Thursday, 22 December 2016

அன்வார் இப்ராஹிமும் முகைதீன் யாசினும். பாஸ்ஸும் டிஏபியும்.


1. முகைதீனின் துணைப் பிரதமர் பறிப்பு சில/பல கேள்விகளுக்கும் யோசனைக்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறது. அன்வார் பதவி பறிப்பின் போது நடந்த மிக பெரிய பிரளயம் ஏன் முகைதீனை நீக்கியபோது நடக்கவில்லை. முகைதீன் அவ்வளவு வீக்கான தலைவரா .....? அல்லது சப்போர்ட் அறவே இல்லாத தனித்து விடப்பட்ட தலைவரா ....? 

2. மூசா ஹித்தாம் பதவி விலகிக் கொண்டார். பதவி விலக நெருக்குதல் கொடுக்கப்படார். காபார் பாபா துணை தலைவர் போட்டியில் இருந்து விலகி அன்வாருக்கு இடம் கொடுத்தார். இந்த இரண்டு சம்பவத்திலும் மகாதீரின் நேரடியான தலையீடு இருந்தது. அன்வார் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் மகாதீரின் நடவடிக்கை/Act இருந்தது. 

3. அன்வாருக்கு முன் காலத்தில் எந்த துணை பிரதமரும் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது ஆகவில்லை. ஆகவே பெரிய எதிர்ப்போ/ ஆர்ப்பட்டமோ இல்லை. 

4. முதல் நாள் அன்வார் இப்ராஹிம் பிரதமர் மற்றும் UNMO துணை தலைவர் பதவில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அடுத்த நாள், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

5. அந்த காலகட்டத்தில் அன்வார்; மிக வேகமாக அரசியலில் மேலேறிக் கொண்டிருந்தார். மகாதீருக்கு இணையாக செயல்பட ஆரம்பித்தார். இன்னொரு மகாதீராக, அன்வார் கவனிக்கப்பட்டார். அப்படி பட்ட ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டப் போது எல்லோருக்கும் ஆச்சர்யம்; அதிர்ச்சி; ஆத்திரம். ஆனாலும் சிறு சிறு உரசலோடு; அன்வாரின் செல்வாக்கு நின்று விட்டது. 

6. அன்வார் கைது செய்யப்பட்ட மறுநாள்தான், இந்த ஆச்சர்யமும் அதிர்ச்சியும் பெரும் கோபமாக மக்கள் மத்தியில் உருவெடுத்தது. அந்த கோபம்; அப்போதைய பிரதமர் மகாதீருக்கு எதிராக பாய்ந்தது. இந்த தருணத்தை பாஸ் கட்சி மிக நுட்பமாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. 

7. அன்றைய கால கட்டத்தில் பாரிசான் அரசாங்கத்தின் மீது மிக பெரிய கோபம் உருவானது. அதுவரை மிக சொற்ப பார்லிமெண்ட் சீட்களை வென்று வந்த பாஸ் கட்சி இந்த வாய்ப்பை மிக கெட்டியாக பிடித்துக் கொண்டது. அன்வாருக்கு சாதகமாகவும் ஆதரவாகவும் பெரும் போராட்டத்தில் குதித்தது. ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வந்த பாஸ் கட்சி; அன்வார் நீக்கலை முன்நிறுத்தி தன் கட்சியை வளர்த்துக் கொண்டது. UMNO-க்கு இணையான ஒரு மலாய்கார கட்சியாக தன்னை உருவாக்கி கொள்ள முனைந்தது. ஆனால் அது நடக்காமல் PKR உருவானது. 

8. அது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் அன்வாருக்கு உதவியாக; PKR-அய் வளர்க்க நிறைய நிதிகள் வந்து குவிந்தது. அமேரிக்கா உட்பட சில வெளிநடுகள் மகாதீரை கவில்பதற்கு இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு; அன்வாருக்கு ஆதரவாக மிக பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்தன. அந்த சமயத்தில் சன்வே தங்கும் விடுதியில் நடந்த அனைத்துலக கூட்டத்தில் அமேரிக்க வெளியுறவு அமைச்சர், அன்வார்க்கு சப்போர்ட் செய்து பேசியது ரபிடா அஜிஸ், ஷேய்க் கடீர் போன்ற அமைச்சர்களை பெரிதும் ஆத்திரமூட்டியது. 

