Monday, 2 April 2018

தமிழ்ப்பள்ளிகளும் லொடுக்கு பாண்டிகளும்

1. நான் எழுதும் கட்டுரைகளில் அதிகமான எழுத்து பிழைகளும், வாக்கிய பிழைகளும் இருப்பதாகவும்; அதே சமயத்தில் பிறமொழி வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்துவதாகவும் நமது நல்ல நண்பர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். முடிந்தவரையில் சரி செய்யப்பார்க்கிறேன். முடியாத பட்சத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மன்னிச்சு.
2. மகாதீர் காலத்தில் தமிழ்ப்பள்ளிகள் அழிந்து போய் விட்டதாகவும்; தமிழ்ப்பள்ளிகள் அழிவிற்கு மகாதீர்தான் காரணம் என்று, ஒட்டு மொத்த பழியையும் தூக்கி மகாதீர் மீது மிக நாசுக்காக போடுகிறார்கள். உண்மையில் மகாதீர் காலத்தில்தான் தமிழ்கல்வியும் தமிழிப்பள்ளிகளும் நிலை நிறுத்தப்பட்டன. உணர்சிகளுக்கு அடிமையாகமல் இந்த கட்டுரையை பொறுமையாக படித்து பார்க்கவும்.
3. 1957-ஆம் ஆண்டு நம் நாட்டில் மொத்த தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 888. இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்தி. மகாதீர் பிரதமர் பதவி ஏற்ற 1981-ஆம் ஆண்டில் நம் நாட்டின் மொத்த தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 583. அதாவது மகாதீர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பே 305 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டது.
4. மகாதீர் பதவிக்கு வந்தபோது 583 தமிழ்ப்பள்ளிகளும் பதவிவிட்டு விலகியபோது 524 தமிழ்ப்பள்ளிகளும் இருந்தன. மகாதீர் பிரதமராக இருந்த போது 59 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் இந்த 59 தமிழ்ப்பள்ளிகளும் மாணவர்கள் பற்றாகுறையினால் மட்டுமே மூடப்பட்டது. வேறு காரணங்கள் கிடையாது.
5. மகாதீர் கல்வி அமைச்சராக பதவியேற்ற 1974-ஆம் ஆண்டில் 618 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அவர் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய 1977-ஆம் ஆண்டில் 606 தமிழ்ப்பள்ளிகள் இருந்தது. 12 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டது. இதற்கும் மாணவர்கள் பற்றாகுறையே காரணம்.
6. மகாதீர் ஆட்சி காலத்தில் 59 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டது மிக பெரிய வீழ்ச்சியாக எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். இதனால் மகாதீர் தமிழ்ப்பள்ளிகளின் விரோதியாக காண்பிக்கப்படுகிறார்.
7. ஆனால் மகாதீர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 305 தமிழ்ப்பள்ளிகள் 24 ஆண்டுகளில் மூடப்பட்டது. மகாதீர் ஆட்சி காலத்தில் 22 ஆண்டுகளில் 69 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டது. எது வீழ்ச்சி?
8. மகாதீர் பிரதமர் பதவிக்கு(1981) வந்தபோது மொத்த தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கை 73,513. அவர் பதவி விலகிய 2003-ஆம் ஆண்டில் மொத்த தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 104,913-ஆக உயர்ந்தது. இது மிகப்பெரிய சாதனை. மகாதீர் காலத்தில்தான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் படித்தனர். அவருடைய ஆட்சிகாலத்தில் 31-ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் அதிகரித்தனர். இந்த சாதனையை இப்போது வரை யாரும் வெளியில் சொல்வது இல்லை.
9. 1987-ஆம் ஆண்டுகளில் தமிழ் எழுத்து சீர்த்திருத்தம் கொண்டு வர வேண்டும் என ஆறாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட மகாதீர், கெபினேட் மீட்டிங்கில் விவாதித்து, பார்லிமெண்டுக்கு கொண்டு சென்றால். அனைத்து தமிழ்மொழி பாடபுத்தகங்களையும்(ஒன்றாம் வகுப்பு முதல் படிவம் ஐந்து வரை) புது பிரிண்ட் செய்துக் கொடுத்தார். அதற்காக தனி நிதியும் ஒதுக்கி கொடுத்தார்.
10. ஆதிகுமணன், தமிழ் இளைஞர் மணிமன்றம் இன்னும் பல தமிழ் ஆர்வலர்களும் மிக கடுமையாக இந்த தமிழ் சீர்த்திருத்தை எதிர்த்தபோதிலும்; மகாதீர் அரசு ஆணையாக அறிவித்தார். 16 தமிழ் எழுத்து சீர்திருத்தங்களை அரசு அணையாக அறிவித்த உலகின் முதல் நாடாகவும் மலேசியா திகழ்கிறது. பிற்பாடுதான் தமிழ் நாட்டில் இந்த எழுத்து அமலுக்கு வந்தது. இன்று உலகம் முழுவதும் அமலில் உள்ளது. இந்த பெருமையும் மகாதீரைத்தான் சேரும்.
11. 1987-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்மொழி பாடத்திற்கென்று முறையான ஒரு பாடத்திட்டம் இடைநிலைப்பள்ளிகளில் கிடையாது. 1987-ஆம் ஆண்டு KBSM வழி தமிழுக்கு 4 நன்மைகள் வந்து சேர்ந்தது. அவை: 1. முறையான பாடத்திட்டம். 2. பாடத்திடா விளக்கவுரை(HSP-Huraian Sukatan Pelajaran). 3. ஒரே பாடநூல் முறை. 4. ஆசிரியர்களுக்கு பயிற்சி.
12. என்ன தமிழ் இலக்கியம் பாடம், பாடத்திட்டதிற்கு வெளியே உள்ள பாடமாக(Mata Pelajaran di luar Kurikulam) வகைப்படுத்தப்பட்டது. இதற்கு வேறொரு காரணம் இருந்தது. தேசிய அளவில் தமிழ் இலக்கிய பரிட்ச்சை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும்; தேர்ச்சிவிகிதம் மிக குறைந்த எண்ணிகையிலேயே இருந்தது.
13. 1981-ஆம் ஆண்டு மொத்த தமிழ்ப்பள்ளிகளின் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை 4400(பொதுவான கணக்கெடுப்பு) மட்டுமே. 2003-ஆம் ஆண்டில் மொத்த தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களின் எண்ணிக்கை 9,100(பொதுவான கணக்கெடுப்பு). மகாதீர் ஆட்சி காலத்தில் சுமார் ஐயாயிரம் தமிழாசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளில் அதிகரித்துள்ளனர். மகாதீர் காலத்தில்தான் அதிகமான தமிழாசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கும் இடைநிலைப்பள்ளிகளுக்கும் நியமிக்கப்பட்டனர்.
14. 1996-ஆம் ஆண்டு புதிய கல்வி சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் மிக முக்கியமானவை பள்ளி மேலாளர் வாரியம்(Lembaga Pengelola Sekolah) சுருக்கமாக LPS. ம்லாய் பள்ளிகள் முழு உதவி பெறும் அரசாங்க பள்ளிகளாக இருந்தன.
15. சீனர்கள் 1968-ஆம் ஆண்டு தொடங்கி School Board என்ற ஒன்றை அனைத்து சீனப்பள்ளிகளிலும் நிறுவி; செயல்பட தொடங்கினர். இது மிகவும் சுவரசியமான வரலாற்று சம்பவம். தனி நீண்ட கட்டுரையாக எழுதக்கூடிய டிராக் இது.
16. தமிழ்ப்பள்ளிகளும் சபா,சராவாக் தாய்மொழி பள்ளிகளும் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமலும்; அப்படியே ஒதுக்கப்படும் நிதிகளை சரியாக செயல்படுத்த தெரியாத; முறையான நிர்வாக குழு இல்லாமல் சிக்கிக் கொண்டது.
17. தமிழ்ப்பள்ளிகளில் சிறந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தால் அரசியவாதிகள் புகழ் தேடும் இடமாகவும்; தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கு தேவைகளை முறையாக கேட்டு பெறுவதில் சிக்கல் இருந்தது. இதனால் மாஇகா தமிழ்ப்பள்ளிகளை வைத்து சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்.
18. இதை உணர்ந்த மகாதீர் 1996-ஆம் 500,501,502 என்கிற சட்ட விதியை உறுவாக்கினார். இந்த சட்டவிதிகளின் படி தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியம் அமைக்கவேண்டும். இதற்காக நிதிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.
