Monday, 25 March 2019

நிலங்களின் நெடுங்கணக்கு - குறுநாவல் வெளியீடு 16 மார்ச் 2019

புத்தக வெளியீடு – மனநிறைவு – மன்னிப்பு

1. கடந்த ஒன்றரை மாதமாக ஃபர்ஸ்ட் லூக், டீசர், ஸ்னிக் பீக், டிரைலர் என தொடர்ந்து முகநூல், வாட்சாப் போன்ற சமூக ஊடங்களில் வழியாக எனது நிலங்களின் நெடுங்கணக்கு நூல் அறிமுகம் குறித்த விளம்பரம் செய்து வந்தேன்.
2. ஒரு வழியாக கடந்த வாரம் சனிக்கிழமை புத்தகம் நல்லப்படியாக மலாயா பல்கலைகழகத்தில் அறிமுகம் கண்டது. நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்து எழுதுவதற்கு இன்றுதான் கொஞ்சம் அவகாசம் கிடைத்தது. நீண்ட கட்டுரையாக இல்லாமல் குட்டி கட்டுரையாக எழுதிவிடலாம் என்று லேப்டாப் முன் உட்கார்ந்து விட்டேன்.
3. இந்நிகழ்ச்சிக்கு இட தேர்வு பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதற்கு முதலில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மெக்ஸிமம் முப்பது பேர்கள் வரைதான் வருவார்கள் என கணக்கு போட்டேன். ஆகவே 50 பேர்கள் உட்காரும் அளவுக்கு ஒரு சின்ன ரூம் கிடைத்தால் போதும் என்று நினைத்தேன்.
4. இந்த நிகழ்ச்சியை நடத்த பொறுப்பெடுத்துக் கொண்ட Ilham Bestari Publication நிறுவனத்தார், டேவான் குலியா(Dewan Kuliah) எடுக்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள். நான்தான் வேண்டாம் என மறுத்து விட்டேன். ஒரு 20-30 பேர்கள்தான் வருவார்கள். அதற்கு ஏன் அவ்வளவு பெரிய டேவான் என்று தடுத்து விட்டேன்.
5. ஆனால் 60-க்கும் மேற்பட்டோர் வந்து விட்டார்கள். உட்கார இடம் இல்லாமல் சிலர் நின்றுக் கொண்டிருந்தார்கள். சிலர் திரும்பி போய் விட்டார்கள். சிலர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாமல் திரும்பி போய் விட்டார்கள். வாட்சாப்பில் மெசெஜ் பார்த்த போது ரொம்பவும் வருத்தமாக இருந்தது.
6. கூட்டம் அதிகமானதும் அறையில் ஏர்கோண்ட் கூலிங் குறைந்து விட்டது. அது இன்னொரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இது முழுக்க முழுக்க என்னுடைய தவறுதான். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் இதை எல்லாம் ஒரு குறையாக பார்க்காமல் நூல் அறிமுக விழாவில் கலந்துக் கொண்டு, இறுதிவரை காத்திருந்து நூல் வாங்கி சென்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
7. நானே எதிர்ப்பார்க்காமல் சிலர் வந்திருந்தார்கள். எழுத்தாளர் சங்க தலைவர் திரு. ராஜேந்திரன் Rajendran Perumal, மாவார்(இந்திய முஸ்லிம்) அமைப்பின் தலைவர் திரு. பசீர், என் ஆசிரியர் திரு. சண்முகநாதன் இரா.சண்முகநாதன் நடேசன் இன்னும் பலரும். எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது. முகநூல் நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள். சிலரை அடையாளம் கண்டுக் கொண்டேன். சிலரை அடையாளம் காணமுடியவில்லை.
8. நிகழ்ச்சி அன்று ஏறத்தாள் 90 புத்தகங்கள் விற்று முடிந்தது. இன்னும் சரியான கணக்கு முடிக்கவில்லை. மொத்த வரவு RM2100. முன்பதிவுக்கு 300-க்கும் அதிகமான புத்தகங்கள் ஆர்டர் வந்துள்ளது. அதில் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டவர்கள் 161 பேர்கள். நிகழ்ச்சி அன்று மற்றும் தபால் மூலம் இதுவரை மொத்தம் 300-க்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது.
9. இந்த வேலையில் நான் சிலருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். முதலில் என் இரு ஆருயிர் நண்பர்கள் செல்வஜோதி Selvajothi Ramalingam மற்றும் சரவணனுக்கு Saravanan Ramachindran முதல் நன்றி. நேரம் ஒதுக்கி என் புத்தக அறிமுக விழாவில் கலந்துக் கொண்டதோடு மட்டும் இல்லாமல் புத்தக திறனாய்வும், விமர்சனமும் செய்தார்கள். அடுத்து தம்பி கனகு Kanaga Raja. நான் கேட்டுக் கொண்டதும் மறுப்பேதும் சொல்லாமல் வந்து மிக சிறப்பாக நூல் குறித்த விமர்சனத்தை பதிவு செய்தார்.
