நிலங்களின் நெடுங்கணக்கு வாசகர் விமர்சனம் - 3
சிவா லெனின், சுங்கை
நிலங்களின் நெடுங்கணக்கு பெரும் எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணமே நகர்ந்துக் கொண்டிருந்தது.முழுமையாய் வாசித்து முடிக்கும் வரை அடுத்த என்ன நடக்கப் போகிறது எனும் எதிர்பார்ப்பு நம்மோடு பயணிக்கிறது.அதைவிட கதை சொன்ன விதமும் ரசிக்க வைத்தது.செல்லதுரைக்கு என்ன ஆனது?எங்கே இருக்கிறார்?உயிரோடுதான் இருக்காரா? என பல கேள்விகள் தொடர்கிறது,வாசிக்க தூண்டுகிறது.இது துப்பறிவு நாவல் போல் சுவரசியம்,டிரில்,மர்மம்,அடுத்து என்ன நடக்கும் எனும் எதிர்பார்ப்பு என நம்மை வாசிப்பிற்குள் இழுத்து செல்கிறது.இயல்பான எழுத்து,அனைத்து தரப்பாலும் வாசித்து புரிந்துக்கொள்ள சாத்தியமானதாய் அமைந்துள்ளது.வருடங்கள் பல கடந்து இன்றுதான் ஒரு புத்தகத்தை ஒருமுறையில் வாசித்து முடித்திருக்கிறேன்.கோத்தா கெலாங்கிக்கு சென்று வர வேண்டும் எனும் எண்ணம் வாசிக்கும் ஒவ்வொருவனுக்கும் துளிர்விடும்.தோழர் மதியழகனின் வரலாற்று ஆர்வமும் அவரது அதுசார்ந்த அறிவும் அவரது இப்படைப்பின் மூலம் உணரவே முடிகிறது.வாழ்த்துகள்.அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் *நிலங்களின் நெடுங்கணக்கு*!!!
https://www.facebook.com/siva.leenin?__tn__=%2CdC-R-R&eid=ARCfsFTHbEi8H4oi83WtA9B5A-KP80BQqCoVWuFa20i2OSvM8xcl7tYu1DL_QdaPAVPQXPWqwpBtwJZA&hc_ref=ARR-E7ookpiL-3pn8yTIo9pnzebYkzTKEHwD7uD7TGupaZXnQSb3kee1ADn2teOy7rc&fref=nf
தோழர் சிவரஞ்சனி, கோலாலம்பூர்
தோழர் Mathi Alagan, கதையை இப்போதுதான் படித்து முடித்தேன். நல்ல தேடல். கதை முழுதும் அடுத்த கட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் மிகுந்திருக்கிறது. எழிய மொழியில் எழுதியிருப்பது வாசிப்பை சலிப்புத்தட்டாமல் கொண்டு சென்றது. நிறைய சரித்திர விபரங்கள். இவை உண்மையான விபரங்களா? இந்த கேள்வி எனக்குள் எழுகிறது. செல்லதுரை, இந்த கேரக்டர் மனசுல நிப்பார். இதை எழுதியதற்கு நன்றி தோழர்.
https://www.facebook.com/sivaranjani.manickam?__tn__=%2CdC-R-R&eid=ARDk9MywYAmDVaCxfae1XnW1ssEJetbLHBeeNGUfxhiBfALJhmcUwM4y1BZ52GrRledgyukyOh4ZZexC&hc_ref=ARSoQ8gFx2Y8mG5Lc3Ag6irGqmnU4hoq2VWCidh_yaZuYASXWumD-e5RCtVG9mgyGrc&fref=nf
0 Comments