பழைய கட்டுரை
# என்னிடம் திரும்ப திரும்ப ஒரு விசயத்தை எல்லோரும் வலியிறுத்தி வாதம் செய்கிறார்கள். வாதம் செய்தால் கூட பராவாயில்லை. சண்டை போடுகிறார்கள்.
# நஜிப்பின் கால் சுண்டு விரலை கூட தொட முடியாது. ஒரு ம_ரும் புடுங்க முடியாது. நஜிப் மிக வலிமையாக, யாரும் தொட முடியாத இடத்தில் இருக்கிறார்கள். அடுத்த 7 ஆண்டுகளுக்கு நஜிப் தான் இந்த நாட்டின் பிரதமர் என்று.
# என் மனகுமுறல் எல்லாம், தர்மம் ஒரு போதும் ஜெயிக்காது. அதர்மத்தோடு நாம் வாழ பழகிக் கொள்ளவேண்டும். அயோக்கிய தனங்கள் செய்கிறவர்கள் மட்டுமே இங்கு ஜெயிக்க முடியும். நீதி நேர்மை எல்லாம் பலவீனமாக மக்களுக்குத்தான். குற்றவாளிகளோடும் அயோக்கியர்களோடும் மக்கள் வாழ கற்றுக் கொண்டதோடு, அயோக்கியதனத்தோடு ஒத்து போக நம்மையும் வலியிறுத்துகிறார்கள்.
# நான் மீண்டும் மீண்டும் உறுதியாக சொல்கிறேன். நஜிப் தன் பதவியை இழந்து, தான் செய்த குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்தே ஆவார். நீதி இந்த நாட்டில் இன்னும் சாக வில்லை, தர்மம் ஜெயிக்கும் சட்டம் தன் கடமையை செய்யும் என முழுமையாக நம்புகிறேன். அந்த நம்பிக்கை உங்களுக்கும் வர வேண்டும். அயோக்கிய தனம் ஜெயிக்கும் என நம்புவதும் ஒரு அயோக்கியதனம் தான்.
# நஜிப் மிக பெரிய ஊழலில் சிக்கி உள்ளார். எல்லாமே ஆதாரத்தோடு சிக்கிய ஊழல்கள். தப்பிக்கவே முடியாத ஊழல் வழக்குகள்.
# இந்த நேரம், நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம், நீங்கள் இதை படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரம், எல்லா மட்டத்திலும், எல்லா நிலையிலும் எல்லா துறைகளும் தங்கள் வேலையை செய்துக் கொண்டுத்தான் இருப்பார்கள். யாரும் ஹாயாக தூங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
# MACC தங்கள் வேலையை செய்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். Bank Negara கவர்னர் அவர் தன் வேலையை செய்துக் கொண்டுத்தான் இருப்பார். Special Task Force அது தன் வேலையை செய்துக் கொண்டுத்தான் இருக்கும்.
# மகாதீர் எவ்வளவு பேரிடம் பேசிக் கொண்டிருப்பார். எவ்வளவு காய்களை நகர்த்திக் கொண்டிருப்பார். அவருக்கு வெளிநாட்டில் எவ்வளவு பெரிய கேபள்கள் இருக்கிறது.
# ஆளும் கட்சியில் நஜிப்புக்கு எதிரானவர்கள் எவ்வளவு வேலை செய்துக் கொண்டிருப்பார்கள்.
# வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இந்த ஊழல் வழக்குகள் உச்சத்தை தொட்டிருப்பதால், Majlis Raja Raja இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அது தன் கடமையை செய்துக் கொண்டிருக்கும்.
# PAC முடிவுகள் கண்டிப்பாக நஜிப்புக்கு சாதகமான ஒன்றாக இருக்காது. ஆகவே தான் PAC கூட்டம் கூடாமல் பார்த்துக் கொண்டார். நாட்டின் நலன் முக்கியம் பார்க்காமல், வெளிநாட்டுக்கு போயிருக்கும் PAC உறுப்பினர்கள் செய்கைகள் இதை உறுதி படுத்துகிறது. தற்காலிகமாக இதை தள்ளி வைக்கலாம். முழுமையாக நஜிப் இந்த PAC அறிக்கையில் இருந்து தப்ப முடியாது. பணம் ஓரளவுக்கு தான் பாய முடியும்.
# SRC வழக்கில் நஜிப் மீது குற்றம் சாட்ட போதுமான ஆதாரம் இருப்பதாக MACC கூறியிருப்பது மேலும் நஜிப்பின் சூழலை மோச ஆக்கியிருக்கிறது. MACC மீண்டும் தன் விசாரணையை ஆரம்பித்து, நஜிப்பை குற்றம் சாட்ட தயாராக உள்ளது. அட்டர்னி ஜெனரல் முடிந்த வரை அதை தடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் அட்டர்னி ஜெனரால் எதையும் தடுக்க முடியாமல் போய் விடும்.
# அராப் கொடை வள்ளலுக்கும் நஜிப்க்கு கிடைத்த டொனேஷனுக்கும் சம்பந்தம் இல்லை என அராப் அரசாங்கமே சொல்லி இருப்பது நஜிப்க்கு சிக்கலுக்கு சிக்கல் தான்.
# அராப் மலேசியன் வங்கியில் புகுந்த பணம் ரிட்டர்ன் ஆகும் காரியத்தில் 2.6 பில்லியன் சிங்கப்பூர் அரசாங்கம் அந்த பணத்தை பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. இதற்கிடையில் தாய் சிறையில் இருக்கும் ஜுஸ்தோ சிங்கப்பூர் வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளார். தாய் மற்றும் சிங்கப்பூரில் நடந்து வரும் வழக்கை நஜிப் தடுத்த நிறுத்த முடியாது.
# இதற்கிடையில் முகைதீன் ரெண்டு நாளைக்கு முன் கூறி இருக்கும் ஒரு முக்கிய குற்றச்சாட்டு இன்னும் ஓரிரு நாட்களில் செயல் பட தொடங்கி விடும். அது, முன்னாள் அட்டர்னி ஜெனரல் கனி, நஜிப்பை குற்றம் சாட்டுவதற்கும் நீதி மன்றத்துக்கு கொண்டு செல்லவும் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும், அந்த ஆதாரங்களை தன்னிடம் காட்டியதாகவும் சொல்லி இருக்கிறார். இது மிக மிக முக்கியமான ஒரு குற்றச்சாட்டு. கனி பட்டேல் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர், முன்னாள் நாட்டின் அட்டர்னி ஜெனரல். Special Task Force-இன் முன்னாள் தலைவர். நஜிப்பின் 1MDB வழக்கின் விசாரணையை நடத்தி வந்தவர். முகைதீன் இந்த நாட்டின் முன்னாள் துணை பிரதமர். நட்டின் மிக உயர்ந்த பதவில் இருந்த மிக முக்கியமான இருவர் இந்த குற்றசாட்டை நஜிப் மீது சுமத்தியிருப்பதால், இதை ஒரு தனி கமிஷன் விசாரிக்க வேண்டிய சூழல் வரும்.
# போதாத குறைக்கு மகாதீருக்கே ஒரு செக் வைத்திருக்கிறார் நஜிப். மகாதீர் அதை உடைக்க வேண்டும். அப்படி உடைக்கும் பட்சத்தில் நஜிப் எந்த லெவலுக்கும் போவார். மகாதீரும் மோதி பார்ப்பார்.
# பல காரியங்கள் பல மட்டங்களில் நடந்துக் கொண்டுத்தான் இருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் body-க்கள் தங்கள் வேலையை செய்துக் கொண்டுத்தான் இருக்கிறது. ஆனால் நமக்குத்தான் எதுவும் தெரியவில்லை.
# நமக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறாகள். எல்லா தமிழ் பத்திரிகையும் அரசு சார்ப்பு பத்திரிகைகள். The Star, Utusan முறையாக மா.சீ,சா மற்றும் அம்னோவின் பத்திரிகைகள். மற்ற எல்லா பத்திர்கைகளையும் விலை கொடுத்து அல்லது மிரட்டி வைத்திருக்கிறார்கள். அச்சு மூலமாக நமக்கு எந்த செய்தியும் கிடைப்பதில்லை.
# ஆன் லைன் பத்திரிகைகள் கதியை சொல்லவே வேண்டியது இல்லை. இதுவரை உண்மை செய்திகளை ஓரளவுக்கு வெளியிட்டு வந்தது Malaysian Cronicle, Sarawak Report மற்றும் The Malaysian Insider இன்னும் சில ஆன் லைன் வெப் சைட் பக்கங்கள். இந்த மூன்று ஆன் லைன் பக்கங்களுமே இப்போது நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இனி ஆன் லைனில் கூட நாம் முழுமையான அல்லது உண்மையான செய்திகள் படிக்க முடியாது. இனி நாட்டில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள முடியாது. செய்திகள் நமக்கு கிடைக்காமல் செய்ய முடியுமே தவிர, சம்பவங்கள் நடக்காமல் இருக்க தடுக்க முடியாது.
# மலேசியா கினி. சொல்லவே வேண்டியது இல்லை. அது இடத்துக்கேத்த நிறம் மாறும் ஒரு பச்சோந்தி. அல்லது அரசுக்கு பயந்து வலைந்து கொடுக்கும் பயந்தாங்கொள்ளி. மலேசியா கினி தமிழ் பகுதியை முன்பு செம்பருத்தி தான் நடத்தி வந்தது. இப்போ பணம் அதிகம் கொடுத்ததால் முழு நேர அரசாங்க பிரச்சார பீரங்கியாக மாறிவிட்டது. ஆனால் மலாய் மற்றும் ஆங்கில பகுதி அந்த அளவுக்கு மோசம் ஆகவில்லை. அந்த மட்டில் மகிழ்சியே ......
# நஜிப் எல்லா சிக்களிலும் தப்பித்து வருவதாக ஒரு மாயை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த மாயையை எல்லோரையும் நம்ப வைக்கிறார்கள். அந்த மாயையை எல்லோரிடமும் பரப்பி வருகிறார்கள். ஆனால் அது மாயைத்தான்.
# உலகில் பல அயோக்கியர்களை பார்த்திருக்கிறோம். எல்லோருமே தங்கள் பதவியை இழந்து, தண்டனையை அனுபவத்திருக்கிறார்கள். நீதியும் நேர்மையும் ஜெயிக்கும். தர்மம் வெல்லும். தர்மம் மட்டுமே வெல்லும். அதை முதலில் நம்ப வேண்டும்.
0 Comments