10. இந்த கதையில் ஒர் உள்அரசியல் விவகாரத்தை திணித்திருந்தேன். அதனால் ஏதும் சட்ட சிக்கல் வருமா என தெரிந்துக் கொள்வதற்காக இந்த கதையை வழக்கறிஞர் பாலமுரளியிடம் Vehl Murali கொடுத்து படிக்க சொல்லிக் கேட்டுக் கொண்டேன். பொதுவாக வழக்கறிஞர்கள் கட்டணம் இல்லாமல் எந்த ஆலோசனைகளும் வழங்குவதில்லை.
11. ஆனால் பாலமுரளி கதையை முழுவதுமாக படித்துவிட்டு, கதையில் அப்படி ஏதும் முரண்பாடு இல்லை. அப்படியே வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றதோடு. என் வங்கி கணக்கு எண் கேட்டு உடனடியாக 100 ரிங்கிட் போட்டு; நூல் முன் பதிவாக நெடுங்கணக்கை தொடக்கி வைத்தார்.
12. அடுத்து ஓவியர் சந்துரு Sandran So Krishnan Sandru. பணத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மூன்றே நாளில் உள்ளடகத்தை மிக குறைந்த விலையில் செய்துக் கொடுத்தார். அதோடு மட்டும் இல்லாமல் அவர் பதிப்பகம் பெயரிலேயே ISBN எண்ணும் எடுத்துக் கொடுத்தார்.
13. இந்த புத்தகம் ஆரம்பத்தில் தமிழகத்தில் அச்சிடுவதாகதான் திட்டம் இருந்தது; அந்த ஐடியாவை மற்றி உள்ளூரிலேயே அச்சடிக்க சொல்லி சிறந்த ஆலோசனையையும் அதற்கான காரணத்தை சொல்லி இந்த புத்தகம் இங்கேயே அச்சடிக்க உதவிய எழுத்தாளர், ஆசிரியர் திரு சீ.அருண் அவர்கள்.
14. எந்த பணமும் வாங்காமல் இலவசமாக முகப்பு அட்டை செய்து கொடுத்த நண்பர் கேசவனின் தம்பி ஸ்ரீதர். எனக்கு இப்படித்தான் முகப்பு அட்டை வேண்டும் என என் ஐடியாவை ஒரு ஐந்து நிமிடம் விளக்கினேன். ஐந்து நிமிடம்கூட இருக்காது. ஆனால் நான் எப்படி எதிர்ப்பார்த்தேனோ அதைவிட சூப்பராக டிசைன் செய்து கொடுத்தார்.
15. இந்த புத்தகத்தை PDF மூலமாக எல்லோரும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆரம்பகால ஐடியாவாக இருந்தது. இலவசமாக கொடுத்தால் யாருக்கும் அதன் மதிப்பு தெரியாது E-Book-காக செய்து கிண்டலில் போட்டு ஒரு டாலருக்கு கொடுங்கள் என்று இக்கதையை புத்தகமாக போட வேண்டும் என்கிற முதல் ஐடியாவை கொடுத்தது நமது நண்பர் விக்னேஸ்வரன் அடைக்கலம்தான் Vikneshwaran Adakkalam.
16. அதன் பிறகு இந்த கதையை வாசித்த நண்பர் தமிழ் வாணன் Tamilvanan Manickam; இந்த கதையை அச்சு புத்தகமாக போடுங்கள். இது பரவலாக எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்று ஊக்குவிப்பு கொடுத்தார். அந்த வகையில் இந்த புத்தகம் வெளிவர காரணமாக இருந்த விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்வாணன் இருவருக்கும் மிக்க நன்றி.
17. இன்னொரு ஸ்பெசல் நன்றி ஒருவருக்கு சொல்ல வேண்டும். இந்த கதைக்கு என்ன தலைப்பு வைக்க வேண்டும் என்ற குழப்பமும் திண்டாட்டமும் இருந்த போது; சில தலைப்புகளை எழுதி நண்பர் சிவநேச செல்வர் வாசுதேவன் லட்சுமணனுக்கு Vasudevan Letchumanan அனுப்பி வைத்தேன். கதையை அனுப்பி வைக்க சொல்லி; கதையை முழுவதும் படித்து பார்த்து நிலங்களின் நெடுங்கணக்கு என்கிற இந்த அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.
18. முகநூலில் ஃபார்ஸ்ட் லூக் வெளியான முதல் நாள், முதல் ஆளாக 50 ரிங்கிட் செலுத்தி முதல் ஆன்லைன் ஆர்டரை தொடக்கி வைத்தார் மகேஸ்வரிMages. அவர் ஆரம்பித்து வைத்த கணக்கு நெடுங்கணக்காக தொடர்கிறது. கூலிம் கெடா நண்பர் வேலுமணி Velumani Vengadasalam அவர்கள் மொத்தமாக 13 புத்தகங்கள் வாங்கி அதிக புத்தகம் வாங்கியவராக என் புத்தக விற்பனைக்கு உதவினார்.
19. இந்த புத்தகத்தை அச்சடிக்க பணம் தட்டுபாடு ஏற்ப்பட்ட போது; உடனடியாக உதவி கரம் நீட்டியது Ilham Bestari Publication நிறுவனம். பாதி பண செலவை ஏற்றுக் கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் புத்தகத்தை அச்சடித்து கொண்டு வந்து கொடுத்தார்கள். புத்தகம் கைக்கு வந்ததற்கு மிக மிக முக்கிய காரணம் Ilham Bestari Publication. அவர்களுக்கும் இந்த வேளையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
20. என்தமிழ் வண்ணங்கள் Senthil NathanRani Oye, மலேசிய கலை உலகம் போன்ற இணைய ஊடகங்கள் தொடர்ந்து என் நூல் குறித்த செய்திகளை வெளியிட்டு நல்ல விளம்பரங்களை தேடிக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் நன்றி. என்தமிழ் வண்ணங்கள் தங்கள் முகநூல் பக்கம் வழியாக நூல் அறிமுக விழாவை நேரலை செய்தார்கள்.
21. நான் எது செய்தாலும் எனக்கு சப்போர்ட்டாக இருக்கும் நம்ம பினாங்கு பாய்ஸ்க்கள். நான் கேட்டுக் கொண்டேன் என்பதற்காக எனக்காக நேரம் ஒதுக்கி மிகவும் கஷ்டப்பட்டு எழுத்து பிழைகளை திருத்திக் கொடுத்த தம்பி ஜெயமோகனுக்கும் JMohan Balachandaram நன்றி. அப்படியும் நிறைய எழுத்து பிழைகள் புத்தகத்தில் உண்டு. ஆனால் அது அவர் தவறில்லை. நான் அவரிடம் கொடுத்த போது ஆயிரம் கணக்கில் எழுத்து பிழைகள் இருந்தது. பாவம் தம்பி. அவர் என்ன செய்வார். முடிந்த வரையில் திருத்திக் கொடுத்தார்.
22. என் புத்தகம் குறித்த செய்திகளை தொடர்ந்து தங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து பலருக்கும் சென்றடைய உதவிய பல முகம் தெரியாத நண்பர்களுக்கும் என் உளபூர்வமான நன்றி. குறிப்பாக பினாங்கு சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் skjt Sjkt Sungai Ara, ராஜி Rajeswary Raji இன்னும் பலரும். அதிலும் நம்ம மனோ சார் மனோகரன் கிருஷ்ணன். அவரின் சப்போர்ட் வார்த்தையில் மட்டும் இருக்காது.
22. இந்த புத்தகத்தை வாங்கி தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வரும் வாசகர்கள் அனைவருக்கும்; புத்தகத்தை படித்ததோடு மட்டும் இல்லாமல் அது குறித்து முகநூலில் பதிவிட்டு என் புத்தக விற்பனைக்கு பெரிதும் உதவிய நணபர்கள் வாசகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. சியர்ஸ்.
23. எல்லாரையும் காட்டிலும் இந்த முகநூல், வாட்சாப் கண்டுபிடித்த மகான்களுக்குத்தான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டும். எந்த ஊடக உதவியும் இல்லாமல், முகநூல் மற்றும் வட்சாப் மூலமாகவே என் புத்தகம் குறித்த விளம்பரங்களை வாசகர்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. இது சாத்தியப்பட்டது முழுக்க முழுக்க சமூக ஊடங்களால் மட்டுமே. நன்றி முகநூல். நன்றி வாட்சாப்.
24. எனது நிலங்களின் நெடுங்கணக்கு குருநாவல் அட்டகாசமாக வெளியீடு கண்டு; தற்போது பரபரப்பான விற்பனையில் இருப்பதற்கு உதவிய உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்படுள்ளேன். என் வெற்றியில் உங்கள் அனைவருக்கும் பங்கு உண்டு. இது நான் ஒருவன் தனியாக பெற்ற வெற்றி அல்ல. நமது கூட்டு முயற்சி. ஊர் கூடி இழுந்தால் தேர் வரும்.

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews