தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக நடந்த சதிகள் #1
# நான் படிக்கும் காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக மிக பெரிய பொய் பிரச்சாரம் ஒன்று நடந்தது. அது Kelas Peralihan(புகுமுக வகுப்பு).
# தமிழ்ப்பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பினால் ஒரு வருடம் வீணாகும் என்பது அந்த காலகட்டத்தில் பரப்பப்பட்ட பொய் பிரச்சாரங்களில் ஒன்று. இதை காரணமாக சொல்லி பல மேல்தட்டு இந்திய மக்கள் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பினார்கள்.

# இதை காரணமாக கொண்டு; படித்த மேல்தட்டு இந்திய மக்களும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும்/தலைமையாசிரியர்களும் தங்கள் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் படித்தால் ஒரு வருடம் புகுமுக வகுப்புகாக வீணடிக்கப்பட வேண்டும். மலாய் பள்ளியில் படித்தால் நேரடியாக ஒன்றாம் வகுப்புக்கு போய்விடலாம். மலாய் பள்ளியில் படித்தால் 17 வயதில் எஸ்.பி.எம் எழுதிவிடலாம். 19 வயதில் எஸ்.டி.பி.எம் முடித்து 20 வயதில் காலேஜ் அல்லது யுனிவர்சிட்டி போய்விடலாம் என்று கவர்ச்சி காட்டி தமிழ்ப்பள்ளிக்கு எதிரான சதிகள் நடந்துக் கொண்டிருந்தது.
# தமிழ்ப்பள்ளியில் படித்தால் ஒரு வருடம் தேவை இல்லாமல் புகுமுக வகுப்பில் படிக்க வேண்டும். பிறகு 18 வயதில் எஸ்.பி.எம் எழுதி, 20 வயதில் எஸ்.டி.பி.எம் முடித்து யுனிவர்சிட்டி போய் டாக்டர் படிப்பு முடித்து வெளியே வர 26 வயது ஆகிவிடும் என்று சொல்லி தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக பலமான குற்றசாட்டு இருந்தது.

# சீன பள்ளி மாணவர்களும் புகுமுக வகுப்பில் பயின்றே ஆகவேண்டும். ஆனால் சீனர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தங்கள் பிள்ளைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஒரு வருடம் புகுமுக வகுப்பில் உட்கார்ந்தாலும் பராவாயில்லை என்று சீன பள்ளிக்குத்தான் அனுப்பினார்கள்.
# இன்றைக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள டி.எல்.பி-யும் அப்படித்தான். கவர்ச்சியைக் காட்டி; பொய் பிரச்சாரம் செய்து தமிழ்ப்பள்ளியில் திணிக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் சீனர்கள் டி.எல்.பி-யை முற்றாக நிராகரித்து விட்டார்கள். சீனப்பள்ளிகளில் நோ டி.எல்.பி.
0 Comments