ஒரு நம்பியாரும் நாலு எம் ஜி யாரும்.

இந்த மகாதீர் மட்டும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். பாவம் யார் காதிலும் அது விழவே இல்லை. இப்படியாக மெல்ல மெல்ல மகாதீர் கத்திக் கொண்டிருந்தது ஓரளவுக்கு மக்கள் காதில் ஒலிக்க தொடங்கியது.
பட்டாசுகள் இங்க ஒன்னு அங்க ஒன்னு என்று வெடிக்க தொடங்கிய நேரம், The wall Street Journal பத்திரிகை நஜிப் எப்படி 1IMDB பணத்தை கொள்ளையடித்தார் என்பதை டைகிராம் போட்டு, புட்டு புட்டு ஒரு நிஜ கட்டுரை வெளியிட்டார்கள். Sarawak Report, 1MDB முதலீட்டு பணத்தின் ஒரு பகுதியாக 2.6 பில்லியன் நஜிப்பின் அக்கவுண்டில் புகுந்தது என்று அவர்கள் ஒரு பெரிய நிஜ குண்டை தூக்கிப் போட்டார்கள். போதாத குறைக்கு Justo வேறு தாய்லாந்து போலிசிடம் சிக்கிக் கொண்டார். இப்போதுதான் சீன பட்டாசு வெடிப்பது போல் பெரிய பெரிய யானை வெடி பட்டாசுகள் எல்லாம் வெடிக்க ஆரம்பித்தது. பிரதமர் சத்தம் தாங்காமல் ஓடி போய் ஒளிந்துக் கொண்டார். இந்த நேரத்தில் நாட்டில் ரொம்ப முக்கியமான மூன்று எம் ஜி ஆர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.
அதுதான் Special Task Force. Peguam Negara, Bank Negara, SPRM கூடவே நான்காவது எம் ஜி ஆராக JSJ(Jabatan Siasatan Jenayah)-வும் சேர்ந்துக் கொண்டார்கள்.
மிக வேகமாக வேலை செய்தார்கள். மிக வேகமாக என்றால்; ஒரு நஜிப்பை கைது செய்யும் அளவுக்கு மிக வேகமாக வேலை செய்தார்கள். ராயாவும் மிக வேகமாக முடிந்தது.
இப்போத்தான் முகிடினும் வாய் திறந்து தெரிக்க விட்டார். நிலைமை இப்படி மிக மோசமாக போக; நஜிப்பின் கதை முடிந்தது. அதோகதிதான் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது; எல்லோருடைய எண்ணத்தையும் தவிடு பொடியாக்கி; ஒளிந்திருந்தவர் வெளியே வந்தார். வந்தவர்; மிக சரியாக வரிசை சேர்க்க பட்டிருந்த ரம்மி கார்டுகளை தாறுமாறாக களைத்து போட்டார். இனி வரிசை சேர்க்க முடியாத அளவுக்கு களைத்து போட்டார்.
துணைப்பிரதமர் முகிடினை தூக்கி; ஹமிடியை கொண்டு வந்தார். 60 வயது கனி பட்டேலை வீட்டுக்கு அனுப்பி விட்டு, 65 வயது அப்பேண்டியை தேசிய சட்டத்துறை தலைவராக கொண்டுவந்தார். Zeti-க்கு ஆர்ட் அட்டாக் வரும் அளவுக்கு டார்ச்சர் கொடுக்கப்பட்டது.
SPRM ஆணையர் கட்டாய படுத்தி விடுமுறைக்கு அனுப்பினார்கள். SPRM துணை ஆணையரை SRC International Sdn Bhd வழக்கை விசாரிக்க கழுத்தை பிடித்து வெளிநாட்டுக்கு தள்ளினார்கள். ஆபிசர்கள் இல்லாத ஆபிசகாக SPRM இருக்கிறது. Tan Sri அந்தஸ்த்தில் உள்ள SPRM-இன் சிங்கு ஒருவரை கைது செய்து மஜிஸ்ட்ரேட் முன் நிறுயிருக்கிறார்கள். ரீமான் கொடுக்காமல் மஜிஸ்ரேட் போலிசை திட்டி அனுப்பி விட்டார்.
கூடவே இன்னொரு பென் சிங்கையும் கைது செய்திருந்தார்கள். அவருக்கும் மஜிஸ்ட்ரேட் ரீமான் கொடுக்க வில்லை. JSJ ஆபிசரை மாற்றி; அவர் அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தினார்கள். இந்த அட்டாக்குகள் நடந்துக் கொண்டிருக்கிருக்கும் போது SPRM போலிசின் தொல்லை தாங்காமல் அவசர அவசரமாக 2.6 பில்லியன் நஜிப் அகவுண்டில் புகுந்தது நிதி என அறிவித்தார்கள். இந்த 2.6 பில்லியன் நிதியாக அகவுண்டில் புகுந்ததும் சட்டப்படி குற்றமே. நஜிப் மீது இதற்கு ஆக்சன் எடுத்தே ஆக வேண்டும். ஆனால்; ஆக்சன் எடுக்க வேண்டிய அத்துனை ஆபிசிலும் ஆபிஸர்ஸ் இல்லை. திருப்பவும் ரம்மி கார்டுகளை ஜோக்கர்களோடு அடுக்கி வரிசை பிடித்து; நஜிப் களைத்து போடுவதற்குள் இந்த நாலு எம் ஜி ஆர்களும் சேர்ந்து ஒரு நம்பியாரை கைது செய்ய வேண்டும்.
அதை மகாதீர் பீம்சீங் கணக்காக நம்பியார் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார். அவர் ஒன்னும் சும்மா ஜப்பான் போயிருக்க மாட்டார்.
// beliau boleh tangkap saya. cuma dia tak mahu buat. kalau dia tiada pilihan lain, mestilah dia tangkap saya. //-இப்படி சொல்லிவிட்டு மகாதீர் ஜப்பானுக்கு போய் விட்டார்.
நஜிப் இப்போ வாழ்வா சாவா கட்டத்துக்கு வந்து விட்டார். எல்லா வற்றுக்கும் துணிந்து விட்டார். தன்னை காப்பாற்றிக் கொள்ள மகாதீரை கூட கைது செய்யலாம். சிங்கம் சிங்களா ஜப்பானில் இருக்கு. அடுத்து எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
நம்பியாரா .......? எம் ஜி ஆரா .....? இல்லை பீம்சிங்கா ......?
பிளாஷ்பேக் .......
# புதன் வியாழன் வெள்ளி மூன்று நாட்கள் பிரதமர் காணமல் போய்யிந்தார்.
# சனிக்கிழமை; முன்னாள் பிரதமர் மகாதீரின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக Berjaya Times Square-இல் நடந்தது. அந்த விருந்தில் மகாதீர் நஜிப்க்கு ஒரு வார்னிங் கொடுத்தார். முரண்டு பிடிக்காமல் மரியாதையாக பதவி விட்டு போய்விடுவது நஜிப்க்கு நல்லது.
// beliau mesti berundur secara aman. ini nasihat saya kepada najib. beliau tidak boleh buat hal.//
அதே Times Square-இல் UMNO-வின் டிவிசன் கூட்டமும் நடந்தது.
# ஞாயிற்றுகிழமை; காலையில் நஜிப் மற்றும் முஹிடின் இருவரும், முன்னாள் பிரதமர் படாவி வீட்டில் ராயா ஓப்பன் ஹவுஸ் விருந்துக்கு போயிருந்தார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு அங்கிருந்து இருவரும் கிளம்பி விட்டார்கள். நஜிப் அங்கிருந்து புறப்படும் போது; பத்திரிகையாளர்கள் சூழ்ந்துக் கொண்டு கேள்விகள் பல கேட்டப்போது ‘OK LAH' என்று ஒத்த வார்த்தை சொல்லிஓடிவிட்டார்.
படாவியை எல்லாம் ஒரு ஆளாக மதித்து இங்கே இருந்து பினாங்கு வரை எல்லாம் போகமாட்டார்கள். அதே விருந்தில் நஜிப் தம்பி நசிர் ரசாக்கும் இருந்தார். அதற்கு முன் படாவி பிரதமரின் ராயா விருந்திலும் கலந்துக் கொண்டிருந்தார். ஏதோ பேசியிருக்கிறார்கள். அதே ஞாயிறு இரவு; Times Square டிவிசன் மீட்டிங்கில் முகிடின் நஜிப் எதிராக வாய் திறந்தார். நஜிப்பை ஏகத்துக்கு தெரிக்கவிட்டு, ஓவர் நைட்டில் ஹிரோ ஆனார்.
# திங்கட்கிழமை; இரவு ஹில்டன் ஹோட்டலில் CIMB Bank-இன் ராயா விருந்து. நஜிப், முகிடின் இருவரும் கலந்துக் கொண்டார்கள். 8 மணிக்கு வந்த நஜிப் 9.15க்கு கிளம்பி விட்டார். ஆனால் முகிடின் இரவு 11 மணிக்குத்தான் கிளம்பினார்.
அதே விருந்துக்கு வந்திருந்த பேராக் சுல்தான் நஸ்ரின் அவர்களுடன் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பேசிக் கொண்டிருந்தார். இங்கேயும் முக்கியமாக ஏதோ பேசிக் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒத்துக் கொள்வது போல ஒத்துக் கொண்டு அப்புறம் நஜிப் re-action வேறு மாதிரி இருந்தது.
# செவ்வாய் கிழமை. நாட்டையே திருப்பி போட்டார் நஜிப். துணை பிரதமரை தூக்கினார். PAC உறுப்பினர்களை தூக்கி மந்திரி ஆக்கினார். JSJ. Jabatan siasatan jenayah பிரிவின் தலமை போலிஸ் அதிகாரியை தூக்கினார். இவர்தான் Special Task Force குழுவில் இணைந்து IMDB ஊழலை விசாரித்து வந்தவர். சத்தமே இல்லாமல் சட்டதுறை தலைவரை தூக்கினார்.
அதன் பிறகு மிக துணிச்சலாக வெளியே வந்து அங்காங்கே கூட்டங்களில் கலந்துக் கொண்டார். பதவி விட்டு போக மாட்டேன் என கத்த ஆரம்பித்தார். இப்போத்தான் SPRM மிக துணிச்சலாக ஒரு காரியம் செய்தார்கள். பிரதமர் வங்கி கணக்கில் 2.6 பில்லியன் புகுந்தது உண்மை. ஆனால் அது தேர்தல் donation என்றும் கூறினார்கள்.
எப்படி இருந்தாலும் இரு சட்டப்படி குற்றம்.
கூடவே SPRM தலைவர் சில குண்டுகளையும் தூக்கி போட்டார். போலிஸ் SPRM விசாரணையில் தலையிட்டு குழப்படிகள் செய்ததாகவும்; Special Task Force குழுவில் உள்ள SPRM அதிகாரியை காரணமின்றி போலிஸ் கைது செய்ததையும் கண்டித்தார்.
இது ஒரு பைத்தியகாரதனமான செயல் என்று போலிஸை மிக கடுமையாக சாடினார்.
ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது. மகாதீருக்கும் நஜிப்ப்புக்கும் நடுவில் நடக்கும் போர் இன்னும் உக்கிரமாக நடக்க போகிறது. ஒரு SPRM அதிகாரி நடப்பு அரசாங்கத்துக்கு எதிராக நடக்கிறது என்றால்; போரின் வேகமும் பலமாகத்தான் இருக்கும்.
0 Comments