8. Asia-வில் யாரும் செய்ய முடியாத ஒரு பெரிய காரியத்தை செய்ய மகாதீர் முனைந்தார். அது; மகாதீர் அந்த சமயத்தில் EURO Currency போன்று ஒரு Asia Currency உருவாக்க முயன்றுக் கொண்டிருந்தார். அது அமெரிக்காவுக்கு சாதகம் இல்லை என்பதாலும் அதனால் அமெரிக்கா டாலருக்கு நட்டம் வரும் என்பதாலும் அமெரிக்கா அதை தடுத்து நிறுத்தும் காரியத்தில் இறங்கியது. இதுவும் அன்வாருக்கு சாதகமாக புகுந்துக் கொண்டது. ஆனாலும் நாட்டும் பாரிசானுக்கும் பாதகம் வராமல் மகாதீர் செயல்பட்டு; பாரிசானையும் நாட்டையும் காப்பாற்றினார். ஆனால் மகாதீர் காலத்துக்கு பிறகு எதிர்கட்சிகள் மிக strong-ஆக உருவாக இந்த சம்பவங்கள் ஆதாரமாக இருந்தது. 

9. Social Media-யாக்கள் இல்லாத அந்த காலத்தில் மக்கள் என்ன ஏது என புரியாமல்; வாய் வழி புரட்சியில் ஈடுப்பட்டார்கள். ஆக அன்வார் இப்ராஹிம் நீக்கப்பட்டபோது பாஸ் கட்சி ஆதரவாக செயல்பட்டு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தினார்கள். அன்வாரும் தன்னை எதிர்கட்சியோடு இணைத்துக் கொண்டார். அன்வார் அன்றைய காலகட்டத்தில் பதவி நீக்கத்தோடு விட்டிருந்தால்; மூசா ஹித்தாம், ரசாலி அம்சா, கபார் பாபா போல் அரசியலில் காணமல் போயிருப்பார். அன்று நடந்த கைது நடவடிகைத்தான் பிறகு நடந்த எல்லா ஆர்ப்பாட்டத்துக்கும் காரணம் ஆனது. 

10. முகைதீன் பதவில் இருந்து நீக்கபடவில்லை. கபினெட்டில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள். நீக்குவதற்கும் விலக்குவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. கபினெட் reshuffle-இல் மிகைதீனுக்கு பதவி கொடுக்க வில்லை. அவ்வளவே. ஆகவே இது மிக பெரிய impact கொடுக்க வில்லை. 

11. அதுவும் இல்லாமல் முகைதீன் மீது எந்த குற்றமும் சாட்டபடவில்லை. கைது நடவடிகையும் இல்லை. மூசா போல் கபார் போல் சுபுகமாக விலக்கப்பட்டிருக்கிறார். 

12. முகைதீன் மாநில மந்திரி புசாராக இருந்திருக்கிறார். மத்தியில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். கட்சியில் பலம் இல்லாமல் துணைதலைவர் வரை உயர்ந்திருக்க முடியாது. பெரும் அளவில் இல்லாவிட்டாலும் ஒரு 30-40 MP-க்களையாவது தன் பக்கம் இழுக்கும் அளவுக்காவது கட்சியில் பலம் உள்ளது. 

13. அப்படி இருக்கும் போது ஏன் பெரிய அளவில் முகைதீனுக்கு ஆதரவாக ஏதும் நடக்கவில்லை. நடக்கவிடாமல் மகாதீர் தடுத்துக் கொண்டிருக்கிறார். மகாதீருக்கு அப்படி ஒன்றும் முகைதீன் மீது நம்பிக்கை கிடையாது. ஆனாலும் நஜிப்பை நீக்குவதற்கான துருப்பு சீட்டு முகைதீன் தான். முகைதீன் அவசரப்பட்டு ஏதும் செய்து விடாமல் தடுப்பதற்குதான் முக்ரிஸ் உடனடியாக சென்று முகைதீனை சமாதானப்படுத்தினார். 

14. முகைதீனால அப்படி என்ன செய்து விட முடியும். பார்லிமெண்டில் பிரதமர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம். அப்படி அவர் ஒரு முடிவு எடுத்தால் BN-ன்னில் இருந்து நிச்சயமாக சுமார் 25-முதல் 35 MP-க்கள் வரை தனக்கு ஆதரவாக வெளியே கொண்டு வர முடியும். அப்படி கொண்டு வந்தால்; பாரிசான் அரசாங்கத்துக்கு மெஜாரிட்டி இல்லாமல் போய்விடும். 133 சீட்டில் 30 சீட் போனால் 103 சீட்த்தான் கையில் இருக்கும். பாரிசானுக்கு மெஜாரிட்டி போச்சு. அப்படியே பாஸ் கட்சி கை கொடுக்க வந்தால்; பாஸ் கட்சி வைத்திருக்கும் 21 சீட்டில் 10 தான் தேறும். பாஸ் கட்சியில் பலரும் குறிப்பாக பேராக், ஜொகூர், சிலாங்கூர், பினாங்கு போன்ற பாஸ் MP-கள் பாரிசானோடு சேர்வதை விரும்ப மாட்டார்கள். அப்படியும் பாரிசானுக்கு மெஜாரிட்டி அந்து போச்சு. 

15. எதிர்கட்சி வைத்திருக்கும் 88 சீட்டில் பாஸ் கட்சி ரெண்டாக உடைந்து போனாலும் எதிர்கட்சி சார்பாக முகைதீனுக்கு 78 சீட் சப்போர்ட் கிடைக்கும். தன் கைவசம் உள்ள 30+78 சேர்த்தால் 108 ஆகும். பாரிசானுக்கும் சரி எதிர்கட்சிகளுக்கும் சரி யாருக்கும் மெஜாரிட்டி இல்லாமல் போய் பார்லிமெண்ட் கலைக்கப்படலாம். அடுத்த தேர்தலுக்கு வழி வகுக்கும். அப்படி நடந்தால் பாரிசாம் கதி அதோ கதிதான். 

16. எப்படி அன்வாரை பயன்படுத்தி பாஸ் பெரும் அளவில் வளர்ந்ததோ அதே போல் ஒரு சூழலை DAP ஏற்படுத்தி தன்னை வளர்த்து கொள்ளலாம் என முனைக்கிறது. அது நடக்காமல் இருக்க மகாதீர் பார்த்துக் கொள்வார். HINDRAF-பை பயன் படுத்திதான் DAP மீண்டும் தலை தூக்கியது. HINDRAF பேரணியின் மூலம் பெரும் லாபம் அடைந்தது DAP கட்சித்தான். இல்லை என்றால் ஊர் பேர் தெரியாத கோபிண்ட் சிங்கெல்லாம் பூச்சோங்கில் ஜெயிக்க முடியுமா ....? 

17. HINDRAF போல் முகைதீனை பயன்படுத்தி எதிர்கட்சிகள் லாபம் செய்ய முடியும். 

18. நஜிப் மீதும் அவர் மனைவி மீது இருக்கும் மக்கள் வெறுப்பை சாதமாக பயன் படுத்தி UMNO-வை முகைதீனால் உடைக்க முடியும். மக்களின் கோபத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளலாம். 

19. முகைதீன் நினைத்தால்; பாரிசானில் இருந்து ரொம்ப வேணாம்; சும்மா ஒரு 20 MP-க்களை கடத்தினால் போதும். பாரிசான் ஆரசாங்கம் கவுந்து போகும். இதனால் நடக்கும் தேர்தலில் கரண்டு போனாலும் பாரிசானால் ஜெயிக்க முடியாது. UNMOவும் பாரிசானும் எழுந்திரிக்கவே முடியாத புதை குழிக்குள் தள்ளப்படும். 

20. பிரதமர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து; ஆட்சியை கவிழ்கலாம். 

21. தன் துணை தலைவர் செல்வாக்கை பயன்படுத்தி UNMO-வை உடைக்கலாம். பெரிய அள்வில் இல்லாவிட்டாலும்; சும்மா அசைத்து பார்க்கலாம். UMNO-விலும் பல்லை கடித்துக் கொண்டுதான் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். சும்மா கொளுத்தி போட்டால் பத்திக் கொள்ளும். 

22. இவை எல்லாவற்றையும் விட; இந்த போர், போராட்டம் மகாதீருக்கும் நஜிப்ப்புக்கும் நடுவில் நடக்கும் போர். முகைதீன் துருப்பு சீட்டுத்தான். போர் மகாதீருக்கும் நஜிப்புக்கு தான். முகைதீன் ஏதும் செய்து UMNO-வையும் BN அரசாங்கத்தையும் மேலும் சிக்கலில் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மகாதீரின் தற்போதைய கவனம். 

24. முன்பே சொன்னது போல், UNMO-வையும் காப்பாற்ற வேண்டும்; BN தோற்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்; அதே சமயம் நஜிப்பையும் தூக்க வேண்டும். கத்தி மேல் மகாதீர். 

25. தலைக்கு மேல் போன பின் முழம் என்ன சாண் என்ன என்று எல்லாவற்றுகும் துணிந்து விட்டார் நஜிப். தன் மனைவியையும் காப்பாற்ற வேண்டும்; ஜெயிலுக்கும் போக கூடாது; மகாதீரிடம் இருந்தும் தப்பிக்க வேண்டும். நஜிப்பின் தலைக்கு மேல் கத்தி. 

25. இனி எத்துனை குட்டி கரணம் போட்டாலும்ம், இழந்த துணை பிரதமர் பதவி கிடைக்காது. அடுத்த பிரதமரும் ஆக முடியாது. தன் அரசியல் வாழ்க்கைக்கு ஆணி அடித்த, நஜிப்பை பழிவாங்க முகைதீன் சிரியஸாக ஏதாவது யோசிக்கலாம். செய்யலாம். அதற்கும் மகாதீர் முட்டு கட்டையாக இருப்பார். 

26. கடைசியாக ...... இது மகாதீருக்கும் நஜிப்புக்கும் நடுவில் நடக்கும் போர். இறுதி கட்ட போர். நீயா நானா என மோதும் உச்ச கட்ட போர்.

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews