மலேசிய தமிழ் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது எப்படி? Part 3
திரைக்கதை என்பது ஒரு கதையை
audience-க்கு ஆக சிறந்த முறையில் போரடிக்காமல் மிகவும் சுவரசியமாக விஷுவலாக சொல்வதே
ஆகும். சில படங்களை பார்த்திருப்போம். கதை நன்றாக இருக்கும் ஆனாலும் படம் பார்ப்பதற்கு
மிகவும் மொக்கையாக இருக்கும். சில படங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவராசியமாக இருக்கும்
ஆனால் கதை ரொம்பவும் மொக்கையாக இருக்கும்.
சில படங்களின் கதை ரொம்பவும் சுமாராக தான் இருக்கும். ஆனால் ஆடியன்ஸ் மத்தியில்
மிகவும் ஆரவரமாக வரவேற்க்கப்பட்டு தியேட்டரில் கலேக்ஷன் அள்ளி இருக்கும். சில படங்களின்
கதை நன்றாக இருந்தும்; மேக்கிங்கிலும் அசத்தி இருப்பார்கள். ஆனால் அந்த படம் ஆடியன்ஸ்
மத்தியில் எந்த ரியாக்சனும் இல்லாமல் தியேட்டரில் கூட்டமும் இல்லாமல் படு தோல்வி அடைந்திருக்கும்.
இந்த
இரண்டு கூற்றுகளையும் தனி தனியாக பிரித்து எடுத்து நன்றாக ஆராய்ந்து பார்த்தோம் என்றால்;
இந்த இரண்டு வகை படங்களின் அடிப்படை அம்சம் திரைக்கதையாகத்தான் இருக்கும். ஆடியன்ஸ்
இதுவரை கொண்டாடி மகிழ்ந்த அத்துனை படங்களும் திரைக்கதையில் புகுந்து விளையாடி இருபார்கள்.
ஆடியன்ஸ்க்கு போரடிக்காமல் கதையை நகர்த்தியிருப்பார்கள்.
சரி
கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு
நேர்மையான போலிஸ்காரரை திருட்டு தொழில் செய்யும் வில்லன்கள் கொன்று விடுகிறார்கள்.
அந்த நேர்மையாக போலிஸ்காரரின் மகன்; வளர்ந்து பெரியவனாகி தந்தையின் மரணத்துக்கு காரணமான
வில்லன்களை பழி தீர்க்கிறான். இது கதை.
இந்த
கதையை நீங்கள் இதுவரை நூறுக்கும் அதிகமான தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கலாம். ஏன்
சில உலக சினிமாக்களில் கூட பார்த்திருக்கலாம். இந்த சிம்பிளான கதை தமிழ் சினிமாவின்
எவர்கிரின் படங்களான மூன்று முகம் மற்றும் அபூர்வ சகோதரர்கள் என இருவேறு திரைக்கதையாக
வந்து ஹிட் அடித்தது. இந்த இரு படங்களின் அபார வெற்றிக்கு காரணம், அந்த படங்களின் திரைக்கதை
உத்தியே.

பிறந்தவுடனேயே
இரண்டு ரஜினியும் தனி தனியாக பிரிக்கப்பட்டு; ஒரு ரஜினி தன் சொந்த அத்தையிடமும் இன்னொரு
ரஜினி மூன்றாம் தரப்பான தேங்காய் சீனிவாசன் மூலமும் வளர்க்கப்படுவார்கள். ஒரு ரஜினி
அருண் கேரக்டரிலும் இன்னொரு ரஜினி ஜான் கேரக்டரிலும் படத்தில் வருவார்கள்.
அருண்
நன்றாக படித்து மிகவும் கெட்டிகாரனாக இருப்பார். இன்னொரு ரஜினி தில்லு முல்லுகள் செய்யும்
குட்டி திருடனாக இருப்பார். அருண் கேரக்டரில் வரு ரஜினி, தன் தந்தை ஒரு நேர்மையான போலிஸ்
அதிகாரி என்றும்; அவர் யாரால் கொலை செய்யப்பட்டார்
என்றும் தெரிந்துக் கொண்டு வில்லன்களை பழி வாங்குவார்.
அபூர்வ
சகோதர்கள். முதல் கமல் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி சேதுபதி. நாகேஷ் எண்ட் கோ சேர்ந்து
கொண்டு அவரை கொன்று விடுவார்கள். கொலை செய்யப்பட்ட சேதுபதிக்கு இரட்டை குழந்தைகளாக
இரண்டு குட்டி கமல்கள் பிறப்பார்கள்.
பிறந்த
உடனேயே இரண்டு கமலும் தனி தனியாக பிரிக்கப்பட்டு; ஒரு கமல் தன் சொந்த அம்மாவிடமும்
இன்னொரு கமல் மூன்றாம் தரப்பான மனோரமாவிடமும் வளர்வார்கள். ஒரு கமல் அப்பு. இன்னொரு
கமல் ராஜா.
இதில்
அப்பு கேரக்டரில் வரும் கமல் மிகவும் கெட்டிகாரராக இருப்பார். ராஜா போக்கிரி தனங்கள்
செய்துக் கொண்டு ஜாலியாக கவுதமியோடு ஊர் சுற்றி கொண்டிருப்பார். நேர்மையான போலிஸான தன் தந்தை சேதுபதியை நாகேஷ் எண்ட் கோ கொலை
செய்ததை தெரிந்துக் கொண்டு; அப்பு கேரக்டரில் வரும் கமல் அவர்களை பழி வாங்குவார்.
படிக்கும்
போதே இரண்டு கதைகளும் ஒரே கதைதான் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
இது
கதை. இந்த கதை எப்படி இருவேறு அட்டகாசமான திரைக்கதைகளாக உருவானது?
மூன்று
முகம் திரைக்கதை பிளஷ்பேக் முறையில் எழுதப்பட்டிருக்கும். படத்தின் ஆரம்ப சீனில் நமக்கு
எந்த முன் கதையும் தெரியாது. வெளிநாட்டில் படித்து விட்டு வந்த ஒரு சாதாரண ரஜினியை(அருண்)
தான் நாம் பார்த்துக் கொண்டிருப்போம்.

அலெக்ஸ்
பாண்டியன் பிளஷ்பேக் முடியும் போது; அருண் கேரக்டரில் வரும் ரஜினிக்கு தன் முன் ஜென்ம
கதை ஞாபகத்துக்கு வரும். முன் பிறவியில் தானே நேர்மையாக போலிஸ் அதிகாரி அலெக்ஸ் பாண்டியன்
என்றும்; தன்னை ஏகாம்பரன் எனும் வில்லன் கொலை செய்து விட்டதாகவும்; தன்னை கொலை செய்த
ஏகாமபரத்தை பழி வாங்கவே மறு பிறவி எடுத்து வந்ததாக பூர்வ ஜென்ம கதையை சொல்வார். இங்கிருந்து
கதை விருவிருப்பாக நகரும்.
1982-இல்
வெளியீடு கண்ட இந்த படம் விருவிருப்பான திரைக்கதை உத்தியும் அலெக்ஸ் பாண்டியன் characterization-னும்
அந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படமாக ஆனது.
அந்த ஆண்டின் தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் இந்த படத்தில் நடித்ததற்காக
ரஜினிக்கு வழங்கப்பட்டது.
அபூர்வ
சகோதரர்கள். இது நேர்கோட்டில்(linear) பயணிக்கும் கதை. படத்தின் ஆரம்பத்திலேயே இன்ஸ்பெக்டர்
சேதுபதியின் முன் கதை படம் பார்க்கும் நமக்கு சொல்லப்பட்டு விடும். சேதுபதியின் மரணத்திற்கு
காரணமானவர்கள் பழிவாங்கப்பட வேண்டும் என்றும் நமக்கு தெளிவாக உணர்த்தியிருப்பார்கள்.
வில்லன்கள்
எப்படி; யாரால் பழி வாங்க படுவார்கள் என்கிற சஸ்பன்ஸை நமக்கு கொடுத்திருப்பார்கள்.
குள்ளனாக இருக்கும் கமல் வில்லன்களை எப்படி பழி வாங்க போகிறார் என்கிற ஆவலையும் நமக்கு
ஏற்படுத்தி இருப்பார்கள்.
மூன்று
முகத்தில் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் எப்படி நம் மனதில் ஆழமாக பதிந்ததோ அதே போல் அபூர்வ
சகோதர்கள் படத்தில் குள்ள அப்பு கேரக்டர் யாராலும் மறக்க முடியாது. அதுவரை வந்த தமிழ்ப்படங்களில்
அப்பு கேரக்டர் முற்றிலும் புதிதாக இருந்தது.
போதத
குறைக்கு இளையராஜாவின் அட்டகாசமான இசையும் சேர்ந்து கொண்டது. கிரேஸி மோகனின் வசனமும்
படத்தின் திரைக்கதைக்கு மிகவும் உதவியாக இருந்தது. அப்பு என்கிற கதாபாத்திரம் மட்டும்
இல்லாமல் நாகேஷ், ஜனகராஜ் இருவரின் பாத்திர படைப்புகளும் நம்மை கவரும் வகையில் மிக
சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள்.
ஒரு
நிமிடம் கூட போரடிக்காத அக்ஷன் காமெடியில் நம்மை அசத்தியிருப்பார்கள். இன்றும் நம்
மனதை விட்டு அகலாத பல காட்சிகள் இந்த படத்தில் இருக்கும். இன்ஸ்பெக்டர் சேதுபதி குடிசையை
பொத்து கொண்டு அறிமுகம் ஆகும் காட்சி, ரூபிணியுடன்
ரிஜிஸ்டர் கல்யானத்துக்கு அப்பு கிளம்பி போகும் காட்சி, ஜனகராஜ் துப்பறியும் காட்சிகள்,
ராஜாவை தேடி வரும் கும்பல் மயில்சாமி எண்ட் கோ குரூப்பை அடித்து துவைப்பது, என பல காட்சிகள் இன்றும் நம் நினைவில் நிற்பவை. 1989-ம்
வருடம் வெளியீடு கண்ட இந்த படம் அந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.
கதை
என்றால் என்ன; திரைக்கதை என்றால் என்ன? என்பதனை மிக சிம்பளாக இந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.
கதைக்கும் திரைக்கதைக்கும் உள்ள வேறுபாடுகளை அடுத்த அத்தியாத்தில் இன்னும் கொஞ்சம்
ஆழமாக பார்ப்போம்.
கொசுறு
1 # ரஜினியின் ராஜாதி ராஜாவும் கமலின் அபூர்வ
சகோதர்களும் ஒரே நேரத்தில் ரிலிஸ் ஆகி; கமலின் அபூர்வ சகோதரர்களே சூப்பர் டூப்பர் ஹிட்
ஆனது. அப்பு ராஜா என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு இந்தியிலும் மிக பெரிய வெற்றி பெற்ற
படம் அபூர்வ சகோதரர்கள்.
கொசுறு
2# கமலின் அபூர்வ சகோதரர்கள் நம் மலேசியாவில் ஒரு வரலாற்று சம்பவமாக அமைந்தது. பூட்டிய தியேட்டர்களுக்கு அபூர்வ சகோதரர்கள் சாவியை
கொண்டு வந்தது. மலேசியாவில் தியேட்டர் பிரியர்கள் ஆரவரமாய் கொண்டாடிய படம் அபூர்வ சகோதரர்கள்.
அந்த கதையை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
0 Comments