19. வழக்கம் போல் மாஇகா கொடுத்த பணத்தை மிகமிகமிக நேர்மையாக செலவழித்து தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியம் அமைக்கும் முயற்சியை 2007-ஆம் ஆண்டு வரை. செய்து கொண்டிருந்தார்கள். மகாதீர் 2003-இல் பதவி விட்டு போனார். அது வரை 6 பள்ளிகளில் மட்டுமே பள்ளி வாரியம் அமைக்கப்பட்டிருந்தது.
20. இதுவரை சொல்லியது மகாதீர் காலத்தில் நடந்தவை. இனி நஜிப் காலத்திற்குள் வருவோம். அதாவது மலேசிய இந்தியர்களின் ஹீரோ நஜிப் காலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் குழறுபடிகளைப் பார்ப்போம்.
21. 2011 வரை மலேசிய முழுக்க மொத்த 9 பள்ளிகளில் மட்டுமே பள்ளி வாரியம் இருந்தது. அதில் ஐந்து தமிழ்ப்பள்ளிகள் தனியாருக்கு சொந்தமானது. 2011-க்கு பிறகு தமிழ் அறவாரியம் களத்தில் இறங்கியது. தன் சொந்த பணத்தில்; தனி அதிகாரியை நியமித்து மலேசிய முழுக்க அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் பள்ளி வாரியம் அமைக்கும் முயற்சியை தொடங்கினர்.
22. தமிழ் அறவாரியத்தின் தனி முயற்சியாலும்; தன்னலம் இல்லாத உழைப்பினாலும் மூன்று ஆண்டுகளில் 494 பள்ளிகளில் யாருடைய உதவியும் இல்லாமல் பள்ளி வாரியத்தை அமைத்தனர். மாஇகா செய்ய வேண்டிய வேலையை தமிழ் அறவாரியம் செய்தது.
23. இதனால் தமிழ்ப்பள்ளிகளுக்கு வரவேண்டிய நிதிகள் நேரடியாக அப்பள்ளிகளுக்கு வந்து சேர்ந்தது. தமிழ்ப்பள்ளிகளை வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மரண அடி விழுந்தது. மாஇகாவுக்கு மூக்கு வேர்த்தது. யாரை கேட்டு தமிழ் அறவாரியம் தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியம் அமைக்கிறார்கள் என்று கர்ஜித்த கமலநாதன் அதோடு நிறுத்திக் கொள்ளாமல்; அனைத்து தமிழ்ப்பள்ளி வாரியத்துக்கும் மாஇகா-காரர்கள்தான் தலைவராக வர வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு நெறுக்குதல் கொடுத்தார்.
24. இந்த காலகட்டத்தில் தான் PTST-யோடு என் எஸ் ராஜேந்திரன் உள்ளே வந்தார். இவருடைய சாதனைகளை இந்த ஒரு கட்டுரையில் சொல்லிவிட முடியாது. பொன்னியின் செல்வன் புத்தகத்துக்கு சமமாக எழுதக்கூடியவை. நான் லைட்டாக சொல்லிவிட்டு போய் விடுகிறேன்.
25. Pelan Tindakan Masa Depan Sekolah-Sekolah Tamil-இதுதான் PTST-யின் முழுப்பொருள். இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு புரிந்திருக்கும். பிரதமர் துறையின் கீழ் செயல்படும் அரசாங்க அமைப்பு(Government Body). என் எஸ் ராஜேந்திரன் இயக்குனர். இயக்குனர் என்பதை விட இவரை அமைச்சர் என்றுதான் சொல்லவேண்டும். அசத்தலான மாலையும் புகழ்ச்சியும் இவரை கர்வத்தின் உச்சிக்கு கொண்டுபோய் வைத்திருக்கிறது.
26. PTST-க்கு Vision, Mission, Objectives எல்லாம் இருக்கிறது. இது குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள tamilschooledu.org.my/profile.html போய் பார்த்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
27. தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு PTST-யின் மூலம் ஆண்டுக்கு 200 மில்லியன் ஒதுக்கியிருப்பதாகவும்/ 300 மில்லியன் ஒதுக்கியிருப்பதாகவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறார். ஆனால் இப்போது வரை எத்துனை மில்லியன் PTST-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. வெளிப்படையான எந்த ஒரு கணக்கும் காட்டியதில்லை.
28. PTST ஆரம்பித்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் தமிழ்ப்பள்ளிகளில் எந்த வளர்ச்சியும் இல்லை. அப்படியே சில பள்ளிகளில் ஏற்படுட்ட வளர்ச்சி, மேம்பாடு அந்தந்த பள்ளியின் வாரியமே செய்தது.
29. நஜிப் காலத்தில் 527 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாக கணக்கு கொடுக்கிறார்கள். ஆனால் இயங்கிக் கொண்டிருப்பது 523 தமிழ்ப்பள்ளிகள்தான். நஜிப் காலத்தில் PTST -யின் இரண்டு புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அப்பட்டமான பொய்.
30. பாய பெசார் தமிழ்ப்பள்ளி, கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியாக படாவி காலத்தில் உருவாக்கப்பட்டத் திட்டம். இப்பள்ளியின் கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டது 2009-இல். அப்போது நஜிப் துணைபிரதமராக இருந்தார். இந்த பள்ளி கட்டுவதற்கு PTST-யில் இருந்து பணம் வரவில்லை.
31. அப்புறம் செண்டாயான் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி பதாங் பெனார் தமிழ்ப்பள்ளியின் கிரான். புதிய தமிழ்ப்பள்ளி கிடையாது. பத்தாங் பெனாரின் மாற்று தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி முழுக்க முழுக்க நில மேம்பாட்டாளர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டது. PTST ஒத்த காசு கொடுக்கவில்லை.
32. PTST ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இப்போது வரை கடந்த மூன்று வருடமாக இங்கே ஒரு புதிய தமிழ்ப்பள்ளி/ அங்கே ஒரு புதிய தமிழ்ப்பள்ளி கட்டிக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடிக்கல் நாட்டியாச்சு; தியாங் ஊணியாச்சு; கூறைப் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். ஒரே ஒரு தமிழ்ப்பள்ளிக்கூட புதிதாக வரவில்லை.
33. தற்போது நாட்டில் 527 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் இரண்டு தமிழ்பள்ளிகள் மூடப்பட்டு விட்டது. தைரியம் இருந்தால் இயங்கிக் கொண்டிருக்கும் மொத்த தமிழ்ப்பள்ளிகளின் பட்டியலை வெளியிட யாராவது முன் வருவார்களா?
34. மகாதீர் பதவி விட்டு போனபோது 524 தமிழ்ப்பள்ளிகள் இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது 523 தமிழ்ப்பள்ளிகள்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
35. PTST-க்கு ஒதுக்கிய 200/300 மில்லியன் எங்கே போனது? உணமையிலே அப்படி ஒரு நிதியை ஒதுக்கி இருக்கிறார்களா? சும்மா நம்மை குஷிப்படுத்த அடித்துவிடுகிறார்களா? இந்த 200/300 மில்லியனை 523 பள்ளிகளுக்கு சமமாக பிரித்து கொடுத்தாலும்; ஒரு தமிழ்ப்பள்ளிக்கு சுமாராக ஐம்பதாயிரம் கிடைத்திருக்க வேண்டும்.
36. இன்று நாட்டில் பல தமிழ்ப்பள்ளிகள் மிகவும் சிறப்பாக செயல்ப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல சாதனைகள் செய்து வருகிறார்கள். இதற்கு நஜிப்பின் அரசாங்கமோ, பாரிசானோ, மாஇகாவோ, PTST-யோ கிடையாது.
37. இன்று நாட்டில் பல தமிழ்ப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு மூல காரணம் மகாதீர் ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி வாரியம்(LPS) சட்டமும் தமிழ் அறவாரியமும் மட்டுமே. தமிழ் அறவாரியத்தின் முயற்சியும்,உழைப்பும் இன்றி இன்று தமிழ்ப்பள்ளிகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்க முடியாது. இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள்; தொடர்ந்து கத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஓட்டு பொறுக்கிகள்.
38. PTST என்பது செடிக் போன்று தேர்தலுக்கு உருவாக்கிய அலங்கார பொருள். சமூதாயத்துக்கும் தம்ழிப்பள்ளிகளுக்கும் எந்த பயனும் கிடையாது.

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews