அடிரடியாக துணை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நீக்கம். இது ஏன் .....?
1. முகைதீன் அடுத்த பிரதமர் ஆவதில் சில/பல சிக்கல்கள் உண்டு.
2. முகைதீன் மகாதீர் பேச்சை மீறி எதுவும் செய்யமாட்டார். அவர் ஒரு கை பொம்மையாக இருந்துக் கொண்டு; மகாதீர் ஆட்சியே நடக்கும். இது நஜிப்புக்கு சாதகமான ஒன்று அல்ல. இந்த சூழல், நஜிப்பை சிறை வரை கொண்டு செல்லலாம்.
3. ஆரம்பத்தில் இருந்தே ஹமிடிக்கும் முகைதீனுக்கும் அப்படி ஒன்றும் நட்பான உறவு கிடையாது. இந்த பட்சத்தில் முகைதீன் பிரதமராகவும் ஹமிடி துணை பிரதமராகவும் வருவது நஜிப்பின் 1IMDB வழக்கு துரித படுத்தி, நஜிப்பை உள்ளே தூக்கி போடுவது ஏறத்தால நடக்கும். நஜிப் மட்டும் இல்லை மேலும் சில அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் தலையும் உருளும்.
4. ஹிசாமுடின் துணை பிரதமர் ஆவதும் ரொம்ப சிக்கல். நடுவில் நந்தியாக சபி அப்டால். தற்போதைய நிலவரம் சரியான line up-ஆக இல்லை.
5. முகைதீன், ஹமிடி ..... அப்புறம் ஹமிடி, சபி அப்டால் அப்படி ஆகி விடும். அப்பவும் நஜிப்க்கு சாதகமான சூழல் இல்லை.
6. இந்த காபினெட் reshuffle நஜிப்பின் பாதுகாப்பை வலுபடுத்தி உள்ளது என்பதே எண்மை. பாதுகாப்பு என்றால் .... பிரதமராக நீடிப்பதற்கு அல்ல. பதவி விட்டு போக.
7. இங்குதான் துன் மகாதீருக்கு நஜிப் வைத்தார் செக். நஜிப் பதவி விட்டு போவது ஏறத்தால முடிவாகி விட்டது. நஜிப் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனம்.
8. யாரிடம் நாட்டை கொடுத்து விட்டு போனால்; நஜிப் தலைக்கு கத்தி வராது ....? நிச்சயமாக ஹமிடி மற்றும் ஹிசாமுடின் தான் நஜிப்பை காப்பாற்ற முடியும். அதற்கான ஏற்பாடுதான் இந்த கபினெட் மாற்றம்.

10. போகும் போது வைத்தார் பாருங்கள் ஒரு ஆப்பு; ஒத்து கொள்ளத்தான் வேண்டும் நஜிப்பும் கெட்டிகாரர்தான்.
11. UMNO-வையும் காப்பாற்ற வேண்டும்; அடுத்த பொது தேர்தலில் BN தோற்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்; அதே நேரத்தில் நஜிப்பையும் நீக்க வேண்டும். கத்தி மேல் மகாதீர்.
12. மகாதீரிடம் இருந்து தப்பிக்க வேண்டும்; ஜெயிலுக்கும் போக கூடாது; மனையையும் காப்பாற்ற வேண்டும்; நஜிப் தலைக்கு மேல் கத்தி.
13. ஆகவே நஜிப் எதற்கும் துணிந்து விட்டார் என்பதே இந்த அதிரடியாக துணை பிரதமர் மாற்றம். வாழ்வா சாவா எனும் நிலைக்கு நஜிப் தள்ளப்பட்டுள்ளார். தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் துணிசலாக இன்னும் சில முடிவுகளையும் எடுத்தே ஆக வேண்டும்.
0 Comments