நஜிப்பும் வேலு நாயக்கரும்.
மலேசிய அரசியல் வரலாற்றில் பல ஊழல் வழக்குகள் வந்திருக்கு ........ மந்திரிகள், உயர் அரசு அதிகாரிகள் என பலரும் சம்பந்த பட்ட பல ஊழல் வழக்குகள் விசாரணைக்கு வந்து, சிலது தண்டனையும் கிடைத்திருக்கு. முதல் முறையாக நாட்டின் பிரதமர் மீது ஒரு மெகா ஊழல் வழக்கு வந்திருக்கு. அதுவும் கை புன்ணுக்கு
கண்ணாடி தேவை இல்லை என கணக்காக ஒரு ஊழல் வழக்கு.
இந்த ஊழல் குற்றாசாட்டால் நாடே நிலை குத்தி நிற்கிறது. பணத்தின் மதிப்பு படு மோசமாக சரிந்து வருகிறது. நஜிப்புக்கு எதிர்ப்பு அனைத்து நிலையிலும் வலுத்து வருகிறது. நஜிப் காணமல் போய் விடலாம். அல்லது நாட்டை விட்டு ஓடி போய் விடலாம். இல்லையேல் விசாரணைக்கு உட்பட்டு சிறை செல்லும் வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. 99% மாட்டிக் கொண்டார். 1% ஓட்டையில் தப்பித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இது ரொம்ப நாள் நீடிக்காது. நஜிப் பிரதமராக நமக்கு என்ன செய்தார் .....?
ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், நஜிப்பின் காலம் தான் இந்தியர்களின் பொன்னான காலம் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
1. ரெண்டு முழு மந்திரி(துப்பு கெட்ட மா இ கா அடித்துக் கொண்டதால் நாசமாக போனது); மூன்று துணை மந்திரி.
2. இந்தியர்களுக்கு பல மானியங்கள் கொடுக்கப் பட்டது. சும்மா டப்பா NGO-க்கள் கூட மானியங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
3. பல காலமாக இந்தியர்களின் மிக முக்கிய பிரச்சனையாக விளங்கிய நீல I.C பிரச்சனைக்கு தீர்வு காண சிவசுப்ரமணியம் தலைமையில் பிரதமர் இலாகா கீழ் தனி இலாகா அமைத்து தீர்வு காணப்பட்டது.
4. சமூக முன்னேற்றத்திற்காக பேராசிரியர் ராஜேந்திரன் தலைமையில் அறவாரியம் அமைக்கப்பட்டு; 48 மில்லியனும் கொடுக்கப்பட்டது. (இந்த 48 மில்லியனை வைத்துக் கொண்டு இவர் என்ன புடுங்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. மொளகா செடி போல் எதற்கும் புரோஜனம் இல்லாத குப்பை புரோஜக்குகள் செய்துக் கொண்டிருப்பார்கள்; இந்த நிதி மூலம் பல தலைகள் பணக்காரர்கள் ஆகி இருப்பார்கள்)
5. தமிழ் பள்ளி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.
6. பல உயர் அரசாங்க பதவிகளுக்கு இந்தியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
7. இந்திய இளைஞர்களின் வளர்ச்சிக்கு மில்லியன் கணக்கில் நிதி கொடுத்தார். (நாம் என்று சொல்லி நாமம் போட்ட கதை வேறு)
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். நிஜமாகவே நமது சமூகத்துக்கு இந்த பிரதமர் போல் வேறு எந்த பிரதமரும் செய்ய வில்லை.
எதற்காக நஜிப் நமக்கு அதிகமாக செய்தார்.....?
போன பொது தேர்தலில் கரண்டு போய் ஜெயித்தாலும்; இந்தியர்களின் வோட்டு BN ஜெயிக்க பெரிதும் உதவியது. சீன சமூகம் கை விட்டாலும்; நமது சமூதாயம் கை கொடுத்து தூக்கி விட்டது. நமது ஓட்டு கொஞ்சம் சருக்கி இருந்தாலும் BN கதி அதோகதி ஆகியிருக்கும் என்பது நிஜம்.
அதற்கு விசுவாசமாக பிரதமர் இதை எல்லாம் செய்து கொடுத்தார். இன்னும் அதிகமாகவே செய்து கொடுத்தார். அதற்காக வேண்டுமானாலும் இந்த பிரதமருக்கு ரெண்டு வார்த்தை நன்றி சொல்லி வைக்கலாம். இல்லை மரியாதையாக அனுப்பி வைக்கலாம். ஆனால்; நஜிப் செய்யும் அநியாயத்துக்கு எல்லாம் துணை போகமுடியாது.
நாட்டை கெடுத்து நாசமாக்கி சீரழித்து விட்டார். இவர் அமைத்திருக்கும் அமைச்சரவை அமைச்சர்கள் ஒன்றாம் வகுப்பு மாணவனை விட கேவலமாக இருக்கிறாகள். ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் நாடு பிச்சைகார நாடாகி விடும் என்கிற அடிமட்ட அறிவு கூட இல்லாமல்; ரிங்கிட் வீழ்ச்சியில் பெருமை கொள்கிறாகள்.
நஜிப் பிரதமராகவும்; இந்த அமைச்சரவை நீடித்தால்; மூன்றாம் உலகின் கடைசி பிச்சைகார நாடு மலேசியாவாகத்தான் இருக்கும். திருடி நல்லதே செய்தாலும்; தன்னால் வளர்க்கப்பட்டவர்களே சாக வேண்டும் என்ற விதி இருந்த வேலு நாயக்கர் போல். யாரால் வளர்க்க பட்டாரோ அவர்களாலே அழிக்கபடுவார் என்கிற நியதியும் உள்ளது. யாருக்கு .....? நஜிப்ப்புக்கு தான்.


0 Comments