கவுண்டமணி காமெண்ட்ரியும் நஜிப்பும்.
நான் இப்பவும் உறுதியாக சொல்கிறேன். இந்த பிரதமர் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். தாமதம் ஆகலாமே தவிர, current issue-வில் இருந்து தப்பிக்கவே முடியாது.
He can escape temporarily .... not forever.
நஜிப்புக்கு எல்லா நிலையிலும்; எல்லா பக்கத்திலும் அதிகமான பிரஷர். அவரால் ஒரு வாய் சோறு நிம்மதியாய் சாப்பிட முடியாது என்பதே நிதர்சனம். தினம் தூங்கி எழுந்திருக்கும் போது என்ன பிரச்சனை; எந்த ரூபத்தில் வரும் என்பது அவருக்கே தெரியாது. டிசைன் டிசைனாக பிரச்சனைகள் காத்திருக்கு.
1. 1MDB-யில் மிக பெரிய ஊழல் நடந்திருப்பது சின்ன பையன் முதல் கெழடு கெட்டைகள் வரை அப்பட்டமாக தெரிந்து விட்டது. இப்பொது அதற்கான விசாரணை பலமுனைகளில் நடந்து வருகிறது.
போதாத குறைக்கு முன்னாள் UMNO தலைவர்களில் ஒருவர் கைருடின் சுவிஸர்லாந்து சட்டத்துறை தலைவரிடம் போதுமான ஆதாரங்களை சமர்பித்துள்ளார். மிக வேகமாக விசாரணை நடந்து வருகிறது. சிங்கப்பூர் போலிஸிடமும் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தங்களின் விசாரணையை தொடங்கிவிடுவார்கள். இதன் முடிவுகள் மிகவும் கோரமாக இருக்கும். இதுவும் நஜிப்ப்புக்கு மிக பெரிய பிரஷர்தான்.
2. 1MDB-யில் 42 மில்லியன் மிஸ்ஸிங்.
இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இது குறித்தும் விசாரனை போய் கொண்டிருக்கு. இது குறித்து மேல் விசாரணைக்காக ஜோ லோ உள்ளிட்ட இன்னும் இருவருக்கு MACC ஆஜர் ஆக நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்கள். இவர்கள் ஆஜர் ஆகாத பட்சத்தில் போலிஸ் உதவி நாடப்படும். கோர்ட் உத்தரவு வாங்கி அரஸ்ட் வாரெண்டோடு தேடப்படுவார்கள். இது நஜிப்ப்புக்கு இன்னும் பெரிய தலைவலி சிக்கல்.
3. 2.6 மில்லியன் ரிங்கிட் நஜிப் சொந்த வங்கி கணக்கில் புகுந்துள்ளது.
இது மிகவும் முக்கிய திருப்பம். இதற்கு முன்பு 1MDB-இல் எந்த ஊழலும் நடக்கவில்லை. எல்லாம் கணக்கில் உள்ளது என கூறி வந்தார்கள். திடிரென ஆதாரத்துடன் 1MDB பணத்தின் ஒரு பகுதி நஜிப்பின் சொந்த வங்கி கணக்கில் புகுந்தது நிருப்பிக்கப்பட்டுள்ளது. எல்லா ஆதாதரமும் பக்காவா இருக்கு. எந்த வழக்கில் தப்பி வெளியே வந்தாலும் இந்த வழக்கில் மட்டும் தப்பிக்கவே முடியாது. இது குறித்து இன்னும் மிக விரிவாக எழுதலாம். அது பிறகு.
4. மலேசிய ரிங்கிட்டின் கடைசி நிலவரம் 1USD-RM4.30. ரிங்கிட் நாளுக்கு நாள் மிகவும் மோசமாக சரிந்து வருகிறது. இழுத்து பிடித்தாலும் நிற்கவே மாட்டுகிறது. இந்த வார இறுதியில் RM 4.50-க்கு வந்து விடும். இது நிச்சயம். நஜிப்புக்கு இது மிக பெரிய பிரஷர். சாமாளிக்கவே முடியாத பிரஷர்.
5. ஜொகூர் அரண்மனை மீண்டும் மீண்டும் நஜிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. இதுவும் நஜிப்புக்கு பெரிய பிரஷர்.
6. UMNO-வில் இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாக நஜிப்புக்கு எதிராக குரல்கள் ஒலிக்க தொடங்கி விட்டது. தன் பதவியை தற்காத்துக் கொள்ள எல்லோரையும் இழுத்து பிடித்து உட்கார வைப்பது மிகவும் கடினமான காரியம். முஹிடினும் சபி அப்டாலும் இன்னொரு முனையில் தாக்கிக் கொண்டு வருகிறார்கள். இது இன்னொரு பிரஷர்.
7. முக்ரிஸ்கு ஆதரவாக கைரியும் இணைந்துக் கொண்டது அதைவிட பெரிய பிரஷர். UMNO இளைஞர் பகுதி 1MDB குறித்து விளக்கம் கோர நஜிப்பையும் ஹமிடியையும் சந்திக்க உள்ளார்கள். இது ஒரு பிரஷர்.
8. நஜிப்பின் முகநூலிலும் இணைத்தளத்திலும் நஜிப்க்கு எதிரான கோஷம் பெரிய இடி மின்னல் சத்தத்தோடு பொங்கி வருகிறது. இந்த பிரஷரை பார்த்து நஜிப் மிரண்டே போய் விட்டார்.
9. கபினெட் அமைச்சர்களின் கோமாளிதனமாக அறிக்கைகள், அது ஒரு பக்கம் பிரஷர்.
10. பல்கலைகழக மாணவர்களின் எதிர்ப்பு மறுபக்கம் பிரஷர்.
11. Bersih 4 அது ஒரு பக்கம் பிரஷர். இன்னும் ரெண்டு நாளில் அதிரடி சரவெடியாக வெடிக்க போகிறது.
12. மலேசிய சட்டதுறை மன்றம்(Bar Council) கூடி; நஜிப்பின் ஊழல் வழக்கை முறைபடியும் துரிதமாகவும் நடத்த; நஜிப்பை வழக்கு விசாரணைக்குள் கொண்டு வர நடவடிகை எடுக்க போகிறார்கள்.
13. பிரஷரின் உச்சம் மகாதீர். எதை; யாரை சமாளித்தாலும் மகாதீரை சமாளிப்பதுதான் நஜிப்பின் உச்சகட்ட பிரஷர்.
இத்துனை பிரஷரில் ஒரு மனிதன் இருந்தால்; இன்னேரம் துண்டை காணோம் துணியை காணோம்ன்னு ஓடி போய் இருப்பார்கள். ஆனால் மனுசன் எல்லாவற்றையும் சமாளித்து வெளியே வருகிறார் என்றால்; இது ஒன்றும் சாமானிய காரியம் கிடையாது.
இத்துனை பிரஷர்குள் ஒரு பிரதமர் ஒரே ஒரு நாள் பிரதமர் நாற்காலில் உட்கார்ந்து இருப்பதே; ஏழு மலை, ஏழு கடல் தாண்டுவது போல் ஆகும்.
இந்த பிரஷர்களின் வீரியம் மிக ஆபத்தானது. ஒரு நாடே நஜிப்புக்கு எதிராக உள்ளது. இதை மீறி நஜிப் அடுத்த பொது தேர்தல் வரை எல்லாம் தாக்கு பிடிக்க முடியாது.
மீண்டும் உறுதியாக சொல்கிறேன். நஜிப்பின் எல்லா கதவுகளும் சாத்தப்படுள்ளது.
he can escape temporarily; not forever.


0 Comments