பழைய கட்டுரை
#அப்போ அன்வார் பதவில் இருந்து தூக்கி எறியப்பட்டதுக்கும், இப்போ முகிடின் யாசினும் முக்ரிஸ் மகாதீரும் பதவில் இருந்து தூக்கி எறியப்பட்டதுக்கும் நிறைய வித்தியாசமும் காரணங்களும் உண்டு.
பலருக்கு இது புரியாமல் இருக்கு. குறிப்பாக இன்றைய இளையோர்களுக்கு.
நிறைய வேலையை இடுப்பை சுற்றி வைத்திருக்கிறேன். எல்லோரும் கேட்பதால், மிக சுறுக்கமாக சொல்கிறேன். நீண்ட கட்டுரை கிடையாது.
# அன்வார் பதவில் இருந்து நீக்கப்பட்டதற்கு அன்வார் தான் காரணம் ஒழிய வேறு எந்த காரணமும் கிடையாது. அன்வார் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட முனைந்தார்.
# அப்போதைய பிரதமர் மகாதீரின் மேல் கோடி கணக்கில் ஊழல் குற்றச்சாட்டோ, கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கோ மகாதீர் அன்வாரை தூக்கவில்லை.
# அன்வார் துணை பிரதமராக இருந்த காலகட்டத்தில் ஒரு இன கலவரம்(இந்து இந்தியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்) பினாங்கில் நடந்தது. இந்தியர்களுக்கு எதிராக அன்வார்கள் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்தது. அன்வார் துணை பிரதமராக காலகட்டத்தில் அவர் ஒரு தீவிர மதவாதியாகவும் இனவெறியராகவும் இருந்தார்.
# மலேசியவின் அரசியல் நிலை அன்வார் கைதுக்கு பிறகு பெரும் அளவில் மாற்றம் கண்டது. இதில் முக்கிய அம்சம், அன்வாரின் செயல்பாடுகளும் அவரின் போலி அரசியல் நாடகமும். அதன் பிறகு அன்வார் தன்னை ஒரு நடுநிலைகாரராகவும் நேர்மையானவராகவும் காட்டிக் கொண்டார். அன்வார் கைது நடவடிகைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாஸ் கட்சி மிக துரிதமாக வளர்ந்தது.
# அன்வார் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, கைது செய்யப்பட்ட காலத்தில் நாட்டின் பொருளாதர நிலை மிகவும் மோசமாக இருந்தது. சோரோஸ் மலேசியாவின் பணத்தை உலக சந்தையில் மிக குறைந்த விலையில் விற்று, மலேசியாவின் நிதி நிலமை நெறுக்கடியை ஏற்படுத்தினார். இந்த சிக்கலில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த ஓராண்டுக்குள் உலக பொருளாதர மந்த நிலை(Economy crisis) ஏற்பட்டது.
# இந்த மோசமாக பொருளாதர சரிவு நிலையில் இருந்து மகாதீர் நாட்டையும் நாட்டு மக்களையும் தன் சிறந்த நிர்வாகத்தால் காப்பாற்றினார். அன்று மகாதீர் எடுத்த முடிவுகளும், நாட்டை காப்பாற்றிய செயல்பாடுகளும் இன்று உலக பொருளாதர நிபுணர்களாளும், உலகின் பல நாடுகள் போற்றி புகழ்கின்றன. இந்த பொருளாதர மீட்சி காலத்தில் தான் அன்வார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். மாறாக மகாதீரின் ஊழலையோ, கிரிமினல் வழக்குகளை திசை திருப்பும் நோக்கில் அல்ல.
# அன்வார் ஆசியான் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கடன் வாங்குவது குறித்து மிக உறுதியாக பேசினார். தொடர்ந்து ஜப்பானில் நடந்த நிதியமைச்சர்கள் மாநாட்டிலும் உலக வங்கியில் கடன் வாங்குவது குறித்தும் மிக உறுதியாக இருந்தார். ஆனால் மகாதீரோ உலக வங்கியிடமோ, அல்லது வேறு நிதி நிறுவனங்களிடமோ கடன் வாங்காமல் நாட்டை காப்பாற்ற எண்ணினார். அன்வார் கடன் வாங்குவதில் மிக உறுதியாக இருந்தார்.
# இதன் காரணமாக அன்வார் ம்காதீரை பிடித்து போட ஆயத்தம் ஆனார். விடுமுறையில் இருந்த மகாதீர் விடுமுறையை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியதும் அன்வாரை பிடித்து உள்ளே போட்டார். எந்த உலக நிதி மையங்களிடமிருந்தும் கடன் வாங்காமல் நாட்டை பொருளாதர பின்னடைவில் இருந்து மேட்டேடுத்தார்.
# Income மேலேயும் inflation கிழேயும் இருக்க வேண்டும். இன்று நாட்டில் அப்படியா நிலைமை உள்ளது. inflation மேலேயும் income கிழேயும் உள்ளது. இது மிக மிக மோசமான ஒரு பொருளாதர சிக்கலை ஏற்படுத்தி விடும். மக்கள் ஒரு மிக பெரிய பொருளாதர சுமையை சுமக்க நேரிடும். இன்று அது நடந்துக் கொண்டிருக்கிறது. நஜிப் நாட்டின் பொருளாதர நிலைமையை மீட்டெடுப்பதிலும், மக்கள் சுமையை குறைப்பதிலும் அக்கறையோ நடவடிக்கையோ எடுக்கவில்லை/காட்டவில்லை.
# Demand and Supply. நாம் பள்ளி படிக்கும்(Economy & Economy Asas) காலத்தில் படித்திருப்போம். நாட்டின் பொருள் விலை உயர்வுக்கு இதுதான் காரணமாக இருந்து இருக்க வேண்டும். நம் நாட்டில் Demand-டும் இருக்கிறது, அதற்கேற்ற supply-யும் இருக்கிறது. ஆனால் பொருட்களின் விலை உயர்ந்துக் கொண்டே போகிறது. வேறு காரணங்களுக்காக பொருள்களின் விலையை மிக அதிகமாக உயர்த்தி இருக்கிறார்கள். GST எதற்காக வசூலிக்கிறார்கள்.....? என்ன கேடு வந்தது .....? டோல் கட்டணம் எதர்காக உயர்த்தினார்கள் .....? GST அறிமுகம் மற்றும் டோல் உயர்வால் எல்லா பொருட்களின் விலையும் 35-இல இருந்து 40 percent ஏறிவிட்டது. இந்த அரசாங்கத்தால் விலை உயர்வை கட்டு படுத்த முடியவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.
# மகாதீர் காலத்தில் மூன்று முறை பொருளாதர நெருக்கடி நிலையை சந்தித்தோம். ஆனால் மக்கள் இன்றைய காலம் போல் பெரும் பொருளாதர சுமையை சுமக்கவில்லை. மகாதீர் மக்களை கஷ்டபடுத்தியும் பார்க்கவில்லை.
# உலக அளவில் பொருளாதர நிதி நெருக்கடி கிடையாது. ஆனால் மலேசியாவில் மிக மோசமான ஒரு நிதி நெருகடி நிலையில் சுமையை சுமந்துக் கொண்டிருக்கிறோம். பொருளாதர மீட்சிக்காகவும், முகிடின், சஃபி அப்டால் மற்றும் முக்ரிஸ் மூவரும் பொருளாதர மீட்சிக்கு எதிராக இருந்தார்கள் என்ற காரணத்துக்காகத்தான் பதவில் இருந்து தூக்கப்பட்டர்கள் என்று கூறினால், நம் கார்களில் ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கும் கரப்பான்பூச்சிகள் கூட நம்பாது. நான்சென்ஸ்.
# அன்வார் தூக்கி அடிக்கப்பட்டதற்கும் இன்று ஆளும் அரசாங்கத்தால் பலரும் தூக்கி அடிக்கப்பட்டதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
0 Comments