Thursday, 22 December 2016

கேலி கூத்து

பல சண்டைகள்; சச்சரவுகள்; கேலிக்கூத்துக்களை நாம் பார்த்த பிறகு; Feb 5 - பிரதமர் பழனி சுப்ரா இருவரையும் சந்தித்தார். ப்ழனியின் ஆலோசையின் படி கட்சிக்கு மறு தேர்தல் என முடிவானது. 

அன்றைய தினமே சிறைபிடிக்கபட்ட கட்டடம் மீண்டும் பழனி கைக்கே சண்டை யில்லாமல் வந்து சேர்தது. பழனி பண்பாளர் என்றெல்லாம் சிவராஜ் பேட்டி கொடுத்தார். ஒரு வழியாக சம்டி நிறுத்தம் அமலுக்கு வந்தது. Feb 9 - ROS சார்ப்பிலும் பிரதமரின் ஆலோசனை வழியும் உள்துறை அமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

கட்சி கிளை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் எனவும்; தலைவர் தேர்தல் மேயில் நடக்கும் எனவும்; ஜுன் ஜுலையில் தொகுதிக்கும் ; இறுதியாக CWC தேர்தல் ஜூலையில் பேராளர் மாநாட்டில் நடக்கும் அறிவிப்பு வெளியானது. பழனி மற்றும் சுப்ரா இரு தரப்பும் ஏற்றுக் கொண்டார்கள். 

இப்போ மறுபடியும் யார் பிரச்சனை பண்ணியது. சுப்ராத்தான். எப்படி ....? 

1. தலைவர் பழனி என்று முடிவாகி விட்டது. யார் என்ன சொன்னாலும் பழனி ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்ட தலைவர். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. 

அப்படி தொண்டர்களால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் உத்தரவு அல்லது ஆணை இல்லாமல் CWC மீட்டிங் கூட்ட முடியாது என்பது கட்சியின் சட்ட விதி. அப்படி தலைவரின் உத்தரவு இல்லாமல் CWC மீட்டிங் போட்டது தவறு. 

அதைவிட பெரிய தவறு அந்த கூட்டத்துக்கு ROS அதிகாரிகளை கூப்பிட்டு அவர்களுக்கு பிஸ்கட்டும் காபியும் கொடுத்தது. ஒரு அரசியல் கட்சியின் CWC மீட்டிங்கிற்கு ROS அதிகாரிகள் வர வேண்டிய அவசியம் என்ன ........? 
இது பழனி தரப்பபை மிக கோபப்படுத்தியது. பிரதமர் கேட்டுக் கொண்ட பிறகும்; ROS சார்ப்பில் உள்துறை அமைச்சர் தேர்தலுக்கு உத்திரவிட்ட பிறகும்; பழனிக்கு தொந்தரவு மற்றும் கோபத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கில் சுப்ரா செயல்படுகிறார். 

பிரதமர் கேட்டுக் கேட்டுக் கொண்ட பிறகு ஏன் சுப்ரா பிரச்சனைகளை மேலும் வளர்க்கிறார் என்றே புரியவில்லை. ஒருவேளை தோற்று விடுவோம் என்கிற பயத்தில்; பிரச்சனைகளை செய்து கட்சியின் அதிகாரத்தை கை பற்றி விடலாம் என்கிற எண்ணத்தில் உள்ளாரா .........? 

மே மாதத்தில் தலைவருக்கான தேர்தல் நடக்க போகிறது. அதுவரை பொருமையாக இருந்தால் என்ன ஆகி விட போகிறது. சுபராவின் பக்கம் 102 தொகுதி தலைவர்களும் 2500 கிளை தலைவர்களும் இருக்கும் போது சுப்ராவுக்கு என்ன பயம். சுப்ரா அணி வெற்றி பெற்று விடும் என்று உற்சாகத்தில் இருக்கும் போது; சுப்ரா கட்சி தலைவர் தேர்தலில் 200 சதவீதம் வெற்றி பெற்று விடுவார் என்கிற நம்பிக்கை இருக்கும் போது; மே மாதம் வரை காத்திருப்பது; பொருமையாக இருப்பது அவ்வளவு கடினமா ...........? சுப்ரா சார் ! தோற்கிற தரப்பை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள். 

 பங்காளி கட்சிகளிடையே மோதல்களும் அதிகார சண்டையும் தலைவிரித்து ஆடும் போது; அம்னோ அல்லது தேசிய முன்னணி தலையிடுவது ஒன்றும் புதிது இல்லை. 
1984-இல் ’தான் கூன் ஸ்வான்’ மா சீ சா தலைவராக இருக்கும் போது; பெரும் பிரச்சனை. அடிதடி எல்லாம் நடந்த்து. அப்போ துணை பிரதமராக இருந்த கபார் பாபா; மா சீ சா பிரச்சனையில் தலையிட்டு; துன் கபார் பாபா தலைவராக இருந்து மா சீ சாவின் தேர்தலை நடத்தினார். 

அதன் பிறகு 1998-வாக்கில் மா சீ சாவில் இன்னொரு பிரச்சனை. நாற்காலி எல்லாம் தூக்கி அடித்துக் கொண்டார்கள். சட்டையெல்லாம் கிழிந்தது( சண்டையில் கிழியாத சட்டை ஏது ....?). அப்போது மகாதீர் தலையிட்டு தீர்த்து வைத்தார். 

சில ஆண்டுகளுக்கு முன் PPP - இல் கேவிஎஸ் மற்றும் முருகையாவுக்கும் பிரச்சனைகள் முட்டிக் கொண்டு நின்றபோது; பிரதமர் நஜிப் தலையிட்டு; முருகையாவை மா இ காவில் சேர்ந்துக் கொள்ள வைத்தார். 90-களில் சபா பிபிஎஸ்-இல் பிரச்சனைகள் வெடித்த போதும் தேசிய முன்னணியும் அம்னோவும்தான் தலையிட்டார்கள். 

ஆகவே மக்களே ! அம்னோவும் தேசிய முன்னணியும் பங்காளி கட்சி பிரச்சனையில் தலையிடுவது ஒன்றும் புதிது அல்ல. இப்படி எழுதுவதால் நான் இந்தியர்களின் மானத்தை அடமானம் வைத்துவிட்டேன் என்று சண்டைக்கு வராதீர்கள். 
நடந்த சில வரலாற்று சம்பவங்களை வடக்குப்பட்டி ராமசாமிக்கு சொல்ல வேண்டும் போல் தோன்றியது. அம்புட்டுதான். 

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews