ஆசியான் டைகர் - Part 2
1. நம் நாட்டில் பல சுவரசியமான சம்பவங்கள் நடந்துள்ளது. இது குறித்து ஏற்கனவே ஆசியான் டைகர் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். இது அதன் தொடர்ச்சி. MH 653 மலேசிய விமானம் 1977-ஆம் ஆண்டு கடத்தப்பட்டது. அது சிங்கபூருக்கு கடத்திக் கொண்டு போகும் வழியில் போகும் வழியில் ஜொகூரில் உள்ள தஞ்சோங் குபாங் எனுமிடத்தில் விழுந்து நொறுங்கியது.
2. அதில் பயணம் செய்த 93 பயணிகளும் 7 விமான பணியாளர்களும் சேர்த்து 100 பேரும் மாண்டனர். இதன் நினைவாக ஜொகூரில் நினைவு மண்டபம் ஒன்றை நிர்ணியித்துள்ளார்கள்
3. அந்த விமானத்தில் மூன்று முக்கியமானவர்கள் பயணம் செய்தார்கள். அவர்கள்; அப்போதைய மலேசிய விவசாய அமைச்சர் டத்தோ அலி ஹாஜி அகமாட்(Dato Sri Ali Bin Haji Mohammed), பொதுப்பணி துறை அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ மாஹ்ஃபூஸ் காலிட்(Dato Mahfuz Khalid) மற்றும் ஜப்பான் நாட்டிற்கான கியூமா தூதர் மரியோ கார்சியா(Mario Garcia Inchaustequi).
4. MH 653, 4 டிசம்பர் 1977 திகதி மலேசிய நேரப்படி மாலை 4 மணிக்கு பினாங்கு விமான நிலைத்திலிருந்து பழைய சுபாங் அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணமானது. பத்து ஆரங்கை நெறுங்கும் போது இரவு 8 மணிக்கு விமானம் கடத்தப்பட்டதாக விமானத்தின் பைலட் கண்ட்ரோல் ரூமுக்கு ராடியோ மூலம் தெரிவித்தார்.
5. சுபாங் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய MH 653 சிங்கப்பூருக்கு கடத்திக் கொண்டு போவதாக இறுதி தகவல் விமானியால் தெரிவிக்கப்பட்டது. – We’re now proceeding to Songapore- இதுவே கடையாக பரிமாரப்பட்ட தகவல்.
6. இரவு 8.15-மணிக்கு விமானத்தின் அனைத்து தொடர்ப்பும் துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு இரவு மணி 8.36-க்கு கம்போங் லாடாங், தஞ்சோங் குபாங் எனுமிடத்தில் விழுந்து நொறுங்கியது.
7. யார் கடத்தினார்கள்? எதற்காக கடத்தினார்கள் என்று இப்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. விசாரணை எந்த முடிவும் இல்லாமல் அப்படியே கைவிடப்பட்டது.
8. பிற்பாடு ஜப்பானை சேர்ந்த ஜப்பான் சிகப்பு படையினரால்(Japanese Red Army) கடத்தப்பட்டதாக பிற்பாடு சொல்லப்பட்டது. ஆனால் எந்தவொரு அடிப்படை ஆதரமும் இப்போது வரை கிடைக்கவில்லை. இந்த ஜப்பான் சிகப்பு படையினரை பற்றிய பல சுவையான தகவல்கள் உண்டு. இவர்கள் 1975-ஆண்டு மலேசியாவின் AIA கட்டிடத்தை பிணையாக பிடித்துள்ளனர்.
7. இந்த விபத்தின் போது ஒரு காண்டர்வெர்சி இருந்தது. MH 653 விமானத்தில் பயணம் செய்த விவசாய அமைச்சரின் பாதுகாவலர் ஒருவர் விமானத்தின் உள்ளே கைத்துப்பாக்கியை எடுத்து சென்றுள்ளார். விமான நிலையத்தில் கைதுப்பாக்கி எடுத்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது பிரச்சனை எழுந்துள்ளது. இறுதியில் கைத்துப்பாக்கியை விமானத்தில் எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
8. விமானத்தில் பொறுத்தப்படிருந்த கறுப்பு பெட்டி விபத்துக்கு பிறகு மீட்கப்பட்டது. கடத்தல்காரகளும் விமானிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
9. விமானிகளின் காக்பிட் அறை தட்டப்பட்டபோது, கதவை பூட்டாமல் வந்ததற்கு துணை விமானியை விமானி சத்தம் போட்டு கண்டித்துள்ளார் கண்டித்துள்ளார். அதனை தொடர்ந்து மாலய் மொழியில் – Keluar! Putuskan Semua hubungan radio! Putuskan Semuanya sekarang –
10. அதனை தொடர்ந்து விமானிக்கும் கடத்தல்காரனுக்கும் விமானத்தை எங்கே இறக்குவது என பேச்சு வார்த்தை நடந்துள்ளது. விமானத்தில் இருக்கும் எண்ணை சிங்கப்பூர் வரைக்கும்தான் பறக்க முடியும் என்றும் விமானி சொன்னதும், விமானத்தை சிங்கப்பூருக்கு செலுத்த சொல்லி இருக்கிறான் காபினில் இருந்த கடத்தல்காரன்.
11. MH 653 விழுந்து நொறுங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் துப்பாக்கி சுடும் சத்தமும், கெஞ்சல் பேச்சும் பதிவாகி இருந்தது. – Tidak, Tolong Jangan! Tidak, Tolong tidak … Tolong, Oh’ என்று விமானி கெஞ்சுவது கறுப்பு பெட்டியில் பதிவாகி இருந்தது.
12. இந்த சம்பவத்துக்கு பிறகு விசாரணை ஆரம்பமானது. பல்வேறு ரூமோர்ஸ் உலாவியது. ஆனால் இப்போது வரைக்கும் MH 653 கடத்தலின் உண்மையான காரணம் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
13. ஏர் வியட்னாம் விமானம் ஒன்றை கடத்திய குற்றசாட்டின் பேரின் வியட்னாம் மிலிட்டன் குரூப்பை சேர்ந்த மூவர் சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை விடுவிப்பதற்காக கடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.
14. வேறொரு சம்பவத்தில், கியூபா தூதரை கடத்துவதற்காக கியூபா தீவிரவாத கும்பல் MH 653-வை கடத்தியிருக்கலாம என்றும் கூறப்பட்டது.
15. இந்த விமான விபத்தில் இறந்து போன விவசாய அமைச்சரின் பாதுகாவலர் கடத்தல்காரர் என்றும் அவரே இந்த விமானத்தை கடத்தியிருக்க வேண்டும் என ஆருடங்கள் கூறப்பட்டது. இது அப்போதைக்கு பார்லிமெண்டில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
16. ஆனால் ஜப்பான் சிகப்பு படையினரால்தான் இவ்விமானம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பலமான ஆருடம் கூறப்பட்டது. விமானம் கடத்தப்பட்ட மறுநாள் 5 டிசம்பர் 1977-திகதி ஸ்டார் பத்திரிக்கை பின்வருமாறு தன் தலையங்கத்தை பிரசுரித்திருந்தது. – Red Army Hijacks Penang Jet –
17. மலேசிய உள்துறை அமைச்சும், ஜப்பான் அரசாங்கமும் இந்த தியரியை முற்றிலும் மறுத்தனர்.
0 Comments