Friday, 23 December 2016

மலேசியாவும் டாக்சியும்.

இது ஒரு நீண்ட கட்டுரை. மலேசியாவின் டாக்சியின் வளர்ச்சி வரலாறும், சிக்கல்களும், அதற்கான தீர்வு குறித்த கட்டுரை. நீண்ட கட்டுரை படிக்க விருப்பம் இல்லாதவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். Others ..... Just follow.

# எல்லோர் வீட்டிலும் ஒரு டாக்சி ஓட்டுனர் கண்டிப்பாக இருப்பார். எல்லாருக்கும் சொந்தத்திலோ அல்லது மிக நெறுங்கிய வட்டத்திலோ ஒரு டாக்சி டிரைவர் கண்டிப்பாக இருப்பார். டாக்சி டிரைவர்கள் நம்மில் ஒருவர்.

# பொதுவாக மலேசிய டாக்சி சேவையும், டாக்சி ஓட்டுனர் குறித்தும் எல்லோருக்கும் ஒரு கெட்ட அபிப்பிராயம் உண்டு. டாக்சி ஓட்டுனர்களின் Attitude Problem, Discipline இல்லாதது, மீட்டர் பயன்படுத்தாமல் அதிக கட்டணம் கேட்பது, சுத்தம் இல்லாத டாக்சிகள் இப்படி நிறைய புகார்கள்.

# இந்த டாக்சி ஓட்டுனர்கள் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று ஒரு நாளாவது நாம் யோசித்து பார்த்ததே கிடையாது. அவர்களின் பிரச்சனை என்ன, எதனால் அவர்கள் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று யாரும் கேள்விகள் எழுப்பியதில்லை.

# இன்றைய மலேசியாவில் இருக்கும் டாக்சி வகைகள்.

1. Budget Taxi, 
2. Satu Malaysia Taxi, 
3. Executive Taxi, 
4. Kereta Sewa, 
5. KLIA Taxi, 
6. KLIA2 Taxi, 
7. Genting Taxi

இப்படி பல வகை டாக்சிகள் உண்டு. எல்லாம் வேறு வேறு மீட்டர் கட்டணமும், சிலது கூப்பன் சிஸ்டம் கொண்டது.

# ஆரம்ப காலத்தில், சுமார் 30 வருடங்களுக்கு முன் மலேசியாவில் டாக்சிகள் மஞ்சள் கருப்பு நிறத்தில், Opel Gemini-கள் ஒடிக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் டாக்சி சேவையும், டாக்சி கம்பெனிகளும் முழுக்க முழுக்க சீனர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. 99% சீனர்களின் கையில் இருந்தது. சீனர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது.

# ஒரு நாள் டாக்சி வாடகை 60 ரிங்கிட் வீதம் டாக்சி டிரைவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது. சில கம்பேனிகள் இன்னும் அதிகமாகவும் விட்டார்கள். சில கம்பெனிகள் வாடகையும் வாங்கிக் கொண்டது, ரிப்பேரையும் டிரைவர்கள் தலையில் கட்டினார்கள்.

# Subang Airport டாக்சியும் இப்படித்தான் விடப்பட்டு வந்தது. இதில் Kereta Sewa மட்டும் தான் டிரைவர்களுக்கு நேரடி லாபத்தை கொடுத்தது.

# சீனர்கள் இந்த டாக்சி பிஸினசில் நல்லா சாம்பாதித்து கொழுத்து வந்தார்கள். வேறு இனங்கள் இந்த தொழிலில் நுழைய முடியாத வகையிலும் பார்த்துக் கொண்டார்கள். எங்காவது ஒரு மூலையில் ஒன்னு ரெண்டு மலாய்காரர்களும் இந்தியர்களும் சில டாக்சி கம்பெனிகள் வைத்திருப்பார்கள். Jalan Ipoh Muthu Taxi Co போன்று. அதுவும் 10 டாக்சிகளுக்கு மேல் வைத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சீனர்களின் Monopoly இருந்தது.

# இப்படி நடந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் அப்போதைய பிரதமர் மகாதீர் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.

# 1987-ம் ஆண்டு வாக்கில் மலேசியாவில் ஒரு ஆசியான் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டுக்காக 500 Special Proton Saga கார்கள் செய்தார். Hand Break கம்பி இருக்கும் இடத்தில், hand break போலவே இன்னொரு கம்பி இருக்கும். அந்த கம்பியை இழுத்தால், பின் இறுக்கை Passenger கதவு தானாக திறந்துக் கொள்ளும். அந்த கம்பியை கீழே விட்டால் கதவு சாத்திக் கொள்ளும்.

