Monday, 2 April 2018

24-ஆம் புலிகேசியும் கேவியேஸ்-சும்


1. பாரிசான் உறுப்பு கட்சிகளில் பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சி ஒரு அங்கத்துவம். பிபிபி கட்சி வளர்ந்ததற்கும் இன்று பாரிசானில் முக்கிய உறுப்பு கட்சியாக இருப்பதற்கும் கேவியேஸ் மிக முக்கிய காரணம்.
2. தொடக்கக் காலத்தில் பிபிபி கட்சி பேராக் மாநிலத்தில் பலம் பொறுந்திய கட்சியாக உலா வந்தது. அதுவும் உள்ளாட்சி அதிகாரத்திலும்; உள்ளாட்சி தேர்தலிலும் ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு சக்தி மிக்க கட்சியாக இருந்தது. ஆகவே பாரிசான் பிபிபி கட்சியை தங்களோடு இணைத்துக் கொண்டது. பிபிபி கட்சியும் பாரிசானின் உறுப்பு கட்சி என்கிற அந்தஸ்த்தில் உயர்ந்தது. இதன் பிறகு புகழ் மங்கவும் ஆரம்பித்தது. இது தனிக்கதை.
3. சீனர்களை அதிகமாக கொண்ட பிபிபி கட்சி, இந்தியர்களின் அதிகாரத்தில் இருந்தது. மிக குறைந்த சதவிகிதத்தில் மலாய்காரர்கள் பிபிபி-யில் அங்கம் பெற்றிருந்தனர். சீனிவாசகம் பிரதர்ஸ் என்கிற பிரபலமான அடைமொழியோடு சீனிவாசகம் சகோதர்கள் பிபிபி கட்சியின் தலைமைத்துவத்தை தங்கள் கட்டுக் கோப்பில் வைத்திருந்தார்கள்.
4. 1978-களுக்கு பிறகு பிபிபி கட்சியின் புகழ் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. அப்படியே செயலற்றும் போனது. இரண்டு சீனர்கள், ஒரு இந்தியர், ஒரு வங்காளி என நான்கு ஐந்து பேர்கள், மீண்டும் மீண்டும் பல்வேறு சதிகளில் அவர்களுக்குள்ளேயே தலைவர் பதவியை மாற்றிக் கொண்டார்கள். (விக்கிபிடியாவை தட்டிப் பார்த்தால் இந்த கூத்து ஓரளவுக்கு புரியும்)
5. இந்த மாதிரி ஓடிக் கொண்டிருந்த 1994-ஆண்டு காலகட்டத்தில் சுப்ரமணியம்(KVS) வந்தார். KVS – Kathi Vello Subaramaniam – இப்படிதான் ஆரம்பத்தில் சொன்னார்கள். ஆனால் கேவியேஸின் இனிஷியல் M. இப்போது வரைக்கும் KVS-க்கு என்ன அர்த்தம் என்று யாரிடம் கேட்டாலும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. KVS-தான் Keviyeas-கேவியேஸ் ஆனார்.
6. ரகசிய பேச்சுவார்த்தையின் மூலம் மறைமுக டீலிங் செய்து(வடிவேலுவுக்கு பேக்கரி கிடைத்த கதைப் போல) பிபிபி தலைவராக கேவியேஸ் என்கிற சுப்ரமணியம் நியமனம் செய்யப்பட்டார்.
7. அன்று முதல் இன்று வரை தலைவர் பதவிக்கு அந்த கட்சியில் போட்டி என்பதே கிடையாது. அது ஒரு பாத்திர படைப்பு வழி உருவாக்கப்பட்ட மன்னர் வழி ராஜாங்கம். தலைவருக்கு எதிராக குரலை உயர்த்தினார்; கட்சியில் யாரும் இருக்க முடியாது.
8. 1996-ஆம் ஆண்டுகளில் கேவியேஸ் மிக அசுரதனமாக வேலை செய்தார். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கட்சியை பலப்படுத்தும் வேலையை பார்த்தார். எத்துனை மில்லியன் செலவு செய்தார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு ஊரிலும் பிபிபி கட்சியின் கிளையை ஆரம்பித்தார். கட்சியின் உறுப்பினர்களை அதிகரித்தார். திரும்பிய இந்தியர் பக்கம் எல்லாம் பிபிபி கட்சியின் கொடியையும் சின்னத்தையும் பார்க்கலாம். ஒரே ஆண்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்தார். பிபிபி கட்சியில் பெருமளவில் இந்தியர்கள் இணைந்ததற்கு மாஇகா மேல் இருந்த வெறுப்பும் ஒரு முக்கிய காரணம்.
9. இது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இந்தியர்களிடையே பிபிபி கட்சி பலம் பொறுந்திய கட்சியாக உருவானது. பாரிசானில் முன் நாற்காலியில் கொண்டு வந்து உட்கார வைக்கப்பட்டார் கேவியேஸ். பிபிபி கட்சி, மாஇகா-வையும் மிஞ்சி மேலே போய் நின்றது. 1997,.1998-ஆம் ஆண்டுகளில் பிபிபி இந்தியர்களின் செல்வாக்கு பெற்ற கட்சியாக வளர்ந்து நின்றது.
10. இந்த சமயத்தில் சாமிவேலுவுக்கும் கேவியேஸ்-க்கும் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது. மாஇகாவுக்கு சொந்தமான வெண்டோ கல்லூரியில் சட்டம் படித்தற்கான பணத்தை(Fees) இன்னும் கட்டாமல் கேவியேஸ் இருக்கிறார்; படித்த காசை முதலில் கட்டு பிறகு மாஇகாவை குறை சொல் என்றார் சாமிவேலு. கேவியேஸ் மொத்த தொகையையும்(ரெண்டாயிரமோ மூவாயிரமோ, மறந்து போய் விட்டது. யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்) ஒரே செக்கில் போட்டுக் கொடுத்தார். இது எல்லாம் தனிக் கதை.
11. கேவியேஸ் தலைமையில் பிபிபி கட்சி பலம் பொருந்திய கட்சியாக உருவானதற்கு மகாதீரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
12. பண்டிதன் சாமிவேலுவோடு முறுக்கிக் கொண்டு போய் தனி கட்சி தொடங்கினார். ரசாலி அம்சாவோடு இணைந்துக் கொண்டு மாஇகா வேட்பாளர்களுக்கு எதிராக ஐபிஎப் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி தோற்றும் போனார். ஆனால் அந்த காலகட்டத்தில் மாஇகாவிற்கு இணையாக ஐபிஎப் உறுவெடுத்தது. மாஇகாவிற்கு மாற்று கட்சியாக இருந்தது.
13. ஆனால் காலபோக்கில் அது தன் சுய பெருமையை இழந்து, ஜாதி கட்சியாக மாறி, சரியான தலைமைத்துவம் இல்லாமல், மனைவி கையில் போய் மாட்டி, உள்குத்து நடந்து, மீண்டும் செனட்டர் வாங்குவதற்கு பட்டபாடு என நீண்ட கட்டுரை எழுதுவதற்கு அவ்ளோ சம்பங்கள் உண்டு. வேறொரு சந்தர்ப்பத்தில் அதை குறித்து எழுதலாம்.
14. மாஇகாவுக்கு போட்டியாக எந்த கட்சியும் உருவாக முடியாத நிலையே தொடர்ந்து நீடித்து வந்தது. டாக்டர் வி டேவிட்-டும் பட்டும் இருந்த போது மாஇவாவுக்கு ஒரு பெரும்சவாலாக இருந்தார்கள். அந்த காலகட்டத்தில் இந்தியர்கள் பெரும்பாலும் ராக்கெட் கட்சிக்குதான் ஆதரவு கொடுப்பார்கள். அவர்கள் காலத்துக்கு பிறகு டிஏபி(DAP), மாசீச(MCA) கட்சிக்கு போட்டியாக மாறியதே தவிர மாஇகாவுக்கு போட்டியாக இல்லை.
15. ஆளும்கட்சி எதிர்கட்சி இரண்டிலுமே மாஇகாவுக்கு போட்டி இல்லை என்கிற சூழல்தான் இங்கு இருந்தது. ஆடாத ஆட்டம் இல்லை. மலிவுவிலை வீடுகள் முதல் வாத்தியார் வேலைகள் வரை, ஷேர்களை திருடுவது முதல் டேப்-புகள் புரொடியூஸ் செய்வது வரை மாஇகாவை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. கொட்டம் அடித்தார்கள். மொத்த எலுகேஷனையும் ஒத்தையாக அனுபவித்தார்கள்.
16. பண்டிதன் மேட்டர் சமயத்தில் ஒரு முறையும், பழைய சுப்ரமணியம்(விஸ்கி மணியம்) மேட்டர் சமயத்தில் ஒரு முறையும் சாமிவேலுக்கும் மகாதீருக்கும் மாட்டியது. சாமிவேலுவை மீறியும் பழைய சுப்ரமணியத்துக்கு துணையமைச்சர் பதவிக் கொடுத்தார் மகாதீர். அதே போல் பண்டிதனுக்கு செனட்டர் பதவியும்(1995) கொடுத்தார்.
17. அதே சமயத்தில் தேசிய அரசியலிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. அன்வார் இப்ராஹிமை அம்னோவிலிருந்து தூக்கிய பிறகு, மலாய்காரர்களின் ஓட்டு பெருமளவில் உடைந்தது. அம்னோவிலிருந்து மட்டும் அல்ல ஒட்டு மொத்த பாரிசானிலிருந்தும் பெரிய பெரிய தலைகள் கெடிலான் கட்சியில் போய் சேர்ந்தார்கள்.
18. 1999-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் உடைந்த மலாய் ஓட்டுக்களை சரி செய்ய அப்போதைக்கு கேவியேஸ்,மகாதீருக்கு பெரும் உதவியாக இருந்தார். இந்த நன்றி கடனுக்காக கேவியேஸ் செனட்டர் ஆக்கப்பட்டு துணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
19. 1995-ஆம் ஆண்டு பிபிபி தேசிய மாநாட்டை துன் மகாதீர் தொடக்கி வைத்து, கட்சியின் புதிய சின்னத்தையும் வெளியிட்டார். அந்த மாநாட்டில் துன் மகாதீருக்கு மிக பெரிய சிறப்பு செய்யப்பட்டு மகாதீரை புகழ்ந்து பேசினார் கேவியேஸ். அவருடன் அவருடைய சிஷ்யர்களும்(கட்சி தொண்டர்கள்).
20. 1995-ஆம் ஆண்டு தொடங்கி கேவியேஸ் மகாதீரை புகழ்ந்தும், கொடி பிடித்தும் அரசியலில் உயர்ந்தார். செனட்டர் வாங்கினார். துணையமைச்சர் பதவி வாங்கினார். பணத்தையும் சேர்ந்த்துக் கொண்டார். இன்று கேவியேஸின் மனைவி பின்லாந்து நாட்டிற்கான மலேசிய தூதராக இருக்கிறார்.
21. மகாதீர் இந்திய சமூகத்தின் காவலன் என்றார் கேவியேஸ். மகாதீர் போன்ற தலைவர் இனி கிடைக்க மாட்டார் என்றார். இப்படி ஒரு பிரதமர் கிடைத்தற்கு நாம் புண்ணியம் செய்துள்ளோம் என்றார். கேவியேஸ் மட்டும் அல்ல. கேவியேஸ் சிஷ்யர்களும்.
22. பிளாஷ்பேக் முடிந்தது. இன்று 2018-ஆம் ஆண்டில்; மகாதீர் போன்ற அயோக்கினை நல்லவன் என்று சொல்லும் இந்திய சமூதாயம் ஒரு முட்டாள் சமூதாயம் என்கிறார்கள் இதே கேவியேஸும் அவரின் சிஷ்யப்பிள்ளைகளும்.
23. அன்று இந்திய சமூதாயம் மகாதீரை எதிர்த்தது. நீங்கள் ஆதரித்தீர்கள். இன்று இந்திய சமூகம் மகாதீரை ஆதரிக்கிறது. நீங்கள் எதிர்கிறீர்கள். உலகம் வட்டம் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது.
24. நீங்கள் மகாதீரை நல்லவர் என்று சொன்னால் நாங்கள் தலையாட்ட வேண்டும். அதே மகாதீரை நீங்கள் கெட்டவர் என்றால் நாங்கள் அதற்கும் தலையாட்ட வேண்டுமா? உங்கள் திருட்டுதனத்துக்காக, பணத்தை கொள்ளை அடிப்பதற்கும் நஜிப்பை ஆதரிக்கலாம். நஜிப்பே உங்கள் தெய்வமாக இருக்கலாம். மக்களுக்கு என்ன அவசியம்?
25. பிபிபி கட்சிக்கு ஏறத்தாள 25 ஏக்கர் நிலம் மேம்பாட்டளர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் இந்திய சமூகத்துக்காக கல்லூரி ஒன்று ஈப்போவில் கட்டபோவதாக வதந்தி ஒன்று உலாவியது. அந்த கல்லூரியின் கணக்கு யாருக்காவது தெரியுமா? கல்லூரி கட்டினார்களா? யாருக்கும் தெரியுமா?
26. தமிழ் மொழி பற்றும் தமிழின உணர்வும் அவர்கள் வளர்க்கும் குழந்தையை பார்த்தால் தெரிந்து விடும். வெளியில் தமிழின உணர்வையும் தமிழ்மொழி மீது உயிராக இருப்பது போல் நடிப்பார்கள். நிஜத்தில் இவர்களின் குழந்தைகளுக்கு தமிழில் பேசவும் தெரியாது; தமிழன் என்கிற அடையாளமும் இருக்காது. இப்படித்தான் நாட்டின் நிறைய தமிழ் எழுத்தாளர்கள், அரசியவாதிகளின் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
27. கேவியேஸ்க்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் பெயரிலேயே தமிழின் அடையாளத்தை தொலைத்துவிட்டார்.
28. பிபிபி என்பது ஒரு செண்டிரியான் பெர்ஹாட் கம்பனி. அதன் உரிமையாளருக்கும் பங்குதாரர்களுக்கும் மட்டுமே அதனால் ஆதாயம். மக்கள் வழக்கம் போல் கவர்ச்சியில் கேவியேஸோடும் பிபிபி கட்சியோடும் செல்ஃபி அல்லது வைஃபி எடுத்துக் கொள்ளலாம். கிளாமராக.

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews