கோயாபல்ஸ் ......
நான் சந்திக்கும் பெரும்பாலான நண்பர்கள் ஒரு விசயத்தை ஒரேமாதிரி என்னிடம் சொல்கிறார்கள் ......
BN பிராடுதனம் செய்து/ எப்படியாவது ஏமாற்றியாவது ஜெயித்து விடுவார்கள் என்று;
ஒரு பொய்யை உண்மையைப் போல்; திரும்ப திரும்ப சொல்லி; அந்த பொய்யை உண்மையாக்க பார்க்கிறார்கள் ......
இதுதான் கோயாபல்ஸ் டெக்னிக் ......
ஒரு பொய்யை உண்மையாக்கி; அதை மக்கள் மனதில் பதிய வைத்து; அதை எக்ஸ்கியூட் செய்வது ......
உங்களிடம் யாராவது, BN பிராடுதனம் செய்தாவது ஜெயித்து விடுவார்கள் என்று சொன்னால், நம்பாதீர்கள் ..... அது அப்பட்டமான பொய் .... எந்த ஆங்கிளிலிருந்து பார்த்தாலும், பாரிசான் ஜெயிப்பதற்கான வாய்ப்பே கிடையாது .....
2013 தேர்தலில் பாரிசானுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய எதிர்கட்சிகளுக்கு பெரிய அளவில் எதுவும் கிடையாது ....
அல்தான்தூயா கொலை வழக்கு, சப்மெரின் ஊழல்; இதை இரண்டையும்தான் அடித்து பிழிந்து தொங்க விட்டார்கள் ..... Ini Kali la ..... Ini Kali la .... என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் .....
ஆனால் இந்த முறை அப்படி இல்லை ..... பாரிசானை வைத்து, அடிஅடி என அடித்து துவைக்க அவ்ளோ மேட்டர்கள் மீட்டர் கணக்கில் உண்டு ......
பேராக் பவர்ப்ளாண்ட் ஆரம்பித்து, 1MDB, 2.6 மில்லியன், மொராய்ஸ் கொலை, முகைதீன்/ஷபி அப்டால்/முக்ரிஸ் நீக்கம், GST, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, தெறிவிடப்படும் பெட்ரோல் விலை உயர்வு,
லூசுதனமான அமைச்சர்களின் உலறல்கள், ஆணவம் பிடித்த பாரிசான் தலைவர்களின் பேச்சு, பாரிசான் தலைவர்களின் மில்லியன் கணக்கான ஊழல்,
நாட்டில் சமீபகாலமாக நடக்கும் வன்முறை, மது போதை கூத்துக்கள், கொலை, கொள்ளை, அயோக்கியத்தனம், போலிஸ் இருக்கிறதா இல்லையா என்கிற அளவில் நடக்கும் குற்றசெயல்,
இப்படி எழுதியும் சொல்லியும் முடிக்க முடியாத அளவுக்கு அவ்ளோ விசயங்கள் உண்டு ..... பாரிசானை கிழிகிழி என கிழித்தெடுக்க மேட்டர்கள் குவிந்து கிடக்கு .....
இன்னொரு பக்கம், பலம் வாய்ந்த எதிர்கட்சி கூட்டணி, அதில் மகாதீர் இருப்பது யானை பலம் ..... அன்வார் வெளியானதும் குதிரை வேகத்தில் ஓடக் கூடியவர் ..... அவர் மேடை பேச்சுக் கெல்லாம் யாரும் பக்கத்தில் நிற்க முடியாது ..... மகாதீரும் அன்வாரும் ஒன்றாக இணைந்திருப்பது, நம் நாட்டுக்கு second innings ......
பாரிசான் மிகவும் பலவீனமாக உள்ளது ..... அம்னோவில் இருந்து பாதிபேர்கள் மகாதீரின் பெர்சத்து கட்சியில் இணைந்து விட்டார்கள், MCA ஏழு நாடாளுமன்ற சீட் ஜெயித்தாலே உலக அதிசயம், MIC சொல்லவே வேண்டியதே இல்லை. அவர்கள் தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்வதிலேயே தோற்று போய் விடுவார்கள்.
நீங்கள் வேண்டுமானாலும் பாருங்கள், MIC தோற்க போகிற வேட்பாளர்களை தேடி பிடித்து கொண்டு வந்து நிறுத்துவார்கள் ..... ஜீனியஸ்களின் உச்சம் அவர்கள்.
கெடா,ஜொகூர், சபா இந்த மூன்று மாநிலமும் இந்த முறை பாரிசானுக்கு எதிராய் நிற்கிறது .....
பாரிசான் மிகவும் பலவீனமாக இருக்கிறது. உண்மையில் பாரிசான் தேர்தலை பார்த்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தோல்வி பயம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. தொல்வி பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்.
மகாதீர், அன்வார் போன்று, இன்றைய காலகட்டத்தில் பாரிசானுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை. எல்லாம் உளருவாயர்கள் .....
பெரும்பாலான பாரிசான் தலைவர்கள் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் .....
கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல், நாட்டின் நடப்பு தெரிந்தும், பாரிசான் கண்டிப்பாக தோற்றுவிடும் என தெரிந்தும்;
பித்தலாட்டம் செய்தாவது பாரிசான் ஜெயித்துவிடும் என அசட்டுதனமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இப்படி நம்புவது அடி முட்டாள்தனம்.
பாரிசான் நிச்சயமாக தோற்க போகிறது. உறுதி.
சென்ற 2013 தேர்தலிலிருந்து பக்காத்தான் கூட்டணி சில பாடங்களைக் கற்றுக் கொண்டார்கள்.
அதே தவறு இந்த முறை நடக்காமல் பார்த்துக் கொள்வதற்காகத்தான் இத்தனை போராட்டம். இந்த முறை ஜெனரட்டர்கள் ரெடி செய்து வைத்திருப்பார்கள். கரண்ட் போன அடுத்த நொடி ஜெனரட்டரை ஆன் செய்து விடுவார்கள். அந்த பழைய டெக்னிக் எல்லாம் இந்த முறை பலிக்காது .....
Undi Pos - இது எல்லாம் ஒரு லிமிட்தான். மெக்ஸிமம் சில தொகுதிகளில் 3000 undi pos- தான் போய் சேரும் .....
இந்த undi pos-களையும் மீறித்தான் சாமிவேலும், கோ சூ கூனும், பழைய ஜொகூர் மந்திரி பெசாரும், அலி ருஸ்தாமும், ஷரிசாட்டும், பல முக்கிய அம்னோ தலைவர்களும், பாரிசான் மஸ்தான்களும் 2008/2013 தேர்தல்களில் தோற்று போனார்கள் ......
பித்தலாட்டம் செய்தாவது பாரிசான் ஜெயித்து விடும் என அசட்டுதனமாக நம்பிக் கொண்டிருக்காதீர்கள் ..... பாரிசானுக்கு ஓட்டு போடாதீர்கள் ..... பாரிசான் கன்பார்மாக தோற்க போகிறது ......
பித்தலாட்டம் செய்தாவது பாரிசான் ஜெயித்துவிடும் என்கிற பொய்யை பொய்யாக்குவோம் ..... No Vote For BN
0 Comments