பாஸ் கட்சி
1. தன்னை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக நஜிப், பாஸ் கட்சிக்கு 90 மில்லியன் ரிங்கிட் வழங்கியதாக சரவாக் ரிப்போர்ட்(Sarawak Report) செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
2. இதனை கடுமையாக மறுத்த பாஸ் கட்சியும், அதன் தலைவருமான அடி அவாங், லண்டனில் சராவக் ரிப்போர்ட் இணைய தளத்தின் மீதும், அதன் எடிட்டர் கிளர் ரவ்கஸ்டல் பரவுன்(Clare Rawcastle Brown) மீதும் வழங்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த வழக்கு 2016-ஆம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது.
3. இதற்கிடையில் பாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பேசிய சில ஆடியோ கிளிப்புகள் வெளியானது. அந்த ஆடியோ கிளிப்பில், அம்னோ தலைவர்களுடன் பாஸ் கட்சியின் தலைவர்கள் பண பட்டுவாட பற்றி பேசியது பதிவாகி இருந்தது.
4. அந்த ஆடியோ கிளிப்புகள் பரிசோதனைக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆடியோ கிளிப்பில் உள்ளது நிக் அப்டுவின் குரல் போன்று உள்ளது என்று கிளாந்தான் ஹராப்பானின் தலைவர் ஹுசாம் கூறி இருந்தார். நிக் அப்டுவின் சிறு வயது முதல் அவரின் குரலை கேட்டு வந்துள்ளேன். ஆனாலும் லண்டன் பரிசோதனை அறிக்கைகாக காத்திருப்பதாக அவர் சொன்னார்.
5.இதற்கிடையில் 11.10.2017-ஆம் ஆண்டு சரவாக் ரிப்போர்ட் எடிட்டர், கிளர் ரவ்கெஸ்டல் பிரவுன் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பாஸ் கட்சிக்கு நஜிப் வழங்கிய 90 மில்லியன் ரிங்கிட் குறித்த தகவலை, மலேசியாவின் வழக்கறிஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவரும், பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவருமான அம்பிகா சீனிவாசன் தமக்கு தெரிவித்ததாக குறிப்பிடிருந்தார்.
6. லண்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு போய்க் கொண்டிருப்பதால், தம்மால் மேற்கொண்டு இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது என்று மௌனம் காத்து வருகிறார் அம்பிகா.
7. பாஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட 90 மில்லியன் ரிங்கிட், 1MDB லிங்கிலிருந்து கொடுக்கப்பட்டது என்று சரவாக் ரிப்போர்ட் வெளியிட்டிருந்த செய்தியில் மேலும் விவரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு அம்பிகாவை மட்டும் இல்லாமல், மலேசியாவின் நிதியமைச்சர், 1MDB ஆலோசகர் போன்று பலரையும் இந்த வழக்கு உள்ளே இழுக்கும்.
8. இந்த வழக்கு ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. எப்போது முடியும் என்று தெரியாமல் போய் கொண்டிருக்கிறது.
9. 16 ஜூன் 2015-இல் பக்காத்தான் ரக்யாட்(PR) கூட்டணி அதிகாரபூர்வமாக கலைப்பட்டது. அதே 2015-இல் ஆரம்பிக்கப்பட்ட புதிய எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான்(Pakatan Harappan/PH) கூட்டணியில் பாஸ் கட்சி இணையவில்லை.
10. பக்காதானுக்கும் பாஸ் கட்சிக்கும் முதல் விரிசல் 2014-ஆம் ஆண்டில் ஏற்பட்டது. வான் அசிசா சிலாங்கூர் மந்திரி பெசார் ஆவதற்கு பாஸ் கட்சி ஒத்துழைக்கவில்லை என்று பக்காத்தான் குற்றம் சாட்டியது.
11. 2014-ஆம் காலகட்டத்தில், பழைய சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் மீது நம்பிக்கையை இழந்த பக்காத்தான், மந்திரி பெசாரை மாற்றும் நடவடிக்கையில் இறங்கியது. டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாமே சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகலாம் என்று முடிவு எடுத்தார்.
12. அன்வார் சிலாங்கூர் மந்திரி பெசார் ஆவதற்கு ஏதுவாக, காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லி சின் சே(Lee Chin Cheh) தமது பதவியை ராஜினாமா செய்து, அன்வாருக்கு வழிவிட்டார். அதற்குள் பாழாய் போன வழக்கின் முடிவு வந்துவிட, அன்வாரும் சிறை சென்றார்.
13. காலியான காஜாங் தொகுதியில் வான் அசிசா நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார். வான் அசிசா மந்திரி பெசார் ஆவதை சிலாங்கூர் சுல்தான் பெரிதும் விரும்பவில்லை. சிக்கல் ஆரம்பமானது. கடைசியாக, ஒரு வழியாக, ஏகமனதாக அஸ்மின் அலி செப்டம்பர் 2014-இல் சிலாங்கூர் மந்திரி பெசாராக தேர்தெடுக்கப்பட்டார்.
