எப்போது அடுத்த தேர்தல்?
# இந்த ஆண்டு தேர்தல் நடைப்பெறுவதற்கான
வாய்ப்புகள் 30 சதவீதம் மட்டுமே காணப்படுகிறது.
ஆனால் நஜிப் எப்போதும், எதையும் செய்யக்கூடியவர் என்பதால், இனி எந்த நேரத்திலும் பொது
தேர்தல் அறிவிக்கப்படலாம். ஆனால் அதற்கு சாத்தியம் மிக குறைவாகவே உள்ளது.
# நஜிப் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 24 2018 வரை ஆட்சியில் நீடிக்கலாம். 13-வது
தவணைக்கான முதல் நாடாளுமன்றம் 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் திகதி கூடியது. ஆகவே
ஐந்து ஆண்டு தவணைக்காலம் 2018-ஆம் ஆண்டு 24 ஜூன் முடிவடைக்கிறது. அன்றைய திகதியில்
இருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதாவது ஆகஸ்ட் 24 2018-க்குள்.
அடுத்த தேர்தலை நடத்த நஜிப்க்கு இன்னும் முழுதாக ஓராண்டு காலம் இருக்கிறது.
# இப்போது அவசரப்பட வேண்டிய
கட்டாயம் அவருக்கு இல்லை. அடுத்த மாதம் தேர்தல் நடைப்பெறுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
நடந்துக் கொண்டிருக்கும் அம்னோ பேராளர் கூட்டங்களில்கூட அரசல்புரசலாக எந்த செய்தியும்
கசியவில்லை. இப்போதைக்கு செப்டம்பர் மாதத்தில் தேர்தல் இல்லை என்பதுதான் நிம்மதி. எல்லோருக்கும்.
# பொதுவாக செப்டம்பர் மாதத்தில்
தேர்தல் நடத்தப்படுவதில்லை. இரண்டு காரணம் உண்டு. ஒன்று பட்ஜெட் மாதம். இன்னொன்று பள்ளிகளில்
எஸ்.பி.எம்/எஸ்.டி.பி.எம்/பிடி3 போன்ற பரீட்சைகள் ஆரம்பித்திருக்கும். தேர்தல் நடவடிக்கைக்கும் பிரசாரத்துக்கும்
இது இடையூராக இருக்கும்.
# நம் நாட்டில் இதுவரை ஒரே
ஒரு முறைத்தான் அக்டோபர் மாதத்தில்(20-10-1990) தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு
இப்போது வரை அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படுவதில்லை.
# அதே போல், நவம்பர்/டிசம்பர்
காலங்களில் தேர்தல் நடத்தப்படுவதில்லை. இதற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு. நவம்பர்/டிசம்பர்
என்பது வடகிழக்கு மாநிலங்களில் மழை பருவம் ஆரம்பித்து, கடுமையான மழை பெய்ய ஆரம்பிக்கும்.
கிளாந்தான், திரங்கானு, பகாங் ஜொகூர் பொன்ற மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும். இதும் தேர்தல்
நடவடிக்கைக்கும் பிரசாரத்திற்கும் இடைஞ்சலாக இருக்கும்.
# அதோடு டிசம்பர் மாதம் ஆண்டு
இறுதி என்பதால், கணக்கு வழக்குகள் முடிக்கும் காலக்கட்டம். பல இடங்களில் பண போக்குவரத்து
நடக்காமல் முடங்கிப் போய்விடும்.
# மகாதீர் காலத்தில் ஒரே ஒரு
முறைத்தான் நவம்பர் மாதத்தில்(29-11-1999) தேர்தல் நடந்துள்ளது.
# அடுத்து ஜனவரி. அனைவருக்கும்
தெரிந்த ஒன்றுதான். ஆண்டு ஆரம்பம். பட்ஜெட்டை செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும். பள்ளிகள்
தொடங்கி இருக்கும். நாடே பரபரப்பாக இருக்கும். இது நாள் வரை ஜனவரி அல்லது டிசம்பரில்
நம் நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டதே கிடையாது.
# பொதுவாக நம் நாட்டில் மார்ச்,ஏப்ரல்,
மே, ஜூன், ஜூலை மாதங்களில் தான் பெரும்பாலும் தேர்தல்கள் நடப்பதுண்டு. இது ஆளும் கட்சியினருக்கு
பல வகைகளில் சாதகமாக இருக்கும்.
# அதோடு இப்போது நஜிப் இருக்கும்
சூழ்நிலையில், இந்த ஆண்டு தேர்தலை நடத்த அசட்டுத்தனமான முடிவை எடுக்க மாட்டார். அடுத்த
ஆண்டு ஆகஸ்ட் வரை இழுத்துக் கொண்டு போவார் என்றே நினைக்கிறேன். போன 2013 தேர்தலையும்
அப்படித்தான் இழுத்துக் கொண்டு போய் மார்ச் மாதத்தில் வைத்தார்.
# ஆனாலும் நஜிப் காய்கள் நகர்த்துவதில்
மிகவும் சாமர்த்தியர். அக்டோபர் தேர்தல் என்று அவரே கோஸிப் ஒன்றை கிளப்பி விடுவார்.
ஆனாலும் அதை செய்யமாட்டார். செய்யமாட்டார் என நினைக்கும் போது அதை செய்வார். செய்வார்
என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதை செய்ய மாட்டார். செய்யமாட்டார் என்று கணித்தால்
அதை செய்யாமலும் இருப்பார். செய்வார் என்று நினைக்கும் போது அதை செய்யவும் தயங்க மாட்டார்.
ஆருடங்களை உடைத்து எறியக் கூடியவர். எதுவும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.
# எதிர்கட்சி கூட்டணிகள் ஏறத்தாள
தேர்தலுக்கு தயாராகி விட்டார்கள். பாரிசானைப் பொறுத்த வரையில், அம்னோவேகூட இன்னும்
முழுமையாக தேர்தலுக்கு தயாராகவில்லை.
# 70 முதல் 80 தொகுதிகள் வரை
பாரிசான் ஜெயிக்க கூடிய வரை வாய்ப்புகள் உள்ளது.
# ஐம்பதுக்கு ஐம்பது ஜெயிக்க
கூடிய வாய்ப்பு உள்ள தொகுதிகள் 35 இருக்கிறது.
# கையைவிட்டு போகக்கூடிய நிலையில்
20 தொகுதிகள் இருக்கிறது.
# ஆட்சி அமைக்க 122 இடங்கள்
பாரிசானுக்கு தேவை. பாஸ் கட்சி பாரிசானுக்கு ஆதரவு நிலை எடுத்தாலும், 110 வரை பாரிசன்
தொட முடியும். அப்படியும் ஆட்சியமைக்க பாரிசானுக்கு 12 தொகுதிகள் தேவைப்படும்.
# எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில்
தற்போது கைவசம் உள்ள 89 தொகுதிகளில் 80 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக
உள்ளது.
# நஜிப் எதிர்ப்பு அலை காரணமாக
10 முதல் 15 தொகுதிகள் வரை எஸ்ட்ராவாக ஜெயிக்க முடியும்.
# ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலை,
விலைவாசி உயர்வு இதன் பாதிப்புகளில் மேலும் 10 தொகுதிகள் எதிர்கட்சிகளுக்கு ஜெயிக்கும்
வாய்ப்புள்ளது.
# எப்படி பார்த்தாலும் எதிர்கட்சி
108 இடங்கள் வரை எதிர்க்கட்சிகள் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது.
# பாஸ் கட்சியில் இருந்து விலகி
6 தொகுதி அமானாவில் இணைந்துக் கொண்டதன் வழி, தற்போது பாஸ் கட்சியிடம் 15 தொகுதிகள்தான்
கைவசம் உள்ளது. இந்த பதினைந்து தொகுதிகளில் 9 இடங்களில் பாஸ் கட்சி ஜெயிப்பதே மிகவும்
கடினமானது. ஆனால் 39 இடங்களில் பாஸ் கட்சியின் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் அதை அமானாவும்
பி.கே.ஆரும் அசைத்துப் பார்த்துவிடும்.
# பாஸ் கட்சியில் இருந்த பெரும்பாலும்
இளைஞர்கள் அமானாவுக்கும் மகாதீரின் பெர்சத்து கட்சிக்கும் வந்து விட்டார்கள். வயதானவர்களின்
ஓட்டு வங்கியை பாஸ் இன்னும் அப்படியே வைத்திருக்கிறது. ஆனால் அதில் ஒரு சிக்கல் உண்டு.
பெரும்பாலான பாஸ் உறுப்பினர்கள் பாரிசானை இன்னும் எதிரிகளாகவே பார்க்கிறார்கள். பாஸ்
கட்சி பாரிசானோடு இணையும் பட்சத்தில் அந்த ஓட்டுகள் இரண்டாக உடையும் அபாயம் இருக்கிறது.
# பொதுவாக திரங்கானு,பெர்லிஸ்,கிளந்தான்
போன்ற மாநிலங்களில் பாஸ் மலாய்காரர்களின் ஓட்டை வெகுவாக உடைக்கும் சக்தி உள்ளது.
# 2004,2008,2013 ஆகிய தேர்தல்களின்
முடிவுகளை வைத்து பார்க்கும் போது, தனி கட்சி ஓட்டுக்கள் எப்போது தேசிய அரசியலை வைத்தே
முடிவு செய்ய்ப்படுகிறது. பாஸ் பல இடங்களில் ஓட்டை உடைக்க முற்பட்டாலும், தற்போதைய
தேசிய அரசியலின் நிலை பக்காதானுக்கு ஆதரவாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
# மூன்று மாநிலத்தில் பாரிசானுக்கு
எதிராக ஓட்டுக்கள் திரும்பும் நிலை உள்ளது. அவை கெடா, ஜொகூர், சபா.
# கெடாவில் போன முறை பாரிசான்
ஜெயிப்பதற்கு முக்கிய காரணம் மகாதீரும் முக்ரிசும்தான். அந்த இருவருமே இப்போது பாரிசானில்
இல்லாததால், இந்த முறை கெடாவில் பாரிசான் பெரும் சவாலை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலையில்
உள்ளது.
# ஷாபி அப்டாலுக்கு சபாவில்
பெரும் செல்வாக்கு உண்டு. பல இடங்களில் பாரிசான் சபாவில் ஜெயிப்பதற்கு ஷாபி அப்டால்
முக்கிய காரணம். அவர் சபாவில் தனிக் கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி கட்சி ஓட்டுகளை
ஒன்றினைக்கும் வேலையில் உள்ளார். ஆகவே சபாவும் பாரிசானுக்கு சிக்கலாகத்தான் இருக்கும்.
# ஜொகூர். இது பாரிசானின் கோட்டை
என்றே வர்ணிக்கப்படுகிறது. முகைதீனை பதவியில் இருந்து தூக்கியதன் மூலம், ஜொகூர் மக்களின்
கசப்பை பாரிசான் தேடிக் கொண்டது. இந்த முறை ஜொகூர் மாநிலமும் பாரிசானுக்கு கடுமையான
போட்டியைக் கொடுக்கும்.
# பாரிசானின் பாதுகாப்பான தொகுதி
அல்லது நிச்சயமாக ஜெயிக்க கூடிய வாய்ப்பு உள்ள தொகுதிகள்
1.
தெனோம்(சபா)-
2. ரானாவ்(சபா)
3. பியாபோர்ட்(சபா)
4. தெப்ராவ்(ஜொகூர்)-கோ சூ சியோங்
5. கோத்தா பெலூட்(சபா)-ரஹ்மான் டாலான்
6. தேசெக் கெலுகோர்(பினாங்கு)-சஹாபுடின் யாயா
7. செத்தியவங்சா(கோலால்லம்பூர்)-அஹ்மாட் பவ்சி
8. துவாரன்(சபா)-மடியுஸ் தங்கன்
9. பூலாய்(ஜொகூர்)-நோர் ஜஸ்லான்
10. பாகன் டத்தோ(பேராக்) அஹ்மாட் ஜாயிடி
11. சபாக் பெர்னாம்(பேராக்) ரஹ்மான் புக்ரி
12. செபாங்கார்(சபா) ஜுமாத் இட்ரிஸ்
13. சரதோக்(சரவாக்)-வில்லியம் மாவான்
14. தஞ்ஞோங் மாலிம்(பேராக்)- ஓங் கா சுவான்
15. ஜெராண்டுட்(பகாங்)-அஹ்மட் இட்ரிஸ்
16. தாவாவ்(சபா)-மேரி யாப்
17. கங்கார்(பெர்லிஸ்)-சஹாருடின் இஸ்மாயில்
18. ஸ்ரீ அமான்(சரவாக்)-மாசிர் குஜாட்
19. தஞ்சோங் காரங்(சிலாங்கூர்)- நோர் ஓமார்
20. லோபோக் அந்து(சரவாக்)-வில்லியம்
21. தஞ்சோங் பியாய்(ஜொகூர்)- வீ ஜெக் செங்
22. லிபிஸ்(பகாங்)-அப்துல் ரஹ்மான்
23. தம்பூன்(பேராக்)-அஹ்மாட் ஹுஸ்னி
24. லாருட்(பேராக்)-ஹம்சா
25. ஜொகூர் பாரு-சாஹிரில் அப்துல் சாமாட்
26. பத்து சாபி(சபா)-த்சேன் தான் லின்
27. பெசுட்(திரங்கானு) தெங்கு ஸைனான்
28. தாப்பா-சரவணன்
29. ஸ்ரீ காடிங்(ஜொகூர்) அசிஸ் கப்ராவி
30. ஜெலி(கிளாந்தான்)-முஸ்தாபா முகமாட்
31. உலு திரங்கானு-ஜைலானி ஜொகாரி
32. கெமாமான் - சப்ரி சிக்
33. பாரிட்- முகமட் ஸைம்
34. சிப்பாங் ரெங்கம் – லிங் தெக் மெங்
35. செத்தின்(திரங்கானு)- சே முகமாட்
36. பாசிர் சாலாக்(பேராக்)-தஜூடின்
37. கோல க்ராவ்(பகாங்)-இஸ்மயில்
38. பிந்துலு(சரவாக்)-திங் கிங் சிங்
39. லெங்கோங்(பேராக்)- சம்சுல் அன்வார்
40. செலாங்கான்(சரவாக்)- ஜோசப் எந்துலு
41. சிலாம்(சபா) – நஸ்ரூன்
42. ஜுலான்(சரவாக்)- ஜோசப் சாலாங்
43. பாயா பெசார்(பகாங்)- அப்துல் மானான்
44. ஜெலுபு(நெகிரி) சைனுடின் இஸ்மயில்
45. கனோவித்(சரவாக்) – ஆரோன் அகோ டகாங்
46. புதாதான்(சபா)- மகின் மர்க்குஸ்
47. மாரான்(பகாங்)- இஸ்மயில் முத்தாலிப்
48. ஜாசின்(மலாக்கா) – அஹ்மாட் ஹம்சா
49. கிமானிஸ்(சபா) – அனிபா அமான்
50. படாங் பெசார்(பெர்லிஸ்) சாயிடி சைனால் அபிடின்
51. குடாட்(சபா)- அப்துல் ரஹிம்
52. தம்பின்(நெகிரி) – சாஸிமான் அபு மன்சோர்
53. க்ரிக்(பேராக்)- ஹஸ்புல்லா
54. பாரிட் சுலோங்(ஜொகூர்) நொராயினி அஹ்மாட்
55. தங்கா பத்து(மலாக்கா)- அபு பக்கார்
56. உலு ரஜாங்(சரவாக்) – வில்சன் உகாக்
57. மம்போங்(சரவாக்)- ஜேம்ஸ் டாவுஸ்
58. செம்போரோங்(ஜொகூர்)-ஹிசாமுடின்
59. சிபுதி(சரவாக்)-அமாட் லை பூஜாங்
60. பாபார்(சபா)-ருஸ்னா
61. கெலாபாக்கான்(சபா)-அப்துல் காபூர்
62. லாபுவான்(சபா) ரோஸ்மான் அலி
63. கினாபாதாங்கான்(சபா)-போங் மொக்தார்
64. சிபிடாங்(சபா)-சபாவி அமாட் வசாலி
65. பெலுரான்(சபா)
66. லவாஸ்(சரவாக்)-ஹென்ரி சும் அகோங்
67. லிம்பாங்(சராவாக்)- ஹசிம் ஹபிபொல்லா
68. செரியான்(சரவாக்)-ரிச்சர்ட் ரியாட்
69. தெங்காரா(ஜொகூர்)-ஹலிமா முகமாட்
70. பெக்கான்(பகாங்)-நஜிப்
71. பத்து லுபார்(சரவாக்)-ரொஹானி
72. முக்கா(சரவாக்)-முகமாட் லியோ
73. பெதோங்(சரவாக்)-டக்ளாஸ் உங்கா
74. கோத்தா சமரஹான்(சரவாக்)- ரூப்பியா வாங்
75. கபிட்(சரவாக்)- அலேக்சண்டர் நந்தா
76. பெத்ரா ஜெயா(சரவாக்)-ஃபடிலா யுசோப்
77. சந்துபோங்(சரவாக்)-வான் சுனைடி
78. பாத்தாங் சடோங்(சரவாக்)- நன்சி சுக்ரி
79. இகான்(சரவாக்)-வாகாப் டோல்லா
80. தஞ்சோங் மானிஸ்(சரவாக்) நோரா அப்துல்லா
81. லிபாரான்(சபா)- ஜுஸ்லி அஜிரோல்
2. ரானாவ்(சபா)
3. பியாபோர்ட்(சபா)
4. தெப்ராவ்(ஜொகூர்)-கோ சூ சியோங்
5. கோத்தா பெலூட்(சபா)-ரஹ்மான் டாலான்
6. தேசெக் கெலுகோர்(பினாங்கு)-சஹாபுடின் யாயா
7. செத்தியவங்சா(கோலால்லம்பூர்)-அஹ்மாட் பவ்சி
8. துவாரன்(சபா)-மடியுஸ் தங்கன்
9. பூலாய்(ஜொகூர்)-நோர் ஜஸ்லான்
10. பாகன் டத்தோ(பேராக்) அஹ்மாட் ஜாயிடி
11. சபாக் பெர்னாம்(பேராக்) ரஹ்மான் புக்ரி
12. செபாங்கார்(சபா) ஜுமாத் இட்ரிஸ்
13. சரதோக்(சரவாக்)-வில்லியம் மாவான்
14. தஞ்ஞோங் மாலிம்(பேராக்)- ஓங் கா சுவான்
15. ஜெராண்டுட்(பகாங்)-அஹ்மட் இட்ரிஸ்
16. தாவாவ்(சபா)-மேரி யாப்
17. கங்கார்(பெர்லிஸ்)-சஹாருடின் இஸ்மாயில்
18. ஸ்ரீ அமான்(சரவாக்)-மாசிர் குஜாட்
19. தஞ்சோங் காரங்(சிலாங்கூர்)- நோர் ஓமார்
20. லோபோக் அந்து(சரவாக்)-வில்லியம்
21. தஞ்சோங் பியாய்(ஜொகூர்)- வீ ஜெக் செங்
22. லிபிஸ்(பகாங்)-அப்துல் ரஹ்மான்
23. தம்பூன்(பேராக்)-அஹ்மாட் ஹுஸ்னி
24. லாருட்(பேராக்)-ஹம்சா
25. ஜொகூர் பாரு-சாஹிரில் அப்துல் சாமாட்
26. பத்து சாபி(சபா)-த்சேன் தான் லின்
27. பெசுட்(திரங்கானு) தெங்கு ஸைனான்
28. தாப்பா-சரவணன்
29. ஸ்ரீ காடிங்(ஜொகூர்) அசிஸ் கப்ராவி
30. ஜெலி(கிளாந்தான்)-முஸ்தாபா முகமாட்
31. உலு திரங்கானு-ஜைலானி ஜொகாரி
32. கெமாமான் - சப்ரி சிக்
33. பாரிட்- முகமட் ஸைம்
34. சிப்பாங் ரெங்கம் – லிங் தெக் மெங்
35. செத்தின்(திரங்கானு)- சே முகமாட்
36. பாசிர் சாலாக்(பேராக்)-தஜூடின்
37. கோல க்ராவ்(பகாங்)-இஸ்மயில்
38. பிந்துலு(சரவாக்)-திங் கிங் சிங்
39. லெங்கோங்(பேராக்)- சம்சுல் அன்வார்
40. செலாங்கான்(சரவாக்)- ஜோசப் எந்துலு
41. சிலாம்(சபா) – நஸ்ரூன்
42. ஜுலான்(சரவாக்)- ஜோசப் சாலாங்
43. பாயா பெசார்(பகாங்)- அப்துல் மானான்
44. ஜெலுபு(நெகிரி) சைனுடின் இஸ்மயில்
45. கனோவித்(சரவாக்) – ஆரோன் அகோ டகாங்
46. புதாதான்(சபா)- மகின் மர்க்குஸ்
47. மாரான்(பகாங்)- இஸ்மயில் முத்தாலிப்
48. ஜாசின்(மலாக்கா) – அஹ்மாட் ஹம்சா
49. கிமானிஸ்(சபா) – அனிபா அமான்
50. படாங் பெசார்(பெர்லிஸ்) சாயிடி சைனால் அபிடின்
51. குடாட்(சபா)- அப்துல் ரஹிம்
52. தம்பின்(நெகிரி) – சாஸிமான் அபு மன்சோர்
53. க்ரிக்(பேராக்)- ஹஸ்புல்லா
54. பாரிட் சுலோங்(ஜொகூர்) நொராயினி அஹ்மாட்
55. தங்கா பத்து(மலாக்கா)- அபு பக்கார்
56. உலு ரஜாங்(சரவாக்) – வில்சன் உகாக்
57. மம்போங்(சரவாக்)- ஜேம்ஸ் டாவுஸ்
58. செம்போரோங்(ஜொகூர்)-ஹிசாமுடின்
59. சிபுதி(சரவாக்)-அமாட் லை பூஜாங்
60. பாபார்(சபா)-ருஸ்னா
61. கெலாபாக்கான்(சபா)-அப்துல் காபூர்
62. லாபுவான்(சபா) ரோஸ்மான் அலி
63. கினாபாதாங்கான்(சபா)-போங் மொக்தார்
64. சிபிடாங்(சபா)-சபாவி அமாட் வசாலி
65. பெலுரான்(சபா)
66. லவாஸ்(சரவாக்)-ஹென்ரி சும் அகோங்
67. லிம்பாங்(சராவாக்)- ஹசிம் ஹபிபொல்லா
68. செரியான்(சரவாக்)-ரிச்சர்ட் ரியாட்
69. தெங்காரா(ஜொகூர்)-ஹலிமா முகமாட்
70. பெக்கான்(பகாங்)-நஜிப்
71. பத்து லுபார்(சரவாக்)-ரொஹானி
72. முக்கா(சரவாக்)-முகமாட் லியோ
73. பெதோங்(சரவாக்)-டக்ளாஸ் உங்கா
74. கோத்தா சமரஹான்(சரவாக்)- ரூப்பியா வாங்
75. கபிட்(சரவாக்)- அலேக்சண்டர் நந்தா
76. பெத்ரா ஜெயா(சரவாக்)-ஃபடிலா யுசோப்
77. சந்துபோங்(சரவாக்)-வான் சுனைடி
78. பாத்தாங் சடோங்(சரவாக்)- நன்சி சுக்ரி
79. இகான்(சரவாக்)-வாகாப் டோல்லா
80. தஞ்சோங் மானிஸ்(சரவாக்) நோரா அப்துல்லா
81. லிபாரான்(சபா)- ஜுஸ்லி அஜிரோல்
50க்கு
50 – போர்டரில் நிற்கும் தொகுதிகள்
- 1. கோல சிலாங்கூர்
- 2. பாசிர் கூடாங்
- 3. ஹுலு சிலாங்கூர்-கமலநாதன்
- 4. கெர்தே(கிளாந்தான்)- அனுவார் மூசா
- 5. மாச்சாங்(கிளாந்தான்)- அகமாட் ஜஸ்லான்
- 6. ஜெராய்(கெடா)- ஜமில் கீர்
- 7. கோல கங்சார்(பேராக்)- மஸ்தூரா
- 8. ஆராவ்(பெர்லிஸ்)- சஹிடான் காசிம்
- 9. பெரா(பகாங்)- இஸ்மயில் சப்ரி யூசோப்
- 10. தித்திவங்சா- ஜொகாரி அப்துல் கனி
- 11. லேடாங்(ஜொகூர்)- ஹமிம் சமாரி
- 12. கூலிம்(கெடா)- அப்துல் அஜிஸ்
- 13. முவார்(ஜொகூர்)-ரசாலி இப்ராஹிம்
- 14. பாலிக் பூலாவ்-ஹில்மி யாஹ்யா
- 15. தானா மேரா(கிளாந்தான்)- கமால் ஹிசாம்
- 16. சேகிஜாங்(ஜொகூர்)-அன்வார் அப்துல் மானாப்
- 17. கபாளா பாத்தாஸ்(பினாங்கு)- ரிசால் மரிக்கான்
- 18. பாடாங் ரெங்காஸ்- முகமாட் நஸ்ரி
- 19. ஜெம்போல்(நெகிரி)- முகமாட் ஈசா
- 20. குபாங் பாசு(கெடா)- முகமாட் ஜொகாரி
- 21. அயர் ஹித்தாம்(ஜொகூர்)- வீ கா சியோங்
- 22. அலோர் காஜா(மலாக்கா)- கா நை க்வாங்
- 23. குவா மூசாங்(கிளாந்தான்)-தெங்கு ரசாலி
- 24. குவால பீலா(நெகிரி)-ஹசான் மாலிக்
- 25. ரெம்பாவ்(நெகிரி)- கைரி
- 26. பொந்தியான்(ஜொகூர்)- அஹ்மாட் மஸ்லான்
- 27. ரொம்பின்(பகாங்)-ஹசான் அரிபின்
- 28. புத்ரா ஜெயா- தெங்கு அட்னான்
- 29. மஸ்ஜிட் தானா(மலக்க்கா)-மாஸ் எர்மிகாத்தி
- 30. மெர்சிங்(ஜொகூர்)-அப்துல் லத்திப்
- 31. பெங்கேராங்(ஜொகூர்)- அசாலினா
- 32. கோத்தா திங்கி(ஜொகூர்)- நோர் எசானுடின்
கைவிட்டு
போகக்கூடிய தொகுதிகள். தங்க வைப்பதற்கு மிகவும் சிரமான தொகுதி.
- 1. கேமரன் ஹைலண்ட்- பழனிவேலு
- 2. மாஸ் காடிங்(சரவாக்)-
- 3. கெனிங்காவ்
- 4. பென்சியான்
- 5. கோத்தா மெர்டு
- 6. பாராம்(சரவாக்)
- 7. பெந்தோங்(பகாங்)
- 8. லாபிஸ்
- 9. சுங்கை பெசார்
- 10. பாகான் செராய்
- 11. சிகாமாட்-சுப்ரமணியம்
- 12. பெண்டாங்(கெடா)-ஒத்மான் அப்துல்
- 13. மெர்போக்(கெடா)-இஸ்மாயில் டவுட்
- 14. பாலிங்(கெடா)-அப்துல் அசிஸ்
- 15. சிக்(கெடா)-மன்சூர் அப்தூல் ரஹ்மான்
- 16. பாகோ(ஜொகூர்)-முகைதீன்
- 17. பாடாங் தெராப்(கெடா)-மாசிர் காலிட்
- 18. ஜெர்லூன்(கெடா)-ஒத்மான் அசிஸ்
- 19. லங்காவி-நவாவி அஹ்மாட்
- 20. சம்பூர்ணா(சபா)- சாபி அப்டால்
பி.கு.
கடந்த ஒருவார காலமாக நானே உட்கார்ந்து படித்து ஆரய்ந்து தெரிந்துக் கொண்டவை. விக்கிபீடியா,
இணையம் என்று எங்கேயேயும் திருடியது கிடையாது.

0 Comments