மகாதீரும் ரோஸ்மாவும்.
சுபுகமான முறையில் தான் பதவி மாற்றம் நடக்க மகாதீர் விரும்பினார். நஜிப்பை பதவி விலக்கி, முஹிடினை கொண்டு வர எண்ணினார். இது எந்த குழப்படியும் இல்லாமல், சண்டை சச்சரவு இல்லாமல், சுமூகமாக நடத்த எண்ணினார்.
ஆனால் நஜிப் முஹிடீனை பதவி நீக்கி, ஹமிடியை துணை பிரதமராக கொண்டு வந்து, பிரச்சனையை வேறு மாதிரி திசை திருப்பி விட்டார்.
இதன் மூலம் நாட்டை பெரும் குழப்பத்துக்குள் கொண்டு வந்து விட்டார். நஜிப் பதவி விலகியே ஆக வேண்டும் என்று இன்னும் மிக உரக்கமாக அதிக குரல்கள் கேட்க துவங்கி விட்டது.
அசாலினா, அகமட் டாலன், பீட்டர் லோ போன்ற மிக சிறந்த முட்டாளை மந்திரிகளாக கொண்டு வந்திருக்கிறார். திடிரென சட்டத்துறை தலைவரை மாற்றி, தேசிய வங்கி தலைவருக்கு டாச்சர் கொடுத்து, புலனாய்வு போலிஸ் தலைவரை மாற்றி, பில்டீங்கை தீ பிடிக்க வைத்து, PAC உறுப்பினர்களை மந்திரியாக்கி, விசாரணையை முடக்கி, இன்னும் பல ரவுடியிசங்களை நடத்தி மக்களின் உச்சகட்ட வெறுப்பை சம்பாதித்துள்ளார்.
இப்போ UNMO என்கிற சேலை முள் மீது விழுந்திருக்கிறது, சேலை கிழியாமல் எடுக்க வேண்டும். மகாதீர் இதை எப்படி செய்ய போகிறார் என்றுதான் தெரியவில்லை. இதுவரை நஜிப்ப்பை மட்டும் தூக்க வேண்டும் என்று வேலை செய்துக் கொண்டிருந்தார் மகாதீர்.
இப்போ பூதம் கூட பிசாசு சேர்ந்துக் கொண்ட கதையாக, நஜிப், ஹமிடி இருவரையும் தூக்க வேண்டும்; UMNO-க்கும் எந்த சேதாரமும் வர கூடாது. இதை எப்படி செய்ய போகிறார், மகாதீர் என்ன செய்ய போகிறார் என்பது தான் இப்போது என்னுள் இருக்கும் பில்லியன் டாலர் கேள்வி.
வடக்குப்பட்டி ராமசாமிக்கு இன்னா தோணுதுனா ...... மகாதீரின் அடுத்த அட்டக் ரோஸ்மாவாகத்தான் இருக்க முடியும்.
0 Comments