மலேசிய தமிழ் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது எப்படி? Part 2
ASTRO Channel 201 வானவில் மற்றும் 202 வெள்ளித்திரை மட்டும் இருந்த காலத்தில் கூட பெரும் பாதிப்பு வரவில்லை. எப்போ சன் டிவியும் விஜய் டிவியும் வந்ததோ அன்றோடு விழுந்தது மரண அடி. அது மலேசிய சினிமா படைப்புக்கு மட்டும் ஆப்பு அடிக்கவில்லை. மலேசியா தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த Supply Chain-ஐயும் இழுத்து பிடித்து நிறுத்தியது. சன், விஜய் டிவி வரவுக்கு பிறகு சிடி கடைகள் எல்லாம் மூடுவிழா கண்டது. இன்றைய தேதியில் சிடி கடையில் சிடியை தவிர மற்ற எல்லா பொருளும் விற்கிறார்கள். இதனால் சிடி ரிப்ளிகேட்டர்கள், சப்ளையர்கள், டிசைனர் என பலரும் பாதிக்கப்பட்டார்கள். அடுத்த அடுத்த அத்தியாயங்களில் ASTRO, சன், விஜய் டிவி மூலம் உள்ளூர் சினிமா எப்படி பாதிக்கப்பட்டது எனவும் முழுமையாக அலசி ஆராய போகிறோம்.
செட்டலைட் டிவிகளால் ஒட்டு மொத்த Malaysian Film Industry, பாதிக்கபடுவதை உணர்ந்த அரசாங்கம், உடனடியாக Local Film Industry பாதுகாக்க சில அதிரடி நடவடிகைகளை எடுத்தார்கள். கூடவே டெக்னாலாஜிகள் அசுரதமான வளர்ச்சியில் புது புது இளைஞர்கள் நம்பிக்கையோடு உள்ளே வந்தார்கள். இங்கேதான் நமது உள்ளூர் சினிமாவின் ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானது. இதையும் முழுமையாக அலசி ஆராய்வோம்.
பலர் என்னை நோக்கி வைக்கும் ஒரு முக்கியமான கேள்வியை இந்த சீரியலில் மிக தெளிவாக விவரிக்க உள்ளேன். அந்த கேள்வி, மலேசியாவில் படம் எடுத்து பணக்காரன் ஆகி Exclusive வாழ்கை எல்லாம் வாழமுடியாது. மலேசியாவில் படம் எடுத்து பணம் எல்லாம் சம்பாதிக்க முடியாது. ஆத்ம திருப்திக்காக, பொழுது போக்குக்காக வேண்டுமானல் இங்கு படம் எடுக்கலாம் அல்லது நடிக்கலாம். அவ்வளவே …..
இந்த எண்ணம் உள்ளவர்களுக்கு நான் உறுதியாக, ஆணித்தரமாக சொல்லிக் கொள்வது, மலேசியாவிலும் படம் எடுத்து ஒரு பெரிய Exclusive வாழ்கை வாழலாம். நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஒரு சின்ன உதாரணம். இன்றைக்கு தமிழ் நாட்டில் ஒரு புது படத்துக்கு பூஜை போட்டால் உடனடியாக மலேசியா ரைட்ஸ்க்கு ஒரு விலை பேசுவார்கள். பிறகுதான் மற்ற ரைட்ஸ் பேசுவார்கள். கமல் ரஜினி படங்களின் பட்ஜெட் கூட மலேசியா வியாபார கணக்கை வைத்தே பிரிப்பார்கள். இது பொய் இல்லை.
இந்தியாவுக்கு அடுத்து மலேசியா தான் தமிழ் படங்களின் மிக பெரிய மார்கெட். ஒரு சாதரணமான தமிழ் படம் கூட தியேட்டர் கலேக்சன், செட்டலைட் ரைட்ஸ், ரிங்டோன் பிஸினஸ் என்று சுமார் 20 லட்சம் வரை சம்பாதித்து விடுவார்கள். இது எல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது என்று போக போக பார்க்க போகிறோம்.
சில புது மூவி மேக்கர்கள் என்னிடம் வந்து, ‘சார் என்னிடம் ஒரு கதை இருக்கு கேட்டு கருத்து சொல்லுங்கள்’ என்பார்கள். அவர்கள் கதை சொல்ல ஆரம்பித்த முதல் ஐந்து நிமிடத்திலே ஒன்னு எனக்கு சோம்பல் வந்துவிடும் இல்லை என்றால் கோபம் வந்து விடும். ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியரால் தன் திரைக்கதையை அல்லது ஸ்கிரிப்டை சுருக்கமாக ஐந்து முதல் பத்து நிமிடத்தில் சுவரசியமாக சொல்ல தெரிய வேண்டும். இதுதான் முதல் இம்பரேஸன். ஆகவே முதலில் நல்ல கதை சொல்லியாக இருக்க வேண்டும்.
நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு சென்னும் திரைக்கதைக்காகத்தான் இருக்க வேண்டும். ஒரு சூப்பரான திரைக்கதைக்குத்தான் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும். So அது தியேட்டர் படமாக இருந்தாலும் சரி, குறும்படமாக இருந்தாலும் சரி, டெலிமூவியாக இருந்தாலும் சரி திரைக்கதைதான் ஹீரோ. திரைக்கதை சூப்பராக அமைந்துவிட்டால் மற்ற எல்லா விசயங்களும் தானாகவே சூப்பராக அமைந்துவிடும்.
ஒரு முக்கிய கொசுறு:
நான் இந்த கட்டுரையை எழுத Sample-ஆக இருப்பவர்கள் இருவர். அவர்கள் கருந்தேள் ராஜேஷ் மற்றும் செங்கோவி அவர்கள். தமிழில் நான் பார்த்த; படித்த மிக தெளிவான திரைக்கதை குறித்த புத்தகம் என்றால் அது ராஜேஷ் எழுதிய திரைக்கதை எழுதுவது இப்படி என்கிற புத்தகம் தான். அதுக்கு அப்புறம் தற்போது செங்கோவி சார் எழுதி வரும் திரைக்கதை சூத்திரங்கள். பட் நான் இந்த இருவரையும் காப்பி அடிக்க போவதில்லை. இது ஒரு தனி ட்ராக். இந்த கட்டுரை உங்களுக்கு வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும்.
ரஜினியின் மூன்று முகமும் கமலின் அபூர்வ சகோதர்களும் ஒரே கதைத்தான். இந்த இரு படமும் திரைக்கதையால் எப்படி இரு வேறு சூப்பர் டூப்பர் படம் ஆனது என்பதனை அடுத்த வாரம் தொடங்கும் திரைக்கதை என்றால் என்ன என்கிற அத்தியாயத்தோடு அலசி ஆராய்வோம்.



0 Comments