Friday, 23 December 2016

தர்மா மணி (Darma Money or Darma Fund) என்கிற ஒரு சேமிப்பு தொகை.

# 1870-களுக்கு பிறகு Indian Immigration Department ஆரம்பிக்கப்பட்டு, AJG Baker, Indian Immigration Agent-ஆக நியமிக்கப்பட்டார். 

# தமிழ் நாட்டிலிருந்து தமிழர்களை கூலி தொழிலாளிகளாக கொண்டுவர இந்த சிஸ்டம் அறிமுக படுத்தப்பட்டது. 

# இந்த முறையின் கீழ் கொண்டுவரப்பட்ட தமிழர்களுக்கு போதுமான வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டது. சமபள முறை, வீட்டு வசதிகள், கல்வி கூடங்கள், மருத்துவ வசதிகள் இன்னும் ஏனைய சலுகைகள் மிக தெளிவாக விவாதிக்கப்பட்டு, 1870-களுக்கு முந்தைய பழைய முறை நிராகரிக்கப்பட்டு புதிய விதிமுறையின் கீழ் தமிழர்கள் மலாயாவில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர். 

# Madras Governor மற்றும் The Straits Settlement Governor இவர்களின் நேரடி பார்வையில் 1870-களுக்கு பிறகு தமிழர்கள் மலாயாவிற்கு கொண்டுவரப் பட்டார்கள். 

# இப்படி கொண்டு வரப்பட்ட தமிழர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு காசை பிடித்து வைத்தார்கள் அப்போதைய பிரிடிஷ் அரசாங்கத்தினர். 

# இப்படி நமது தாத்தா பாட்டியின் சமபளத்தில் இருந்து பிடித்து வைத்த சேமிப்பின் பெயர்தான் தர்மா மணி அல்லது Darma Fund(Darma Money). 

# Indian Immigration Department(1890) மூலம் அழைத்துவரப்பட்ட மலாயா தமிழர்கள் தங்கள் தாயகம் திரும்பி போக எண்ணம் ஏற்பட்டால்; இந்த தர்மா மணி(Darma Fund) பயன்படுத்தி தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பி போக ஏதுவாக இருக்க இந்த தர்ம மணி(Darma Fund) ஆரம்பிக்கப்பட்டது. 

# 1945-இல் Jus Soli Law, அதன் பிறகு 1948-இல் Perlembagaan Negeri Negeri Pesekutuan Melayu அறிமுகப்படுத்த பட்ட பிறகு, நாம் மலாயாவின் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, இங்கேயே நிரந்தரமாக தங்கிக் கொள்ள ஏதுவாக பிராஜா உரிமை கொடுக்கப்பட்டது. 

# So .... நாம் திரும்பி நம் தாத்தா பாட்டியின் தாயகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் இந்த தர்மா மணி(Darma Fund) 1958-வரை நம் தாத்தா பாட்டியின் சம்பளத்தில் வெட்டப்பட்டு வந்தது. 

# 1969- இல் இன கலவரத்தில் கணிசமான தமிழர்கள் தங்கள் தாயகம் நோக்கி திரும்பி விட்டனர். ஆரம்ப காலத்தில், நாம் மலேசியாவை பொருள் தேடி வந்த நாடாக; இது நமக்கு சொந்தம் இல்லாத மண் என்கிற நினைப்பில் வாழ்ந்து வந்தோம். ஆகவே கலவரம் வெடித்த போது, பெரும்பாலான தமிழர்கள் நாட்டை காலி செய்து விட்டு போய் விட்டனர். குறிப்பாக Town Area-க்களில் வாழ்ந்த தமிழர்கள். 

# 1969-களில் இந்த தர்மா மணி(Darma Fund) பயன் படுத்தி தமிழர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பி சென்றதாக சில குறிப்புகளும் சில கிழவர்களின் வாக்கு மூலமும் தெரிய படுத்துகிறது. 

# மிச்சம் இருந்த பெரும் அளவிளான தர்மா மணி(Darma Fund) எப்படியோ; இங்கே அங்கே ரவுண்டு அடித்து கடைசியா எப்படியோ இந்திய தூதரகத்தில் போய் சிக்கிக் கொண்டது. அது ஏன் இந்திய தூதரகத்திடம் போய் சேர்ந்தது என தெரியவில்லை. அது ஒரு இருண்ட காலம். 

# 1997-இல் நாடு மிக மோசமான பொருளாதர சரிவில் இருந்தபோது அப்போதைய பிரதமர் மகாதீர் அந்த பணத்தை மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் படி கேட்டார். 

# இந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கு எல்லா சலூகைகளும் மலேசிய அரசாங்கம் செய்து தருகிறது; மலேசிய தமிழர்கள் மலேசிய குடிமக்கள். அந்த பணம் மலேசிய தமிழர்களுக்கே சொந்தம்; இந்தியா அரசாங்கத்துக்கும் அந்த பணத்திற்கும் சம்பந்தம் இல்லை என காரணம் கூறி மகாதீர் அந்த பணத்தை இந்திய தூதரகத்தில் இருந்து மீட்க முயற்சி எடுத்தார். 

# ஆனால் நமது சூரப்புலி தலைவர்களான சாமிவேலு, ஆதிகுமணன், சுப்ரமணியம் போன்றோரின் கடுமையான எதிர்ப்பால்; மகாதீர் அந்த முயற்சியை கிடப்பில் போட்டார். அதோடு அதை பற்றி கவலையும் படவில்லை. 

# டாக்டர் வி. டேவிட் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தர்மா மணி(Darma Fund)யை மீட்கும் முயற்சியில் மிக தீவீரமாக இருந்தார். அவர் காலத்துக்கு பின் அது அப்படி செல்லரித்து போனது. 

# சில வருடங்களுக்கு முன் பேராசிரியர் ராமசாமி(பினாங்கு துணை முதல்வர்) இந்த தர்மா மணியை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து பேப்பரில் எல்லாம் பேட்டி கொடுத்தார். அதோடு சரி. 

# மகாதீர் கேட்ட சமயத்திலாவது அந்த பணத்தை கொடுத்திருக்கலாம். அது நமது பணம். நம் தாத்தா பாட்டியின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பணம். அது ஞாயமாக நமது அரசாங்கத்திடம்தான் இருக்க வேண்டும். நமது மங்குனி தலைவர்கள் அதையும் கெடுத்தார்கள். 

# அந்த பணம் உயிரோடு இருக்கும் வரை நாம் இந்த நாட்டை விட்டு போக வேண்டும் என்கிற கடைசி நோக்கமும் இருந்துக் கொண்டுத்தான் இருக்கும். 

# ஒரு விசயத்தை நாம் தெளிவாக உணர்ந்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கும் நமக்கும் சம்பந்தம் கிடையாது. நாம் மலேசியர்கள். நாம் வேண்டுமானாலும் நம் தாத்தா பாட்டியின் ஊர் இந்தியா என்று சொல்லி பெருமை பட்டுக் கொள்ளலாம். ஆனால் அந்த தாத்தா பாட்டியின் ஊருக்கு செல்ல வேண்டுமானாலும் 164 வெள்ளி கப்பம் கட்டினால்தான் போக முடியும். இந்தியர்களுக்கு நாம் எப்பாதும் அன்னியர்கள் தான். அப்படியே நாம் இந்தியா செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும்; நம்மை இலங்கை தமிழர்கள் போல் அகதிகள் கூடாரத்தில் வைத்து அடைப்பார்களே ஒழிய; நமக்கு இந்திய பாஸ்போர்ட் கொடுத்து சிவப்பு கமபளம் எல்லாம் போட மாட்டார்கள். 

# நமக்கு துளியும் சம்பந்தம் இல்லாத இந்திய தூதரகத்தில்; நமக்கு சொந்தமான பணம் இருக்க வேண்டிய அவசியம் என்ன ......? 

# 120 வருடங்களில் அந்த பணத்தின் மதிப்பு இப்போ என்னவாக இருக்கும் ....? 

# இப்போது வரை அந்த பணத்தின் கணக்கு யாரும் நமக்கு காட்டியதே இல்லை. மாதாமாதம் வெட்டிய மொத்தம் பணம் எவ்வளவு....? பிரிடிஷார் சார்ப்பில் சேர்ந்த தொகை எவ்வளவு ....? இத்துனை வருடத்தில் அதன் வட்டி எவ்வளவு என எந்த கணக்கும் யாருக்கும் தெரியாது. 

# அந்த பணத்தை மீட்டெடுக்க வேண்டும். அந்த பணத்தை கொண்டு நம் மலேசிய தமிழர்களின் உயர்வுக்கு பயன்படுத்தலாம். கல்வி கடனுதவி வழங்கலாம். ஆனால் ஒன்று ... எந்த காரணத்துக்கு கொண்டும் அது மா இ கா காரர்களின் காண்ட்ரோலில் மட்டும் போய்விட கூடாது. 

பி.கு.
# தர்மா மணி(Dharma Fund) குறித்து நான் எழுதிய கட்டுரையை படித்து விட்டு  நம் முகநூல் நண்பர் ஒருவர் சில குறிப்புகளை சொன்னார். 

# ரொம்பவும் அதிர்ச்சியான குறிப்புகள். 

# தர்மா மணி என்பது நம் மக்கள் வழங்கிய வழக்கு மொழி. தென்னிந்தியர் சேமநிதி என்பது தான் சரி. ஆங்கிலத்தில் South Indian Labour Fund(SILF) என அழைக்கப்பட்டது. 

# 1999-இல் இந்த நிதி கலைக்கப்பட்டு விட்டது என்றும் கூறினார். இதற்கு உதவியாக இருந்த சாமிவேலு மற்றும் மா இ காவிற்கு நன்றி கடனாக 5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாகும் மேலும் கூறினார். 

# 1999-இல் 6.07 ஏக்கர் நிலமும் 2.36 மில்லியன் ரொக்கமுமாக சேர்த்து 5 மில்லியன் மா இ காவிற்கு சாமிவேலுவின் மூலம் கொடுக்கப்பட்டது. 

# அந்த பணத்தில் நிபோங் திபாலில் இந்திய மாணவர்கள் பயன் பெறும் வகையில் பயிற்சி கல்லூரி ஒன்று கட்ட அப்போதைய மகாதீர் அரசாங்கம் நடிவடிக்கை எடுத்ததாகவும் கூறினார். 

# இதில் ஒரு முரண்பாடு உண்டு. நிபோங் திபால் ஜாவி எனும் இடத்தில் ஆறுமுக பிள்ளையின் பெயரில் தனியார் கல்லூரி அல்லவா கட்டப்பட்டது. 

# அப்படியே இது உண்மையா இருந்தா; இந்த காசையுமா திருடி தின்னுட்டிங்க.......? மா இ காவுக்கு தான் கொள்ளையடிக்க நிறைய வழிகள் இருக்கே. இவ்ளோ பாவத்தோடு இந்த காசையும் திருடி என்னத்தை கட்டிக் கொண்டு போக போகிறீர்கள் ......? 

# எனக்கு மூணு கேள்வி இருக்கு....? 
1. யாரை கேட்டு இந்த நிதியை கலைத்தீர்கள் ....? 
2. கலைக்கும் போது அதன் மதிப்பு என்ன ....? 
3. உங்க திருட்டு தனத்துக்கு ஒரு அளவே இல்லையா ....? 

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews