முரட்டு சிங்கங்களும் கைபுள்ளைகளும்.
1. மலேசிய தமிழர்கள் மிகவும் யுனிக்கானவர்கள். உலக தமிழர்களிடத்தே நாம் முற்றிலும் மாறுபடுகிறோம். நமது மொழி வளம், பண்பாடு, அரசியல், சமயம், வரலாறு முற்றிலும் மாறுப்பட்டவை. நமது கட்டமைப்பு வேறு.
2. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்றால்; கடிவாளம் இல்லாத குதிரையாக நாம் எப்போதும் தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். மாய கயிற்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோம். சம்பந்தமே இல்லாத ஒன்றை, சம்பந்தம் இல்லாமல், சந்தர்ப்பவாதமாக நம் காலங்களையும், எனர்ஜிகளையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
3. இந்த கட்டுரை கட்டுரைக்கூட நமக்கு; எனக்கு தேவை இல்லாத ஒன்று. ஆனாலும் ஏன் இந்த கட்டுரையை எழுதுகிறேன் என்கிற புரிதலும், யோசிக்க மறுக்கும் நிலையிலேயேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
4. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு பிரச்சனை வந்தால் இங்கே மாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்கிறோம். திருமுருகன் காந்தியை கைது செய்தால் நாம் புரட்சி செய்கிறோம். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் எதிர்ப்பு கொடுக்கிறோம். கமல் ஸ்தாபக தலைவர் என்று எழுதினால் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஏன்?
5. தமிழ்நாட்டு அரசியல் நமக்கு எப்போதும் எந்தவித நன்மையும் செய்துவிட போவதில்லை. நமது சமூகத்தில் எந்தவித மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த போவதில்லை.
3. பெரியார் சிலையை ஒரு எச்ச ராஜா தூக்கி போட்டு உடைக்கபோவதாக சொன்னால்; நாம் இங்கு சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். ஏன்? பெரியார் expire ஆனவர். அவரின் எந்த கொள்கையும் நமது அரசியலோடும், வாழ்க்கை முறையோடும் ஒத்து போவது இல்லை. அவரின் ஜாதிக்கு எதிரான போராட்டம் முற்றிலும் வேறு. அது குறிபிட்ட ஒரு ஜாதிக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை. அந்த வன்முறையின் மறுபக்கம் கடவுள் எதிர்ப்பு. அது நமது நாட்டு சூழலோடு ஒத்து போவது இல்லை.
4. ஏற்க மனம் இல்லாதவர்கள்; சுலபத்தில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். நான் பச்சையாக ஒரு விசயத்தை சொல்ல போகிறேன். மலேசியாவில் தமிழர்களின் ஜாதி எதிர்ப்பு என்கிற அறிவு; கவுண்டர்களுக்கும் பறையர்களுக்கும் இடையே இருக்கும் கௌரவ சண்டை. அவ்வளவுதான்.
5. இங்கு கவுண்டர்களின் மீது ஒரு வன்முறையை கையாளுகிறார்கள் என்பதே மிக அசிங்கமான ஒன்று. இதுதான் நிதர்சணமும் கூட. இங்கு செட்டியார்கள் மீதும், பிள்ளை ஜாதிகாரர்கள் மீதும் எந்தவித காழ்புணர்ச்சியும் யாருக்கும் இல்லை. செட்டியார்களையும் பிள்ளைகளையும் அங்கிகரிக்கிறார்கள். ஆனால் கவுண்டர்கள் மீது மட்டும் ஜாதியை திணித்து, கவுண்டர்களுக்கு எதிராக திருப்பி விடப்படுகிறார்கள். இங்கு யாருக்கும் ஜாதி குறித்து தெளிவான பார்வை கிடையாது. அதன் புரிதலும் இல்லை.
6. மலேசியாவில் தமிழர்களின் ஜாதி முறையை புரிந்துக் கொண்டதாக சொல்பவர்கள் பலரும் அரைவேக்காடுகள். காரணம் கவுண்டர்கள், பறையர்கள் இவர்களை தவிர்த்து வேறு ஜாதிகாரர்கள் தங்கள் ஜாதியை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளலாம். தனித்து கூட்டமாகவும் இயங்கலாம். அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது.
7. செட்டியார்கள் கோவில், செட்டியார்கள் ஸ்கூல், செட்டியார்கள் கடை என வெளிப்படையாக அவர்கள் இயங்கலாம். யாரும் எந்த கேள்வியும் கேட்பது இல்லை. அதே போல் பிள்ளை என்கிற ஜாதிகாரர்கள் தங்கள் பெயரிலும், வெளிப்படையாகவும் சொல்லிக் கொள்ளலாம். யாரும் எந்த கேள்வியும் எழுப்பது இல்லை. கவுண்டர்களும் பறையர்களும் தங்கள் ஜாதியை வெளிப்படையாக சொல்லக்கூடாது.
