Monday, 2 April 2018

பொய் செய்தி



1. பொய் செய்தியை அல்லது தகவலை பறப்புவோர் மீது 5 லட்சம் ரிங்கிட் அல்லது 10 வருட சிறை தண்டனை விதிக்கும் சட்ட மசோதா நேற்று பார்லிமெண்டில் விவாதத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு நஜிப்-பின் ஆளும் பாரிசானுக்கு போதுமான ஆதரவு ஓட்டு பார்லிமெண்டில் இருக்கிறது. மினிமம் ஆதரவு 115 போதுமானது.
2. பொய் தகவலை பறப்புவோர் மீது கண்டிபாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மூவினம் வாழும் நாட்டில் பல இன விரோதங்களையும், மத எதிர்ப்பு கருத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கும்; நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான தகவல்களை தடுக்கவும், நாட்டின் பாதுகாப்பு நலனை முன்னிட்டு பொய் தகவல் பரப்பும் சட்டம் நமக்கு கண்டிபாக தேவை.
3. எது பொய் தகவல் அல்லது பொய் செய்தி; ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் கூறப்படும் ‘Fake News/Berita Palsu’ என்பதின் அர்த்தம் என்ன? நஜிப்-பின் இந்த பாரிசான் அரசு எதை பொய் செய்தி என்று வரையறுக்கிறது? பொய் செய்தியின் definition என்ன?
4. இதற்கு பாரிசான் சொல்லும் விளக்கம், ’Satu berita yang tiada sah oleh Kerajaan maka adalah berita palsu.’ ஆக நஜிப் அல்லது பாரிசான் அங்கிகரிக்காத செய்திகள் எல்லாம் பொய் செய்தி என்கிற வரையறைக்குள் வந்து விடும்.
5. இது மீடியாக்களையும் கருத்து சுதந்திரத்தையும் முடக்கும் ஒரு வன்முறை. இன்று மீடியாக்கள் மக்கள் கைகளுக்கு வந்து விட்டது. மக்கள் முன்பு போல் இல்லாமல் அதிகமான செய்திகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் electronic media. இணையம், தொடர்பு ஆப்ஸ்கள்(WhatsApp, Wechat போன்றவை), சோசியல் மீடியா(Facebook, Twitter போன்றவை) போன்றவையின் வளர்ச்சி; இதன் மூலம் ஒரு செய்தி மக்களுக்கு நொடியில் போய் சேர்ந்து விடுகிறது.
6. முன்பு காலங்கள் போல் மாலை பத்திரிக்கைகளை வாங்கிப் படித்தோ; அல்லது மறுநாள் காலை வரை காத்திருந்து பாத்திரிக்கை வாங்கிப் படித்து, ஒரு செய்தியை தெரிந்துக் கொள்ளும் நிலையில் மக்கள் இன்று இல்லை. மக்கள் இன்று வேறு தளத்திற்கு நகர்ந்து விட்டார்கள்.
7. Blogspot, wordpress போன்ற இணைய பக்கங்கள் வந்த பிறகு, இன்றைய நவீன காலத்தில் Independent writers(சுதந்திரமான பொது எழுத்தாளர்கள்) அதிகமாக உருவாகி உள்ளார்கள்.
8. நஜிப்-பும், நஜிப்பின் அமைச்சர்களும், பாரிசான் அரசியல்வாதிகள் அனைத்து செய்திகளையும் இணைய ஊடகங்கள மூலமும், தொடர்பு சாதனங்கள் வழியும் தெறிவிக்கவிட்டு விடுகிறார்கள்.
9. இந்த பொய் செய்தி சட்டம் ஊடங்கள் நஜிப் குறித்து எழுதுவதை தடுப்பதற்காகவே அவசர அவசரமாக கொண்டுவரப்படுகிறது. நஜிப்பை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.
10. நஜிப்பையும் அவரது கூட்டாளி அமைச்சர்களையும் பாதுகாப்பதற்காக மட்டும் இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை. மாறாக அடுத்த பொது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான டெக்னிக்-க்களில் ஒன்று இந்த பொய் தகவல் சட்டம்.
11. தேர்தல் சமயத்தில் நஜிப்-ப்பின் மீது சாத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றசாட்டுகள் மற்றும் பாரிசான் கூட்டணியின் தேர்தல் வேட்பாளர்களை எதிர்த்து எந்த செய்தியும் வெளியில் வரமால் தடுத்து, ஆளும் பாரிசான் வேட்பாளர்களின் பொய்யை மட்டும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க செய்யும் மகா தந்திரம் இந்த சட்டம்.
12. பார்லிமெண்ட் கலைப்பதற்காகவே மகாதீர் காத்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் சமயத்தில் நஜிப்பை பற்றியும் நஜிப்பின் அமைச்சர்களை பற்றியும் பல புதிய செய்திகளை உடைத்துவிட மகாதீர் திட்டம் போட்டிருப்பார். பல வெடிகள் காத்திருக்கும். நஜிப்பை குறித்து எந்த தகவலும் இனி மக்களுக்கு போய் சேராமல் தடுக்க, நஜிப்புக்கு இந்த சட்டம் அவசியம் தேவைப்படுகிறது.
13. இந்த சட்டம் அமலுக்கு வருவதன் மூலம் எந்த உண்மை செய்தியையும் எழுத முடியாது. நஜிப்பும் அவரது சகாக்களும் sah செய்யப்பட்ட செய்திகள் மட்டுமே இனி எழுதவும் பேசவும் பரப்பவும் முடியும்.
14. மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் வங்கி கணக்கில் 2.6 பில்லியன் டெபாசிட் செய்யப்பட்டதாக 2015-இல் சரவாக் ரிப்போர்ட் என்கிற இணையத்தளம் செய்தி வெளியிட்டது.
15. முதலில் நஜிப்பும், நஜிப்பின் அமைச்சர்களும், பாரிசான் தலைவர்களும் இதை கடுமையாக மறுத்தனர். இது ஒரு பொய் செய்தி என்றார்கள். இந்த பொய்களின் உச்சமக; இந்த பொய் செய்தி சட்ட மசோதாவை தயாரித்த பிரதமர் துறை அமைச்சர் அசாலினா, ஒரு நாட்டின் பிரதமர் தன் சொந்த வங்கி கணக்கில் 2.6 மில்லியன் பணத்தை போட்டு மாட்டிக் கொள்வாரா? எப்படி இப்படி ஒரு தப்பை செய்வார் என்று கேட்டார்.
16. நஜிப் அரசாங்கத்தை கவிழ்பதற்காக வெளிநாட்டு தீய சக்திகளோடு இணைந்துக் கொண்டு மகாதீர் செய்யும் சதி இந்த 2.6 மில்லியன் என்று நஸ்ரி கூறினார்.
16. சாயிட் அமிடி, அகமாட் மஸ்லான், ஹிசாமுடின் என்று எல்லா முன்னணி அமைச்சர்களும் TV3-வும் இதை கடுமையாக மறுத்ததோடு, சராவாக் ரிப்போர்ட் இணையத்தளத்தையும் தடை செய்தார்கள்.
17. ஒரு வருடம் கழித்து 2016-இல் நமது நாட்டின் புதிய துணை பிரதமர் சாயிட் அமிடி, அந்த 2.6 மில்லியன் டொனெஷன் என்றார். 2.6 மில்லியன் நஜிப் கணக்கில் புகுந்ததை அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். முதலில் பொய் செய்தி என்று நஜிப்பும், நஜிப்பின் சகாக்களும், அரசும் பொய் செய்தி/அவதூறு/அரசாங்கத்தை கவில்பதற்கு ஜோடிக்கப்பட்ட பொய் குற்றாசாட்டு என்று சொல்லப்பட்ட பொய் செய்தியை; ஒரு வருடம், அவர்களே அந்த பொய் செய்தியை உண்மை என்றார்கள்.
18. எங்கிருந்து 2.6 மில்லியன் வந்தது என்று கேட்டதற்கு, தீவிரவாத போரட்டத்துக்கு எதிராக போரடியதற்கு சவுதி மன்னர் அந்த பணத்தை டொனேஷனாக கொடுத்தார் என்று சொன்னார்கள். டொனேஷன் கொடுத்த சவுதி மன்னரை தாம் பார்த்ததாக அமிடி சொன்னார்.
19. முதலில் அது 1MDB-யிலிருந்து வரவில்லை என்றார்கள். பிறகு ஆமாம் அது அங்கிருந்துதான் வந்தது என்றார்கள்.
20. அப்படி பொய் செய்தியை பரப்பியது நஜிப்பும் நஜிப்பின் சகாக்களும்தான். பொய் செய்தியை பரப்பிய அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இப்போது வரை தொடர்ந்து அந்த பொய்யை சொல்லி வருகிறார்கள்.
21. பொய் செய்தி சட்டம் கொண்டு வரப்படுவதன் மூலம், இது போன்ற உண்மை செய்திகள் எழுதப்படுவதற்கு ஊடகங்களுக்கு தடைவிதிக்கப் படலாம். அல்லது எழுதக் கூடாது என்று மிரட்டப்படலாம். மக்கள் இந்த உண்களை பேசாமல் தடுக்க செய்யலாம். இந்த உண்மைகளை பேசும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். மக்களை பயமுறுத்தாலம். ஊடங்கங்களின் வாயை மூடலாம்.
22. வர்த்தகர் ஜோ லோவின் எக்குவானியிட்டி என்கிற உல்லாச கப்பல் ஜோ லோவுக்கு சொந்தமானது இல்லை என்று சாலேக் கருவாக் கூறினார். அந்த கப்பலுக்கும் 1MDB-க்கும் சம்பந்தம் இல்லை என்றார் மலேசிய சட்டத்துறை தலைவர். அந்த கப்பல் 1MDB ஊழல் பணத்திலிருந்து வாங்கப்பட்டதாக அமெரிக்காவின் நீதித்துறை(Department of Justice) மீண்டும் ஒரு முறை, எல்லோர் காதில் விழும்படி உரக்க சொல்லியது.
23. சாலேக் கருவாக்கும், சட்டத்துறை அமைச்சரும் இப்போது வரை வாய் திறக்கவில்லை. மற்ற நஜிப்பின் சகாக்களும் மௌனம் காக்கிறார்கள். போய் செய்தியை சொல்வது அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுப்படவில்லை. எடுக்கவும் படாது.
24. புதிதாக கட்டப்பட்ட நான்கு தமிழ்ப்பள்ளியும் சேர்த்து 527 தமிழ்ப்பள்ளி நமது நாட்டில் இயங்குவதாக என் எஸ் ராஜேந்திரனும், சுப்ராவும், துணை கல்வி அமைச்சர் கமலநாதனும், பிற மஇகா சகாக்களும் சொல்லி வந்தார்கள். திடிரென நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள்தான் இருக்கிறது. 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படும் என்று தேவமணி சொல்கிறார். நம் நாட்டில் 527 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாக பொய் தகவலை பரப்பிய குற்றத்திற்காக என்.எஸ் ராஜேந்திரன், சுப்ரா,கமலநாதன் மீதுதான் ஞாயப்படி சட்ட நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை.
25. பொய் தகவல் சட்டம் கொண்டுவருவதன் மூலம் மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்று சேராமல் தடுப்பதே முக்கிய நோக்கமாக இருக்கும்.
26. பொய் செய்தி பரப்புவோர்கள் தானே இந்த சட்டத்தை பார்த்து பயப்பட வேண்டும் என்று, சில பாரிசான் செம்பு தூக்கிகள் கேட்கிறார்கள். நீங்கள் உண்மையை பேசினால் நாங்கள் ஏன் பொய் செய்தியை பரப்ப போகிறோம். உங்கள் பாரிசான் தலைவர்கள் பொய்யை தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. அவர்களை உணமையை பேச சொல்லுங்கள்; நாங்கள் பொய் பேச மாட்டோம். ஞாயமாக பார்த்தால், உண்மையை பேசும் சட்டம்தான் நம் நாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்று ஒரு நல்ல தமிழ் சினிமா பாட்டு உண்டு. பாரிசான்காரர்களுக்காகவே இது எழுதப்பட்டது.
27. மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கவும், பத்திரிக்கைக்கு எதிரான வன்முறையாகவும்தான் இந்த பொய் செய்தி சட்ட மசோதா இருக்கிறது. இது நாட்டும் சமூகத்துக்கும் நல்லது அல்ல.
28. உலகின் அனைத்து மாற்றங்களும் கருத்து சுதந்திரன் மூலமே ஏற்பட்டது. அதே போல் எந்த அரசு, மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்பட்டதோ, அந்த அரசுகள் எல்லாம் வீழ்ந்து போனது. பிலிபைன்ஸின் மார்கோஸும் இந்தோனேசியாவின் சுகார்த்தோவும் நல்ல உதாரணம்.
29. கேள்விகள் கேட்க முடியாத, கருத்து பகிர்ந்து கொள்ளமுடியாத, ஞாயத்தை கேட்க முடியாத ஒரு அராஜக அரசு உருவாகிக் கொண்டிருக்கிறது. மக்களை அடக்கியாளும் முறை கையாளப்படுகிறது. இது நல்ல தொடக்கம் கிடையாது. எந்த அரசு மக்கள் விரோத போக்கை கையாளுகிறதோ; அது அந்த அரசின் அழிவிற்கே இட்டு செல்லும் என்பதே உலகம் நீதி.
30. இந்த சட்டம் கொண்டு வரப்படுதன் மூலம், மக்கள் பேசுவதற்கு தடை செய்யப்படுகிறது, உண்மையை வெளிப்படுத்துவதற்கு தடை செய்யப்படுகிறது. மக்களின் கருத்து சுதந்திரம் தடை செய்யப்படுகிறது. இது பொய் செய்தி தடை சட்டம் கிடையாது; உண்மைக்கு வேட்டு வைக்கும் சட்டம்.
31. இந்த சட்டம் கொண்டு வருவதன் மூலம், எது Fake News/ Berita Palsu என்று நஜிப்பும் அவரின் சகாக்களும் உறுதி செய்வார்கள். அதை பேசுவதற்கோ எழுதுவதற்கோ தடை செய்யப்படும். அதையும் மீறி அதை பேசினாலோ எழுதினாலோ சட்டம் உங்கள் நம் மீது பாயும்.
32. புகழ்பெற்ற எம்.ஆர்.ராதாவின் வசனம் ஒன்று உண்டு. ‘இந்த நாடும்; நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்’. அதைவிட மகாகவியின் பாட்டு ஒன்று உள்ளது. ‘பேய்கள் அரசாண்ட்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்று.

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews