பல்லவர்கள் பெரும் தமிழ் மன்னர்கள்.
# கி.பி. 2-ம் நூற்றாண்டை இருண்ட காலம் என்பார்கள். களப்பிரர்கள் ஆட்சி காலம். தமிமும் தமிழ் புலவர்களும் ஓட ஓட துரத்தி அடிக்க பட்டனர். சைவ, வைணவ மற்றும் இன்னும் பிற தமிழ் மதங்கள் கடையை சாத்திக் கொண்டு ஓடியது. புத்த மதம் மட்டும் ஏதோ ஒரு வகையில் தப்பித்துக் கொண்டது.
# இந்த காலகட்டத்தில்தான் மணிமேகலையின் கதை சொல்லப்படுகிறது. புத்த பிக்குவான மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றது. தமிழகத்தில் பெரிய சுனாமி வந்தது. பிறகு மணிமேகலை சைனா போய், அங்கேயே குடியுரிமை வாங்கிக் கொண்டு சைனாவிலேயே செட்டில் ஆனது என இன்னும் பல கதைகள்.
# எல்லா சரித்திர ஆசிரியர்களாலும் கூறப்பட்ட இருண்ட காலத்தை விரட்டி விளக்கு போட்டு, களப்பிரர்களை முறியடித்து, தமிழகத்தை மீட்டெடுத்தார்கள் பல்லவர்கள். இந்த காலகட்டத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மிஸ்ஸிங்.
# இருண்ட காலத்துக்கு பிறகு வெளிச்சத்தோடு வந்த பல்லவர்கள் 3-ம் நூற்றாண்டு தொடங்கி 9-ம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் தமிழகத்தை ஆண்டு வந்தார்கள்.
# பல அரும் பெரும் சாதனைகள் செய்தனர். எல்லா சமய மதத்தினரையும் மதித்து சம அளவில் நடத்தினார்கள். யுவான் சுவாங் புத்தகத்தில், காஞ்சி ஒரு சிறந்த கல்வி நிலையம் என்கிறார். காஞ்சியில் உள்ள புத்த கலாசாலையில் வந்து படித்து முடித்தால்தான் கல்வியில் முழு நிறைவு பெற்றதாக கூறப்ட்டது. எனவே சீனாவில் இருந்து நிறைய புத்த மாணவர்கள் காஞ்சி நோக்கி வந்தார்கள்.
# அப்பரின் தலைமையில் காஞ்சி மடம் என்கிற பெயரில் சைவ பாட சாலை செயல் பட்டது. சேர சோழ பாண்டிய நாடு மட்டும் அல்லாது மேற்கு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் காஞ்சியில் வந்து தங்கி கல்வி கற்றார்கள்.
# காஞ்சியில் சிவனுக்கு ஏகாம்பரநாதர் கோவிலும், பெருமாளுக்கு மூவடி அளந்தான் கோவிலும் கட்டினார்கள் பல்லவர்கள்.
# சிற்ப கலையில் சிறந்து விளங்கினார்கள். தமிழ் மொழியையும் சமஸ்கிருதத்தையும் இரு கண்களாக போற்றினார்கள். பல்லவ கிராந்த எழுத்து கொண்டு வந்தார்கள். தென்கிழக்கு ஆசியாவில் இந்த பல்லவ கிராந்த எழுத்தின் ஆதிக்கம் பல நூற்றாண்டுகள் இருந்தன. பல்லவர்கள் வியாபார ஆதிக்கமும் தென்கிழக்கு ஆசியாவில் பெரும் சக்தியாக விளங்கியது. இன்றைய ஜாவா, கம்போடியா, லாவோஸ், போன்ற நாடுகளில் பல்லவர்களின் சிற்ப கலைகளே மேலோங்கி இருந்தன. இந்த பிராந்தியங்களில் கட்டப்பட்ட பல கோவில்கள் பல்லவ மன்னர்களின் கட்டிட கலையை சேர்ந்தவை.
# நாயன்மார்களில் முதலாம் நாயன்மார் அப்பர்; பல்லவர்கள் காலத்தவர். இவரே சைவ மதம் மீண்டும் தழைக்க ஆணி வேராக இருந்தவர். இவர் அப்போதைய பல்லவ மன்னரிடம் மிகுந்த செல்வாக்கில் இருந்தவர். இவரின் மாமா(திலகவதி அம்மையார் மணம் முடிக்க இருந்தவர்) பல்லவ படையின் சேனாதிபதியாக இருந்தவர்.
# வைணவ ஆழ்வார்களில் முதலாமவர் பொய்கையாழ்வார். இவரும் பல்லவர்கள் காலத்தவரே. காஞ்சியில் பிறந்தவர்.
# நாயன்மார்களில் ஒருவரான சிறுதொண்டர் பல்லவ படையின் சேனாதிபதியாக இருந்தவர். பெரும் செல்வாக்குடனும் படையுடனும் விளங்கிய வட நாட்டு மன்னர் ஹர்ஷவர்தனர் கூட போரில் வெல்ல முடியாமல் இருந்த புலகேசியை (புலிகேசி என்பது பிழை) போரில் வென்று வாதாபியை கைப்பற்றிய நரசிம்ம பல்லவனின் சேனாதிபதி இந்த சிறுதொண்டர். பரஞ்சோதி என்பது இவர் இயற்பெயர்.
# சைவ தமிழையும் வைணவ தமிழையும் போற்றி வளர்த்தவர்கள் பல்லவர்கள்.
# சேரலர்கள்(சேரர்கள்) கேரளர்கள் ஆகி பின் மலையாளிகள் ஆகி போனார்கள்.
# மகேந்திர வர்மன், நரசிம்மன், கோப்பெருசிங்கன், செங்கண்ணன் போன்ற பல்லவ மன்னர்வர்கள் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சேவைகள் செய்த; மதித்து போற்ற கூடிய பெரும் மன்னர்கள்.

0 Comments