14. பாஸ் கட்சிக்கும் பி.கே.ஆர் கட்சிக்கும் முட்டல் ஆரம்பித்த சமயத்தில், நஜிப்பின் 1MDB ஊழல் குற்றசாட்டும், 2.6 மில்லியன் விவகாரமும் வெடித்தது.
15. நஜிப்பை பதவி விலக சொல்லி மிக கடுமையாக எதிர்த்த மகாதீர், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பக்காத்தான் பக்கம் வரும்படி சூழ்நிலைகள் அமைந்தது.
16. உச்சமாக முகைதீன், ஷபி அப்டால், முக்ரிஸ் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, மகாதீர் பெர்சத்து(PPBM) என்கிற பெயரில் தனிக்கட்ட்சி தொடங்கினார்.
17. இதே காலகட்டத்தில் பாஸ் கட்சியிலும் பிளவு ஏற்ப்பட்டது. நஜிப்பை எதிர்ப்பதில் பாஸ் கட்சியின் தலைமை பின்வாங்குகிறது; ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த நஜிப்பை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு பாஸ் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றம் சாட்டி, மாட் சாபு தலைமையில் பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து அமானா என்கிற கட்சியை ஆரம்பித்தார்கள்.
18. அம்னோ உடைந்து பெர்சத்து ஆனது. பாஸ் உடைந்து அமானா ஆனது.
19. பக்காத்தான் ரக்யாட்-டிற்கு மாற்றாக பக்காத்தான் ஹராப்பான் செப்டம்பர் 2015-இல் உதயமானது. இதில் பாஸ் கட்சி சேர்ந்துக் கொள்ளவில்லை. மகாதீர் கடைசி நேரம் வரை பாஸ் கட்சிக்காக காத்திருந்தார். அஸ்மின், ரபிசி, நூருல் போன்ற தலைவர்க்ள் பாஸ் கட்சியை ஹரப்பானுக்குள் கொண்டு வருவதில் மிகுந்த முயற்சியை எடுத்துக் கொண்டார்கள். அமனாவை காரணம் காட்டி, பாஸ் ஹரப்பானில் சேர்வதற்கு மறுத்தது.
20. மும்முனைப் போட்டியை பாஸ் ஏற்படுத்தியுள்ளது. இது பாரிசானுக்கு சாதகமாக அமையும் என்றே அரசியல் ஆய்வாளர்களும் நஜிப்பும் நம்புகிறார்.
21. அனைத்து அரசியல் கணிப்புகளும், பொது மக்களின் கணிப்பும், நஜிப்பின் நம்பிக்கையும் 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. 2013-ஆம் ஆண்டு பதிவான ஓட்டு அடிப்படையில் ஆளுக்கு ஒரு கணக்கு போடுகிறார்கள்.
22. 2018-இல் நடக்க போவது மலாய் வாக்காளர்களின் சுனாமி. பெரும் மாற்றத்துக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள். சீனர்கள், இந்தியர்களைவிட ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் மலாய்காரர்கள்தான் அதிக அளவில் ஆர்வமாக உள்ளார்கள்.
23. மலாய் வாக்காளர்களின் சுனாமி அலையால், தீபகற்ப மலேசியாவில் மட்டும் 100 தொகுதிகளில் பக்காத்தான் வெற்றி பெறும். ஷப்பி அப்டால், தற்போது உள்ள 9 இடங்களையும் சேர்த்து, கூடுதலாக 6 இடங்கள் ஜெயித்து கொடுத்தால் போதும். அதுவும் இல்லை என்றால், திரங்கானு, பகாங், பெர்லிஸ் சேர்த்து 7 இடங்களில் கூடுதலாக ஜெயித்தால் போதும்.
24. மலாய் வாக்காளர்களின் சுனாமி அம்னோவை இந்த முறை அடித்து சென்றுவிடும். அம்னோ செய்திருக்கும் எல்லை மறுசீரமைப்பும் ஒருவகையில் அம்னோவுக்கு எதிராய் வேலை செய்ய போகிறது. இனங்கள் அடிப்படையில் ஓட்டை பிரித்து, பெரும்பாலான தொகுதிகளில் மலாய் வாக்காளர்களின் எண்ணிக்கையை 80 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தி, மலாய் ஓட்டுகள் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். இந்த கணக்கு போன தேர்தலின் முடிவுகளை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
25. 2018-இல் மலாய் வாக்காளர்கள் ஏற்படுத்த போகும் சுனாமி அலைகள், அம்னோவையும் பாஸ் கட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்க போகிறது.
0 Comments