கேம்ப்ரிட்ஜ் அனாலிடிக்கா
1. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா(Cambridge Analytica) என்கிற பெயரை சமீபகாலமாக நீங்கள் பல்வேறு தளங்களில், இடங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள். நமது நாட்டில் சில அரசியல் தலைவர்களும் இந்த பெயரை உச்சரித்து கேட்டிருப்பீர்கள்.
2. 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை முறையற்ற முறையில் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தி லண்டன் போலிசார்; சில நாட்களுக்கு முன், கம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் தலைமை அதிகாரியை லண்டன் போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.
3. அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் பயனிட்டாளர்கள்; தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பிரைவசி ஆப்ஷனை உபயோகித்து, தங்களின் தனிப்பட்ட அரசியல் சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அவர்களின் நண்பர்கள் பிரைவசி ஆப்ஷனை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பட்சத்தில், பிரைவசி ஆப்ஷனை பயன்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருந்த தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா திருடியுள்ளது. இவ்வாறு திருடப்படும் தகவல்கள் 'சைக்கோகிராபிக் மாடலிங் டெக்னிக்ஸ்' எனப்படும்.
4. இவ்வாறு திருடப்பட்ட 50 மில்லியன் மக்களின் தனிநபர் சார்ந்த அரசியல் தகவல்களை டொனால்டு ட்ரம்ப்-பின் அரசியல் பிரசாரத்தின்போது பயன்படுத்திக் கொண்டதாக பிரிட்டன் தொலைக்காட்சி சேனல் நியூஸ் 4 செய்தி வெளியிட்டது. இதனையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனத்தின் தலைமை அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
5. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்பது, லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்ப்பட்டு வரும் ஒரு தகவல் சேகரிப்பு நிறுவனம். பொலிட்டிக்கல் டேத்தா ஃபார்ம் நிறுவனம். Political Data Form நிறுவனம். ஸ்ட்ராடெஜிக் கம்யூனிகேஷன் லேபரடரீஸ் (Stratagic communication laborataries) SCL என்ற அமெரிக்க-பிரிட்டன் நிறுவனத்தின் துணை அமைப்புதான் கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா. இந்த ஏஜென்சியின் முக்கிய வர்த்தகமே உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் மாற்றங்கள் ஆட்சி மாற்றங்கள் நிகழ்வதற்கான வியூகங்கள், கொள்கைகளை வகுத்துத் தருவது, செயல்திட்டங்களை வடிவமைத்து அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கற்று தருவது.
6. அமெரிக்கா அதிபர் தேர்தல், கென்யா அதிபர் தேர்தல், ஐரோப்பிய ஒண்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா அல்லது வேண்டாமா என்கிற வாக்கெடுப்பு தேர்தல்களில் இந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் பங்காற்றி; தன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு முடிவுகளை மாற்றியமைப்பதில் முக்கிய பங்காற்றி உள்ளது.
7. 2016-இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கான பல்வேறு யுக்திகளை இந்த நிறுவனம் வகுத்துக் கொடுத்துள்ளது. அதே வேளையில் 2014-இல், இந்தியாவில் பாஜக வெற்றி பெறச் செய்வதற்காக பல கள்ள வேலைகளைச் செய்தது போல, ஐரோப்பாவில் செக் குடியரசு மற்றும் இத்தாலியிலும் ஒரு குறிப்பிட்ட கட்சி வெற்றி பெறவும் கள்ள வேலை பார்த்துள்ளது.
8. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா? வேண்டாமா? என்ற பொது வாக்கெடுப்பின் போது பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை அம்மக்கள் மத்தியில் விதைப்பதிலும் இந்த நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது.
9. கென்யா நாட்டு அதிபர் தேர்தலில் உஹுரு கென்யட்டா வெற்றிக்காக 2013 மற்றும் 2017ல் இந்நிறுவனம் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளது. ஆட்சி மாற்றங்களுக்கான அந்தரங்க செயல்பாடுகளில் ஏராளமான நாடுகளில் இந்த நிறுவனம் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.
10. உலகம் முழுவது பல நாடுகளின் தேர்தலின் போது கள்ளத்தனமாக செயல்ப்பட்டு, ஆட்சி மாற்றத்திற்கும், வெற்றி தோல்வியை நிர்ணியிப்பதிலும் முக்கிய பங்காற்றிய கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவின் ரகசியங்களை சேனல் 4 என்கிற டிவி நிறுவனம் கண்டிபிடித்து காட்டியுள்ளது.
11. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இந்த விவகாரம் மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
12. 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடி, தேர்தல் பிராச்சாரத்திற்கு பயன்ப்படுத்தி, தேர்தலின் வெற்றி தோல்வி முடிவுகளை மாற்றியமைத்ததை சேனல் 4 கண்டுபிடித்து சுட்டிகாட்டியதை அடுத்து, ஃபேஸ்புக்கின் அந்தரங்க தகவல்கள் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் ஃபேஸ்புக் நம்பகத்தன்மையை இழந்ததோடு, ஃபேஸ்புக்கின் பங்குகள் பலமடங்கு சரிந்துள்ளது.
13. இது தொடர்ப்பில் ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் பொதுவில் மன்னிப்பு கேட்டதோடு, ஃபேஸ்புக் பயனர்களின் அந்தரங்க தகவல்களை பாதுக்காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
14. நிற்க;
15. மார்க மன்னிப்பு கேட்டுக் கொண்டதாலும்; நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருப்பதாலும், இது யாருடைய மனநிலையையும் மாற்ற பேவதில்லை. யாரும் ஃபேஸ்புக் பயன்படுத்தாமலும் இருக்கப்போவதில்லை.
16. ஒரு பக்கம் ஃபேஸ்புக் மீது நடவடிக்கையும்; சிக்கல்களும் போய்க் கொண்டிருக்கும் வேளையில் நம்மவர்கள் யாரும் ஃபேஸ்புக்கின் பக்கம் வராமலும் இருக்கபோவதில்லை. வழக்கம் போலவே ஃபேஸ்புக் செல்ஃபியினாலும், கலர் கலர் போட்டோக்களினாலும் மினுமினுத்துக் கொண்டே இருக்கிறது. இது எதையும் மாற்றாது.
நீங்கள் எந்த நடிகர்/நடிகைகள் போன்று உள்ளீர்கள்? உங்கள் காதலன் காதலி யார்? பாகுபலி படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் என்ன? எந்த ரஜினி பட ஹீரோ நீங்கள்? போன்ற கவர்ச்சி கேளிக்கைகள் மூலம் துணை ஆப்ஸ்ககளை நீங்கள் உபயோகிக்கும் போது; உங்கள் ஃபேஸ்புக் அந்தரங்க தகவல்களை இது போன்ற நிறுவனங்கள் உங்களுக்கு தெரிந்தே திருடி வைத்துக் கொள்கிறது. இந்த தகவல்கள் பிறகு வேறு பல செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மறைத்து வைக்க ஏதும் கிடையாது. வெட்ட வெளியில் அம்மணமாக நிற்பதற்கு சமம்.
17. தொடர்க;
18. இது ஒருபுறம் இருக்க; இந்த ஃபேஸ்புக், சோசியல் மீடியாக்கள் ஒரு வெற்றி தோல்வியை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்டதா? சோசியல் மீடியாக்கள் பல வாய்ந்ததா? இது சாத்தியமா? என்று கேள்விகள் எழலாம். ஆம்! சோசியல் மீடியாக்கள் சக்தி வாய்ந்தவை என்பது நிருப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன காலத்தில் சோசியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தாக்கம் பல நிலைகளில் ஆக்கம் செய்கிறது.
19. உலகின் எங்கோ ஒரு மூலையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிருக்கும் ஒரு சாதரண மீனவர் வாட்சாப் பயன்படுத்துகிறார். உலு கிராமத்தின், கடைசி எல்லை ஓரத்தில் அமைந்திருக்கும் கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் ஃபேஸ்புக்கில் இருக்கிறார். யுடூப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லையற்ற 2G/3G/4G பயன்படுத்துகிறார்கள். இதுதான் எதார்த்தம்.
20. கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா போன்ற நிறுவனங்கள் எப்படி இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்?
21. இவர்கள் யாரை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ; அவர் தனிநபராகவோ, குழுவாகவோ, கட்சியாகவோ, அமைப்பாகவோ யாராக இருந்தாலும் அவர்களின் பலம் பலவீனம் பின்புலம் செல்வாக்கு உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் திரட்டுவதற்கும், தேவைப்பட்டால் அவர்களை பலவீனப்படுத்த, செல்வாக்கை இழக்கச் செய்ய தேவையான அனைத்து குறுக்கு வழிகளையும் பயன்படுத்துவார்கள்.
22.அதேபோல தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள வாடிக்கையாளர்களிடம் பேசியபடி அவர்களை வெற்றிபெறச் செய்வதற்காகவும் எல்லாவிதமான குறுக்கு வழிகளையும் பயன்படுத்தி வியூகம் அமைத்துச் செயல்படுவார்கள். இந்த நிறுவனம் தனது தொழிலில் வெற்றி பெறுவதற்கான தகவல்களை திரட்டுவதற்கான தளமாக தேர்ந்தெடுத்தது சோசியல் மீடியாக்களை.
23. சோசியல் மீடியாக்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பயனிட்டாளர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? அவர்கள் எந்த கட்சியை சார்ந்து உள்ளார்கள்? யாருக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிடுகிறார்கள்; அவர்கள் மனநிலை எப்படி உள்ளது? எந்த மாதிரியாக கருத்துக்களை வெளியிடுகிறார்? யார்யாரெல்லாம் அவர்களுக்கு லைக் போடுகிறார்கள்? காமெண்ட் செய்கிறார்கள்? அவர்கள் யார்? அவர்களின் ஆதரவு யாருக்கு? இப்படியான தகவல்களை சேகரித்துக் கொள்கிறார்கள்.
24. சேகரித்த தகவல்கள் மூலம் மக்களை கேட்டகிரி(category) வாரியாக பிரித்துக் கொண்டு ஆய்வுகள் செய்கிறார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில்; யாருக்கு ஆதரவு அதிகம் உள்ளது? இந்த ஆதரவு போதுமா? இல்லை இன்னும் அதிகரிக்க வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா? என்கிற கணக்கெடுக்கிறார்கள். அடுத்து, அவர்கள் யாருக்கு வேலை செய்கிறார்களோ, அவர்களுக்கு சில வியூகங்களை(strategy planning) வகுத்துக் கொடுக்கிறார்கள்.
25. வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தை நஜிப் நியமித்திருப்பதாக மகாதீர் குற்றம் சாட்டினார். 2013 தேர்தலின் போதும் பாரிசான் வெற்றி பெறுவதற்காக இந்த நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டதாக தகவல்கள் கசிய ஆரம்பித்தது.
26. இந்த குற்றசாட்டை நஜிப் மறுத்தார். https://www.channelnewsasia.com/…/malaysian-government-deni…
27. 2013-ஆம் ஆண்டு தேர்தலில் கெடாவில் வெற்றி பெறுவதற்கு முக்ரிஸ்தான் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தை நியமித்ததாக புத்ரா ஜெயா தெரிவித்தது. முக்ரிஸ் இதை மறுத்தார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் தென்கிழக்கு ஆசியாவின் பொறுப்பாளர் Azrin Zizal என்பவர், முக்ரிஸ் அனைத்துலக வாணிப துணையமைச்சாரக இருந்த போது, அவரின் பத்திரிக்கை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. http://www.themalaymailonline.com/…/putrajaya-cambridge-ana…
28. இதற்கிடையில் நஜிப்-பை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதற்கும்; பாரிசானுக்கும் நஜிப்புக்கும் எதிரான செய்திகளை பரப்புவதற்கும் பல பில்லியன் டாலர்களை மகாதீர் சோரோஸ்க்கு(George Soros) கொடுத்ததாக Central Intelligence Agency (CIA) பேச்சாளர் கடந்த 17 மார்ச் 2018-இல் சொன்னது பரபரப்பானது. https://www.thethirdforce.net/how-soros-turned-the-world-m…/
29. சோரோஸின் OSF நிறுவனம் ஏறத்தாள கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் போன்றது. விரிவாக படிக்க https://www.thethirdforce.net/how-soros-turned-the-world-m…/
30. இதனாலே நஜிப் மற்றும் 1MDB குறித்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ள பிரபல செய்தி இதழ்களில் தொடர்ந்து தலைப்பு செய்தியாக வந்துக் கொண்டிருக்கிறது.
31. தற்போது கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா மாட்டிக் கொண்டதன் நோக்கம்; அது மலேசியா தேர்தலில் பங்கு வகிக்காமல் இருப்பதற்குதான். அதன் பின்னணியில் சோரோஸ் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கும் பின்னால் மகாதீர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
32. நஜிப் தந்திரக்காரர் என்றால் மகாதீர் தந்திரகாரருக்கும் தந்திரக்காரர். பாரிசான் எதையாவது செய்தாவது வெற்றி பெற்றுவிடும் என்றால், மகாதீரும் எதையாவது செய்தாவது வெற்றி பெற்று விடுவார்.
33. இந்த தேர்தல் உண்மையில் மகாதீருக்கும் நஜிப்புக்கும் நடக்கும் துவந்த யுத்தம். மற்றவர்கள் எல்லாம் வெறும் பார்வையாளர்கள்தான். இந்த தேர்தலில் வெற்றி பெற பாரிசான் பலவற்றை அரங்கேற்றி வருகிறார்கள். தேர்தல் எல்லை மறுசீரமைப்பு, பொய் செய்தி, Undi Pos, இன்னும் பல. இவை எல்லாம் மகாதீர் கற்றுக் கொடுத்தது. நஜிப் தீட்டிய மரத்தில் கூர் பார்க்கிறார்.
34. நஜிப்க்கு இதை எல்லாம் செய்ய தெரியும் என்றால், மகாதீருக்கும் செய்ய தெரியும். இது நஜிப்புக்கும் தெரியும். அதை தடுக்க மகாதீருக்கும் தெரியும். நஜிப் சாகசகாரர் என்றால்; மகாதீர் மகா சாகசகாரர்.
0 Comments