# இந்த மாநாடு முடிந்ததும், அந்த 500 கார்களையும் மகாதீர் டாக்சியாக மாற்றினார். டாக்சிக்காக மேலும் அதே போல் Proton Saga கார்கள் செய்தார்.

# அதுவரை லொடக் லொடாக் என ஓடிக் கொண்டிருந்த Opel Gemini, Datsun, Nissan Sunny டாக்சி மோடல் கார்களை எல்லாம் நிறுத்திவிட்டு, Proton Saga கொண்டு வந்தார். மஞ்சள்/கறுப்பு கலரில் ஓடிக் கொண்டிருந்த டாக்சிகள் சிகப்பு வெள்ளை நிறத்தில் பளபள வென புது புரோட்டோன் கார்கள் ஓடியது.

# மகாதீர் புது சிஸ்டம் கொண்டு வந்தார்.
1. ஒரு டாக்சி 10 வருடங்கள் தான் ஒட வேண்டும். 10 வருடங்களுக்கு மேல் உள்ள எந்த வண்டியும் டாக்சிக்கு பயன் படுத்த கூடாது. மலேசிய கார்கள் மட்டும்தான் பயன் படுத்த வேண்டும்.
2. 40 ரிங்கிட்க்கு மேல் எந்த கம்பெனியும் டிரைவர்களிடம் நாள் வாடகை வசூலிக்ககூடாது.
3. எல்லா டாக்சி கம்பெனியும் Sewa Beli சிஸ்டம் கொண்டு வர வேண்டும். அதாவது, ஐந்து வருடங்கள் நாள் ஒன்றுக்கு 40 ரிங்கிட் கட்ட வேண்டும். ஐந்து வருடங்களுக்கு பிறகு அந்த கார் டிரைவருக்கு சொந்தமானது.
4. மாதம் 2 நாள் லீவு தர வேண்டும்.
5. Driver & Passenger-க்குமுறையான Insurance எடுக்க வேண்டும்.

# இந்த சிஸ்டமில் வந்த முதல் டாக்சி கம்பெனி, அப்போதைய துணை பிரதமர் காபார் பாபா அவர்களின் Saujana Teksi Sdn.Bhd.

# அதே போல் டாக்சிகளுக்கு பெர்மிட் வழங்கும் முறையில் கோட்டா சிஸ்டம் கொண்டு வந்தார்.30% மலாய்கார கம்பெனிகளுக்கும், 30% சீன கம்பேனிகளுக்கு, 15% இந்திய கம்பெனிகளுக்கும், NGO, Koperasi, Party Politics-க்கு மீதம் உள்ள பெர்மிட்கள் வழங்கப்பட்டது.

# இந்த கோட்டா சிஸ்டத்தில் நிறைய எதிர்கட்சிகள் கூட டாக்சி பெர்மிட்கள் வாங்கினார்கள். அதில் லிம் கிட் சியாங்கும் ஒருவர். Minat Pesona Sdn Bhd, Jalan Klang Lama-இல் அவருடைய டாக்சி கம்பெனி இருந்தது.

# இது வரை இந்த டாக்சி பிஸினசில் கொள்ளை லாபம் அடித்து வந்த சீனர்களுக்கு ஒரு Speed Break போடப்பட்டது.

# இந்த வாய்ப்பால் அதிகமான மலாய் மற்றும் இந்திய கம்பெனிகள் டாக்சி பிஸினசுக்கு வந்தார்கள். இது சீனர்களுக்கு அதிகமான ஆத்திரத்தை மூட்டியது.

# கோபமான சீனர்கள், மலாய்காரர்களை தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு, சினர்கள் கோட்டா, மலாய்காரர்கள் கோட்டா என இரு பிரிவு கோட்டாக்களையும் சேர்த்து கொள்ளை அடித்தார்கள்.

# இப்படித்தான் Sunlight, Public Cab, Supercab, Uptownace, Perniagaan Lima Sejati, Kuching Hitam போன்ற கம்பெனிகள் பெரிய giant-ஆக வளர்ந்தார்கள்.

# இந்த நிலையை உணர்ந்த மகாதீர், பெர்மிட் வழங்கும் உரிமையை, சீன மந்திரிகள் இருந்த Kementerian Pengangutan-இல் இருந்து தூக்கி, Kementerian Koperasi Dan Pengguna-வில் ஒப்படைத்தார்.

# அப்படியும் சீனர்கள்கள் இந்த வளம் கொழிக்கும் தொழிலை விடகூடாது என்று வேறு சில தந்திரங்கள் எல்லாம் செய்து, இந்த டாக்சி பிஸினசில் தங்கள் செல்வாக்கை பதிவு செய்து வருகிறார்கள். தனியே எழுத கூடிய அளவுக்கு, இது ஒரு தனி கதை.

# இப்படியே budget Taxi வரலாறு உருமாறி வந்த நிலையில், சுற்றுலா துறையில் இருந்தவர்களும், ஹோட்டல் துறையில் இருந்தவர்களும் Proton Saga மற்றும் Iswara வண்டியை தொடர்ந்து குறை கூறி வந்தார்கள்.

# ஐரோப்பியர்களுக்கு இந்த கார்கள் compatible-ஆக இல்லை என்றும் , luggage வைக்க போதுமான வசதி இல்லை என்றும் இந்த இரு பிரிவினரும் தொடர்ந்து குறை கூறி வந்தனர்.

# இதே காலகட்டத்தில் , 1998, Commonwealth games நம் நாட்டில் நடந்தது. இந்த விளையாட்டு போட்டிக்காக 1000 Renault MPV Fully NGV-யோடு கொண்டு வந்தார் மகாதீர்.

# விளையாட்டு போட்டி முடிந்ததும் அந்த 1000 Renault MPV-யும் Teksi Premier ஆக்கி விட்டார். இப்படித்தான் Teksi Premier முளைத்தது.

# 1000 Renault கார்களையும், Teksi Premier-யும் Eco Transit என்கிற இந்திய கம்பெனிக்கு கொடுத்தார் மகாதீர். இந்த கம்பெனியின் ஓனர், வர்கிஸ் என்கிற சிலோனிஸ். இவர் முன்பு Petronas-இல் ஆடிட்டராக இருந்தார்.

# உடனே UptownAce-யும் தன் பங்குக்கு Teksi Premier பெர்மிட் வாங்கி, Proton Perdna V6-க்கை அசத்தலான டாக்சியாக விட்டார்கள். அடுத்து தன் பங்குக்கு Metro Limousine-னும் Premier Taxi விட்டார்கள். இது இப்படியே மேலும் பல குழப்பங்களுக்கு போனது.

# Sepang-இல் புதிய KLIA Airport கட்டி 1998 ஆரம்பிக்கப்பட்டபோது; பழைய Subang Airport -இல் இருந்த எல்லா சீன கம்பெனி டாக்சி பெர்மிட்டையும் கேன்சல் செய்து, Airport Limo Malaysia என்கிற இந்திய முஸ்லிம் கம்பெனிக்கு கொடுத்தார் அப்போதைய துணை பிரதமர் அன்வார் இப்ராஹிம். அந்த கம்பெனியின் ஓனர் அப்துல் முதாலிப் எனபவர். இவர் அன்வாரின் நெறுங்கிய உறவினர் என சொல்லப்பட்டது.

# Genting நிறுவனம், Genting Taxi ஆரம்பித்து, Genting-க்கு போனாலும் வந்தாலும் அவர்கள் டாக்சி மட்டுமே ஆள் எடுக்க முடியும் எனும் நிலையை உருவாக்கினர்கள். மலாய்கார டாக்சி NGO-கள் முயற்சியில் மற்ற டாக்சிகளும் Genting-க்கு போகலாம், வரலாம் எனும் சூழல் உருவானது.

# Kereta Sewa என்பது புற நகர்களில் ஓடும் டாக்சிகள். Kereta Sewa பொதுவாக தனிநபர் உரிமை கொண்டது. Klang Valley, Penang Island, Johor Bahru Town தவிர மற்ற பகுதிகளில் எல்லாம் Kereta Sewa தான் ஓடும். Kereta Sewa பாதி மஞ்சள் கலரும் மீதி என்ன கலரும் வேண்டுமனாலும் இருக்கும். கதவில் சதுர வடிவில் Kereta Sewa உரிமையாளரின் பெயரும் முகவரியும் எழுதப்பட்டிருக்கும்.

# Klang Valley, Penang Island, Johor Bahru Town ஏரியாக்களில் ஓடும் மீட்டர் டாக்சிகள் கதவில் வட்டவடிவில் உரிமையாளர் Detail எழுதப்பட்டிருக்கும். ஆக இந்த வட்டம் சதுரம் அளவை கொண்டு எது மீட்டர் டாக்சி எது Kereta Sewa என்று கண்டு பிடிக்கலாம்.

# இதுவரைக்கும் ஏறத்தாள; சுமாராக மலேசியாவின் டாக்சி வரலாற்றை புரிந்துக் கொள்ள முடிகிறது. தொடர்ந்து, டாக்சி சேவையில் உள்ள சிக்கல்கள், டாக்சி டிரைவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அரசாங்கத்தின் மெத்தன நிலை, சில டாக்சி டிரைவர்களின் பொறுப்பற்ற தன்மை, அதிக பணம் கொள்ளை அடிக்க துடிக்கும் கம்பெனிகள்,இவை அனைத்தும் நாளை தொடரும் ..............

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews