கங்காரு தீவும் போலிசும்
1. மலேசிய போலிஸ் சிஐடி இயக்குனர் வான் அகமாட் நஜிமுடின் அஸ்திரிலியா வங்கி கணக்கில் 9 லட்சம் ரிங்கிட் டிபோசிட் செய்ததன் பேரில் அஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அனைத்து பத்திரிக்கையிலும் செய்தியாக வந்தது எல்லோரும் அறிந்த ஒன்று. நான் படித்து தெரிந்துக் கொண்டதை மிக சுருக்கமாக;
2. 2011-ஆம் ஆண்டு சிட்னி நகரில் உள்ள ஹைபர்மார்கெட்டில் உள்ள காமன்வெல்த் வங்கியின் கிளையில் சிஐடி இயக்குனர் வான் நஜிமிடின் வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வான் நஜிமுடின் அஸ்திரிலியா சென்றுள்ளார். அங்கி அங்கு போன அடுத்த சில தினங்களில் அமெரிக்க டாலர் 30,000 அவர் வங்கி கணக்கில், ஆஸ்திரிலியாவின் பல்வேறு(Maryland, Ryde, Strahfield,Burwood) இடங்களிலிருந்து டிபோசிட் செய்யப்பட்டுள்ளது.
3. அதே காலகட்டத்தில் 8000 அமெரிக்க டாலர்கள் பணத்தை தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்துள்ளார். தன் மகனின் விமானத்துறை(Aviation Studies) படிப்புக்காக அந்த பணத்தை போட்டு எடுத்ததாக கணக்கு காட்டியுள்ளார்.
4. அதன் பிறகு 2016-ஆம் ஆண்டு வரை அந்த வங்கி கணக்கு செயல்படாமல் அப்படியே இருந்துள்ளது. செப்டம்பர் 2016-ஆம் ஆண்டு வான் நஜிமுடின் மீண்டும் அஸ்திரிலியா சென்றுள்ளார். இந்த முறை அவர் வங்கி கணக்கில் இரண்டு லட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஐந்து வெவ்வேறு இடங்களிலிருந்து டிபோசிட் செய்யப்பட்டுள்ளது.
5. ஒரு மாதத்தில் மொத்தம் மூன்று லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிபோசிட் செய்யப்பட்டிருக்கிறது. இது இன்றைய மலேசிய ரிங்கிட் மதிப்பின்படி சுமார் 1 மில்லியன் (USD 320,000= RM1,248,000)
6. அதே 2016-ஆம் ஆண்டு அஸ்திரிலியா அரசாங்கம் வான் நஜிமுடின் வங்கி கணக்கை முடக்கி உள்ளது. அவர் அந்த பணத்தை (சுமார் ஒரு மில்லியன் மலேசிய ரிங்கிட்) மீட்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை. அந்த பணத்தை மீட்பதற்கு அதிக செல்வாகும் என்பதால் பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென நஜிமுடின் தரப்பிலிருந்து காரணம் கூறப்பட்டது.
7. வான் நஜிமுடின் மகள் அஸ்திரிலியாவில் மாஸ்டர் படிப்பு படித்து வருவதாகவும், அவரின் படிப்புக்கு அந்த பணம் இந்திய பிரஜை சீனிசிராஜுடின் முகமட் மூலமாக அஸ்திரிலியாவுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
8. 2018 மார்ச் மாதாம்(கடந்த வாரம்) Sydney Morning Herald பத்திரிக்கை; வான் நஜிமுடின் அந்த பணத்தை(USD 320,000); சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் பணத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என செய்தி வெளியிட்டது. இங்கே பத்திக் கொண்டது.
9. அந்த பணபரிவர்த்தனையில் வான் நஜிமுடின் எந்த தவறும் இழைக்கவில்லை என்றும்; அவர் எந்த தப்பும் செய்யவில்லை என மலேசிய போலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. 2016-ஆண்டே இது குறித்து மலேசிய போலிஸ் விசாரணை செய்து நஜிமுடின் குற்றமற்றவர் என நிருப்பிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் படை தலைவர் கூறினார்.
10. சா ஆலாமில் உள்ள தன் வீட்டை விற்றதன் மூலம் 700,000(ஏழு லட்சம்) பெற்றதாகவும், அந்த பணத்தைதான் நஜிமுடின் அஸ்திரிலியாவுக்கு; தன் மகளின் படிப்புக்காக கொண்டு சென்றார் என்றும், மேலும் மலேசிய அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
11. வரும் பொது தேர்தலில் பாரிசான் அரசாங்கம் தோல்வி அடைந்தால்; யார் யார் எல்லாம் உள்ளே போவர்கள் என்று தெரியவில்லை.
0 Comments