Thursday, 17 March 2022

'பாலேக் கம்போங்'

1. உலகம் முழுவதும் மனித உயிர்களுக்கு பெரும் ஆபத்தாக கொரானா நோய் பரவி வருகிறது. சிலர் அக்கறையுடனும், சிலர் பொறுப்புடனும், சிலர் விளையாட்டகவும், சிலர் கேலியாகவும் இந்த நோய் குறித்து பலவிதமான உருபடியான தகவல்களும், உருபடி இல்லாத தகவல்களும் தினந்தோரும் ஒருவருடன் ஒருவர் பறிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

2. இந்த நோய் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு தொத்திக் கொண்டு பரவும் வகை நோயாக இருக்கிறது. ஆகவே, இந்த நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நமது நாட்டு அரசாங்கம் பொதுவெளியில் ஆள்நடமாட்டத்தை கட்டுபடுத்தும் ஆணையை அறிவித்துள்ளது.

3. இந்த ஆணையின் வழி, மார்ச் மாதம் இறுதிவரை பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும், பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை சிலர் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு ‘பாலேக் கம்போங்’ செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

4. இன்று பெருநகரங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை நினைத்து பார்க்கிறேன். அடைத்துக் கொண்டிருக்கும் அடுக்குமாடி வீடுகளிலும், ஒட்டிக் கொண்டிருக்கும் ‘டபுள் ஸ்டோரி’ வீடுகளிலுமே மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

5. பெருநகரிங்களில் வாழும் பெரும்பாலும் மக்கள் வெளிமாநிலத்திலிருந்து வேலைக்காகவும், பணம் ஈட்டுவதற்கும் வந்து தங்கியிருப்பவர்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கை சூழல் மிகவும் அசாத்தியமானது. காலையில் பரபரப்பாக வேலைக்கு ஓட வேண்டும். அடித்து பிடித்து வீட்டிற்கு வந்து, சமைத்து சாப்பிட்டு தூங்கி எழுந்து, மறுநாள் காலையில் மீண்டும் அதே அட்டவணையில் ஓட வேண்டும். குடும்பஸ்தர்களின் நிலை இன்னும் மோசமானது. பிள்ளைகளைப் பள்ளி கூடத்துக்கு அனுப்புவது, ‘டியூசன்’ முதற்கொண்டு, பல வகுப்புகளுக்கு அனுப்பி ஏற்ற வேண்டும். அவர்களின் பாடு பெரும்பாடு.

6. இளையோர்கள் பெரும்பாலும் தனியறை எடுத்து தங்கிக் கொண்டிருப்பவர்கள். வேலைக்கு ஓடி, வீட்டுக்கு வந்து, கடையில் சாப்பிட்டு, ‘டோபியில்’ துணி துவைத்து, அரட்டை அடித்து, போனிலும் கம்ப்யூட்டரில் மூழ்கி கிடந்து முழுநாள் பொழப்பை ஓட்டுகிறவர்கள். ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்களின் நிலை இன்னும் மோசமானது.

7. பெருநகர்களில் வாழும் மக்களில் சிலர் அன்றாட வருமானத்தில் இருப்பவர்கள். வேலைக்கு போனால்தான் வருமானம். பலர் குத்தகை வேலையில் இருப்பார்கள். 

8. நிலைமை இப்படி இருக்க, இந்த தொற்று வந்து எல்லோரையும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் லட்சகணக்கான மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். பெரும்பாலும் மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாட்டு பொருளாதரம்  மட்டும் அல்ல, உலக பொருளாதரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. நிலைமையைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால், இன்னும் மோசமான சூழ்நிலையை மக்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்.

9. புகை மூட்டம், சார்ஸ், ஹெ1என்1 போன்ற நோய்களாலும் பேரிடராலும் நாம் இதற்கு முன்பும் பாதிக்கப்பட்டதுண்டு. ஆனால் இந்த கொரானா நோய் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் நேரடியான பாதிப்பை உருவாக்கி இருக்கிறது.

10. ஆகவே, மக்கள் இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து, அறிவார்ந்த முறையில் சமயோசிதமாக செயல்பட வேண்டும். அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

11. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ‘பாலேக் கம்போங்’ செய்பவர்களை சிலர் கண்டித்தும், சிலர் கிண்டலடித்தும் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பெருநகரங்களின் அல்லல்களில் சிக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்கள் எத்துனை நாளைக்குதான் வீட்டுக்குள் அடைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்?

12. அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால், தலைவலி எடுத்து விடும். உடல் சோர்வையும் ஏற்படுத்தி, முகத்தின் பொலிவை கெடுத்துவிடும். கண்கள் சுருங்கிவிடும். துப்பறவு பணிகள் இன்னும் மோசமடையும். மக்கள் அதிகம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மாசு ஏற்படும்.

13. இந்த நோயினால் பாதிக்கப்படாதவர்கள் ‘பாலேக் கம்போங்’ போவதால், அவர்களின் அரோக்கியம் காக்கப்படும். பொதுவாக நம் கம்பங்களின் வீடுகளை சுற்றி நிலப்பரப்பு இருக்கும். அடர்ந்த மரங்கள் இருக்கும். நல்ல தூய்மையான காற்று கிடைக்கும். உணவு தேவை போதுமான அளவுக்கு இருக்கும். ‘ஃப்ரோசன்’ உணவுகளை நம்பிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை. ‘மேகி’ தொல்லையிலிருந்து விடுபடலாம். சிலாங்கூரில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

14. என்னை போன்ற ஆட்களுக்கு PDF புத்தகங்களும், இணைய தொடர்புள்ள கணிணிகள் இருந்தால் போதுமானது. சினிமா மீது ஆர்வம் உள்ளவர்கள் ‘யூடுப்’, இணையம் வழி படத்தை பார்த்தே காலத்தை கழித்துவிடுவார்கள். எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்? ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையும் ஒவ்வொரு வகையில் மாறுபடுகிறது. ஒருவருடைய வாழ்க்கையை இன்னொருவர் வாழ்க்கையோடு பொறுத்தி பார்க்க முடியுமா?

15. ‘பாலேக் கம்போங்’ போனாலும் பெருநகரங்கள் போல் மூச்சு முட்டும் குடியிருப்பில் இருப்பவர்கள், ‘பாலேக் கம்போங்’ போகாமல் இங்கேயே இருந்து விடலாம். இங்கிருந்து இந்த நோயை சொந்த ஊரில் கொண்டு போய் பரப்பி விடாமல், நல்ல அரோக்கிய நிலையில் இருப்பவர்களும், குடும்பம், குழந்தைகளோடு அக்கம்பக்கத்தில் இடித்து கொண்டு வாழும் சூழலில் இருப்பவர்களும் ‘பாலேக் கம்போங்’ போவதில் தப்பு இல்லை.

16. ‘பாலேக் கம்போங்’ செய்யும் அனைவரையும் கிண்டலடிக்காதீர்கள். சிலருக்கு இது அவசியமாகவும் இருக்கலாம். சிலருக்கு அத்தியவாசியமாகவும் இருக்கலாம். 

17. ஊர் சுற்ற கிளம்புகிறவர்களையும், ‘ஹாலி டே ஜாலி டே’ என்று கத்தி கொண்டிருப்பவர்களையும், பொறுப்பு இல்லாமல் பொது இடங்களில் கூடிக் கொண்டிருப்பவர்களையும்; ‘பாலேக் கம்போங்’ போகாதவர்கள், அந்த வாய்ப்பு அமையாதவர்கள், தாங்கள் ரொம்பவும் நேர்த்தியாக ‘டிசிப்பிளினாக’ வாழ்த்துக் கொண்டிருப்பதாக நினைப்பவர்கள் கலாய்க்கலாம். 

18. இந்த நோயின் தீவிரத்தை உணராமல், இந்த நோய் பரவ காரணமாக இருப்பவர்களையும், பொது இடங்களில் அனாவசியமாக கூடுபவர்களையும், இந்த சூழ்நிலையிலும் ரோட்டோரத்திலும், வீட்மைப்பு பகுதியில் இருக்கும் பொது மைதானத்திலும் தண்ணீ அடிப்பவர்களைகளையும் ‘நெட்டிசன்கள்’ தொடர்ந்து கலாக்கலாம். தெறிக்கவிடலாம்.

M.மதியழகன்
18.3.2020

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews