2018 ஒரு கண்ணோட்டம்.
1. பாஸ் கட்சி நஜிப்பிடமிருந்து 90 மில்லியன் பெற்றதாக சரவாக் ரிப்போர்ட் செய்தி வெளியிட்டது. இதனை எதிர்த்து பாஸ் கட்சி லண்டனில் சராவாக் ரிப்போர்ட் மீதும், அதன்
நிறுவனர் மீதும் வழக்கு ஒன்று தொடுத்தது.
2. ஊடகங்களை கட்டுபடுத்தும் வகையில் முந்தைய பாரிசான் அரசாங்கம் பொய் தகவல் தடுப்பு சட்டம்(Anti-Fake News Act
2018)
ஒன்றை கொண்டு வந்தது.
3. முந்தைய பாரிசான் அரசாங்கத்தால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு(Usul
Persempadanan Semula Pilihan Raya) செய்யப்பட்டது. 1MDB முறைகேட்டில் சம்பந்தப்பட்ட எக்குவனியிட்டி ஆடம்பர கப்பல் இந்தோனேசியா அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.
4. பலவித ஆருடங்களுக்கு மத்தியில் மலேசியாவின் 13-வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 14-வது பொது தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேலை நாளான புதன்கிழமை பொது தேர்தல் வாக்களிக்கும் தினமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பொது மக்கள் குரல் எழுப்பவே, தேர்தல்
நடைபெற்ற புதன்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. பக்காத்தான் வெற்றி பெற்றால் கூடுதலாக வியாழன் மற்றும் வெள்ளி இரு கிழமைகள் விடுமுறை வழங்கப்படும் என பக்காத்தான்
தலைவர் துன் மகாதீரால் அறிவிக்கப்பட்டது.
5. நாட்டின் வரலாற்றை ஏற்படுத்திய 14-வது பொது தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று, துன்
மகாதீர் மீண்டும் நாட்டின் ஏழாவது பிரதமராக பொறுப்பெடுத்துக் கொண்டார். பல்வேறு
காரணத்தால் காலதாமதமாக துன் மகாதீரின் பதவியேற்பு சடங்கு மறுநாள் இரவு 9.45-மணிக்கு
நடைபெற்றது.
6. மகாதீர் பதவியேற்ற அன்று இரவு அன்வார் இப்ராஹிமின் விடுதலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, நான்கு
நாட்களுக்கு பிறகு அன்வார் இப்ராஹிம் பேரரசரின் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
7. 60 ஆண்டுகள் பாரிசானின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. மத்தியில்
ஆட்சியை இழந்த பாரிசான், பெர்லிஸ்
மற்றும் பகாங் இரு மாநிலங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பாஸ்
கட்சி நாடாளுமன்றத்திற்கு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கிளாந்தானோடு
திரங்கானு மாநிலத்தையும் கைப்பற்றியது.
7. மலேசிய வரலாற்றில் முதன் முறையாக மூன்று முழு அமைச்சர், மற்றும்
ஒரு துணை அமைச்சர் பதவி இந்திய சமூகத்துக்கு ஒதுக்ககப்பட்டது. முதல் முறையாக சீக்கியர் இனத்தை சேர்ந்த ஒருவருக்கு முழு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
8. சபாவில் சபி அப்டாலின் வாரிசான் கட்சி ஆட்சி அமைத்தது. சபி
அப்டால் பதவியேற்கும் முன் அன்வார் மூசா சபா மாநில முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். பல
போராட்டங்களுக்கு மத்தியில் அன்வார் மூசா பதவி ஏற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டு
சபி அப்டால் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அன்வார்
மூசா வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.
9. சரவாக் பாரிசான் கலைக்கப்பட்டது. சராவாக் கட்சிகள் பக்காத்தானில் இணைந்தன. பழைய
சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ முகமட் அப்பண்டி விடுமுறையில் செல்ல நிர்பந்திக்கப்பட்டு, பிறகு அவரை நீக்கிவிட்டு புதிய சட்டத்துறை தலைவராக தோனி தோமஸ் நியமிக்கப்பட்டார்.
10. முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்பான பவிலியன் ரெசிடெண்ட் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை
சோதனையிட்ட போது, 100 மில்லியன்
ரொக்க பணம் மீட்கப்பட்டது. நஜிப்-பின்
அனைத்துலக கடப்பிதழ் முடக்கப்பட்டது. இதுவரை நஜிப் மீது 39 வழக்குகள்
பதிவாகியுள்ளது.
11. 14-வது பொது தேர்தலில் பாரிசானின் தோல்வியை ஏற்றுக் கொண்டு நஜிப் பாரிசான் மற்றும் அம்னோவின் தலைவர் பதவியை துறந்தார். அம்னோவின்
தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டது. சாயிட்
அமிடி, துங்கு
ரசாலி அம்சா, கைரி
ஜமாலுடின் மூவரும்
போட்டியிட்டு இறுதியில் சாயிட் அமிடியே வெற்றி பெற்றார்.
12. இந்தியர்கள் இந்த நாட்டில் வந்தேரிகள் அல்ல, பல
ஆயிரம் ஆண்டுகள் மலேசியாவில் உள்ளனர் என்றும் மலாய்காரர்களும் வந்தேரிகள்தான் என்று அமைச்சர் குலா கூறியதாக புகார்கள் எழுந்தது. இது
சர்ச்சையை ஏற்படுத்தி அமைச்சர் குலா பதவி விலக வேண்டும் என குரல்கள்
எழுப்பட்டது.
13. இது ஒருவகையாக முடிவுக்கு வரும் சமயம் பினாங்கு துணை முதல்வர் வேறு ஒரு சர்ச்சையில் சிக்கி, புலிகளோடு
தொடர்பு படுத்தி பேசப்பட்டு, கடைசியில்
இஸ்லாம் விவகார அமைச்சர் முஜாகிட் தலையிட்டு, பெர்லிஸ் முப்திக்கும் ராமசாமிக்கும் இடையில் நடந்த சர்ச்சரையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்.
14. மூன்று லட்சம் இந்தியர்கள் நீல ஐசி இல்லாமல் இருப்பதாக தேர்தலுக்கு முன் எதிர்கட்சியால் சொல்லப்பட்டது. ஆனால் புதிய பக்காத்தான் அரசாங்கத்தால் மூவாயிரம் பேருக்கு மட்டுமே நீல ஐசி வழங்கப்பட்டது. மூன்று லட்சம் இந்தியர்கள் என்பது சரியான தகவல் அல்ல, குத்துமதிப்பாக
சொன்னதாக அமைச்சர் வேதமூர்த்தியும், அமைச்சர் குலாவும் ஒப்புக் கொண்டார்கள்.
15. தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் மஇகாவின் தலைவராக இருந்த சுப்ரமணியம் பதவி விலகி போக, விக்னேஸ்வரன்
போட்டியின்றி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். துணைதலைவருக்கு சரவணனும், ராமசாமியும்
போட்டியிட்டு சரவணன் வெற்றி பெற்றார். தேவமணி, சோதிநாதன், ஜஸ்பால்
சிங் போன்ற பலரும் மஇகாவின் முக்கிய பதவியிலிருந்து முற்றிலும் விலகிக் கொண்டார்கள்.
16. முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவர் மனைவி ரோஸ்மாவும் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்களோடு முன்னாள் துணை பிரதமர் சாயிட் ஹமிடி, முன்னாள்
அம்னோவின் செயலாளர் மற்றும் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான், சபா
முன்னாள் முதல்வர் அனுவார் மூசா, இசா
சாமாட், இர்வான்
ஸ்ரீகர், முகமட்
சபி, பாடாங்
ரெங்காஸ் அஜிஸ், முன்னாள்
மஇகாவின் உதவி தலைவர் பாலகிருஷ்ணன் போன்றவர்களும்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். நாட்டில் பல உயர்
அதிகாரிகளும் ஊழல் மற்றும் அதிகார முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார்கள்.
17. பிகேஆர் உள்கட்சி தேர்தல் மிகவும் ஆரவரமாக நடைபெற்றது. வான்
அசிசா விலகிக் கொண்டு, அன்வார்
இப்ராஹிம் பிகேஆர் தலைவராக போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார். அஸ்மின் மற்றும் ரபிசி ரம்லிக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இறுதியில்
அஸ்மின் அலி துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.
18. அடிதடி, ஊழல், முறைகேடுகள் என பிகேஆர்
உள்கட்சி தேர்தலில் பல சம்பவங்கள்
நடைபெற்று போலிஸ் விசாரணை வரை சென்றது. அஸ்மின்
அணி, ரபிசி
அணி என இரு
அணிகளாக பிகேஆர் இரண்டு பட்டது. அன்வார்
இப்ராஹிமின் முழு ஆதரவு ரபிசி அணிக்கு இருந்தும், அஸ்மின்
அணியே அனைத்து முக்கிய பதவிகளிலும் வெற்றி பெற்றது.
19. அன்வார் அடுத்த பிரதமராக வருவதை தடுப்பதற்கு சதிகள் நடப்பதாகவும், அன்வாரை ஓரங்கட்டும் நடவடிக்கைகள் நடப்பதாகவும், இதன் பின்னணியில் துன் மகாதீர் இருப்பதாகவும் ரபிசியும் அவர் அணியும் குற்றம் சாட்டியது.
20. பிகேஆர் உட்கட்சி விவகாரத்தில் தாம் தலையிடவில்லை என்றும், தாம்
உறுதி கூறியது போல் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் என்றும் துன் மகாதீர் லண்டனில் நடந்த மாணவர்கள் கலந்துரையாடலின் போது தெரிவித்தார். தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என துன்
மகாதீர் மீண்டும் உறுதியளித்தார்.
21. அன்வார் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் வகையில், போர்ட்டிக்சன்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் டேனியல் அப்துல்லா. அங்கு
நடைபெற்ற இடைதேர்தலில் அன்வார் இப்ராஹிம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
22. இந்திய சமூகத்தால் மிக கடுமையாக எதிர்க்கப்பட்ட மஇகாவின் சில தலைவர்களோடு இந்த இடைதேர்தலில் அன்வார் இப்ராஹிம் கைகோர்த்ததும், இந்திய சமூகத்தால் வெறுக்கப்பட்ட மஇகாவின் முன்னாள் உதவி தலைவர் சோதிநாதனை அழைத்து வந்த அன்வாரின் நடவடிக்கை இந்திய மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
23. அரசாங்க அலுவல் காரணமாக இந்தியா சென்ற குலகேகரன், மஇகா
தலைவர்கள் செய்வது போலவே சினிமா நடிகர் மற்றும் நடிகர்களை சந்தித்தது மற்றும் நடிகர் கமல்ஹாசனை அன்வாருக்கு ஆதரவாக பேச வைத்து வீடியோ செய்ததன் மூலம் மிக கடுமையான கண்டனத்துக்கு ஆளானார்.
24. மஇகாவை போலவே குரோனி முறைகளை கொண்டு வருவதாக அமைச்சர் குலசேகரன் மீது மிக கடுமையான குற்றசாட்டுகள் வைக்கப்பட்டது. பாரிசான் மற்றும் கமலநாதனின் மிக தீவிரமான ஆதரவாளரான இளஞ்செழியனை HRDF இயக்குனராக நியமித்தது பெரும் சர்ச்சைகுள்ளானது. தாம் இளஞ்செழியனை நியமித்ததில் எந்த தவறும் இல்லை என அமைச்சர்
குலா அறிவிக்கை வெளியிட்டார். HRDF-வில் அமைச்சர் குலாவுக்கு மிகவும் நெறுக்கமாக வழக்கறிஞர் நிறுவனத்துக்கு குத்தகை வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது..
25.
ICERD-க்கு எதிராக பாஸ் கட்சியும் அம்னோவும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். மாநாகரில் பேரணி நடத்தப்பட்டு சுமார் ஒரு லட்சம் மக்கள் திரண்டனர். இந்த
பேரணியில் மஇகாவின் துணை தலைவர் டத்தோ சரவணனும் இன்னும் சில மஇகா உறுப்பினர்கள் கலந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியது.
26.
ICERD விவகாரத்தை கையில் எடுத்த பாஸ் மற்றும் அம்னோ இதனை காரணம் காட்டி அமைச்சர் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தனர். அமைச்சர்
வேதமூர்த்தின் பதவி விலக வேண்டும் என்கிற வேண்டுகோள் வலுவடைந்தபோது, பிரதமர் துன் மகாதீர் தலையிட்டு பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்.
27. மலாய்கார கேங்ஸ்டர்கள் சிலர் சீபில்டு கோவில் உள்ளே நுழைந்து கோவிலை உடைக்க முற்பட்டது நாட்டில் ஒரு பெரிய பிரச்சனையை கிளப்பிவிட்டது. உடனடியாக அங்கு கூடிய இந்திய மக்கள் மலாய்கார கேங்ஸ்டர்களை விரட்டி அடித்தார்கள்.
28. இந்த பிரச்சனையை கையில் எடுத்த சில இந்திய கும்பல்கள், இதன்
மூலம் பிரபலம் ஆவதற்கு, மக்களின்
உணர்ச்சிகளை தூண்டி விட்டு, கோவிலின்
முன்பு பெரும் ஆர்ப்பாட்டம் செய்து அங்கிருந்த கார்களை கொளுத்திவிட்டார்கள். கொளுத்திய கார்களின் தீயை அணைக்க சென்ற தீயணைப்பு படை மீது தாக்குதல் நடத்திய போது, அடிப்
என்கிற தீயணைப்பு வீர்ர் ஒருவர் மரணமடைந்தார்.
29. ஸ்ரீராமின் கடுமையான போரட்டத்துக்கு பிறகு, முன்னாள்
நெகிரி மந்திரி பெசார் முகமட் ஹசான் போட்டியின்றி வென்ற ரந்தாவ் சட்டமன்ற தொகுதியின் வெற்றி செல்லாது என தீர்ப்பு
வந்தது. இத்தீர்ப்பை
எதிர்த்து முகமட் ஹசான் மேல்முறையீடு செய்துள்ளார்.
30. ஊழல் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக கேமரன் மலை தொகுதியின் தேர்தல் வெற்றி ரத்து செய்யப்பட்டது. கேமரன் மலையில் வெற்றி பெற்ற மஇகா இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாததால், கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி காலியானது. இதன்
இடைத்தேர்தல் 2019 ஜனவரி மாதம் நடைபெறும் என தேர்தல்
ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
31. அம்னோவிலிருந்து பலர் வெளியேறும் படலம் தொடங்கியது. சட்டமன்ற
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சபா அம்னோ உறுப்பினர்கள் மொத்தமாக கட்சியை விட்டு வெளியேறினார்கள். அம்னோ உள்கட்சியில் நடக்கும் பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொன்டு வர சாயிட்
ஹமிடி அம்னோவின் தலைவர் பதவியிலிருந்து விடுமுறையில்
சென்றார். துணை
தலைவர் முகமட் அசான் தற்காலிகமாக தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
32. இன்னும் சில முக்கிய சம்பவங்கள் இங்கு விடுப்பட்டு போயிருக்கலாம். 2018-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு மிக முக்கியமான ஆண்டு. வரலாற்றை
ஏற்படுத்திய ஆண்டு. மலேசிய
வரலாற்றில் 2018-ஆம் ஆண்டு மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 2018-ஆம் ஆண்டை நீக்கிவிட்டு இனி மலேசிய வரலாற்றை எழுத முடியாது.
33. மலேசிய மக்களுக்கு மறக்க முடியாத ஆண்டு 2018. Historical year for Malaysian.
2018 The End. But there’s no ending for 2018.
0 Comments