ஆசியான் டைகர்
# சமீபத்தில் வட கொரியா அதிபரின் மூத்த சகோதரர் மலேசிய மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆசியான் பிராந்தியத்தில் மலேசியாவின் செல்வாக்கு மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துலக ரீதியில் மலேசியாவின் பாதுகாப்பு செயல்பாடுகள் கேள்வி குறியாக்கப்பட்டிருக்கிறது.
# மலேசியாவில் இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. மலேசியா ஒரு crime transit நாடாக பல முறை பயன்படுத்த பட்டிருக்கிறது. எப்போதும் இல்லாத பதற்றம் இப்போது மட்டும் ஏன்? திறமையாக கையாள தெரியாத ஒரு பலவீனமான அரசாங்கத்தை உருவாக்கி வைத்துள்ளோம்.
# 1960-களில் புரூணை நாட்டின் சுல்தானை பதவியில் இருந்து அகற்றும் முயற்சியில் தோல்வி கண்ட புரூணை சுதந்திர போராளிகளுக்கு(The Brunei People’s Party) மலேசியா அடைக்கலம் கொடுத்தது. பிறகு இந்தோனேசிய நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
# 1986-களில் பிலிபைன்ஸ் நாட்டின் அதிபர் மார்கோஸ் ஹாவாயி-க்கு நாடு கடத்துவதற்கு முன் கோலாலம்பூரில் தான் மார்கோஸும் அவர் குடும்ப உறுப்பினர்களும் தங்க வைக்கப்படிருந்தனர். அவர்களில் சிலர் நிரந்தரமாக மலேசியாவிலேயே தங்கி விட்டார்கள்.
# 75-70-களில் க்மேர் முரட்டு படைகள் கம்போடியாவை வளைத்துக் கொண்ட போது; கம்போடிய அரச குடும்பத்து உறுப்பினர்களுக்கு மலேசியாதான் அடைக்கலம் கொடுத்தது. மறைந்த கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹாநவுக்-க்கின் புதல்வி கம்போடிய தூதராக நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து 1994-ல் இன்னொரு புரட்சி நடந்த போது மன்னர் சிஹாநவுக் மற்றொரு புதல்வர் வலுகட்டாயமாக மலேசியாவிக்கு நாடு கடத்தப்பட்டார். பிறகு இங்கிருந்து பிரான்ஸ் போனார்.
# மல்டிவ்ஸ் நாட்டில் 90-களில் அரசியல் கொந்தளிப்பு நடந்த போது; அந்த நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்கள் மலேசியாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் மல்டிவ்ஸின் நாசாக்கி குரூப்பின் உரிமையாளர் ஷாக்கி அடங்குவார். பிறகு அவர் குடும்பத்து உறுப்பினர் மல்டிவ்ஸ் தூதராக மலேசியாவில் பணியாற்றினார்.
# Moro National Liberation Front(MNLF) மற்றும் The Pattani United Liberation Organization இயக்கங்களின் முக்கிய தலைவர்கல் 60-70-களில் மலேசியாவில் தங்கி இருந்தார்கள். MNLF பயிற்சி முகாம் ஒன்றை சபாவில் அமைத்திருந்தார்கள்.
# தென் தாய்லாந்தின் முஸ்லிம் பிரிவினைவாதிகள் கெடா, பேராக், பெர்லிஸ், கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் நடமாடி வந்துள்ளார்கள்.
# பட்டாணி பிரிவினைவாதி தலைவர்களில் ஒருவர் வான் கடிர் அனைத்துலக இஸ்லாம் பலகலைகழகம், கோம்பாக்கில் விரிவுரையாளராக பணியாற்றிய சம்பவமும் நடந்துள்ளது.
# 90-களில் ஆச்சே சுதந்திர
இயக்கம்(Gerakkan Aceh Merdeka) கெடாவை தன் தளமாக கொண்டு செயல்ப்பட்டு வந்தது. 2000-த்தில் ஆச்சே பிரிவினைவாத தலைவர் தெங்கு டான் சூல்பிக்ரி(Teuku Don Zulfahri) அடையாளம் தெரியாத நபர்களால் கோலாலம்பூரில் சுட்டு கொல்லப்பட்டார்.
# 84-களில் ராஜிவ் காந்தி சம்பந்தப்பட்ட இந்தியாவின் மிக முக்கிய ஊழல் வழக்கான போபர்ஸ் ஊழல் வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு; இந்திய நாட்டு சி.பி.ஐ-யால் தேடப்பட்டு வந்த; இத்தாலி நாட்டுகாரர் ஒத்தோவி குவாத்ரோச்சி மலேசியாவில் தஞ்சம் புகுந்தார். பல வருடங்களாக இந்தய அரசாங்கம் மலேசிய அரசாங்கத்திடம் குவாத்ரோச்சியை ஒப்படைக்க சொல்லி கேட்டு வந்தது. கடைசி வரையில் மலேசிய அரசாங்கம் குவாத்ரோச்சியை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கவே இல்லை. பிறகு இங்கிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு போய் அங்கேயே இறந்து போனார்.
# அமேரிக்காவின் இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட திட்டத்துக்கு; மலேசியா சபா மாநிலத்தில் தான் நிதி கைமாற்றப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதன் பிறகு தான் மலேசியா பாஸ்போர்ட் அமேரிக்கா நாட்டிலும் மேலும் சில ஐரோப்பிய நாட்டிலும் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
# கடந்த காலத்தில் இவ்வளவு சம்பவங்கள் நடந்திருந்தாலும் இங்கு ஒரு பதற்ற நிலை ஏற்படவில்லை. ஆனால் இப்போது பதற்றமாகவே உள்ளது. காரணம் திறமையற்ற; பலவீனமான அரசாங்கம்.













0 Comments