Monday, 25 March 2019

நிலங்களின் நெடுங்கணக்கு - A Mystery Thriller Novel - RM 20 நூல் அறிமுக விழா 16 மார்ச் 2019

மதியழகனின் நிலங்களின் நெடுங்கணக்கு குறுநாவல்.
நம் நாட்டில் தொடர்ந்து சமூக கதைகள்தான் எழுதப்பட்டு வருகிறது. மிகவும் அபூர்வமாகவே மர்மம், துப்பறிதல், ஹாரர், த்ரில்லர் வகை கதைகள் எழுதப்படுகிறது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மதியழகன் முனியாண்டி நிலங்களின் நெடுங்கணக்கு என்கிற தலைப்பில் த்ரில்லர் வகை குறுநாவல் ஒன்று எழுதி உள்ளார்.
இந்நூலின் அறிமுக விழா வரும் 16 மார்ச் 2019, சனிக்கிழமை மாலை மணி 7-க்கு மலாயா பல்கலைகழகத்தில் வெளியீடு காண்கிறது.

இக்குறுநாவலை திறனாய்வு செய்து வெளியிடுபவர் விரைவுரையாளர் முனைவர் செல்வஜோதி இராமலிங்கம் அவர்கள். பகாங் மாநில தமிழ் பிரிவு கல்வி துணை இயக்குனர் திரு சரவணன் இராமசந்திரன் புத்தகம் குறித்த விமர்சனம் செய்கிறார்.
பதிப்புரையை திருமதி யோகி சந்திருவும், இரண்டாவது புத்தக விமர்சனத்தை திரு கனகராஜாவும் செய்கின்றனர்.

சரித்திர ஆராய்ச்சிக்காக சுவிசர்லாந்தில் இருந்து மலேசியா வரும் செல்லதுரை என்கிற ஆராய்ச்சியாளர் ஒருநாள் காணாமல் போய்விடுகிறார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இருபது வருடங்கள் கழித்து காணாமல் போன ஆய்வாளர் செல்லதுரையைத் தேடிக் கொண்டு ஒரு இளம் வழக்கறிஞர் புறப்படுகிறார். செல்லதுரையை தேடும் நடவடிக்கையில் அந்த இளம் வழக்கறிஞர் சந்திக்கும் இன்னல்கள், தடங்கல்கள், ஆபத்துகள் என கதை கடந்து செல்கிறது. இந்த கதை முழுக்க முழுக்க மலேசிய மண் சார்ந்து எழுதப்பட்ட கதை.
ஒவ்வொரு மண்ணுக்கு பின்னாடியும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு நிலத்துக்கு பின்னாடியும் ஒரு கதை உண்டு. அந்த கதைகள் நீண்ட கணக்கு கொண்டது. ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆயிரம் ரெண்டாயிரம் வருசமாக இந்த வரலாறுகள் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் மலேசியாவில் உள்ள ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாறு குறித்து இந்த கதை பேசுகிறது என்று இந்த நூலின் தலைப்பு குறித்து நூலாசிரியர் மதியழகன் விளக்கம் கொடுத்தார்.
மதியழகன் சில ஆண்டுகளாக முகநூல், வலைப்பக்களில் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். பல நீண்ட அரசியல் கட்டுரைகள் எழுதியவர். இவர் ஒரு அறிமுக எழுத்தாளர் ஆவார். நிலங்களின் நெடுங்கணக்கு இவரின் முதல் நூல். வாசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
சிறந்த புத்தகங்களுக்கு நமது ஆதரவினை வழங்குவோம்.
என் தமிழ் வண்ணங்களின் வாழ்த்துக்கள்.



=================================================================================


நிலங்களின் நெடுங்கணக்கு – A Mystery Thriller Novel- RM 20
It’s time for BOOK LAUNCH 
16 Mrach 2019@7PM, University Malaya

ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வகையில் மலேசியாவில் உள்ள ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாறுகளுக்கு ஒரு கணக்கு உண்டு. அது நிலங்களின் நெடுங்கணக்கு.

இந்த கதை பூச்சோங்-கில் ஆரம்பித்து அப்படியே ரிங்லேட், சிகாமாட், கோத்தா கெலாங்கி, கம்பார், போர்ட் கிள்ளான் போய்; அங்கிருந்து கலிமந்தான், போர்னியோ, மக்காசார் கடந்து சுலவசி செலத்தானின் கடைசி புள்ளியான தானா உஜோங்-கில் போய் முடிகிறது.

ஒவ்வொரு நிலத்தை கடக்கும் போது அந்தந்த நிலங்களின் கணக்குகளை இந்த கதை பேசுகிறது.

வரும் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மலாயா பல்கலைகழகத்தில் வெளியீடு காணும் இந்த புத்தக அறிமுக விழாவில் கலந்துக் கொன்டு புத்தகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். விலை RM 20

மேலும் தகவல்களுக்கு 012 638 7901 மதியழகன்.

வாசிக்கும் ஆர்வம் உள்ள உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களோடு இதை பகிர்ந்துக் கொள்வதன் மூலம் இந்த புத்தக விற்பனைக்கு உதவும் அதே வேளையில் புத்தக அறிமுக விழாவுக்கு அதிகமானோர் வருவதற்கும் உதவ முடியும். நன்றி.


Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews