பவங்கள் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டுதான், பத்திரிக்கை செய்தியாளர்களை நாட்டின் பிரதமர் சந்திப்பது வழக்கம். ஆனால் முதல் முறையாக, நாடாளுமன்றத்தை கலைக்க போவதாக அறிவித்துவிட்டு மறுநாள் ஆட்சியைக் கலைக்கிறார்கள். 

3. பொதுவாக பாரிசான் கூட்டணியின் தலைவர்தான் முதல் கட்ட வேட்பாளரை அறிவிப்பார். ஆனால் இந்த முறை பாரிசான் கூட்டணி தலைவர் நஜிப்புக்கு காத்திருக்காமல், தெங்கு அட்னானும் டாக்டர் சுப்ராவும், அறிவித்துவிட்டார்கள். இதுவும் பாரிசானின் வழகத்துக்கு மாறாக உள்ளது.

4. தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பாரிசான் கட்சி தன் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறது. இது தேர்தல் பிரச்சாரத்தை பெருமளவில் பாதிக்கும். பக்காத்தான் வேட்பாளர்கள் களத்தில் குத்தித்துவிட்ட நிலையில் பாரிசான் வேட்பாளர்கள் இன்னும் தங்கள் வேலையை தொடங்க முடியாமல் இருக்கிறார்கள்.

5. நாடு முழுவதும் பக்காத்தான் பிரச்சார கூட்டங்கள்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. பாரிசான் அமைச்சர்கள் இன்னும் அரசாங்க நிகழ்ச்சிகளில்தான் கலந்துக் கொண்டு வருகிறார்கள். மக்களை சந்திக்கும் கூட்டங்களை கூட்டாமல் இருக்கிறார்கள். பாரிசான் தலைவர்களும் வேட்பாளர்களும் தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டாமல், கொடிகளை மட்டுமே இங்கும் அங்குமாக பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

6. நஜிப் தோற்பது உறுதியாகவிட்டது. என்ன செய்தாலும் நஜிப் கண்டிப்பாக ஜெயிக்க முடியாது. இப்பவே அவர் தோற்று போய் விட்டது போலத்தான் சூழ்நிலைகள் உள்ளது. 

7. Undi Pos, Electric disconnect என என்ன மாதிரியான தில்லுமுல்லு செய்தாலும் நஜிப்பால் ஜெயிக்கமுடியாது. காரணம் நஜிப்புக்கு எதிராக இருக்கும் ஓட்டுக்களின் எண்ணிக்கை ரொம்ப தூரத்தில் போய் விட்டது. ஒட்டு மொத்த அரசாங்க ஊழியர்களும் பாரிசானுக்கே ஓட்டு போட்டாலும் நஜிப் ஜெயிக்க முடியாது.

8. பாரிசான் இந்த தேர்தலில் ஜெயிக்கவே முடியாது என்பது பாரிசான் கூட்டணி கட்சிகள் உட்பட அனைவருக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும். நஜிப் தேர்தலுக்கு முன்பே தோற்று போய்விட்டார் என்பதுதான் உண்மையான கூற்று.

9. நஜிப் தோற்று போய்விட்டார் என்பது நஜிப்புக்கும் தெரியும்.

9. எல்லாம் அவர் கை மீறி போய்விட்டது. தோல்வியின் கார்னரில் நஜிப் கொண்டு போய் நிறுத்தி வைப்பட்டிருக்கிறார். இப்போது நஜிப்பின் முழுகவனம் தேர்தல் நடவடிக்கையில் இல்லை. தாம் தேர்தலில் தோற்று போன பிறகு, எந்த முடிவுகளை மாற்ற முடியாது. 

10. நஜிப்பின் முழுகவனமும் சிந்தனையும், இந்த சூழ்நிலையை எப்படி மாற்றுவது என்பதிலும் தேர்தலில் ஏற்ப்பட போகும் தோல்வியிலிருந்து எப்படி தன்னை தற்காத்து கொள்வது என்பதிலும் மட்டுமே உள்ளது. 

11. இப்போது என்ன செய்யலாம் என்று நஜிப் யோசனை செய்துக் கொண்டிருப்பார். அவரின் ஒவ்வொரு நிமிடத்திலும் இதை குறித்துதான் யோசனை செய்துக் கொண்டும். என்ன செய்தால் தாம் தப்பிக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இருக்கலாம்.

12. நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை தள்ளி வைக்கலாம். தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம். தேர்தல் தினத்தன்று ஓட்டுக்கள் எண்ணும் போது, ஒரு 50 தொகுதிகளில் கலவரத்தை ஏற்படுத்தி ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தலாம். அதன் மூலம் ராணுவ ஆட்சியை கொண்டு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை தள்ளி வைக்கலாம்.  

13. தேர்தல் நடந்தால் மகாதீர் 100 சதவீதம் கன்பார்மாக ஜெயித்து விடடுவார். மகாதீர் ஜெயிப்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஜெயிப்பது உறுதியாகிவிட்டது. 

14. இப்போதே அவர் ஜெயித்து விட்டார். 9/5/2018 தேர்தல் தினத்தன்று அறிவிப்பு செய்ய வேண்டியதுதான் பாக்கி. மகாதீர் வெற்றியின் உச்சியில் நிற்கிறார். என்ன செய்தாலும் மகாதீர் வெற்றி பெறுவதை தடுக்க முடியாது.

15. 10/5/2018 வியாழக்கிழமை காலை 8.05-க்கு மகாதீர் இந்த நாட்டின் 7-வது பிரதமராக பதவி ஏற்பார். இதுதான் நிதர்சணம். 

16. மகாதீர் ஜெயித்து விட்டார் என்பது மகாதீருக்கும் தெரியும். 

17. மகாதீர் இனி தேர்தல் நடவடிக்கைகளில் முழுகவனத்தையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அவரின் முழுகவனமும் நஜிப் மீதுதான் இருக்கும். நஜிப் எதையாவது செய்வார் என்பது மகாதீருக்கு தெரியும். நஜிப் என்ன செய்வார் என்பதை மிக நுணுக்கமாக கவனித்துக் கொண்டிருப்பார்.

18. நஜிப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் செயலையும் துல்லியமாக பார்த்துக் கொண்டிருப்பார். எதை எல்லாம் நஜிப் செய்யக்கூடும் என்கிற சாத்தியத்தை மகாதீர் ஆராய்ந்துக் கொண்டிருப்பார். அதை தடுக்கும் முயற்சியிலும் இருப்பார்.

19. எதை எல்லாம் முன்பு மகாதீர் செய்தாரோ; அதைதான் இப்போது நஜிப் செய்து வருகிறார். அதை தடுக்கும் முறையை மகாதீர் தெரிந்து வைத்திருப்பார். 

20. வியாழக்கிழமை காலையில் மகாதீர் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட அடுத்த நிமிடம் இந்த நாட்டின் அதிகாரம் முழுக்க மகாதீர் வசம் வந்துவிடும். போலிஸ், ராணுவம் மகாதீரின் முழுகட்டுபாட்டில் இருக்கும். 

21. யார் எல்லாம் மகாதீருக்கு எதிராக வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக பரிசு காத்திருக்கும். மகாதீர் பிரதமராக பதவி ஏற்ற உடன் என்ன செய்வார் என்பது போலிஸ்-க்கும் ராணுவத்துக்கும் தெரியும். ஆகவே தேர்தல் முடியும் வரை போலிஸ்-வும் ராணுவமும் எதை செய்தாலும் பயந்துக் கொண்டுதான் செய்ய வேண்டும்.

21. மகாதீர் ஜெயித்து வந்து விடுவார். அப்புறம் எல்லோருக்கும் நிறைய பரிசுகள் கொடுப்பார். இந்த பயம் எல்லோருக்கும் உண்டு. இன்று அரசாங்கத்தில், போலிஸ்-இல், ராணுவத்தில் என பல உயர் பதவிகளில் இருப்பவர்கள் முன்பு மகாதீர் காலத்தில் கொண்டு வரப்பட்டவர்களாக இருப்பார்கள்.

22. நஜிப்க்கு விசுவாசமாக 10 பேர்கள் இருந்தால் மகாதீருக்கு விசுவாசமாக பத்து பேர்கள் இருப்பார்கள்.

23. நஜிப்பும் எதையும் செய்ய துணித்து விட்டார். மகாதீரும் எதையும் செய்ய துணிந்து விட்டார். இருவருக்கும் வாழ்வா சாவா என்கிற போராட்டம்தான். 

24. மகாதீரிடம் ஒரு குணம் உண்டு. தமக்கு தொல்லைகள் கொடுக்காதவரை அவர் யாருக்கும் தொல்லைகள் கொடுக்க மாட்டார். அவருக்கு தொல்லைகள் கொடுத்தால் அவர் திருப்பி பெரிய பெரிய தொல்லைகள் கொடுப்பார். இது அரசாங்கத்தில் பெரிய பெரிய பதவிகளில் உள்ளவர்களுக்கு தெரியும்.

25. நஜிப் தோல்வியின் கார்னரில் உள்ளார். 
ஆகவே அவர் எதையாவது செய்ய முயன்றுக் கொண்டிருப்பார். மகாதீர் வெற்றியின் உச்சியில் நிற்கிறார். எதுவும் நடக்காமல் இருக்க எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பார். காய்களை நகர்த்தியும் கொண்டிருப்பார்.

மதியழகன் முனியாண்டி
23 ஏப்ரல் 2018

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews