நிலங்களின் நெடுங்கணக்கு வாசகர் விமர்சனம் - 4 சிவலிங்கம்
மதியழகனாரின் குறுநாவல்..
சரளமான நடையில் ஒரு விருவிருப்பான நாவல். துப்பறியும் நாவல் படைப்போர் இல்லையா என்ற கேள்விக்கு இதோ உள்ளேன் என்று தன்னை முன்னிலைப் படுத்தியுள்ளார்.. மகிழ்கிறோம்...வரவேற்கிறோம்..
அரசியல் கட்டுரைகளின் மூலம் பெரும்பாலோர் அறிந்தவராக இருப்பினும் அரசியல் மட்டும் அல்ல வரலாறு, ஜோதிடம், சித்தர் பாடல்கள், சித்த வைத்தியம் இன்னும் பல துறைகளில் இயங்கிய அவரின் தேடல், ஆய்வுகள் அத்தனையும் பக்குவமாய் கதைக்குள்ளே வார்த்துள்ளார்...
தொடரட்டும் .. தேடலும் ஆய்வுகளும்..
சிலநாடுகளில் கிடைக்கும் தொன்மைகள் எச்சங்கள், மிச்சங்கள் தங்களை எப்படியாகினும் வெளிப்படுத்தி உச்சங்களாகின்றன..
சிலநாடுகளில் வெளிப்படும் வரலாற்று தொன்மைகள் வெளியே தெரியாவண்ணம் இழுத்து மூடப்படுகின்றன. ஏன், எதற்காக யாரால் எனும் கருவை கற்பனையோடு கதைக்களமாக்கியிருக்கிறார்...
வித்தியாசமான முயற்சி....
வரலாறு தொடர்பான செய்திகள் தேடிப்படிக்கும் சிலருக்கேஇது புதிய தகவலாக இருக்கிறதே.. உண்மையா அல்லது கற்பனையா என்று திகைக்க வைக்கிறார்.. இங்குதான் உங்களுக்கான கைத்தட்டல்கள்...
கற்பனை அனைவருக்கும் வரும். அது இயற்கை அதை படைப்பாக்குவது சிலருக்கே இயலும். உங்களுக்கான இருக்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது...
செப்பனிடுங்கள்.. உரித்தாக்கிக்கொள்ளுங்கள்...
உங்களின் பலதள ஆய்வுகள், தேடல்களை கற்பனைகளை சிறகாக்குங்கள்.. உங்கள் 'படைப்புப் பறவைகள்'...
உயரப் பறக்கட்டும்...
சிறக்கட்டும்...
நெஞ்சார வாழ்த்துகிறேன் மதி...
அன்புடன்.. லிங்கம்,
21/03/2019.
https://www.facebook.com/selva.linggam?__tn__=%2CdC-R-R&eid=ARDL2mlS2Uuu76PKjM-QwJLp-SqkQN0-UczdCxaBVKtT6fkAHWtcltNzKnrwi6QSmdfvzrsauc4qe5eC&hc_ref=ARRbkbMPaf_-bRGrTKV9WBs-J61Wy9OW8XdQd7PeoYBG_mADMUI21SCto9fXC31FwM4&fref=nf
0 Comments