Monday, 25 March 2019

நிலங்களின் நெடுங்கணக்கு - Thriller Novel - டீசர், ஸ்னிக் பீக், டிரைலர் விளம்பரங்கள்

Teaser #1
நிலங்களின் நெடுங்கணக்கு – The Mystery thriller Novel.
March 16 2019 release.
‘உங்க அப்பா எப்படிக் காணாமல் போனார்?’
‘பல கதைகள் சொல்கிறார்கள். சப்த கன்னிகள் தூக்கிக் கொண்டு போனதாக ஒரு கதை சொல்கிறார்கள். தொப்பேங் ரகசிய குழு அவரைக் கொன்று விட்டதாக சிலர் சொல்கிறார்கள். காட்டுப் பேய் அவரை அடிச்சு கொன்னுட்டதாகவும் ஒரு கதை இருக்கு. எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை.’
’இண்ட்ரஸ்டிங். யார் உங்க அப்பா? எதுக்கு உங்கப்பாவைப் பத்தி இத்துணைக் கதைகள்?’
‘என் அப்பா ஒரு தன்னிச்சையான சரித்திர ஆய்வாளர். அவருக்குச் சரித்திர கதைகள் என்றால் ரொம்பவும் ஆர்வம். அந்த ஆர்வம் அப்படியே வளர்ந்து சரித்திர துறையில் ஈடுபடச் செய்தது …..’
-நிலங்களின் நெடுங்கணக்கு நாவலில் இருந்து ஒரு பகுதி உரையாடல்
இப்புத்தகத்தை வாங்குவதற்கு; முன் பதிவு செய்ய Messenger-ரில் என்னோடு தொடர்பு கொள்ளலாம். அல்லது 012 638 7901 என்கிற வாட்சாப் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.


=================================================================================

Teaser #2
நிலங்களின் நெடுங்கணக்கு – The Mystery thriller Novel.
March 16 release.
ஸ்தெம்போர்ட் ராஃபிள்ஸ் தான் எழுதிய ஜாவாவின் வரலாறு என்கிற புத்தகத்தில் சில ரகசியங்களை எழுதாமல் விட்டார். அது கஜா மாடாவின் அசல் தொப்பேங் பற்றிய ரகசியம். அந்த ஒரிஞினல் தொப்பேங்கைக் கைப்பற்றுவதில் அவர் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். கடைசி வரையில் அந்த ஒரிஞினல் தொப்பேங் அவர் கைக்குக் கிடைக்கவே இல்லை. அந்த அசல் தொப்பேங்கை இன்றுவரை பாதுகாத்து வரும் அந்த நான்கு குடும்பத்தைப் பற்றியும் அவருக்கு தெரிந்திருந்தது.
ஸ்தெம்போர்ட் ராஃபிள்ஸ்க்குப் பிறகு 1918-ம் வருட காலக்கட்டத்தில் ப்ரான்ஸ் ஆராய்ச்சியாளர் ஜார்ச் என்பவரும் கஜா மாடாவின் அசல் தொப்பேங்கை தேடி அலைந்தார். அவருக்கும் கிடைக்கவில்லை.
பெராம்பனான் சிவன் கோவில் புதிப்பிக்கப்பட்டு அப்போதைய இந்தோனேசிய அதிபர் சுகார்னோவினால் திறப்பு விழா செய்யப்பட்ட அதே 1953-ம் ஆண்டில், கஜா மாடாவின் அசல் தொப்பேங்கை பாதுகாத்துவரும் அந்த நான்கு மடகாரிபுற குடும்பங்களின் ரகசிய சந்திப்பு ஒன்று நடந்தது. அந்த சந்திப்பில் மடகாரிபுற குடும்பம் ரகசிய சபதம் ஒன்றை எடுத்தார்கள். அது ரெண்டாவது பலாப சூளுரை.
- நிலங்களின்_நெடுங்கணக்கு நாவலில் இருந்து ஒரு பகுதி
இப்புத்தகத்தை வாங்குவதற்கு; முன் பதிவு செய்ய Messenger-ரில் என்னோடு தொடர்பு கொள்ளலாம். அல்லது 012 638 7901 என்கிற வாட்சாப் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.



=================================================================================

Teaser #3
நிலங்களின் நெடுங்கணக்கு – The Mystery thriller Novel.
March 16 release.
‘நீங்கள் பேசும் தமிழ் வேறு மாதிரி இருக்கிறதே!’
’அப்படியா! நான் வழக்கு தமிழில்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.’
‘குடியுரிமை என்றால் சிட்டிஸன்ஷிப். ஓகே. ஆனால் நீர்த்தேக்கம், பொறியிளாளர் இது எல்லாம் கொஞ்சம் ஹெவியான தமிழாக இருக்கிறதே. பொதுவாக யாரும் இப்படித் தமிழ் பேச மாட்டார்களே.’
‘நான் பொதுவாகத் தமிழ் பேசும் போது ஆங்கில வார்த்தைகளைச் சேர்க்க மாட்டேன்.’
’ஏன்?’
’ஆங்கிலத்தில் பேசும் போது நாம் யாரும் தமிழ் வார்த்தைகளைக் கலந்து பேசுவதில்லை. அப்படிப் பேசினால் அவமானமாக நினைக்கிறோம். அப்படி இருக்கையில், தமிழில் பேசும் போது நான் முடிந்த வரையில் ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசுவதில்லை.’
‘நீங்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரா?’
‘தமிழ் என் தாய் மொழி. இதனை நான் கெடுக்க விரும்பவில்லை. நல்ல தமிழில் பேச பழகி இருக்கேன். இது என் அப்பாவிடம் இருந்து எனக்கு ஒட்டிக் கொண்டது. அவரும் தமிழில் பேசும் போது ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்த மாட்டார். ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். தமிழைத் தமிழில் மட்டுமே பேசுவார். நானும் அதைப் பின்பற்றி வருகிறேன்.’
’நானும் தமிழன்தான். எனக்கும் தமிழ் பற்று இருக்கு. பட், நான் உங்களை மாதிரி பெனடிக்காகவோ, எக்ஸ்ட்ரிமாகவோ இருக்க விரும்பவில்லை.’
‘ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவது என்பது வெறி கிடையாது. நான் என் தாய் மொழியை நேசிக்கிறேன். என் மொழிக்கான மரியாதையை கொடுகிறேன் என்று அர்த்தம். அவ்வளவுதான்’
’சரி … சில பொருள்களுக்கு தமிழ்ல வார்த்தைகள் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?’
’அது எப்படி தமிழில் வார்த்தைகள் இல்லாமல் போகும்?’
‘ம்…. அலமாரி-யை தமிழ்ல எப்படி சொல்வீங்க?’
‘நிலைபேழை.’
‘ஓ … மைகாட் … ஆளை விடுங்க ….’
-நிலங்களின் நெடுங்கணக்கு நாவலில் இருந்து ஒரு பகுதி உரையாடல்
இப்புத்தகத்தை வாங்குவதற்கு; முன் பதிவு செய்ய Messenger-ரில் என்னோடு தொடர்பு கொள்ளலாம். அல்லது 012 638 7901 என்கிற வாட்சாப் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.



=================================================================================

Sneak Peak #1
நிலங்களின் நெடுங்கணக்கு – The Mystery thriller Novel.
March 16 release.
கொஞ்ச நாட்களில் அவன் எங்களுக்கு நெருங்கிய நண்பன் ஆனான். அந்தக் காடுகளின் பாதைகள் அவனுக்குச் சுலபமாகப் புரிந்தது. எந்தப் பாதை எங்கே ஆரம்பித்து எங்கே போய் முடியும் என்பதை எந்த மேப் இல்லாமலும் தெரிந்து வைத்திருந்தான். ஆனாலும், குறிப்பிட்ட எல்லையைக் கடந்து போக கூடாது என்பது வனதேவதைகளின் உத்தரவு என்று சொன்னான்.
சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஜபாத்தான் ஊத்தான் எச்சரித்திருந்ததையும் சொன்னான். ஓராங் அஸ்லி போகக் கூடிய காட்டுப் பகுதிகள் லிமிட் செய்யப்பட்டிருந்தது.
சின்ன வயதில் தன் தாத்தாவோடு காட்டுக்குள் திரிந்த போது சில தூண்களைப் பார்த்த ஞாபகம் இருந்ததாகச் சொன்னான். அந்த தூண்களின் வடிவத்தைக் குச்சி கொண்டு மண்ணில் வரைந்து காட்டினான். அவைகள் ஸ்தூபிகளாக இருக்க வேண்டும் என்று செல்லதுரை யூகித்தார். லிம்பா படூக்கா எங்களிடம் ஒரு விசயம் சொன்னான். ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.
’ஜப்பான்காரர்கள் ஆட்சி காலத்தில் ஜப்பான் ஆர்மி இங்கு வந்து என் தாத்தாவைவும் இன்னும் சில
ஓராங் அஸ்லிகளையும் கூட்டிக் கொண்டு போய் காட்டுக்குள் எதையோ மாதகணக்கில் தேடிக் கொண்டிருந்தார்கள்.’ என்றான் லிம்பா படூக்கா.
’என்ன தேடினார்கள்?’ செல்லதுரை போகிற போக்கில் கேட்டார்.
’அது ஏதோ ஜப்பான் ராஜாவின் கல்லறையாம். ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி இங்க வந்தப்ப புலி அடிச்சு கொன்னுடுச்சாம். அந்த ராஜாவுக்கு இந்தக் காட்டில் கல்லறை எல்லாம் கட்டி இருந்தாங்களாம்.’ தொடர்ந்து சொன்னான் படூக்கா லிம்பா.
’அந்தக் கல்லறை கிடைச்சதா? உங்கள் தாத்தா இதைப் பற்றி ஏதும் சொன்னாரா?’ செல்லதுரை அடங்கா ஆர்வத்தோடு கேட்டார்.
’கல்லறை கிடைத்த கதையை அவர் என்னிடம் சொன்னதில்லை. நானும் கேட்டதில்லை.’
‘கிடைத்திருக்க வாய்ப்பு இல்லைன்னுதான் நினைக்கிறேன். 1970-இல் ஜொகூர் பாரு கெபுன் தே பகுதியில் ஜப்பானிய இளவரசர் தக்காவோ நினைவாக ஒரு நினைவு கல்லறைக் கட்டி இருக்கிறார்கள். இந்தக் காட்டில் அவரின் கல்லறை கிடைத்திருந்தால் அவர்கள் ஏன் ஜொகூர் பாருவில் புதிய நினைவு கல்லறை ஒன்று கட்ட வேண்டும்.’ என்றார் செல்லதுரை.
-நிலங்களின் நெடுங்கணக்கு நாவலில் இருந்து ஒரு பகுதி உரையாடல்
இப்புத்தகத்தை வாங்குவதற்கு; முன் பதிவு செய்ய Messenger-ரில் என்னோடு தொடர்பு கொள்ளலாம். அல்லது 012 638 7901 என்கிற வாட்சாப் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

=================================================================================

Sneak Peak #2
நிலங்களின் நெடுங்கணக்கு – The Mystery Thriller Novel.
March 16 release.
கலிமந்தானிலிருந்து பல்லவாரூக்கா வந்திருப்பது, எப்படியோ தொப்பேங் கேங்கிற்கு தெரிந்து விட்டது. ஒரு நாள் இரவு நான்கைந்து பேர் வந்து எங்கள் வீட்டின் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்ததும், வீட்டுக்குள் புகுந்து எங்களைத் துணியால் கட்டி சாக்கு மூட்டைக்குள் திணித்தார்கள். வந்தவர்கள் பேசியது தாய்லாந்து பாசையாக இருந்தது.
ஓன்டன் லாரியில் எங்களைத் தூக்கி போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். போகும் வழியில் அவர்களிடமிருந்து தப்பித்தோம். அது தனிக்கதை. என் வாழ்கையிலேயே அது மறக்க முடியாத இரவு. அன்று அவர்களிடமிருந்து தப்பி இருக்காவிட்டால் இன்று நீங்கள் என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது. எங்களைக் கொலை செய்யும் நோக்கத்திலேயே கடத்திக் கொண்டு போனார்கள்.
அவர்களிடமிருந்து தப்பித்த நாங்கள் இருவரும் போர்ட் கிள்ளானுக்கு ஓடி வந்தோம். கொஞ்ச நாட்கள் போர்ட் கிள்ளான் மீன் பிடிக்கும் படகில் தலைமறைவாக வேலை செய்துக் கொண்டிருந்தோம். கொஞ்சம் காசு சேர்ந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தோம். முதலில் பல்லவாரூக்கா மேடான் வழியாக கலிமந்தானுக்கு போக வேண்டும். அங்கு போய் நிலவரத்தை தெரிந்துக் கொண்டு எனக்கு சொன்னதும், நானும் அதே வழியில் கலிமந்தான் போக வேண்டும்.
ஆனால் போர்ட் கிள்ளானிலிருந்து மேடான் கிளம்பி போன பல்லவாரூக்காவை, அதன் பிறகு இப்போது வரை என்னால் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை. அவன் கலிமந்தான் போய் சேர்ந்தானா இல்லையா என்றுகூட எனக்கு தெரியவில்லை. கலிமந்தானில் உள்ள என் மற்ற நண்பர்களையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்லதுரையைத் தேடும் என் முயற்சி பாதியில் நின்றது. மீன் பிடி படகில் என் வாழ்க்கை தொடர ஆரம்பித்தது.
அந்தச் சமயத்தில் ஆங்கில பத்திரிக்கையில் வந்த செய்தியை பற்றி தெரிந்துக் கொண்டேன். பத்திரிக்கையில் வந்த செய்தியில் உள்ள போட்டோக்களைப் பார்த்தேன். அந்த போட்டோக்கள் செல்லதுரையிடம் மட்டுமே இருந்தது. இவர்களுக்கு எப்படி கிடைத்திருக்கும்?
-நிலங்களின் நெடுங்கணக்கு நாவலில் இருந்து ஒரு பகுதி
இப்புத்தகத்தை வாங்குவதற்கு; முன் பதிவு செய்ய Messenger-ரில் என்னோடு தொடர்பு கொள்ளலாம். அல்லது 012 638 7901 என்கிற வாட்சாப் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.



=================================================================================

டிரைலர் #1
நிலங்களின் நெடுங்கணக்கு - A thriller Novel
மார்ச் 16 ரிலிஸ்.
கதை சுருக்கம்
துன் ஸ்ரீ லானாங் எழுதிய மலாய் சரித்திரத்தில் சொல்லப்படும் கெங்காயு என்கிற கோத்தா கெலாங்கி எனும் காணாமல் போன(Lost City) நகரத்தை தேடிக் கொண்டு சரித்திர ஆய்வாளர் செல்லதுரை என்பவர் மலேசியா வருகிறார். ஜொகூரில் இருக்கும் காடுகளில் புகுந்து தேடும் போது ஒருநாள் காணாமல் போய் விடுகிறார்.
சப்த கன்னிகள் தூக்கிக் கொண்டு போய் விட்டதாகவும், காட்டுப் பேய் அடித்துக் கொன்று விட்டதாகவும், தொப்பேங் ரகசிய குழு கடத்தி கொலை செய்து விட்டதாகவும்; செல்லதுரை காணாமல் போனது தொடர்பில் பல கதைகள் சொல்லப்படுகிறது.
இருபது வருடங்கள் கழித்து காணாமல் போன ஆய்வாளர் செல்லதுரையைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு நந்தா விஜயன் எனும் இளம் வழக்கறிஞர் முயல்கிறார். செல்லதுரையோடு சம்பந்தப்பட்ட மனிதர்களை தேடிப் போகிறார்.
செல்லதுரை எப்படி காணாமல் போனார் என்பது குறித்து அவர் சந்திக்கும் மனிதர்கள், அவரவர் பார்வையில் விவரிக்கிறார்கள்.
செல்லதுரைக்கு ஏன் இது நடந்தது? அதன் காரணம் என்ன என்றும், செல்லதுரை காணாமல் போன பின்னணியில் இருக்கும் மர்மத்தையும் நந்தா விஜயன் தேடிக் கண்டுபிடிக்கிறார்.
இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை குறுநாவல். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுத்தப்பட்ட கற்பனைக் கதை இது.
இப்புத்தகத்தை வாங்குவதற்கு; முன் பதிவு செய்யவதற்கு; நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்ள Messenger-ரில் என்னோடு தொடர்பு கொள்ளலாம். அல்லது 012 638 7901 என்கிற வாட்சாப் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews