Tuesday, 29 March 2022

போலிஸ்கர்

போலிஸ்கார்

1. இந்த பதிவை போலிஸ் தினத்தன்று எழுத வேண்டும் என்றிருந்தேன். பிறகு வேறு-வேறு காரியங்களில் மறந்து போனேன். எனக்கு போலிஸ்காரர்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். நேற்று என் போலிஸ் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது எழுதாமல் விட்ட இந்த பதிவு குறித்து நினைவுக்கு வந்தது. 

2. எனக்கு சில போலிஸ் நண்பர்கள் இருக்கிறார்கள். சமயம் கிடைக்கும் போது அவர்களோடு பேசிக் கொண்டிருப்பேன். அவர்கள் சொல்லும் கதைகள் எல்லாம் சாகசம் நிறைந்தவை. நம் கற்பனைகளை மிஞ்சிய நிஜம். பொதுவாக போலிஸ்காரர்களை நாம் வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம். பெரும்பாலும் அவர்களை ஒருமையில் அழைப்போம். வழியில் யாரையாவது பிடித்து நிறுத்தி வைத்திருக்கும் போலிஸ்காரர்களை பார்த்தால் நமக்கு தப்பாக தோன்றும்.

3. நாம் அவர்களுக்கு பெரிய அங்கீகாரமும் கொடுப்பது இல்லை. ஆனால் நிஜத்தில் போலிஸ்காரர்களின் வேலை மிகவும் கடினமானது. அவர்களின் வேலை அட்டவணை இருபத்தி நான்கு மணிநேரம் கொண்டது. இன்று காலை எட்டு மணிக்கு வேலைக்கு போனால், மறுநாள் எட்டு மணிக்குதான் வேலை முடியும். சில வழங்குகளில் சிக்கிக் கொண்டால், நேரம் காலம் பார்க்க முடியாது. குட்டி தூக்கம் போட்டுவிட்டு ஓட வேண்டும்.

4. நேர்மையாக இருக்கும் போலிஸ்காரர்கள் மாத கடைசிக்காக காத்திருப்பார்கள். சமயங்களில் நூறு வெள்ளிக்கூட பாக்கெட்டில் இருக்காது. சிலர் மாதம் முழுக்க வேலை செய்தாலும், சம்பளம் நான்காயிரம் வெள்ளி தாண்டாது. இதில் கான்ஸ்டபளாக இருப்பவர்கள்தான் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.

5. யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் போலிஸ் நிலையத்தில்தான் போய் நிற்பார்கள். பக்கத்து வீட்டுகாரன் மரத்தில் காய்த்த மாங்காய் காணாமல் போனால்கூட போலிஸ்காரர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு வேலையில் வீட்டையும் குடும்பத்தையும் வேறு கவனிக்க வேண்டும். 

6. போலிஸ்காரர்களுக்கு ஆபத்து எங்கிருந்து வரும் என்று தெரியாது. எங்கள் புக்கிட் ஜாலில் எஸ்டேட்டில் என்னிடம் டியுசன் படித்த பையன் ஒருவன் போலிஸ் ஆனார். அவரை ஒருமுறை காரோடு கடத்தி கொளுத்திவிட்டார்கள். அதிலிருந்த தப்பித்து வந்தார். அந்த தீக்காயங்கள் இன்னமும் அவர் உடம்பில் இருக்கிறது. 

7. சா ஆலாமில் இருக்கும் என் போலிஸ் நண்பர் ஒருவர் திருடர்களை துரத்திக் கொண்டு ஓடிய போது அடிப்பட்டு சாக பிழைக்க கிடந்தார். குணமாகி வருவதற்கே பல மாதங்கள் ஆனது. கெடாவில் இருக்கும் என் முகநூல் போலிஸ் நண்பர் ஒருவர், குற்றவியல் பிரிவில் இருக்கும் போது காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்தும் காலில் இன்னமும் இருக்கும் வலியை சொல்வார்.

8. சிகாமட்டில் ரிடையர்டு ஆன சார்ஜன் ஒருவர் இருக்கார். நிலங்களின் நெடுங்கணக்கு நாவல் எழுதிய போது, அந்த பகுதிகளை சுற்றி பார்க்க ரொம்ப உதவியவர். அவரை ஒருமுறை தூக்கி ஆற்றில் வீசிக்கிறார்கள். தப்பித்து வந்ததே ஆண்டவன் புண்ணியம் என்றார்.

9. நாம் பார்க்கும் போலிஸ்காரர்கள் என்பது வேறு. நிஜத்தில் வேறு. அவர்களும் நம்மை போன்ற மிக சாதரணமானவர்கள். என் பையன்களை போலிஸ் வேலையில் சேர்த்துவிட எனக்கு ரொம்ப ஆசை. தடிமாடுகள். எங்கே கேட்கிறார்கள். என்னை போலவே ஊர் சுற்றிக் கொண்டும், ஊரில் உள்ள வம்பை எல்லாம் இழுத்து கொண்டு வருகிறார்கள்.

10. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள் மட்டும் இல்லை, நம் பாதுகாப்புகாக அல்லும் பகலும் உழைந்துக் கொண்டிருக்கும் போலிஸ்காரர்களும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை மதிப்போம் போற்றுவோம்.

11. சல்யூட் போலிஸ்கார்!

M.மதியழகன்
29 மார்ச் 2020

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews