DLP -யினால் ஏற்படும் விளைவுகள்.
தமிழ்க்கல்வியின் வளர்ச்சியை நான் மூன்று நிலைகளில் பார்க்கிறேன்.
1.
தமிழ்ப்பள்ளியை உருவாக்குவதில் நமக்கு இருந்த சவால்,
2.
தமிழ் குடும்பத்து குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களின் மனநிலை மற்றும்
தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கையில் இருந்த சவால் மற்றும்
3.
தற்போது தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நாம் உலக தரத்துக்கு உயர்த்துவதில் இருக்கும்
சவால்.
1
# நாம்
ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளோம் - கடந்த 200 ஆண்டுகளாக உருவாக்கி
வைத்திருக்கும் கட்டமைப்பை இந்த டி எல் பி- எனப்படும் கல்வி திட்டம் அசைத்து பார்த்து
விடும். இது மொத்த சிஸ்டமை வேறு பாதையில் திருப்பிவிடக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
2. # தமிழ்ப்பள்ளிகளை
நிர்மாணிக்கும் போராட்டம் - 1960 வரை நமது போராட்டம் தமிழ்ப்பள்ளிகள்
நிறுவுவதில் இருந்தது. நிறுவிய தமிழ்ப்பள்ளிகளை கட்டி காக்க வேண்டிய அவசியத்தில் இருந்தோம்.
அதில் பல போராட்டம்; சவால்கள்; எதிர்ப்புகள்; இன்னல்கள் இருந்தது. ஆனால் இந்த போராட்டத்தில்
நாம் வெற்றி அடைந்தோம். பெரும் போராட்டத்திற்கு பிறகு; தமிழ்ப்பள்ளிகளை ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தோம்.
தமிழ்ப்பள்ளிக்களுக்கு நிரந்திர தீர்வு ஏற்பட்டது. தமிழ்ப்பள்ளிகளை வெளியில் இருந்து
யாரும் வந்து மூடவோ அழிக்கவோ முடியாது. உள்ளுக்குள்ளேயே நாமே மூடிக் கொண்டால் தான்
உண்டு.
3.
1970-களுக்கு பிறகு நமது போராட்டம் மாணவர்களை தம்ழிப்பள்ளிக்கு சேர்ப்பதில் இருந்தது. ஏழை மாணவர்கள்
தான் தமிழ்ப்பள்ளிகளில் படிப்பார்கள் என்கிற நிலையை/ போலியான பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள்.
தமிழ்ப்பள்ளிகளில் படித்தால் உருப்பட மாட்டர்கள்
என்கிற பொய் பிரச்சாரத்தை மறைமுகமாக திணித்து; போலியா ஒரு சாயம் பூசி வைத்திருந்தார்கள்.
அந்த நிலையை உடைத்து தமிழ் குடும்பத்து குழந்தைகளை
தமிழ்ப்பள்ளிக்கு கொண்டு வந்தோம். பெரும் போராட்டத்துக்கு பிறகு Middle Class தமிழ்
குடும்பத்து குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளில் படிக்க வைக்க கொண்டு வந்து சேர்த்தோம். இந்த
பெரும் முயற்சியில் நாம் வெற்றியும் பெற்றோம். 2000-ம் ஆண்டுகளுக்கு பிறகு Upper
Class தமிழ் குடும்பத்து குழந்தைகளும் தமிழ்ப்பள்ளிக்கு வந்தார்கள்.
4.
தற்போது நமக்கு இருக்கும் மிக பெரிய சவால்/போராட்டாம்
என்பது தமிழ்ப்பள்ளியில் பயிலும்; தமிழ்கல்வி கற்றும் மாணவர்கள் நாம் அனைத்து நிலைகளிலும்
உயர்த்த வேண்டும். மிக சிறந்த கல்விமான்களாக உருவாக்க வேண்டும். Cambridge லெவலுக்கு
தமிழ்கல்வின் தரத்தை உயர்த்தி/ தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைத்துலக அரங்கில்
தலை நிமிர செய்து உலக தமிழர்களுக்கு நாம் ஒரு மிக பெரிய எடுத்துக்காட்டாக உருவாக வேண்டிய
சவாலில் இருக்கிறோம்.
இப்படி நாம் ஒரு மிக பெரிய
போராட்டத்தின் வழி தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்க்கல்வியையும் முன் நோக்கி கொண்டு செல்லும்
வேளையில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் ஒட்டு மொத்த கட்டமைப்பையும் சீண்டி பார்க்கும்/
அசைத்து பார்க்கும் ஒரு திட்டமாக நாம் இந்த டி எல் பி எனும் கல்வி திட்டத்தை பார்க்கிறோம்.
# எப்படி இந்த கட்டமைப்பை டி.எல்.பி
எனும் கல்வி திட்டம் மூலம் பாதிக்கப்படும்?
1.
தமிழ்ப்பள்ளிகள் பிற மொழி பள்ளியாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆங்கிலம் முதன்மை மொழியாக
திணிக்கப்பட்டு; மலாய் மொழி தேசிய மொழியாக நிலை நிறுத்தப்பட்டு; தமிழ்க்கல்வி அலட்சிய போக்குடனும்; படித்தால் படிக்கட்டும் இல்லை என்றால் சேதாராம்
ஏதும் இல்லை என்கிற மனநிலையை வாழை பழத்துல் ஊசி ஏற்றுவது போல மெல்ல மெல்ல பாய்ச்சப்பட்டு
பிறகு நாம் முதலில் இருந்து போராட துவங்க வேண்டும். தமிழ்ப்பட காமேடி போல் ‘திரும்பவும்
முதலில் இருந்தா….?’ என்பது போல் நாம் போராட்டத்தை 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி போய்
முதலில் இருந்து தொடங்க வேண்டும்.
2.
இந்த டி எல் பி திட்டத்தால்; கண்ணுக்கு தெரிந்தே
நாம் ஒரு மோசமான சமூகத்தை உருவாக்க போகிறோம்.
பொதுவாக கடைசி வகுப்பில் பயிலும் மாணவர்கள் தான் பிற்பாடு சமூகத்தின் கடை நிலை வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள்.
இதில் சில விதிவிலக்கு மாணவர்களும் உண்டு. இன்னும் சில ஆண்டுகளில் என்ன நடக்கும் என்றால்;
அறிவார்ந்த சமூகமாக அடையாளம் காணப்பட்ட தமிழ் குடும்பத்து குழந்தைகள், டாக்டர், வழக்கறிஞர்கள்,
இன்ஞினியர்கள், அரசாங்க உயர் அதிகாரி பிள்ளைகள், பணக்கார வீட்டு பிள்ளைகள் என
Upper Class வீட்டு பிள்ளைகள் டி எல் பி வகுப்பிலும்; சாதரண, ஏழ்மை நிலையில் இருக்கும்
குடும்பத்து குழந்தைகள் தமிழ்ப் பிரிவிலும் படிப்பார்கள்.
சுருக்கமாக சொன்னால் ‘முட்டா
பசங்க தமிழில் படியுங்கள்’ என்கிற விதியை உருவாக்கி; தமிழ்க்கல்வி வகுப்புகள் கடைசி
நிலை வகுப்புகளாகவும்; டி எல் பி வகுப்புகள் முதன்மை வகுப்புகள் என்கிற சூழ்நிலை உருவாகி
விடும். இது நிதர்சண உண்மை. இன்று யார் வேண்டுமானாலும் இதை பொய்/பித்தலாட்டம்/உண்மைக்கு
புறம்பானது/தவறான கருத்து என்று சொல்லலாம். ஆனால் இந்த டி எல் பி வகுப்புகள் தொடருமானால்;
சமூகத்தின் நிலையில் மிக பெரிய மாற்றம் நிகழ்ந்தே தீரும். அது தமிழ்க்கல்வியின் பெரிய
வீழ்சியாக இருக்கும்.
மாணவர்களையோ பெற்றோர்களையோ நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை
என கல்வி அமைச்சரும், துணை கல்வி அமைச்சர்களும்,
இன்னும் ஏனையோர்களும் கூறி வருகிறார்கள்.. விருப்பம் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு
விருப்ப தேர்வு பாடமாக கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கில மொழி பாடமாக கொண்டு
வந்துள்ளோம்.
’இஸ்டம் இருந்தால் படி. இல்லை என்றால் விடு’ என்கிறார்கள். ஆனால் சூழ்நிலை
அப்படியா உள்ளது. சூழ்நிலையை ஒதுக்கி விட்டு; அதில் இருக்கும் சிக்கலை பார்ப்போம்.
பெற்றோர்களின் விருப்பத்தில் டி எல் பி வகுப்பு செல்லும் மாணவன்; பிறகு அந்த மாணவன்
கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கில மொழியில் பயில்வதில் சிக்கலும்/ போதிய திறன்
இல்லை என்றால்/ இவ்விரு பாடங்களில் புள்ளிகளும் மிகவும் மோசமான நிலையில் இருந்தால்
என்ன செய்வார்கள்? நாம் ‘ஏ’-க்கள் தயாரிக்கும் கும்பனிகளை அல்லவா நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அந்த மாணவன் இவ்விரு பாடங்களிலும் ‘ஏ’க்கள் போடும் தகுதியை இழந்துவிட்டால் என்ன செய்வது?
தமிழ்ப்பிரிவுக்கு மாற்ற முடியுமா …? இப்போதைக்கு முடியாது என்கிறார்கள். அதுவும் கல்வி
அமைச்சிடம் இருந்து எந்த ஒரு தெளிவான பதிலும் இப்போது வரை இல்லை. இப்படி ஒரு சிக்கலை
முன் வைக்கும் போது; எந்த ஒரு முன் யோசனையும் இன்றி; தெளிவான திட்டமிடலும் இல்லாமல்;
’ஓ …. மாற்றி கொள்ளலாமே!’ என்று நாளைக்கே ஒரு அறிக்கை கொடுப்பார்கள். ஆனால் மூன்று
நான்கு வருடம் டி எல் பி வகுப்பில் படித்து விட்டு, பிறகு தமிழ் பிரிவுக்கு மாறும்
அந்த மாணவனின் கல்வி தரம் மிக பெரிய கேள்வி குறியாக இருக்கும். அந்த மாணவனின் வீழ்ச்சிக்கு
யார் பொறுபேற்பது?
படிவம் நான்குக்கு செல்லும் போது பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் ஒரு மாணவனை Sains Stream-பிரிவுக்கு கொண்டு போய் சேர்க்க முடியுமா? முடியாது. ஒரு மாணவனின் படிவம் மூன்று தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தான் அந்த மாணவன் Sains Stream பிரிவுக்கு தகுதியானவனா இல்லையா என்பது தரம் பிரிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது பெற்றோர்கள் விருப்பத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பது தானே பொருள். எந்த அடிப்படையில் ஒரு மாணவன் டி எல் பி வகுப்புக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறான்? இதுவரை கல்வி அமைச்சிடம் இருந்தோ; பள்ளி நிர்வாகத்திடம் இருந்தோ ஏனையோரிடம் இருந்தோ எந்த ஒரு பதிலும் இல்லை. இந்த டி எல் பி வகுப்புகள் அமல்படுத்துவதில் பள்ளிகளுக்கு தரம்/quality/திறன் நிர்ணியித்த அமைச்சு, கற்று கொள்ளும் மாணவனுக்கு எந்த ஒரு அடிப்படை விதியும் வைக்கவில்லை. இருக்கும் ஒரே ருல்ஸ் பெற்றோர்களுக்கு விருப்பமா இல்லைய? விருப்பம் என்பது ஆசை. அது எப்படி திறன் ஆகும்?
டி எல் பி திட்டம் அமல்படுத்துவதால்
இன்னும் பல சிக்கல்கள்/பாதிப்புகள்/விளைவுகள். உண்டு ஆனால் நான் கருதும் மிக முக்கிய
சில்லகள்களாக நான் மேற்குறிப்பிட்ட அம்சங்களை பார்க்கிறேன்.
0 Comments