சாமிகளின் Transition
எல்லா எஸ்டேட்டிலும் அம்மன் சம்பந்தப்பட்ட கோவில்கள் தான் இருக்கும் ..... அம்மன் என்றால் மாரியம்மன், கருமாரியம்மன் வகை அம்மன்கள், அப்படியே, பார்டர் செக்குரிட்டியாக காட் ஃபாதர் கணக்கா, கையில் கத்தியோடும் சூலாயுதத்தோடும் எஸ்டேட் பார்டரில் முனிஸ்வரர், முனியாண்டி, சங்கிலி கருப்பர் கோவில் களும் இருக்கும்.
அப்போ எல்லாம் கோவில்களில் திருவிழா நடக்கும் ....... அந்த திருவிழாக்கள் ரொம்பவும் என்ஜாய்மெண்ட் மோமெண்ட் ...... ஏழு எட்டு நாட்கள் சைவமாகவும் பத்தியமாகவும் இருந்து அலகு குத்துவார்கள். காவடி தூக்குவார்கள். தீமிதி நடப்பார்கள். பெரிய பெரிய கத்தி மீது நின்று கொண்டு டிஸ்கோ டான்ஸே ஆடுவார்கள். கரகம் அழைப்பார்கள். குறி சொல்லுவார்கள். அருள்வாக்கு கேட்பார்கள். இந்த வழக்கம் எல்லாம் கொஞ்ச கொஞ்சமாக வழக்கொழிந்து போனது .....
கொஞ்சம் தாண்டி டவுன் வந்தால், செட்டியார்களும் இலங்கை தமிழர்களும்(சிலோனிஸ்) ஆதிக்கம் இருப்பதால் முருகன் அல்லது விநாயகர் கோவில்கள் இருக்கும். தெலுங்கர்களின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் பெருமாள் அல்லது ராமர் சம்பந்தப்பட்ட கோவில்கள் இருக்கும் ..... அபூர்வமாக சில சிவன் கோவில்கள் இருக்கும்.
அப்புறம் பார்த்தா ஊருக்கு ஊர் சாமியாடிகள் இருப்பார்கள் ...... மந்திரம் செய்யறது, பில்லி சூனியம், மந்திரிச்சு கட்றது, காதலை சேர்த்து வைக்கிறது, பிரிச்சு வைக்கிறது ..... ரொம்ப தாமாசா இருக்கு ...... நடு ராத்திரியில் நூல் கட்டி முட்டைக்குள் ஊசி ஏத்துவாங்க ..... அது எல்லாம் திகில் ராத்திரிகள் இவ்வளவுதான் மலேசியாவின் கோவில்கள், பக்தி நிலைகள் .......
ஆனால் சமீப காலமாக சில அதிசயங்களை நான் இங்கு பார்க்கிறேன். புதுசு புதுசா பாபாக்கள், செண்டர்க்ள் என்கிறார்கள் ........ குருஜி மாத்தாஜி என்கிறார்கள் ......
காலம் காலமமாக நாம் வணங்கிய தெய்வங்களை விடுத்து புது புது சாமி பக்கம் போய் சுத்துகிறாரக்ள் ...... மழையிலும் வெயிலிலும், பசியிலும் பஞ்சத்திலும், கஷ்டத்திலும் நட்டத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் நம் மூதாதையர்கள் நம்பிகையாய் வாழ்ந்த மகா சக்திகள் இன்று பொய்யா போச்சா .......?
0 Comments