8. இதில் தேவர்கள் நாசுக்காக பறையர்களையும், கவுண்டர்கள் மீதும் ஜாதியின் எதிர்ப்பை திருப்பி விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். நான் மிகவும் மேலோட்டமாக சொல்கிறேன். இது இன்னும் டீப்பாக போக கூடியது. சுருக்கமாக நான் சொல்ல வருவது, மலேசியாவில் ஜாதி முரண் என்பது எப்போதும் பறையர்களுக்கு கவுண்டர்களுக்கும் நடுவே இருப்பது. இது மட்டுமே ஜாதி என்கிற புரிதலில் சுழன்றுக் கொண்டிருக்கிறோம். பிற ஜாதியினர் தங்கள் ஜாதியின் கட்டமைப்பை தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
9. இங்கு ஜாதியின் செயல்பாடு வேறு திசையில் உள்ளது. வேறு தளத்தில் இயங்குகிறது. தமிழ்நாடு போல் பிராமணர்களுக்கு எதிராக இல்லை. அங்கே பிராமணர்கள் உயர் பதவிகளில், வாழ்க்கையில் உயர்ந்த நிலையில், படித்து மெத்த வளர்ந்த சமூகமாக இருக்கிறது. அவர்களின் கட்டு கோப்பில் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் சிக்கிக் கொண்டது. ஆகவே பெரியாரின் ஜாதி எதிர்ப்பு என்பது பிராமணர்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட வன்முறை.
10. இந்த கட்டுரையின் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ளாமலும், இதில் சொல்லப்படும் ஜாதியின் கட்டமைப்பை புரிந்துக் கொள்ளாமல், அரையுங்குறையுமாக இங்கு கத்திக் கொண்டிருக்கிறார்கள்.
11. தமிழ் நாட்டில் பெரியாரின் செயல்பாடுகளால் ஆதாயம் அடைந்தவர்கள் அதிகம் பேர். இன்றும் பெரியாரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை அவர்களுக்கு. தமிழ்நாட்டில் பெரியார் ஒரு வரலாற்று மாற்றத்தைக் கொண்டு வந்தார். ஆனால் மலேசிய தமிழர்களுக்கு பெரியாரால் எந்த நன்மையும் விளையவில்லை. எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
12. அதே போல் பெரியாரின் கடவுள் எதிர்ப்பு கொள்கை. பெரியார் கடவுள் எதிர்ப்பு கொள்கை என்பது பிராமணர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நடவடிக்கை. பிராமணர்களை எதிர்ப்பதற்கு கடவுள் மறுப்பு கொள்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. அது பிற்பாடு அண்ணா,கருணாநிதி,எம் ஜி ஆர் போன்றவர்களுக்கு அரசியல் செய்ய உதவியது. அந்த கொள்கையை பிடித்துக் கொண்டு அரசியல் ஆதாயம் அடைந்தார்கள்.
13. மலேசியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி ஜாதி எதிர்ப்பு போராட்டத்துக்கும் கடவுள் மறுப்பு கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று தெரியவில்லை. ஜாதி எதிர்ப்பு என்பது கடவுள் மறுப்பு கொள்கை என்றும்; கடவுள் மறுப்பு கொள்கை என்பது ஜாதி எதிர்ப்பு போராட்டம் என்றும் ஒன்றோடு ஒன்றை போட்டுக் குழப்பிக் கொண்டு பிறரையும் குழப்பி எடுக்கிறார்கள்.
14. ஜாதி எதிர்ப்பு என்பது வேறு. கடவுள் மறுப்பு கொள்கை என்பது வேறு. மலேசியா வாழ் தமிழர்கள் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்காதவர்கள். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை முற்றிலும் நிராகரித்தவர்கள்.
15. மலேசிய தமிழர்களின் கேங்ஸ்டர்கள் கட்டமைப்பு முறைகளையும், மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் புரியாமல்; நம் வரலாற்றின் புரிதல் இல்லாமல்; பக்கா இந்திய மசாலா தனத்தில் எடுக்கப்பட்ட கபாலி படத்தை போன்றுதான் பெரியார் புரட்சியின் புரிதலும் தேவையையும் உணராமல் வெவ்வேறு தளத்தில் இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
16. பெரியாரை ஒரு Showcase பொம்மையாக வைத்துக் கொண்டு இங்கே சின்ன பிள்ளைகள் போல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கட்டுரையை வாசிக்கும் பலருக்கு இன்று இதன் உள்ளர்த்தம் புரியாமல் இருக்கலாம். பத்து வருடம் கழித்து மீண்டும் படிக்கும் போது புரியலாம். அல்லது அப்போதும் புரியவில்லை என்றால்; வாசிப்பவர்களிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்.
17. பெரியார் ஒரு பெரிய கோளாறு. அவர் முழுமையாக தமிழர்களின் வரலாறும் இலக்கியமும் படித்துணராதவர். அவர் பெரிய புரட்சிகாரராக இருக்கலாம். சிங்கமாக இருக்கலாம். ஆனால் அவர் தமிழ் சமூகத்தின் வீழ்ச்சியை தவறாக புரிந்துக் கொண்டு அதன் மறுமலர்ச்சிக்கு wrong method பயன்படுத்தினார். அதன் விளைவு தமிழர்கள் இன்று பல கூறுகளாக பிரித்துக் கொண்டும்; தமிழனை தமிழனே விரோதியாக பார்க்கும் நிலைக்கும் ஆளாகி உள்ளோம்.
18. அன்று அவர் செய்த தவறுகளின் தொடர்ச்சி; இன்று நாம் தமிழ் ஈழத்தை இழந்து நிற்கிறோம். புலிகளின் வீழ்ச்சிக்கு பெரியாரும் ஒரு காரணம் என்பதனை இங்கு எத்துனை பேர் உணர்ந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. அந்த நுண்ணரசியல் பெரியார் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தது.
19. இன்றைய மலேசிய இளைஞர்கள் மிகவும் துடிப்போடு இருக்கிறார்கள். சிந்தித்து செயல்படும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சிக்கல் என்பது நாம் எப்போதும் தமிழ்நாட்டு அரசியலோடு இணைந்து பயணம் செய்ய விரும்புகிறோம். இது மிகவும் ஆபத்தானது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் சப்பாத்திகளை நாமும் போட்டுக் கொள்ள முயல்கிறோம். அதுவே சிறந்தது என்று நினைக்கிறோம். தவறு. அவர்கள் வேறு நாம் வேறு. பழனிசாமி தமிழ்நாட்டு முதல்வராக இருப்பதற்கும்; சுப்ரமணியம் மஇகா தலைவராக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
20. தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கிருக்கும் அம்பாசிடர் காரை நாம் இங்கு இறக்குமதி செய்து ஓட்டலாம். ஆனால் அதே அம்பாசிடர் காரை நாம் இங்கு reproduce செய்வது excellent கிடையாது. நமக்கு ஏற்றவாறு; நமது வளர்ச்சிக்கு உகந்தவாறு; நமக்கு தேவையான ஒரு காரை இங்கு நமக்காக உற்பத்தி செய்துக் கொள்வதுதான் அறிவுடமை.
21. போட்டோஸ்டேட் எடுப்பது போல் தமிழ்நாட்டுகாரர்களை பார்த்து; அதே போல் நாமும் வாழ வேண்டும் என்பது கட்டத்துரையிடம் அடி வாங்கும் கைபுள்ளைக்கு சமமானது. நம் தனித்துவமும் சிறப்புகளையும் நாமே இழப்பதற்கு சமம்.
22. திருமாவளவனை கூட்டிக் கொண்டு வருவது. ஸ்டாலினை கூப்பிடுவது. ராகுல் மக்கு காந்தியை கொண்டு வருவது. சீமான் வழியை பின்பற்றுவது. இன்னும் நிறைய பேரை கிளமராக கொண்டு வருவது நமக்கு அவசியமற்றது.
23. சினிமாவிலும் இலக்கியத்திலும் இது நடக்கிறது. தமிழ்நாட்டு சினிமா பார்த்து ரசிக்கலாம். தமிழ்நாட்டு புத்தகங்களை படித்து சிலாகிக்கலாம். ஆனால் அதே போல் சினிமாவை இங்கு எடுக்க வேண்டும் என்பதோ; அதே போல் ஒரு இலக்கியத்தை இங்கு படைக்க வேண்டும் என்பதோ நமது வளர்ச்சிக்கும் தனித்துவத்துக்கும் அவசியமானதா? நாம் இயங்குவதற்கு அவர்களின் தடி எதற்கு? இன்று உலகமயமாக்கல் விரிவடைத்துள்ள நிலையில் நாம் இயங்கும் தளமும் பரவலாக்கப்பட்டுள்ளது. நம் படைப்புகள் உலக தரமிக்கவை எனில் அது அதன் நிலையை அடைந்தே தீரும். தமிழ்நாட்டு பயணிகளோடு இணைந்து பயணிக்கும் பயணம் நமக்கு சுவரசியமாக இருக்கலாம். ஆனால் அது எதுவரை? அதன் வரம்பு என்ன?
24. சாஆ அன்பானந்தன், வீ டேவிட், பட்டு போன்ற நல்ல தலைவர்களின் வாழிகாட்டல் இல்லாமல் இன்றைய இளைஞர்களின் திறமைகளும் முரட்டு சிந்தனைகளும் அறிவாற்றலும் நாசம் செய்யப்படுவதோடு; நமது சமூகத்தின் மாபெரும் வீழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இன்றைய இளைஞர்களே நமது அடுத்த தலைமுறையை வழிநடத்தக்கூடியவர்கள். வழிநடத்தக்கூடியவர்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை என்றால்; நாம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்? யாருக்காக, எதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்?
0 Comments