Thursday, 24 February 2022

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் பண்பு

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் பண்பு.

1. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நம் நாட்டு எழுத்தாளர்கள், கல்விமான்கள் குறித்து சில முகநூல் பதிவுகளைப் படிக்க நேர்ந்தது. அது குறித்து என் கருத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். மற்ற எழுத்தாளர்கள் போல் என்னால் இதை மிக இலகுவாக கடந்து போக முடியவில்லை.

2. எனக்கும் நவீனுக்கும் நடுவில் இருக்கும் இலக்கியச் சர்ச்சைக் குறித்து நம் நாட்டு எழுத்து துறையைச் சார்ந்தவர்களுக்கு நன்கு தெரியும். இலக்கியத்தின் பெயரில் நவீன் அயோக்கியதனங்கள் செய்து கொண்டிருக்கிறான் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் நவீனோடு இலக்கியச் சமரசம் செய்துக் கொள்ள போவதில்லை என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன். எந்தக் காலத்திலும் நான் அவனோடு நட்புறவு வைத்து கொள்ள கூடாது என்பதிலும் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்.

3. நேர்மையற்றத் தனத்தால் எனக்கு சண்முகசிவாவைப் பிடிக்காது. நம் நாட்டு இலக்கிய அறிவு சுத்தமாக இல்லை என்பதாலும், நம் நாட்டு இலக்கியம் குறித்து பொது பார்வை இல்லை என்பதாலும் எனக்கு கிருஷ்ணன் மணியத்தைச் சுத்தமாக பிடிக்காது. அதேபோல், நம் நாட்டு இலக்கியத்துக்குக் கிடைத்த கேடுகளில் ஒருவர் பி.எம்.மூர்த்தி என்பதும் என் கருத்து. நவீன் என்கிற இலக்கிய நாதாரியோடு சேர்ந்து கொண்டு இலக்கியத்தில் இழிவான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதில் பாண்டியன் மீது எனக்கு மிகப்பெரிய கோபம் உண்டு.

4. ‘புண்ணியவான் ஒரு இலக்கியத் திருடன்’ என்று நவீன் கழுவி கழுவி ஊற்றியப் பிறகும் வெட்கமே இல்லாமல் அவனோடு போய் சேர்ந்து கொண்டதால் எனக்கு புண்ணியவானையும் பிடிக்காது. இது எல்லாமே எனக்கு அவர்களோடு இருக்கும் இலக்கிய முரண். இதனால், அவர்கள் மீது எனக்கிருக்கும் கோபத்தால், அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அவதூறுகளைப் பார்த்தும் பார்க்காதது போல் என்னால் போய்விட முடியாது.

5. நிற்க;

6. இந்தப் பிரச்சனைகளின் ஆணிவேரையும், எங்கேயிருந்து இது தொடங்குகிறது என்பதனையும் இந்தப் பதிவைப் படிப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போதுதான் முதன் முறையாக இது போன்ற அவதூறுகளைப் பரப்புவது நடக்கிறதா? என்று கேட்டால், இல்லை.

7. வல்லினம் உருவான பிறகுதான் இது போன்ற இழிவான செயல்கள் ஆரம்பமாகிறது. இதை நான் துணிச்சலோடும் ஆதாரத்தோடும் சொல்கிறேன். இப்படி சொல்வதால், வல்லினம் சார்ந்தவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம், அல்லது பிற வழிகளில் என்னை அவமானப் படுத்தலாம். ஆனால், இதை நான் சொல்லியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறேன். 

8. மிக இளம் வயதிலேயே கெடா மாநில எழுத்தாளர் ஒருவரின் எழுத்து பலரால் பாராட்டப்பட்டு, தொடர்ந்து பல விருதுகளை வாங்கினார். அவரின் எழுத்தின் வளர்ச்சியைப் பொறுத்து கொள்ள முடியாமல் அவர் ஆள் வைத்து அடித்து தாக்கப்பட்டார். பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி, மாணவர்களுக்கான பாடப்புத்தகம் வெளியிட்டார். புத்தகத்தின் தரத்தால் அவரின் பதிப்பக வெளியிடுகள் நல்ல விற்பனையானது. 

9. அவரின் அபரிமிதமான வளர்ச்சியில் பொறாமைக் கொண்டு அவரை ஒரே அடியில் அடித்து சாய்க்கும் வகையில் ஒரு போட்டோவை வெளியிட்டு அவர் மீது மிக மோசமான அவதூறு ஒன்றை பரப்பினார்கள். அன்று அந்த எழுத்தாளருக்கு நடந்த அநியாயத்தை எதிர்த்து யாருமே வாய் திறக்கவில்லை. அவருடைய இடத்தில் நின்று பார்த்தால், அவர் எப்பேர்ப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் என்று என்னால் உணர முடிகிறது. அன்று அவருக்கு நடந்த அநியாயத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியிருந்தால் இன்று இந்த அளவுக்கு மோசமான ஒரு இலக்கியச் சூழல் ஏற்பட்டிருக்காது.

10. சுப்ரபாரதிமணியன் விவகாரத்தில் பாண்டியனுடன் முகநூலில் வாக்குவாதம் எழுந்தபோது; கவிஞர், எழுத்தாளர் யோகி அவர்களுக்குத் தினமும் இரவில் போன் அழைப்புகள் மூலம் தொல்லைகள் கொடுக்கப்பட்டது. அது குறித்துப் போலிஸில் புகார் கொடுத்தும், முகநூலில் பதிவும் எழுதியிருந்தார்.

11. இதே காலகட்டத்தில் தயாஜி பாண்டியனோடு முகநூலில் விவாதம் செய்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் மிக கடுமையாகத் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதலில் அவர் தன் சுயநினைவையே இழந்திருந்தார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நானும் மனோ சாரும் அவரை சந்தித்தப்போது, எங்கள் இருவரையுமே அவருக்கு நினைவில் இல்லை. பல சம்பவங்களை நாங்கள்தான் அவருக்கு நினைவு மூட்டினோம். கவிஞர் யோகிக்கும் தயாஜிக்கும் இந்த சம்பவம் நடந்தபோதும், இந்த நாட்டு எழுத்தாளர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.

12. நிலங்களின் நெடுங்கணக்கு நாவல் வெளிவந்து இந்த நாட்டில் ஒரு பெரிய இலக்கிய அதிர்வை ஏற்படுத்தியப் பிறகு, என் நாவல்கள் பலரால் பாராட்டப்பட்டு விற்பனையில் உச்சத்தைத் தொட்டப்போது எனக்கும் மிக மோசமான தாக்குதல்கள் நடந்தது. போலி முகநூல் பதிவின் வழி வந்து என்னைப் பற்றியும் என் குடும்பத்தார் பற்றியும் மிக மோசமாக எழுதினார்கள்.

13. என் நாவல்களுக்கு விமர்சனம் எழுதியர்கள் மீது மிக மோசமான அவதூறுகளைப் பரப்பினார்கள். என் நாவல்களுக்கு ஆதரவும் விமர்சனமும் எழுதிய அரசாங்க ஊழியர்கள் மீது புகார்கள் எழுதி போடப்பட்டது. இதற்கு பயந்து கொண்டு என் முகநூல் பதிவுக்கு ‘விருப்பம்’ இடுவதற்குக் கூட எல்லோரும் தயங்கினார்கள்.

14. எழுத்தாளர் இந்துஜா நாவல் வெளியிட்டபோது, போலி முகநூல் மூலம் அவரை மிக மோசமாக எழுதி, அவர் முகநூல் விட்டே போகும்படி செய்தார்கள். சிரம்பானில் உள்ள கவிஞர், இலக்கிய விமர்சகர் ஒருவரை போலி முகநூல் பதிவின் வழி தாக்கினார்கள். 

15. பேய்ச்சி நாவலுக்குக் கண்டனம் தெரிவித்த ஒரே காரணத்துக்காகக் கவிஞர், எழுத்தாளர் பச்சைபாலன் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அநியாயங்கள் நடந்து கொண்டிருந்தபோது நம் நாட்டில் உள்ள எழுத்தாளர்கள் எல்லோரும் எதுவுமே நடக்காததுப்போல் அமைதியாக வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார்கள். 

16. இலக்கியத்தை இலக்கியத்தோடு மோத வேண்டும். அதைவிடுத்து, தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தக்கூடாது. இலக்கியத்தோடு மோத முடியாத கோழைகள், போலி முகநூல் வழியாக அவதூறுகளைப் பரப்பி ஒரு எழுத்தாளனைச் சாய்க்கும் செயல் உலகத்திலேயே மிக பாவமான, இழிவான ஒரு செயல். 

17. இந்த இழிவான செயலுக்கு எதிராக எழுத்தாளர்கள் தங்கள் கண்டனத்தை எழுப்ப வேண்டும் என நான் பல மூத்த எழுத்தாளர்களையும் எழுத்தாளர் சங்கத்தையும் கேட்டுக் கொண்டேன். ஆனால், இது தனிப்பட்ட பிரச்சனை என்றும் இதை தனிப்பட்ட எழுத்தாளர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

18. சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலான நம் நாட்டு இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர்களைப் பற்றி அவதூறுகள் பரப்புவதும்; எழுத்தாளின் வளர்ச்சியைத் தடுப்பதற்கும் குறுக்கு வழிகளை யாரும் கையாளவில்லை. இலக்கியத்தில் இலக்கியமாக நேரடியாக மோதினார்கள். அது ஓர் ஆரோக்கியமான இலக்கியச் சூழல். எழுத்தாளர்களின் பொன்னான காலம். 

19. வல்லினம் உருவான பிறகு தான் இது போன்ற இழிவான செயல்கள் ஆரம்பமானது. இது எல்லாம் வல்லினம் உருவான பின்பு உருவான இலக்கிய கலாச்சாரம். இதன் ஆணிவேர் வல்லினத்தில் இருக்கிறது. 

20. தொடர்க;

21. அன்று எனக்கும் பிற எழுத்தாளர்களுக்கும் நடந்தது, இன்று நவீனுக்கும் நவீன் சார்ந்தவர்களுக்கும் நடக்கிறது. அன்று நவீனை எதிர்ப்பவர்களுக்கு நடந்தது. இன்று நவீனுக்கு நடக்கிறது.

22. இந்த மோசமான இலக்கியக் கலாச்சாரத்தால் எப்போதுமே எதுவும் அறியாத அப்பாவிகள் சிக்கிக் கொள்கிறார்கள். தனக்கு எதிராக இருக்கும் எழுத்தாளர்களைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு எதுவும் அறியாத அப்பாவிகளைப் பலி கொடுக்கிறார்கள். இந்த முறை நவீன் மீது நடந்த தாக்குதலில்; சில அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருப்பது எனக்கு வேதனையையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது.

23. நம் நாட்டு எழுத்து சார்ந்திருக்கும் அமைப்புகள், மூத்த எழுத்தாளர்கள் வாய் திறந்து பேச வேண்டும். இந்தப் பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். இல்லை என்றால், இதற்கெல்லாம் ஒரு முடிவு இல்லாமல் தொடர்ந்து கொண்டேதான் போகும். இதில் அப்பாவிகள் சிக்கிக் கொண்டு பலியாவதும் நடக்கும்.

24. இதை யார் செய்கிறார்கள்? எதற்கு செய்கிறார்கள்? என்று தெரியவில்லை. ஆனால், பொதுவாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதை யார் செய்தாலும், உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இலக்கியத்தை இலக்கியத்தோடு மோதுங்கள். குறுக்கு வழியில் ஒரு எழுத்தாளனைச் சாய்ப்பது என்பது உலக்கத்திலேயே மிகவும் பாவமான ஒரு செயல். இழிவான காரியம்.

25. நான், நவீன் உட்பட அனைத்து எழுத்து தரப்புக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனியும் இதுபோன்ற இழிவான காரியத்தில் ஈடுபடாதீர்கள். நேர்மையாக, ஆண்மையோடு, வீரத்தோடு, அறிவோடு இலக்கியத்தில் நேரடியாக மோதுங்கள். போலி முகநூல் கணக்குகள் வழியாக யார் இது போன்ற இழிவான செயலில் ஈடுப்பட்டாலும் கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்.

26. மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பண்புடனும் அறிவுடனும் ஒழுங்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள். போலி முகநூல் கணக்குகளை வைத்து கொண்டு கேடு கெட்ட செயலைச் செய்யாதீர்கள். அது நம்மை பெற்ற தாய்க்கும் களங்கத்தை ஏற்படுத்தும். 

27. நவீனையும் பாண்டியனையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக; நான், மதியழகன் என்கிற என் அசல் முகதோடுதான் எதிர்த்து வந்திருக்கிறேன். சண்முகசிவா, புண்ணியவான், பி.எம்.மூர்த்தி போன்றவர்களை நேரடியாக என் பெயரிலேயே; கடுமையான என் விமர்சனத்தை முன் வைத்து வந்திருக்கிறேன். போலி முகநூல் வழியாக இவர்களை நான் சாய்க்க ஒருபோதும் நினைத்தது இல்லை. காரணம், நான் ஆண்மையுள்ளவன். வீரமானவன். அறிவுள்ளவன். எதுவாக இருந்தாலும் நேரடியாக மோதி பார்க்கும் துணிச்சல்காரன்.

28. கோழைகளும், அயோக்கியர்களும், கேடுகெட்டவர்களும் தான் எப்போதும் குறுக்கு வழியில் குதூகலமடைவார்கள். 

29. இந்த நாட்டு எழுத்து துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். ஆரோக்கியமான சூழல் ஏற்பட வேண்டும் என்பது என் கனவு. நேரடியாக எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள்.

30. இங்கு நான் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் போதாது. நவீன் உட்பட அனைத்து தரப்பும் ஆரோக்கியமான விவாதத்தை மட்டுமே முன்னெடுக்க வேண்டும். அதுவே நம் நாட்டு இலக்கிய சூழலுக்கு நன்மை பயக்கும். 

31. எதற்கும் பயனில்லாதக் காய்ந்து கீழே கிடக்கும் மரகட்டைகள் போல் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் மற்ற எழுத்தாளர்கள் போல் நானும் இருக்க விரும்பவில்லை. என் அழுத்தமான குரலை இந்தச் சமயத்தில் எழுப்ப வேண்டியது என் பொறுப்பும் கடமையும்கூட. 

32. மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் என் குரலை நான் பதிவு செய்திருக்கிறேன்.

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews