Friday, 10 March 2017

கிம் ஜோங் நாம்- படுகொலையும் அதன் பிண்ணனியும் பதற்றமும்.


# வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் யுன்(Kim Jong-Un,33)-இன் சகோதரர் கிம் ஜோங் நாம்(Kim Jong Nam,46)  – கடந்த Feb 13-ம் திகதி  கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.  இந்த படுகொலை தொடர்ச்சியாக மலேசியாவுக்கும் வடகொரியாவுக்கும் நடுவில் ஒரு பதற்றமான கொந்தளிப்பு நிலையை உருவாக்கி விட்டது.

# கிம் ஜோங் நாம் கடந்த பிப்ருவரி 13-ம் திகதி மாக்கவ்(Macau), சீனா செல்வதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்தார். மாக்காவ் செல்வதற்கு காத்திருந்த வேளையில் The Nerve Agent XV என்கிற மிக ஆபத்தான ரசாயன மருந்தால் முகத்தில் ஸ்பிரே செய்யப்பட்டு கொல்லப்பட்டார். The Nerve Agent XV என்கிற இந்த ராசாயன ஆயுதம் வட கொரியாவுக்கு சொந்தமானது. இந்த ரசாயன ஆயுதம் அனைத்துலக ஐக்கிய நாட்டு சபையால் பயன்பாட்டுக்கும் தயாரிப்புக்கும் தடைசெய்யப்பட்டது. 

# இந்த ரசாயன மருந்தால் ஸ்பிரே செய்யப்பட்ட அடுத்த 15-20 நிமிடத்திலேயே; மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்; ஆம்புலன்சிலேயே மாரடைப்பு ஏற்பட்டு கிம் ஜோங் நாம் மரணமடைந்தார்.

# இந்த சம்பவத்தை படுகொலையாக கருதி மலேசியா போலிஸ் தன் நேரடி அதிகாரத்தில் விசராணையை தொடங்கியது. இந்த படுகொலை தொடர்ப்பில் எட்டு வட கொரியர்கள், ஒரு வியாட்னாம் பெண் மற்றும் ஒரு இந்தோனசிய பெண் சம்பந்தப்படிருப்பதாக மலேசிய போலிஸ் தன் முதல் கட்ட விசாரணையில் கண்டு பிடித்தது.

# இந்த கொலையோடு சம்பந்தப்பட்ட எட்டு வடகொரியர்களில் நான்கு பேர் வட கொரியாவுக்கு தப்பி ஓடிவிட்டனர். இரண்டு வடகொரியர்களை வட கொரியா தூதரகம் அகதிகளாக ஏற்றுக் கொண்டு தூதரகத்தின் உள்ளே அடைக்கலம் கொடுத்தது. இன்னொரு வட கொரியரை மலேசிய போலிஸ் கைது செய்து பிறகு போதிய சாட்சியங்கள் கை கொடுக்காமல் விடுவித்தது. அந்த எட்டாவது வடகொரியர் காணமல் போய் விட்டார். அவருக்கு என்ன ஆனது ஏது ஆனது என்று இப்போது வரை மர்மமாக உள்ளது.

# முகத்தில் ஸ்பிரே அடித்து கிம் ஜோங் நாம்மை கொலை செய்த முதன்மை கொலை குற்றவாளியாக சித்தி அய்ஷா, வயது 25 என்கிற இந்தோசிய பெண்ணையும்; டோயோன்தி உவோங், வயது 28 என்கிற வியாட்னாம் பெண்ணையும் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார்கள்.

# இவ்விரு பெண்களும் தங்கள் குற்றத்தை மறுத்து உள்ளார்கள். Funny Prank Video -எனப்படும் தொலைகாட்சிக்கு தயாரிக்கும் கேளிக்கை விளையாட்டு நிகழ்வு என்று கூறி தங்களை ஒப்பந்தம் போட்டு அழைத்து வந்ததாகவும்; தாங்கள் Funny Prank Video நிகழ்ச்சி என்றே நம்பி ஸ்பிரே அடித்ததாக தங்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்கள்.

# இவர்கள் இருவரின் நாட்டின் அரசாங்கமும் இவர்களுக்கு உதவ இங்குள்ள தூதரகத்தின் மூலம் முன் வந்துள்ளது. இவர்களுக்காக தங்கள் நாட்டின் சார்ப்பில் வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.

# கிம் ஜோங் நாம்மின் போஸ்ட் மார்ட்டம் நடக்கும் போது வட கொரியா அதிகாரிகளும் உடன் இருக்க வேண்டும் என வட கொரிய தூதரகம் முதல் கோரிக்கையை முன் வைத்தது. மலேசியா அரசாங்க இந்த கோரிக்கையை நிராகரித்தது. பிறகு வட கொரிய நிபுணர்கள் தனி போஸ்ட் மார்டம் செய்ய அனுமதி கேட்டது. மலேசியா மீண்டும் மறுத்தது.

# The Nerve Agent XV- Chemical sample கொடுக்க சொல்லிக் கேட்டது. முடியாது என மலேசிய அரசாங்கம் மறுத்தது.

# வட கொரியர்கள் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுப்பட்டிருப்பதாக மலேசிய போலிஸ் குற்றம்சாட்டியது. இதை மிக கடுமையாக வட கொரிய தூதரகம் மறுத்ததோடு தொடர்ந்து மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கைகள் வெளியிட ஆரம்பித்தது.

# முதல் கட்டமாக மலேசிய அரசாங்கம் தென் கொரியாவுடன் கூட்டு சதியில் இணைந்து வட கொரியா மீது குற்றம் சாட்டுவதாக தூதரகம் கூறியது. தங்கள் நாட்டின் அரசாங்கதை கவிழ்ப்பதற்கு அந்நிய சக்திகளோடு கூட்டு சதியில் மலேசியா ஈடுப்பட்டிருப்பதாக வட கொரிய தூதரகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டது. மலேசிய போலிஸ் ஒரு தலைபட்சமாக தங்கள் விசாரணையை நடத்தி வருவதாக மேலும் மேலும் குற்றம் சாட்டியது.

# இந்த குற்றசாட்டுகளில் உண்மை இல்லை என்றும் வட கொரிய தூதரகம் பொய் குற்றசாட்டுகளையும்; அத்து மீறி செயல்படுவதாகவும் மலேசிய வெளியிறவு அமைச்சு கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிழமை(28 Feb) மாலை 5 மணிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வட கொரியா தூதரகத்துக்கு மலேசிய வெளியிறவு அமைச்சு கால அவகாசம் கொடுத்தது.

# வட கொரியா தூதரகம் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக தொடர்ந்து மலேசிய அரசாங்கத்தின் மீதும் மலேசிய போலிஸ் படை மீதும் குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து வட கொரிய தூதரை 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாரு மலேசியா அரசாங்கம் ஆணை பிறப்பித்தது.

# இதன் உட்சகட்ட பதற்றம் தான் வடகொரியாவில் மலேசியர்கள் பிணைபிடிப்பும்; பதில் நடவடிக்கையாக வட கொரியர்கள் மலேசியாவில் பிணைபிடிக்கப்பட்டதும்.

# தென் கொரியர்கள் போல் வட கொரியர்கள் அதிகம் பேர் நம் நாட்டில் கிடையாது. தூதரக அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், சில உயர் தொழிலாளிகள், சில தொழில் முனைவர்கள் என ஆயிரத்துக்கும் குறைவான வட கொரியர்களே மலேசியாவில் தங்கி உள்ளார்கள். இவர்களில் அதிகம் பேர் சரவாக் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். சரவாக் மாநில அரசாங்கம் வட கொரியாவோடு நிலக்கரி சுரங்க சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை நேரடியாக செய்துக் கொண்டது. இதுவே மலேசியாவுக்கும் வட கொரியாவுக்கும் இருக்கும் மிக பெரிய ஒப்பந்தம்.

# இந்த பதற்றமான சூழ்நிலையில் யார் இந்த கிம் ஜோங் நாம்? இந்த கொலையின் பிண்ணனியில் இருக்கும் மர்மம் என்ன? என ஓரளவுக்கு நமக்கு தெரிந்த தகவல்களை வைத்து பார்க்கும் போது; இது வட கொரியர்களின் திட்டமிட்ட படுகொலையே என யூகிக்க முடிகிறது. கிம் ஜோங் நாம் யார் என்று பார்ப்பதற்கு முன்; இந்த கொலையில் இருக்கும் சில மர்ம முடிச்சுகளைப் பார்ப்போம்.

# The Nerve Agent  XV – Chemical Weapon வட கொரியா நாட்டுக்கு சொந்தமானது. அனைத்துலக நாடுகளில் இது தடை செய்யப்பட்ட கெமிக்கல். இது எப்படி கொலைக்காரர்களுக்கு கிடைத்தது?

# இந்த கொலையில் சம்பந்தப்பட்ட எட்டு வட கொரியர்களில் நால்வர் வட கொரியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்று முன்பு பார்த்தோம் அல்லவா ….? அந்த நால்வர் யார் என்றால்; மிக பெரிய வட கொரியா அரசாங்க அதிகாரிகள்.
  •   .    Hyon Kwong Song, Second Secretary – வட கொரியா தூதரகத்தின் மிக உயரிய அதிகாரி. வடகொரியா உள்துறை பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி. வட கொரியாவின் ரகசிய போலிஸ்
  •             Ri Jae-Nam – A State Security Agent of North Korea Government.
  •            Ri Ji-Kyon – A Foreign Ministry Official of North Korea Government
  •       Hong Song-Hae – Foreign Ministry Official of North Korea Government.

# இந்த நால்வரும் கொலை நடந்த உடனேயே கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வட கொரியாவிற்கு கிளம்பி போய் விட்டனர்.

# Ri Jae-Nam மற்றும் Ri Ji-kyon இருவரும் வியாட்னாம் பெண் டோயோந்தி யுவாங்-ங்கை இந்த கொலை Plot-க்குள் கொண்டு வந்தவர்கள்.

# Hong Song Hae இந்தோனேசியா பெண் சித்தி அய்ஷாவை இந்த Plot-குள் கொண்டு வந்தார்.

# Kim Uk-il – இவர் Air Koryo அதிகாரி. கைது செய்யப்பட்டு பிறகு போதிய ஆதராங்கள் இல்லை என மலேசிய போலிஸ் படையால் விடுவிக்கப்பட்டார்.

# அடையாளம் தெரியாத இன்னும் இருவரை வட கொரிய தூதரகம் அகதி நிலையில் தூதரகத்தின் உள்ளே அடைக்கலம் கொடுத்துள்ளது.

# இன்னும் ஒருவர் காணாமல் போய்விட்டார். அவரை பற்றி எந்த தகவலும் போலிஸாருக்கு கிடைக்கவில்லை.

# தற்போது வட கொரியா நாட்டை ஆட்சி செய்து வரும் கிம் ஜோங் யுன்(Kim Jong Un) -இன் மூத்த சகோதர்தான் கொலை செய்யப்பட்ட கிம் ஜோங் நாம். இவர்களின் தந்தை பெயர் கிம் ஜோங் இல்(Kim Jong-il). வடகொரியாவின் மிக கொடுரமான ஆட்சியாளர். 1993 தொடங்கி 2011 வரை ஆட்சி செய்தார்.  ஐந்து மனைவிகள். முதல் இரண்டு மனைவிக்கும் ஆளுக்கு ஒரு பெண் குழந்தைகள் பிறந்தன. 1960-களில் வட கொரியாவில் மிகவும் பிரபலமான நடிகை சோங் ஹை ரிம்(Song Hye-rim) என்பவரை மூன்றாவது மனைவியாக மணந்துக் கொண்டார். இருவருக்கும் பிறந்த முதல் ஆண் குழந்தைதான்; இப்போது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட கிம் ஜோங் நாம்.

# அதன் பிறகு கிம் ஜோங் இல், கோ யோங் ஹுய்(Ko Yong-hui) எனும் ஜாப்பனிய கலப்பு பெண்ணை நான்காவதாக மணந்துக் கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது. அதில் இரண்டாவது ஆண் குழந்தைதான் தற்போதைய வட கொரியாவின் ஆட்சியாளர் கிம் ஜோங் யுன்.

# ஆரம்பத்தில் தன் தந்தை கிம் ஜோங் இல்-க்கு பிறகு கிம் ஜூல் என்றழைக்கப்படும் கிம் ஜோங் நாம் தான் அடுத்த அதிபர் என பரவலாக பேசப்பட்டு; மிகவும் பிரபலமாக இருந்தார். ஆனால் 2001-ம் ஆண்டில் டோக்கியோ டிஸ்னிலெண்ட்-க்கு தன் மகனை திருட்டு விசாவில் அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு பிறகு சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு கிம் ஜோங் நாம் அரசியலில் இருந்து முற்றிலும் விலக்கப்பட்டார்.

# 2011-ம் ஆண்டில் இவர் தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இவரின் மாற்றாய் தாய் வழி கடைசி தம்பி கிம் ஜோங் யுன் அரசாங்கத்தின் இரண்டாம் நிலையை அடைந்து தன் தந்தையின் இடத்தில் நின்று ஆட்சி செய்ய தொடங்கினார். 2013-ம் ஆண்டு தன் தந்தையின் மறைவுக்கு பிறகு கிம் ஜோங் யுன் தன்னை அதிகாரபூர்வ அதிபராக பிரகடனப்படுத்திக் கொண்டார்.

# கிம் ஜோங் யுன் பதவிக்கு வந்த 2013 தொடங்கி இன்று வரை 140 உயர் ராணுவ அதிகாரிகள், அரசாங்க உயர் அதிகாரிகள் என பலரை மிகவும் கொடுரமான முறையில் தூங்கு தண்டணை என்கிற பெயரில் கிம் ஜோங் யுன்-னால் கொலை செய்யபட்டார்கள்.

#2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை கிம் ஜோங் நாம்-மின் தாய் வழி சொந்தகாரர் ஜோங் சோங் தாயிக்(Jong Song-thaek) மலேசியாவிற்கான வட கொரிய தூதராக பணியாற்றினார். இந்த காலக்கட்டங்களில் கிம் ஜோங் நாம் அடிக்கடி மலேசியாவுக்கு வர தொடங்கினார். புக்கிட் டாமன்சாராவில் இரண்டு மாடி வீடு ஒன்றை வாங்கி இங்கே தங்க ஆரம்பித்தார். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இவருக்கு காதலிகள் இருந்தார்கள்.

# புக்கிட் டாமன்சாரா மற்றும் புக்கிட் பிந்தாங் பகுதிகளில் இருக்கும் பார்களுக்கு தான் கிம் ஜோங் நாம் பொதுவாக போவது வழக்கம். அவருக்கு இங்குள்ள பார்களின் மீது மிகுந்த ப்ரியம் உண்டு.

# 2013-ம் ஆண்டு மலேசியாவில் பணியாற்றிய கிம் ஜோங் நாம்-மின் உறவினர் ஜோங் சோங் தயிக் வடக்கொரியாவுக்கு திருப்பி அழைப்பப்பட்டார். வட கொரியா அரசாங்கத்துக்கு எதிராக செயல்ப்பட்டதாகவும்; அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு; ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதில் ஜோங் சோங் தயிக்-யின் பேரப்பிள்ளைகளும் அடங்குவார்கள்.

# இந்த களை எடுப்பு நடவடிக்கை என்கிற பெயரில் உயர் ராணுவ அதிகாரிகளையும் உயர் அரசாங்க அதிகாரிகளையும் அவர்கள் குடும்பத்தையும் கொன்று குவித்த நடவடிக்கை தென் கொரியாவை உலுக்கியது.

# ஜோங் சோங் தயிக் தூக்கிலிட பட்ட 2013-க்கு பிறகு கிம் ஜோங் நாம் மலேசியாவுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். அப்படியே வந்தாலும் பாடிகார்ட் இல்லாமல் வரமாட்டார்.  தன் பாதுகாப்பு கருதி எப்போதும் பாடிகார்ட் கூடவே வைத்திருப்பார்.

# இதன் பிறகு அவரின் பெரும்பாலும் வாழ்க்கை மாக்கவ், சீனா நகரில் தான் இருந்தது.


# கடந்த சில ஆண்டுகளாக சீனா வட கொரியாவின் மீது நல்ல நட்பில் இல்லை. அப்படி ஒரு வேளை தற்போதைய ஆட்சியாளர் கிம் ஜோங் யுன் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால்; சீனா, தென் கொரியாவின் உதவியோடு கிம் ஜோங் நாம்-மை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் தான் கடந்த மாதம் 13-ம் திகதி கிம் ஜாங் நாம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

Share this


2 Comments
avatar

அருமையான ஆய்வு கட்டுரை.

Reply

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews