Monday, 25 March 2019

நிலங்களின் நெடுங்கணக்கு வாசகர் விமர்சனம் 1 - நிதி ஆந்தன்

1. இந்த புத்தகத்தை மிக குறைந்த நேரத்தில் (1.5 நாட்களில்) படித்து முடிக்க முக்கிய காரணம்:
                  1.1 திரில்லர் வகை
                   1.2 மெலிதான புத்தகம்(பொதுவாக தடிமமான புத்தகம் படித்து முடிப்பதற்குள் அலுப்பு தட்டிவிடும், ஒரு சில புத்தகங்கள் தவிர)

2. திரைக்கதை வடிவில் சொல்லப்படும் கதைப்போக்கு. சொல்லப்படும் செய்திகள் நாம் அங்கே இங்கே கேட்ட செய்திகளோடு ஒத்துப் போவதாலும் மலேசிய கதைக்களத்தில் இருப்பதால் அன்னியப்படாமல் இருப்பதாலும் கதையோடு சேர்ந்து இயல்பாக பயணிக்க முடிகிறது.

3. வெவ்வேறு மனிதர்கள் ஒரே சம்பவத்தை வேறு விதமாக சொல்லும்போது சில செய்திகள் மீள்பதிவு செய்யப்படுவதைச் சலிப்பு தட்டாத வகையில் நகர்த்துவது ஒரு கலைதான்.
4. அவ்வப்போது வரும் திருப்பங்கள் படிக்கும் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. 
          4.1 இது ஏன் அப்படி இருக்கக்கூடாது என்று நமக்குள் எழும் சில கேள்விகளுக்குத் தகுந்த நேரத்தில் கதையாளரே பதில் சொல்லி விடுகிறார். சில பதில்கள் நான் யோசிக்கும் முன்னரே சொல்லி விட்டார்

       4.2 என்னை அதிகம் கவர்ந்த திருப்பங்கள், ரசித்தவை - (கதையை இன்னும் படிக்காதவர்களுக்கு சஸ்பென்ஸ் உடைக்காத வண்ணம் சொல்ல முயல்கிறேன்)
- இரண்டாம் முறை - பௌர்ணமி - சப்த கன்னி
- நான்கு பேர் உள்ள போட்டோவில் சாகிலை விஜயன் அடையாளம் காட்டுவது
5. கதை செல்லதுரை என்பவரை மையமாகக் கொண்டு நகரும் கதை. கதையின் நிழலில் மட்டுமே அவரை வைத்துக் கொண்டு மற்ற மற்ற கதாப்பாத்திரங்களின் ஊடே கதையைச் சொல்லி முடிப்பது என்பது பலே கெட்டிக்காரத்தனம்.
6. கதையில் எக்கச்சக்க வரலாற்று கூற்றுகள். ஒன்றோடு ஒன்றை முரண் இன்றி கோர்த்து பார்ப்பது பிரமிக்க வைக்கிறது.
7. வரலாறு ஒரு பக்கம். இன்றைய மலேசியா அதன் அரசியல், பின் அரசியல், சமூகவியல் என இன்னொரு பக்கம். கதாப்பாத்திரத்தின் வழியே அதை சாமர்த்தியமாக இடித்து உரைக்கிறார்.
8. சில செய்திகளை கூகிலில் பாருங்கள் என்று நமக்கே சவாலும் விடுகிறார். இதைப் பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று பல இடங்களில் இவர் சொல்வதை குறிப்பெடுத்து தேட வேண்டும் போல.
9. மொழி ஆளுமை - தன் மொழி ஆளுமையை உலகுக்கு காட்ட அலட்டிக் கொள்ள வில்லை. மலேசியருக்கு புரிந்த தமிழில் வாக்கிய அமைப்புகள். வேண்டும் எனும்போது மலாய் ஆங்கில சொற்கள் மிகத் தாராளமாகவே பாவிக்கிறார். கதைக்கு வேண்டியதைக் கச்சிதமாக தருகிறார். எளிய முறை வாக்கிய அமைப்பு. இரண்டு மூன்று முறை படித்து புரிந்து கொள்ளும் அவதி இல்லை.
10. புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் - மேட்டின் உச்சியில் ஒருவர் நின்று பார்க்க அங்கே சில கோபுரங்கள் தூரத்தில் புள்ளியாக தெரிகின்றன. கதையில் வரப்போகும் சுவாரசியங்களை ஓரளவுக்கு ஊகித்து விட முடிகிறது. "இது என் முதல் புத்தகம் என்பதால் இதை எனக்கு நானே சமர்ப்பித்துக் கொள்கிறேன்" என்று சொல்கிறார் மதியழகன். கதையில், நீங்க 'நாம் தமிழர்' கட்சியா என்று ஒரு வசனம் வருகிறது... நிறைய நையாண்டி குணம் கொண்ட மனிதர்
11. நிலங்களின் நெடுங்கணக்கு - தலைப்பு கவிதைப் போல இருந்தாலும் கதைக்கு சிறப்பாக பொருந்துகிறது. தென்கிழக்காசியாவின் பல இடங்களைக் கதைக்குள் இழுத்து வர்ணனையோடு விவரித்து நமக்கும் சில தேடல்களை விதைத்து விடுகிறது இந்த நாவல். இப்போது கோத்தா கெலாங்கியைப் பற்றி கூகிலிடம் கேட்டு கொண்டிருக்கிறேன் அது உண்மையா இது உண்மையா என்று 😃
நிறைகளை சொல்லியாச்சு, குறைகளை தனி சாட்டில் பேசுவோம் 🙊🙊🙊
https://www.facebook.com/ananthen?fref=nf&__tn__=%2Cdm-R-R&eid=ARDeLLSgdZJVPOmi25-tgmadoRAGh-JISGyIniWyP0Z2jansecCK13_XzQ7-p8ZVMRFh1_wBOKb9pMXJ

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews