வடக்குப்பட்டி ராமசாமியிடம் கடன் வசூலிக்க போகும் கவுண்டமணி
1. இரண்டு நாட்களுக்கு முன்னாடி ‘தமிழ்ப்பள்ளிகளும் லொடுக்கு பாண்டிகளும்’ என்கிற ஒரு கட்டுரையை முகநூலில் எழுதினேன். அதை நிரூபிக்கும் வகையாக இன்று காலையில் நமது நண்பர் ஒருவர் வாட்சாப்பில் இரண்டு படங்களை அனுப்பி வைத்து, கீழே யோசிப்பது போல் எமோஷன் போட்டிருந்தார். அந்த படத்தை கீழே பகிர்ந்துள்ளேன்.
2. இதை தொடர்ந்து படிப்பதற்கு முன்; மீண்டும் ஒரு முறை என் முந்தைய கட்டுரையை படித்து விட்டால் மிக சிறப்பாக இருக்கும்.
3. என் கட்டுரையில் உள்ள தகவல்கள் குறித்தும்; என் நண்பர் அனுப்பிய படத்தை குறித்தும் எனக்கு சில கேள்விகள் உண்டு.
4. தேவமணி அறிவிப்பது போல் கிரியேட் செய்திருக்கும் அந்த படம் எப்போது டிசைன் செய்யப்பட்டது? காரணம் இதுவரை 527 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாக பாரிசான் தலைவர்களும், மஇகாவும், PTST-யும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்தது. ஆனால் திடிரென்று தேவமணி 523 தமிழ்ப்பள்ளிகள் என்கிறார். 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் என்கிறார்.
5. தேவமணி கூறும் அந்த தகவல் தற்போதைய புதிய தகவல் என்றால்; நேற்றுவரை 527 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தது பொய் தகவலா? 523 தமிழ்ப்பள்ளிகளோடு 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் சேர்த்து 530 தமிழ்ப்பள்ளிகள் என அந்த படத்தில் தேவமணி கூறுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் அந்த தகவல் புதிய தகவலாகத்தான் இருக்க வேண்டும். காரணம் இதற்கு முன் 530 தமிழ்ப்பள்ளிகள் என்ற பேச்சு வரவில்லை. இது ரொம்பவும் புதுசு.
6. நம்முடைய கேள்விகள். அந்த 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் பெயர் என்ன? எங்கே அமைய போகிறது? புதிய தமிழ்ப்பள்ளியா அல்லது மாற்று இடத்தில் கட்டப்படும் பழைய தமிழ்ப்பள்ளியா? எந்த கிரான்?
7. தற்போது எத்துனை தமிழ்ப்பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது? சரியான ஆதாரத்தோடு தேவமணியும் மஇகாவும் நமக்கு தெரிவிப்பார்களா? பெயர் பட்டியலை வெளியிடுவார்களா?
8. 900 மில்லியன் என்கிறார்கள். முதலில் 900 மில்லியனுக்கு எத்துனை சுழியம் என்பது இவர்களுக்கு தெரியுமா? கடந்த மூன்று ஆண்டுகளில் 200/300 மில்லியன் தமிழ்ப்பள்ளிகலுக்கு ஒதுக்கி இருப்பதாக சொல்லபட்டது என்னவாயிற்று? அந்த பணம் உண்மையிலேயே தமிழ்ப்பள்ளிகளுக்கு வந்து சேர்ததா? பழைய மில்லியன்களுக்கு எந்த விளக்கமும் இல்லாத போது; புதிதாக 900 மில்லியனா?
9. இந்த 900 மில்லியன் தமிழ்ப்பள்ளிகளுக்கு எப்போது கிடைக்கும்? 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் எப்போது கட்டுவதற்கு ஆரம்பம் ஆகும்? அதை முதலில் சொல்லுங்கள்.
10. பக்காத்தா ஹராப்பானின் தேர்தல் அறிக்கை ஒரு வெற்று வாக்குறுதி என்று சொல்லும் நீங்கள் 900 மில்லியன் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கியிருப்பதாக சொல்வதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?
11. தேவமணி அறிவிப்பது போல் வெளியிடப்பட்டிருக்கும் அந்த படம்; பள்ளி இறுதி ஆண்டுகளில் நாம் பள்ளிகளில் ஜிகினா பூசி விளையாடிக் கொள்வது போல் உள்ளது. அட்டகாசமான மினுக்கிறது.
12. 900 மில்லியன் வருவதும், வந்து சேர்வதும் பிற்பாடு இருக்கட்டும். அந்த புதிய 7 தமிழ்ப்பள்ளிகள் எது என்று முதலில் சொல்லுங்கள். 523 தமிழ்ப்பள்ளிகளின் விபரங்களை அறிவியுங்கள். கடந்த மூன்றாண்டுகளில் ஒதுக்கிய மில்லியன்கள் என்ன ஆனது என்று மக்களுக்கு சொல்லுங்கள். காரணம் ஒன்றே ஒன்றுதான். வரும் தேர்தலில் நாங்கள்தான் ஓட்டு போட போகிறோம்.
0 Comments