தீபாவளியும் மலேசியாவும்
# 17-ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழர்கள் மலாயாவிற்கு கொண்டுவர பட்டார்கள். ஆரம்ப காலத்தில் போர் கைதிகளாக, அரசாங்க தண்டனை பெற்றவர்களாக பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப் பட்டார்கள்.
# 18-ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் அதிகமான தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்டார்கள்.
# இப்படி அதிகமான தமிழர்கள் அழைத்து வரப்பட்டப்போது கூடவே அவர்களுக்கு சில சலுகைகளும் உரிமைகளும் கொடுக்கப்பட்டது.
# அப்படி கொடுக்கப்பட்ட ஒரு சலுகைத்தான் தீபாவளி பண்டிகையும் விடுமுறையும்.
# ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு இரண்டு முக்கிய பண்டிகைகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டது. அவை தீபாவளி மற்று பொங்கல்.
# தீபாவளிக்கு ரெண்டு நாள் விடுமுறையும் பொங்கலுக்கு ரெண்டு நாள் விடுமுறையும் வழங்கப்பட்டது.
# எஸ்டேட் கோவில் திருவிழாவிற்கு கூடுதல் விடுமுறையும் வழங்கப்பட்டது.
# அப்பொதைய கால கட்டத்தில் தைபூசம் குறிப்பிட்ட சில ஊர்களில் தான் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பத்துமலை, பினாங்கு, கோலசிலாங்கூர், ஈப்போ, மலாக்கா போன்ற இடங்கள். தைபூசத்திற்கு தோட்ட நிர்வாகத்தின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் விடுமுறைகள் வழங்கப்பட்டு வந்தது.
# ஆனால் தோட்டங்களில் தீபாவளிதான் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. தமிழகத்தில் இருந்து இங்கு தமிழர்கள் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில் , தமிழகத்தில் தீபாவளித்தான் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் அதை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சி தான் இன்றைய தீப ஒளியாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.



0 Comments